Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அடுத்த முறை உங்களை சொந்த இடத்தில் சந்திக்க வேண்டும் - இடம்பெயர்ந்த மக்களிடம் ஹூசைன் February 7, 2016 05:35 pm நான் அடுத்த தடவை வரும் போது, உங்களை சொந்த இடத்தில் தான் சந்திக்க வேண்டுமென விரும்புகின்றேன், என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது, மருதனார்மடம் சபாபதிபிள்ளை நலன்புரி முகாமில் உள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, அவர் மக்களின் பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றம் குறித்து கேட்டறிந்துகொண்டார். அதன் பின்னர், மக்களுக…

  2. மகிந்தவை நெருக்கடிக்குள் சிக்க வைக்கவே எமில்காந்தன் வருகை! புலிகளுக்கு பணம் கொடுத்திருந்தால் சிறை! இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகக்சவை நெருக்கடிக்குள் சிக்கவைக்கவே எமில்காந்தன் அழைக்கப்படவுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகை பணத்தை மகிந்த ராஜபக்ச வழங்கியது தொடர்பில் எமில்காந்தன் தகவல்களை வெளியிடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் மகன் யோசிதவின் கைதை தொடர்ந்து மகிந்த ராஜபக்சவை சிக்க வைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் இதற்காக எமில்காந்தன் இலங்கைக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச எமில்காந்தன் ஊடாக புலிகளு…

    • 2 replies
    • 642 views
  3. தமிழில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்பட்டபோது சம்பந்தன் கண்களில் கண்ணீர் FEB 04, 2016 சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கண்கள் பனித்து கண்ணீர் முட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திர நாள் நிகழ்வில் பங்கெடுத்த அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டியே ஆங்கில ஊடகம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் வரலாற்றில், சுதந்திர நாள் நிகழ்வு ஒன்றில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது இது இரண்டாவது முறையாகும். முதல்தடவை 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க பிரதமராக இருந்த போது, முதலாவது சுதந்திர நாள் நிக…

  4. தெற்கில் தமிழிலும், வடக்கில் சிங்கள மொழியில் தேசிய கீதம் சுதந்திர தினத்தின் போது தெற்கில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதிலும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைத்து சுதந்திரதினத்தில் கலந்து கொண்ட சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கட்டளைத்தளபதி கர்னல் ரத்னப்பிரிய பந்து தலைமையில் நடைபெற்றது. இதில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பங்கேற…

  5. பிணை வழங்கமுடியாத குற்றங்களை சிராந்தியும் அவரது இரு மகன்களும் இழைத்துள்ளனர் மைத்திரிபால சிறிசேன- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் கைது இன்னமும் பல வட்டாரங்களில் அதிர்வுகளை உண்டாக்கிவருகின்றது.கடந்த புதன்கிழைம இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் இந்த விடயம் குறித்து விவாதிக்கப்பட்டது.யோசிதவை கைதுசெய்த நிதிக்குற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவை கலைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த அமைச்சர் ஓருவர் தெரிவித்த கருத்து குறித்து ஐக்கிய தேசிய கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். செவ்வாய்கிழமை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டிருந்தார், குறிப்பிட்ட பிரிவை …

  6. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீள்குடியேற்ற மக்களை சந்தித்தார் யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹீஸைன் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் வாழும் மக்களை நேரில் சென்று சந்தித்தார். கடந்த 25 வருடங்களாக சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் அகதி வாழ்வு வாழும் மக்களையே அவர் நேரில் சென்று கலந்துரையாடினார். அங்கு மக்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்ககையில்,மீள்குடியமர்வு தொடர்பாக ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளளேன் எனவும், எனது அடுத்த கட்ட விஜயத்தில் நான் உங்களை சொந்த இடத்தில் சந்தி்ப்பேன் என தான் நம்புவதாகவும் மனித உரி…

  7. நாமல், பசில் ஆகியோரும் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரும் கைது செய்யப்படக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது சிரேஸ்ட புதல்வர் நாமல் ராஜபக்ஸ மற்றும் சகோதரர் பசில் ராஜபக்ஸ ஆகியோரும் கைதாகக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் பணத்தை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படக் கூடுமென எதிர்வு கூறப்பட…

  8. சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசிதவிடம் கையடக்கத் தொலைபேசி சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடிக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஸவிடம் கையடக்கத் தொலைபேசி காணப்படுவதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் முன்னாள் ஜனாதிபதியும் தந்தையுமான மஹிந்த ராஜபக்ஸ, யோசிதவை பார்வையிடச் சென்றுள்ளார். தந்தையுடன் பேசியதன் பின்னர் சிறைக் கூடத்திற்கு திரும்பிய போது கையடக்கத் தொலைபேசி கீழே விழுந்துள்ளது. எவ்வாறெனினும் கையடக்கத் தொலைபேசி கீழே விழுந்தமை தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என த…

  9. ஐ.நா ஆணையாளர் யாழ்ப்பாணம் வந்தடைந்தார் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹீஸைன் உலங்கு வானூர்தியில் யாழ்.மாநகரசபை மைதானத்தை வந்தடைந்தார். ஆணையாளரின் வருகையின் போது காணாமற் போனோரின் உறவுகள் அவ்விடத்தில் ஒன்றுகூடி அவரை சந்திக்க முற்பட்ட வேளை அவர் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் கலந்துரையாடினார். கலந்துரையாடும் போது அவர் கூறியதாவது, நான் உங்களுக்கென தனியாக நேரம் ஒதுக்கியுள்ளேன். உரிய நேரத்தில் உங்களுடன் கலந்துரையாடி உங்கள் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்வேன் என்றும், தற்பொழுது நான் வடக்கு முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும். ஆகவே உங்களுக்குரிய நேரத்தில் நிச்சயம் சந்தித்துக் கலந…

  10. அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பை விட வழக்கு விசாரணை மூலம் விடுதலையே உகந்தது : யாழில் ஐ.நா ஆணையாளர் தெரிவிப்பு அரசியல் கைதிகள் விடயத்தில் பொதுமன்னிப்பை விட அவர்களின் வழக்கு விசாரணை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு விடுதலை செய்யப்படுதல் தான் சரியானதாக அமையும் என வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹீஸைன் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். சிறையில் வாடும் இளைஞர்கள் விடயம் தொடர்பில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை விட அவர்களின…

  11. கொழும்பில் இடம்பெற்ற 68ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பெருமையுடன் கலந்துகொண்டுள்ளார். அதுமட்டுமின்றி அங்கு தமிழில் தேசிய கீதம் பாடியமை ஒரு முன்னேற்றகரமான விடயம் எனப் பாராட்டியுள்ளார். அங்கு தலைமையுரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாமற் செய்த படையினரைப் பாராட்டியதுடன், இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே ஐ.நாவின் பரிந்துரைகளுக்கு அமைவான போர்க்குற்ற விசாரணைகளை நடாத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தலைவர் போரில் உயிரிழந்த, பங்குகொண்ட படையினரைக் கௌரவிப்பதை எவரும் தவறு எனக்கொள்ள முடியாது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழ் மக்கள் நடாத்திய புனிதம…

  12. சமத்துவமான தீர்வுக்கு இந்தியா துணை: சுஷ்மா வாக்குறுதி : சம்பந்தன் தெரிவிப்பு இந்தியா எப்போதும் சரியான விடயத்தின் பக்கமே நிற்கும். இந்த நாட்டில் நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சினைக்கு சமூகமான சமத்துவமான நிரந்த தீர்வை ஏற்படுத்துவதற்கு தமது முயற்சிகள் தொடரும் என்ற வாக்குறுதியை வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எமக்கு வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவது உடன் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டுமெனக் கோரியுள்ளதாக தெரிவித்தவர் இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற…

  13. உள்ளூராட்சி சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு? [ Saturday,6 February 2016, 04:23:31 ] உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தும் தீர்மானமும் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களிடையே கருத்து தெரிவித்த போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அமைச்சர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்த…

  14. கொலை வெறியுடன் இளைஞரை துரத்தித் துரத்தி வெட்டிய கும்பல்! கல்வியங்காட்டில் நேற்றிரவு பரபரப்பு! யாழ்ப்பாணம் கட்டைபிராய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாக்குதலில் புதிய செம்மணி வீதியை சேர்ந்த க.பீரதீபன் (வயது 27) என்பவரே படுகாயமடைந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது வீதியில் தனது மூச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குறித்த நபர் மீதும் ம…

  15. அனைவரினதும் கருத்துக்களை செவிமடுப்பேன் (ஆர்;.ராம்) இலங்கைக்கு வருகை தந்தமையானது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த விஜயத்தின்போது அனைத்து தரப்பினருடைய கருத்துக்களையும் நிச்சியமாக செவிமடுப்மேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் உறுதிபடத்தெரிவித்துள்ளார். நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்றுக் காலை இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கைக்கு வருகை தந்தமையிட்டு நான் மகிழ்வடைகின்றேன். மிகுந்த ஆவலுடனேயே எனது விஜயம் அமைந்…

    • 2 replies
    • 375 views
  16. மகிந்தவின் யோசிதவும், பிரபாகரனின் அன்டனியும் - உபுல்ஜோசப்பெர்ணாண்டோ: 03 பெப்ரவரி 2016 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச 2006 ம்ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்துகொண்டார்,அவ்வேளை ஏனைய உலக தலைவர்களை போல இல்லாமல் தான் தனது மகனை யுத்ததில் ஈடுபடுவதற்கு வழங்கியுள்ளதாக மகிந்த பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்.மகா சங்கத்தினர் அவரை புகழ்ந்து பாராட்டினர்,மகிந்தவை உண்மையான தேசப்பற்றாளன் என வர்ணித்தனர். மகிந்த தனது மகனை கடற்படைக்கு வழங்கிய அதேகாலப்பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அன்டனி ஏற்கனவே இலங்கை இராணுவத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். நோர்வே தலைமையிலான சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து மகிந்த விடுதலைப்புலிகள் மீது வாழ்வா சாவ…

    • 9 replies
    • 1k views
  17. பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு நிகரான சட்டம் இலங்கையில் அறிமுகம் [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2016, 12:29.32 AM GMT ] பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு நிகரான சட்டமொன்று இலங்கையிலும் அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரச சார்பற்ற நிறுனங்களும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியுள்ளன. பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய அதிகாரமுண்டு. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்…

    • 8 replies
    • 963 views
  18. தேங்காய் உடைக்கச் சென்று பணப்பையை பறிக்கொடுத்தார் தினேஷ்! தேங்காய் உடைப்பதற்காகச் சென்ற கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பணப்பை திருட்டு போயுள்ளது. நிதி மோசடிப் பிரிவுக்கு எதிராக தேங்காய் உடைக்க சீனிகம ஆலயத்திற்கு சென்றிருந்த வேளையிலே, அவரின் பணப்பை திருட்டு போயுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பணப்பை மாத்திரமல்லாது ஊடகவியலாளர் உட்பட சிலரது பணப்பைகளும் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபப்படுகின்றது. எனினும்,தினேஷ் குணவர்தனவின் பணப்பை காணாமல் போயுள்ளதாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்ததை அடுத்து அடையாள அட்டை உ…

  19. மகிந்த ராஜபக்ஸவின் பாதையில் பயணிக்கிறதா இலங்கைத் தமிழரசுக் கட்சி? இலங்கை அரசியலில் பலமாக இருப்பதாக நினைத்த எவருமே நிலைத்திருக்கவில்லை என்பதுதான் வரலாறு தந்த பாடங்கள்... இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ராஜபக்ஸ ஆட்சியின் வீழ்ச்சி வரை ஆட்சிக்கு வருபவர்கள் அனைவரும் தமது எதேட்சாதிகாரங்கள் மூலம் ஆட்சிக் கதிரையை இறுகப் பற்றிக் கொள்ளவே விரும்பினார்கள்... ஆனால் இறுதியில் அவர்கள் தோற்றுப் போனதுததான் வரலாறுகளாக எம் கண்முன்னே விரிகின்றன... தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருவரே 3 தசாப்தங்களை தன் பிடிக்குள் வைத்திருந்தார்... அவர் ஜனநாயக அரசியல் வழி வந்தவர் அல்ல.. விடுதலைப் போராட்ட வழியில் ஆயுதங்களால் அரசியலை நகர்த்தியவர்... அவரும் கூ…

  20. இலங்கை சிறுபான்மை கட்சியினர் சுஷ்மா ஸ்வராஜுடன் சந்திப்பு இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இலங்கையிலுள்ள சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர். இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவை அவருடன் பல விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளன. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்த அவர்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தாங்கள் கோரியதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தமிழ்த் த…

  21. 12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டை அறிமுகம்! 12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த அடையாள அட்டைகளில் உள்ள 9 இலக்கங்கள், நான்கு பாகங்களாக பிரிக்கப்படும். இதன்படி முதல் பாகத்தில் உள்ள இரண்டு எண்கள், நபரின் பிறந்த ஆண்டை குறிக்கும். …

  22. இந்தியாவுக்கு புதிய தலைமை மீது நம்பிக்கை உள்ளது: ஜனாதிபதியுடனான சந்திப்பில் சுஷ்மா (ஆர்.ராம்) ஜனாதிபதி மைத்திரிபாலவின் சிறந்த தலைமைத்துவத்தில் எமதுக்கு நம்பிக்கை உள்ளது. அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவளிப்பதுடன் ஒத்துழைப்புக்களை நல்கும். அயல் நாடுகளில் இலங்கைக்கே முக்கியத்தவத்தை வழங்குகின்றோமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த சுஷ்மா சுவராஜ் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபாலவை அவருடை இல்லத்தில் சந்தித்திருந்தார். இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா …

  23. அடுத்த சட்டமா அதிபருக்கு உரித்துடையவன் நானே! சட்டமா அதிபருக்கான வெற்றிடம் காலியாகியுள்ள நிலையில் அடுத்த சட்டமா அதிபருக்கான அனைத்து தகைமைகளையும் கொண்டிருப்பதாக சொலிஸிடர் ஜெனரல் (மன்றாடியார் நாயகம்) சுகத கம்லத் தெரிவித்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் மூப்பின் அடிப்படையில் சிரேஷ்டத்துவத்தை மட்டுமன்றி, அனைத்து விதமான தகைமைகளையும் கொண்டிருக்கின்றேன்'' என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் மேலும் கூறினார். சட்ட அதிபராகக் கடமையாற்றிய யுவன்ஜன வனசுந்தர விஜேதிலக்க கடந்த மாதம் ஒன்பதாம் திகதியுடன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்டார். 19ஆவது திருத்தத்திற்கு அமை…

  24. சுரேஸ் அணியில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் சிவமோகன் எம்.பி! வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியக் கலாநிதி சிவமோகன் நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். வன்னி மாவட்டத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி ஒன்றின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வைத்தியக் கலாநிதி சிவமோகன் நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவிடம் இருந்து தமிழரசுக் கட்சியின் அங்கத்துவத்தினைப் பெற்று தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். இவ்வாறு தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்ட சிவமோகன் கடந்த 201…

  25. வைத்தியர்கள் அல்லாதவர்களும் சிறுநீரக கடத்தலில் ஈடுபாடு! சுகாதார அமைச்சர் [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 11:13.07 PM GMT ] சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊடாக விசாரணை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார். எவ்வாற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.