ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142786 topics in this forum
-
யாழ்ப்பாணம் (Jaffna) - மண்டைதீவு பெரியகுளம், கலங்கரை விளக்க கடற்படை முகாமை விஸ்தரிப்பதற்காக தனியார் காணி ஒன்றை அளவீடு செய்யும் நடவடிக்கையை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அண்மையில், கடற்கரையை அண்மித்த தனியார் காணியை அளவீடு செய்வதற்காக நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்தபோது, காணி உரிமையாளருடன் இடத்திற்கு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளிட்டோர் அந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர். காணி உரிமையாளருக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்ததோடு, காணியை அளவீடு செய்ய வந்த அதிகாரிக…
-
- 1 reply
- 231 views
- 1 follower
-
-
- எம்.மனோசித்ரா எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகரமான நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பாகும். தற்போதைய அரசாங்கத்துக்கு இது ஒரு சிறந்த முன்னறிவிப்பு இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது. எதிர்க்கட்சியின் உறுப்பினராக இருந்த போது கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது எந்தளவு கடினமானது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது புரிந்து கொண்டிருப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகரமான நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பாகும…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி Vhg நவம்பர் 01, 2024 தமிழ்தேசிய முகமூடியை அணிந்துக் கொண்டு சுமந்திரன் - சாணக்கியன் போன்றோர், தமிழ்தேசியத்திற்கு எதிராக இதுவரை காலமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என பி2பி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், “தமிழரசுக்கட்சியை ஒதுக்குவதற்கான நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம். கட்சியை கடந்து தமிழ் தேசியம் என்கின்ற ஒரே இலட்சியத்தை ஒருங்கிணைத்து இந்த நாடாளுமன்ற தேர்தல் இருக்க வேண்டும். தமிழரசுக்கட்சியில் சுமந்திரன் சாணக்கியன் போன்றோர் தாங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் பதவி வேண்டும் என்பதற்காக தமக்கு சார்பா…
-
-
- 5 replies
- 318 views
-
-
அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இது தீவிரவாத குழுவினால் திட்டமிடப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர். எயார் வைஸ் மார்ஷல்(ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொண்டா, மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (30ம் திகதி) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைவர்களை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட குழுவை வழிநடத்திய ஈரான் பிரஜை உள்ளிட்ட தலைவர்கள் இந்த வலையமைப்பு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவி…
-
- 5 replies
- 333 views
-
-
எதிர்காலத்தில் நானும் எனது நண்பர்களும் போல்கார்ட் (ballguard) சின்னத்தின் கீழேயே தேர்தலில் போட்டியிடவேண்டியிருக்கும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது நீங்கள் அனைவரும் எந்த கட்சி என யோசிக்கின்றீர்கள்,நானும் எனது நண்பர்கள் சிலரும் நாங்கள் இதனை முயற்சி செய்து பார்க்கவேண்டும் என விரும்பினோம்,நாங்கள் கட்சியொன்றை உருவாக்கி ஆர்வத்தை ஏற்படுத்துவோம் என நினைத்தோம். ஆனால் கட்சிக்கான பெயர்களை தேடியபோது எல்லா பெயர்களிலும் ஏனையவர்கள் பதிவு செய்திருந்தனர். அதன் பின்னர் கட்சியின் சின்னத்துடன் ஆரம்பிப்போம் என தீர்மானித்து கிரிக்கெட் மட்டையை தெரிவு ச…
-
- 0 replies
- 174 views
-
-
யாழ்ப்பாணம், வல்லை - அராலி வீதியின் மீதமுள்ள வீதியையும் மக்கள் பாவனைக்காக திறந்து விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வல்லை - அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரையிலான வீதி கடந்த 34 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகிறது. குறித்த வீதியில் வெள்ளிக்கிழமை (01) பலாலி வீதியில் உள்ள வசாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி தோலாகட்டி சந்தி வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரமான வீதியே திறந்து விடப்பட்டுள்ளது. மிகுதி வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளேயே காணப்படுகிறது. அத்தனையும் விரைவில் மக்கள் பாவனைக்கு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்…
-
- 0 replies
- 609 views
-
-
ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,601,949 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 117,141 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 10 மாதங்களில் 16 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை | Virakesari.lk
-
- 1 reply
- 259 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைவாக விசேட பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சிபாரிசுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 60 அதிகாரிகள், 2 ஜீப் வாகனங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன. இது தவிர மேலதிகமாக அதிகாரிகள் இருந்தால் நாளை (2) அந்த பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி.யி…
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
மாவீரர் தினத்தை நினைவு கூரும் போதும் அநுர அரசாங்கத்தின் உண்மை முகத்தை அறியமுடியும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கு பகுதியிலும் எமது இளைஞர்கள் அநுரகுமாரவுக்கு பின்னால் அணிதிரள்வது போன்ற ஒரு நிலமை இருக்கிறது. அது உண்மையில் ஒரு மாயை. அரசியல் நோக்கத்திற்காக இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் என்பதற்காக சினிமா பாணியில் கருத்துக்களை கூறுகிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் அவர்களுடைய உண…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (01) துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இன்றிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துப்புரவுப் பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் இணைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/197624
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைக்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்வது தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (29) வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வட மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுராட்சி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவி செயலாளர், வலி. வடக்கு பிரதேச சபையின் செயலாளர், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் இராணுவ உயர் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர். விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு செல்லும் பாதைகள் பற்றைக் காடாக காணப்படுகின்றமையால் காணிகளுக்கான பாதைகள…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
200 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதியினர் விசேட அதிரடிப்படையினரால் கைது! 200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள் குழுவொன்று செவநகர நுகேகலய, கிரிவெவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. வீட்டின் முன்றலில் புதைக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் மறைத்து வைத்திருந்த 53 கிலோ 65 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அந்த வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரி…
-
- 1 reply
- 141 views
-
-
மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருதரப்பினரதும் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விடயங்களாக காணப்படுவதால் அவற்றை மனிதாபிமான முறையில் கையாண்டு நிவர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென இந்திய - இலங்கை தரப்பினரும் இணங்கியுள்ளனர். அத்துடன் இரக்கம், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறை மட்டுமே இருதரப்பு மீனவர்களாலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்கு நீடித்த அடித்தளமொன்றினை உருவாக்குமெனவும் அவர்கள் இணங்கியிருந்தனர். மீன்பிடி விவகாரங்கள் குறித்த இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஆறாவது அமர்வு ஒக்டோபர் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. இந்த அமர்வில் கலந்துகொண்டிருந்த இந்திய தூதுக்குழுவ…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமைபெறும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. சீனாவுடன் உயர்தர, முன்னுரிமை திட்டங்களுக்கு புதிய நிதியுதவி உட்பட வலுவான நிதி உறவை மீண்டும் தொடங்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என்று திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (30) இரவு நடைபெற்ற சீன உதவிப்பயிற்சி மற்றும் பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கைக்கான சீனாவின் ஆதரவு, நாட்டின் அபிவிருத்திக்கு குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார உதவித் துறையில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது. …
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஸ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே சமஷ்டியே தீர்வு என கூறி வந்த தமிழரசு கட்சியான அசல் நாங்கள் இருக்கும் போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்திற்கான தேர்தல் என சொல்லப்படுகிறது மாற்றத்தின் ஆரம்பம் என ஜனாதிபதி தேர்தலை சொல்கின்றனர். ஒரு வகையில் அது சரி தான். காலம் காலமாக இரண்டு கட்சிகள்…
-
-
- 11 replies
- 607 views
- 1 follower
-
-
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளை சீன அரசாங்கம் முழுமையாகப் பரிசீலித்து, பொருத்தமான பயிற்சித் திட்டங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் புதன்கிழமை (30) இரவு நடைபெற்ற சீன உதவிப்பயிற்சி மற்றும் பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், சீன - இலங்கை மனித வள ஒத்துழைப்பின் நன்மைகளைக் கொண்டாடவும், சீன - இலங்கை நட்புறவு என்றும் நிலைத்திருப்பதை வாழ்த்துவதற்காகவும், சீன உதவிப் பயிற்சி பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வு முதற்தடவையாக நடைபெறுகின்றது. சீன பழமொழி “ஒரு மனிதனுக்கு ஒரு ம…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
புதிய அரசும் சிங்கள தேசியவாதத்தையே பேசுகிறது தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்கமுடியும் என்பதுடன் அனுர அரசாங்கமும் சிங்களதேசிய வாதத்தையே பின்தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னிமாவட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை (31) வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , தமிழ்கட்சிகள் ஒற்றுமை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள ஆதங்கம் உண்மையானது. அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோ…
-
- 1 reply
- 320 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை மக்களில் நூற்றுக்கு 58 வீதமானவர்கள் பாராளுமன்ற முறையை அனுமதித்துள்ள நிலையில் பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை. சிலிண்டருக்கு வாக்களித்தால் மாத்திரமே பாராளுமன்ற முறைமையை பாதுகாத்துக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை (30) தம்புள்ளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பமாக பாராளுமன…
-
-
- 12 replies
- 734 views
- 1 follower
-
-
2024 ஆம் ஆண்டில் இதுவரை தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று சுகாதார அமைச்சகத்தின் மருத்துவப் பொருட்கள் பிரிவு தெரிவித்துள்ளது. தர சோதனையில் தோல்வியடைந்த 71 மருந்துகளில், சுமார் 39 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, பத்து மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, மற்றவை சீனா, கென்யா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்தவை. இதுகுறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், இந்தியா உலகின் முன்னணி மருந்து உற்பத்தியாளர்களில் ஒருவர் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் தரக் குறைபாடு ஏற்படுவது சாதாரண நிகழ்வு என்றும் …
-
-
- 3 replies
- 294 views
- 1 follower
-
-
மன்னார் காற்றாலையை அமைக்கும் அதானியின் திட்டம் கைவிடப்படுமா? இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணி தொடர்பில கலந்துரையாடல்களை நடத்த எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு ஆரம்பகட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டத்தின் ஊடாக 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. என்றாலும், இத்திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியிருந்ததுடன், தற்போதைய அரசாங்கம…
-
- 2 replies
- 301 views
-
-
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் கூட்டணியின் வேட்பாளர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், குருசுவாமி சுரேந்திரன், சி.வேந்தன், பா.கஜதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, கட்சியின் முதன்மை பெண் வேட்பாளரான சசிகலா ரவிராஜ்ஜீம் கலந்து கொண்டிருந்தார். இம்முறை , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படு…
-
- 3 replies
- 501 views
-
-
காங்கேசன்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள்! நாகபட்டினம் காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் தொடர்ச்சியாக மக்கள் பல்வேறு விதமான குற்றாச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் காங்கேசன்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள் இடம் பெறுவதுடன் மக்களை திட்டமிட்டு தாமதப்படுத்தும் செயற்பாடுகளிலும் சுங்க அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர் காங்கேசன்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளிடம் நீண்ட நேர விசாரணைகள் மேற்கொள்வதாகவும் நபர் ஒருவருக்கு 35 தொடக்கம் 40 நிமிடம் வரை விசாரணை செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர் அடிப்படை வசதிகள் அற்ற அமர்வதற்கு கதிரைகள…
-
- 1 reply
- 881 views
-
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது adminOctober 31, 2024 அமைச்சர்கள் கொழும்பில் இருந்து செயற்படுவதை விட சமூகங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க , அமைச்சர்களுக்கு எதிர்வரும் காலங்களில் கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் வறுமையை ஒழிப்பதிலேயே அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் எனவும் தொிவித்துள்ளாா். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தொிவித்துள்ளாா். மேலும் தங்களுக்கு மக்களுடன் நேரடியாக இணைக்கும் அரசாங்கம் தேவை எனத் தொிவித்த அவா் தலைவர்கள் தொலைதூரத்தில் இருப்பதை விட உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க தங்கள் மாவட்…
-
-
- 14 replies
- 964 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து குறித்து ரணில் கேள்வி! முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அரசாங்கம் நீக்கியதன் காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சந்திரிக்காவின் கணவரின் கொலையுடன் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தொடர்புபட்டுள்ளது. அவருக்கும் குண்டுவெடிப்பினால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்காக மட்டுமே நாங்கள் ஒன்றிணைந்து செய…
-
-
- 2 replies
- 489 views
-
-
0 Less than a minute wp-content/uploads/2024/10/Picsart_24-10-31_11-55-15-628-780x922.jpg ஜனநாயக ஐக்கிய காங்கிரஸ் கட்சிக்கும் லைக்கா மொபைல் நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சபாபதியும் ஸ்தாபக தலைவருமான முபாறக் மஜீத் முப்தி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எமது கட்சியை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது என பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்..எமது கட்சிக்கும் லைக்காவுக்கும் சம்பந்தம் இல்லை. எமது கட்சியின் நிர்வாகத்தில் லைக்காவின் உரிமையாளர் அங்கத்தவராக இல்லை. அத்துடன் முன்னாள பாராளுமன்ற உறு…
-
- 1 reply
- 259 views
-