ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
சம்பந்தனுக்கு எதிராக காவல்துறையினர் விசாரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி காவல்துறையினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிபஞ்சான் கஜபா இராணுவ முகாமின் படைத்தளபதி உள்ளிட்ட சிலர் சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 16ம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஸ்ரீதரன் போன்றவர்கள் பரவிபஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிக்குள் அத்து மீறி பிரவேசிக்…
-
- 9 replies
- 882 views
-
-
அழைப்பால் அச்சமடையும் முன்னாள் போராளிகள்! முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலங்களாக விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுவரும் நிலையில்,தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு வருகை தருமாறு புனர்வாழ்வு அலுவலகத்தால் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவித்தல் காரணமாக முன்னாள் போராளிகள் தரப்பில் பெரும் அச்ச நிலைமை மேலோங்கி காணப்படுகிறது. http://onlineuthayan.com/news/srilanka/SThRVnphN1ZZY1E9
-
- 1 reply
- 522 views
-
-
இலங்கை இனச்சிக்கலின் வரலாறு குறித்து, இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் ராஜன் ஹூல் எழுதும் கட்டுரைத் தொடர் கொழும்பு டெலிகிராஃப் மற்றும் ஐலண்ட் நாளேடுகளில் வெளியாகிறது. அதன் மொழிபெயர்ப்பை வெளியிட ராஜன் அனுமதித்திருக்கிறார். அக் கட்டுரைத் தொடரின் முதல் பாகம் இது: இனப் பிரச்சினைக்கு இன ரீதியான தீர்வு காண்பது ஆபத்தாக முடியும் என்றார் ஹாண்டி பேரின்பநாயகம். (செப்.18,1947) இன அடையாளத்தைவிட நாமனைவரும் மனிதர்களே என்ற புரிதல் அவசியம் என்கிறார் லக்ஸ்ரீ ஃபெர்னாண்டோ அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில். சுயநிர்ணய உரிமை என்பது கருத்தியல் கோணத்தில் எழுப்பப்படக்கூடாது ஆனால் அத்தகைய உரிமை பெறுவதால் சமூகம் முன்னேறமுடியும் என்ற சாத்தியக்கூறு இருக்குமாயி…
-
- 0 replies
- 719 views
-
-
வடக்கு, கிழக்குத் தமிழர்களில் பெருமளவானவர்களுக்கு இருக்கும் வெளிநாட்டு மோகத்தைப் பயன்படுத்தி கனடா, சுவிஸ், லண்டன் என பல இடங்களுக்கு அவர்களைக் கொண்டு சென்று விட்டுவிடுவதாக பெருமளவு பணத்தைப் பெற்று அவர்களை நடுத்தெருவில் விடுவது மட்டுமல்லாது கடும் சித்திரவதை செய்து உயிர்களையும் பறிக்கும் அவலம் தற்போது பெருமளவு நடந்து வருகின்றது. இவ்வாறு குறித்த அப்பாவிகளை ஏமாற்றுபவர்கள் வேறு யாருமல்ல. எமது இனத்தைச் சேர்ந்த கோடரிக் காம்புகளே தற்போது இந்த நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு வட்டுவாகலைச் சேர்ந்த நாகராசா காண்டீபன் என்பவரையும் அவருடன் சேர்ந்த இன்னும் நான்கு பேரையும் வெளிநாட்டு ஆசை காட்டி கள்ள வழியால் கொண்டு சென்றுள்ளார் கனடாவில் குடும்…
-
- 1 reply
- 364 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஜெட்விங் ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் குறித்த ஹோட்டல் யாழ் நகர மத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜெட்விங் ஹோட்டல் குழுமத்துக்குச் சொந்தமான இந்த ஹோட்டல் அதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 55 அறைகள் உள்ளன. ஜெட்விங் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் (JYDP) ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 67 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இங்கு நடைபெற்றது. இவர்களுக்கான சான்றிதழ்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார். அமைச்சர் ஜோன் அமரதுங்க, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்…
-
- 1 reply
- 511 views
-
-
ஶ்ரீ லங்கன் எயார் லைன்சை முன்னேற்ற தனியாருடன் கைகோர்க்க முடிவு ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக முன்னோக்கி கொண்டு செல்ல பங்குதார நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட, அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் பிரபல வர்த்தகர் அல்லது நிறுவனத்துடன் இணைக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=79242&mode=lead
-
- 0 replies
- 391 views
-
-
இலங்கையில் சுவீடன் தூதரகம் நிறுவக் கோரிக்கை! இலங்கையில் சுவீடன் தூதரகம் நிறுவப்பட வேண்டுமென சிவில் சமூகத்தினர் சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அந்த விஜயத்தின் போது, யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, முன்னைய காலத்தில் சுவீடன் தூதரகத்தினால் பல நன்மைகள் பெற்றுக்கொண்டதன் காரணத்தினால், இங்கு தூதரகம் அமைப்பது பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வழியமைக்கும் என …
-
- 0 replies
- 308 views
-
-
சமஷ்டி என்ற பேச்சுக்கே தயாரில்லை': சுதந்திரக் கட்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை பற்றி பேச்சு நடத்துவதற்கு கூட ஆளும் பிரதான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என்று அக்கட்சி கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. 'ஃபெடரல் ஆட்சிமுறை பற்றி பேசுவதற்கு நாம் தயாராக இல்லை. அதனால், நாம் வென்றெடுத்துள்ள அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை, ஸ்திரமற்ற நிலைக்குத் தான் செல்லும்' என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசியலமைப்பின் 13-ம் திருத்தம் மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கி- நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்ற அதிகாரங்களை வ…
-
- 2 replies
- 570 views
-
-
எனது பிடியிலிருந்து விடுவித்துக்கெண்டு கண்முன்னே சரணடைந்த கணவனை மீட்டுத்தாருங்கள்: மனைவி உருக்கமான வேண்டுகோள்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 2009-05-18 திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் எனது கணவர் செல்லையா விஸ்வநாதன் இராணுவத்தின் அறிவித்தலை தொடர்ந்து எனது கைபிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எனது கண்முன்னால் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். அவ்வாறு சரணடைந்த அவரை சீரிபி பஸ்ஸில் ஏற்றுவதனை எனது பிள்ளைகளுடன் நான் கண்டேன் எனவே அவரை மீட்டுத்தாருங்கள் என மனைவி விஸ்வநாதன் பாலனந்தினி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார். கிளிநொச்சி நேற்று திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறுகின் காணமால் போனோரை விசாரணை செய்…
-
- 0 replies
- 324 views
-
-
சட்டவிரோத ஆயுதங்களைக் கையளிப்போருக்கு சன்மானம்; ரீ-56 துப்பாக்கி ஒன்றுக்கு ரூ. 25,000 வழங்கப்படும் 2016-04-26 11:26:43 (காங்கேயனோடை நிருபர்) சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை கையளிக்கும் காலம் நேற்று ஆரம்பமாகிய நிலை யில் இது தொடர்பான அறிவித்தல்கள் சகல பிரதேச செயலகங்களிலும் கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்களிலும் பதாதைகள் ஊடாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத ஆயுதங்களை கையளிக்கும் பொது மன்னிப்புக் காலம் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி அடுத்த மே மாதம் 6 ஆம் திகதி மாலை 4 மணி வரை வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. …
-
- 0 replies
- 244 views
-
-
28ம் திகதி வடக்கு முதல்வர் - ஜனாதிபதி சந்திப்பு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான விஷேட சந்திப்பு எதிர்வரும் 28ம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் இராணுவத்திடம் உள்ள இடங்களை மீள வழங்குதல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தக் கலந்துரையாடல் கடந்த 18ம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக பிற்போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=79225
-
- 0 replies
- 331 views
-
-
திடீர் யாழ்.விஜயம் செய்த அங்கஜன், ரிஷாட்: காரணம் வெளியாகியது.? யாழ்ப்பாணத்திற்கு நேற்று மாலை திடீர் விஜயம் மேற்கொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து உடல நலன் குறித்து விசாரித்துள்ளனர். இதன்போது, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் சுகவீனமடைந்து சகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/5602
-
- 0 replies
- 362 views
-
-
சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் படைமுகாம்களுக்குச் செல்லலாம் எனவும் ஆனால் அதற்கான முன்னறிவித்தல் வழங்கப்பட்டு பெறப்பட்டபின்னரே செல்லவேண்டுமென சிறீலங்காவின் அமைச்சர் மகிந்த அமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், இப்போது நாட்டில் போர் இல்லை. சமாதான சூழலே நிலவுகின்றது. ஆகையால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளும் படைமுகாம்களுக்குள் செல்லமுடியும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவ்வாறு செல்வதற்கு முன்னர் தாம் செல்லப்போவதை, இராணுவத் தளபதிக்கு அல்லது அந்த முகாம…
-
- 1 reply
- 277 views
-
-
கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள் பூஜிதவுக்குள்ள பொறுப்பு? பூஜித ஜயசுந்தர என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியிருப்பதற்கான காரணம் அவர் ஒரு ‘சிறந்த’ பொலிஸ் அதிகாரி என்பதனாலாகும். அவர் கண்டியில் இருந்தபோது தினமும் தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டதன் பின்னரே வேலைக்குச் செல்வதாக சிலர் கூறுகிறார்கள். அத்துடன், அவர் இலங்கையில் வரவேற்பைப் பெற்ற பாடசாலையான கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். இவ்வாறான விடயங்களால் பூஜித சமூக ஊடகத்தளங்களில் மிகவும் பிரபலமான ஒருவராக காணப்படுகின்றார். இருந்தபோதிலும் பூஜித தொடர்பாக நற்சான்றிதழ் வழங்கிவரும் மக்கள் பின்னர் அவரின் செயற்பாட்டால் விரக்தியடைவதற்கு முன்னர் காட்டுமிராண்டித்தனமாக உள்ள பொலிஸ் திணைக்களத்…
-
- 0 replies
- 399 views
-
-
முகாமுக்குள் அத்துமீறி பிரவேசிக்கவில்லை : ஆர். சம்பந்தன் இராணுவ முகாமொன்றுக்குள் நான் அத்துமீறிப் பிரவேசித்ததாக என்மீது கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த விதமான உண்மைத்தன்மையும் கிடையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் முன் அனுமதி இன்றி இரா.சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் பிரவேசித்தாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் கருத்தாடல்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட…
-
- 2 replies
- 622 views
-
-
ராம் கடத்தப்படவில்லை; கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டில்;அம்பாறை எஸ்.எஸ்.பிக்கு தெரிவித்து விட்டே கைது செய்தோம் –பொலிஸார் 2016-04-26 08:10:42 (ஆர்.கிறிஷ்ணகாந், சரவணன்) திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் தளபதி ராம் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் ப…
-
- 1 reply
- 284 views
-
-
<p>Your browser does not support iframes.</p> யாழ்.மாவட்ட செயலக பாதுகாப்பு அதிகாரியின் அடாவடியும் கண்டுகொள்ளாத அதிகாரிகளும் யாழ்.மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் நிர்வாகமா அல்லது மாவட்ட செயலாளரின் நிர்வாகமா நடைபெற்று வருகின்றது என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு செல்பவர்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர் மரியாதையற்ற முறையில் நடந்துகொள்கின்றார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலுக்கு வருகை தந்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்களை முன் வாயிலாக செல்ல வேண்ட…
-
- 0 replies
- 315 views
-
-
''மகனுடன் பேசமுற்பட்டபோது இராணுவ சிப்பாய் அடிக்க வந்தார் '': ஆணைக்குழு முன் தாயார் கதறல் ஓமந்தையில் இராணுவத்தினரின் வாகனத்தில் எனது மகனை ஏற்றியபோது அவருடன் பேசுவதற்கு அனுமதியுங்கள் என அருகில் நின்ற இராணுவச்சிப்பாயிடம் கேட்டிருந்தேன். இதன்போது அவர் என்னை அடிக்க வந்ததோடு உரிய இடத்தில் இருக்குமாறு அதிகாரதொனியில் தெரிவித்தார் என்று காணாமல் போன இராஜரட்ணம் ஜெயராஜ் (வயது 28) என்பவரின் தாயார் நேற்று காணா மல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித் தார். மேலும், காணாமல்போன எனது மகனை மீட்டுத் தருவோம் என கடந்த கால ஆட்சியாளர்கள் எம்மை ஏமாற்றியிருந்தனர். எனினும் தற் போதை…
-
- 0 replies
- 279 views
-
-
போர்க்குற்றங்களில் பெண்களின் பாதிப்பை சாதாரண விடயமாக பார்ப்பது தவறு போர்க்குற்றம் போன்ற பாரிய விடயங்களில் பெண்கள் பாதிக்கப்படுவதை சாதாரண விடயமாக கருதுவது தவறானதென சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரொம் தெரிவித்தார். அத்துடன் வெளிநாட்டுக் கொள்கையில் பெண்ணிய கோட்பாடுகளை உள்வாங்குவதால் எவ்விதமான மாறுபட்ட நிலைகளும் ஏற்படப்போவதில்லையெனவும் குறிப்பிட்டவர் இலங்கையில் மூன்று தசாப்த யுத்தம் நிறைவுக்கு வந்து தற்போது நிலையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கான தருணம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நேற்று மாலை லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள்…
-
- 0 replies
- 341 views
-
-
வட மாகாணசபையைக் கலைக்கக் கோருகிறார் உதய கம்மன்பில! [Tuesday 2016-04-26 07:00] வட மாகாணசபையைக் கலைத்து விட்டு, அதன் நிர்வாகத்தை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிவிதுரு ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான உதய கம்மன்பில, கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, வட மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்துரைத்தார். வட மாகாணசபையினால் புதுமையானதொரு தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை ஒன்றிணைத்து, அவர்களுக்கென்ற சமஷ்டியாட்சி முறையொன்றை வழங்கு…
-
- 0 replies
- 397 views
-
-
கோத்தாவை அமெரிக்காவில் கைது செய்வதற்கு இடமளியோம் அரசாங்கம் தெரிவிப்பு.! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை அமெரிக்க அரசாங்கம் கைதுசெய்ய எமது அரசாங்கம் அனுமதி கொடுக்காது. எந்த குற்றமாக இருந்தாலும் அல்லது குற்றச்சாட்டாக இருந்தாலும் அவற்றை எமது சட்டத்தின் பிரகாரம் உள்நாட்டிலேயே விசாரிக்கப்படும். சர்வதேசம் இந்த விடயத்தில் தலையிட எம்மால் அனுமதிக்க முடியாது என அமைச்சர் கபீர் ஹாஸிம் தெரிவித்தார். தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைது செய்யுமாறு இரு தமிழ் அமைப்புகளான தமிழ் ப்போர் ஒபாமா மற்றும் அமெரிக்கன் தமிழ் போரம் ஆகிய இரு அமைப்புகள் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் …
-
- 3 replies
- 1.1k views
-
-
“ஈழக்” கொள்கைக்கு இடமில்லை : ஜனாதிபதி நாட்டில் “ஈழக்” கொள்கைக்கு இடமில்லை. அது முழுமையாக தோல்வியடையச் செய்யப்படும். ஸ்திரமான நாடு கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை பலாத்காரமாக பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் கட்சியைப் பலப்படுத்தும் எனது முயற்சிகளுக்கு இன்று தடைகள் போடப்ப்படுகின்றன. இதனை கண்டு நான் அஞ்சமாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அம்பலாங்கொடை தர்ம அசோக மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; …
-
- 3 replies
- 468 views
-
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது. Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…! பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும்க ண்டு பிடிக்க முடியாது. மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம். அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப…
-
- 4 replies
- 697 views
-
-
தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் முதலாவது அமர்வு கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்: கிளிநொச்சியில் இன்று சென்று தனிஈழம், ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசிப்பாருங்கள், அங்குள்ள மக்கள் உங்களை விரட்டியடிப்பார்கள். இதுவே இன்றைய வடக்கின் நிலை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அங்கு பேசிய அவர், இந்த நாட்டை எவராலும் பிளவுபடுத்த முடியாது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. நாட்டை பிரிக்கச் செய்வதற்கு வடக்கு மக்களும் தற்போது விரும்பவில்லை. இந்த நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளார்கள். வடக்கில் இன்று சென்று ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போம் அல்லது நாட்டைப் பிரிப்போம் என்று எவராவது கூறி…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். மாவட்ட கலாசார அதிகார சபையினால் நடத்தப்படவுள்ள பாரம்பரிய உணவுத் திருவிழாவுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சுயதொழில் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் யாழ். மாவட்டத்தின் பாரம்பரிய உணவுப் பொருட்களினையும் விற்பனை செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு தங்கள் உற்பத்திகளை காட்சிப்படுத்த விரும்புபவர்கள் மாவட்ட கலாசார உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்று விண்ணப்பிக்க முடியும். எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி யாழ். பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில் பங்குகொள்ள விரும்புபவர்கள் எதிர்வரும் மே மாதம் 5ஆ…
-
- 0 replies
- 366 views
-