ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின பாறுக் ஷிஹான் 32 ஆயிரம் சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள் அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசீம் வீதி பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பணிமனைக்கு இவ்வாறு சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பணிமனைக்க…
-
-
- 10 replies
- 589 views
- 1 follower
-
-
யாழில். வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதான சுபாஷ் எனற் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடலை மீட்ட கோப்பாய் பொலிஸார் அதனை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் ஒப்பட…
-
- 1 reply
- 448 views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) 2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிவைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (13) இடம்பெற்ற பெண்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கும் பிரதான பிரச்சினை பொருளாதாரமாகும். 2022ஆம் ஆண்டு பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்தது. அதன் பிரகாரம் எமது நாடு வங்குராேத்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எமக்கு முதலாவதாக வங்குராேத்து நிலை…
-
- 4 replies
- 464 views
- 2 followers
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார். வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198370
-
-
- 41 replies
- 2.8k views
- 1 follower
-
-
பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் வாக்கை செலுத்திய 106 வயது முதியவர் ! ShanaNovember 14, 2024 106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் இன்று (14) பாராளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார். யாழ்ப்பாணத்தில் 18.11.1918 இல் தாம் பிறந்து, தமது 22 வயதில் திருகோணமலைக்கு வந்து தொடர்ந்து அங்கே வாழ்ந்து வருவதாகவும், இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் தாம் வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறினார். https://www.battinews.com/2024/11/106.html
-
- 1 reply
- 398 views
-
-
வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் November 14, 2024 வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டாலும் அது வாக்களிக்க தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.’உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.உங்களிடம் செ…
-
- 0 replies
- 566 views
-
-
யாழ்ப்பாணத்தின் தேர்தல் நிலவரம்! நாடாளுமன்றத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது. வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது…
-
- 1 reply
- 634 views
-
-
வேட்பாளர் பட்டியலில் பெயர் ; பெண் முறைப்பாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் செவ்வாய்க்கிழமை (12) அன்று முறைப்பாடு செய்துள்ளார். அப்பெண் மேலும் தெரிவிக்கையில் , “சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை. நேற்றைய தினம் திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவ…
-
-
- 2 replies
- 793 views
- 1 follower
-
-
1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ் adminNovember 11, 2024 விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை திட்டமிட்ட வகையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது விடயம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங…
-
-
- 10 replies
- 1.1k views
-
-
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்! வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை(11) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; குறித்த கூட்டத்தில் சுமந்திரன் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதன்போது கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு முறுகல் நிலை ஏற்பட்டவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கேள்வி கேட்டவர்களை வெளியேற்றினர். அதன்பின்னர் சுமந்திரனை அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். (ச) https://newuthayan.com/arti…
-
-
- 29 replies
- 1.6k views
- 2 followers
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகிகள் ஆகியோரின் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அவைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குறித்து விசாரித்து துப்பாக்கிகளை …
-
- 1 reply
- 270 views
- 1 follower
-
-
உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், சட்டவிரோதமாக வாகனங்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்து வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198390
-
- 1 reply
- 300 views
- 1 follower
-
-
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் தெரிவு செய்யப்பட்ட 07 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் மூலம் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார் தூதரகங்கள், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், கனடாவின் டொரன்டோ, இத்தாலியின் மிலான் மற்றும் டுபாய் தூதரகங்கள் மூலம் இந்த முன்னோடித் திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப்…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையிடினால் எட்டு வருடங்களாக கையளிக்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டினார்கள். நேற்று செவ்வாய்க்கிழமை (12) வட மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமது மேய்ச்சல் தரவை நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மஜகர் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நானாட்டான் பகுதியிலுள்ள மேய்ச்சல் தரவை நிலத்தை நம்பி 2,500 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. எமக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதனை கையெழுப…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை! “நான் மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்த ஆணை தாருங்கள்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நானும் எனது கட்சி சார்ந்த ஒன்பது பேரும் இந்தத் தேர்தலில்…
-
-
- 11 replies
- 853 views
- 1 follower
-
-
புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு! புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் …
-
- 0 replies
- 118 views
-
-
இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் adminNovember 12, 2024 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 – 2025ம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார். கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார். யாழ் போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்திற்கு தலைவராக தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்திய நிபுணர் இவராவார். அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திரசிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் செ…
-
- 2 replies
- 289 views
-
-
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறும் என ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198542
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்காக தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கைப்பற்றுவது குறித்து தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் எனினும் அரசியல் சூழ்நிலையை வலுப்படுத்துவதற்காக தனது கட்சி தமிழ் முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கும் என தெரிவித்துள்ளார். எனினும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய…
-
- 6 replies
- 621 views
- 1 follower
-
-
யாழ். சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இரண்டு மாத குழந்தையின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் சிலரின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாங்கள் வீதியால் சென்று கொண்டிருக்கும்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை முந்தி செல்ல முயன்று தாங்களே அடிபட்டு கீழே விழுந்தார்கள். நானும் எனது கணவரும் அக்காவும் எங்களது வாகனத்தில் வந்துகொண்டி…
-
-
- 46 replies
- 2.1k views
- 1 follower
-
-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. நாளை மறுதினம் வியாழக்கிழமை (14) காலை 06,30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு 07 படகு சேவைகள் இடம்பெறவுள்ளன. அதேபோன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி காலை 06.45 மணி முதல் மலை 04.30 மணி வரையிலும் படகு சேவைகள் இடம்பெறவுள்ளன என நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. அதேவேளை நெடுந்தீவுக்கான வாக்கு பெட்டிகளை நாளைய தினம் புதன்கிழமை படகுகள் மூலம் உத்தியோகஸ்தர்கள் எடுத்து சென்று, நாளை மறுதினம் வியாழக்கிழமை வாக்களிப்பு நிறைவு பெற்றதும் விமான படையினரின் உ…
-
- 0 replies
- 694 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார். ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம் சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணிமண்டபத்திற்கும் நாரந்தனை தெற்கு பொது நோக்கு மண்டப வாக்களிப்பு நிலையம் நாரந்தனை தெற்கு கிராம சக்தி பொது மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலய மண்டப இல 1 வாக்களிப்பு நிலையம் வடலியடைப்பு சனசமூக நிலையத்திற்கும் அராலி வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலை வாக்களிப்…
-
- 0 replies
- 663 views
- 1 follower
-
-
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் பின்வருமாறு; வாக்கெடுப்பு நிலையத்தினுள் தங்களது வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல சட்டரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வரத் தேவையான போக்குவரத்து வசதிகளை தங்களது தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலர் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும். வாக்கெடுப்பு நடைபெறுகின்ற கட்டிடத்தின் தூரம் 100 மீற்றருக்கும் அதிகமாக இருப்பின் வாக்கெடுப்பு நிலைய…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
றிசாட், மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் அடி தடி | அடித்து நொருக்கப்பட்ட றிசாட்டின் வாகனத்தொடரணி
-
- 2 replies
- 482 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது adminNovember 12, 2024 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் இன்று செவ்வாய்கிழமை (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டக்களப்பு வேட்பாளருமான பிள்ளையான எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நாஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு , மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் …
-
- 0 replies
- 208 views
-