ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தவறாக நடந்துகொண்டால் சட்ட நடவடிக்கை [ Tuesday,19 January 2016, 03:14:08 ] நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் உறுப்பினர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படுவார்களாயின் அது தொடர்பில் தனக்கு அறிவிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கத் தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில் நா…
-
- 0 replies
- 292 views
-
-
ஸ்ரீலங்காவில் வருடாந்தம் புகைப்பிடித்தலால் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பு [ Tuesday,19 January 2016, 06:11:50 ] ஸ்ரீலங்காவில் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வருடாந்தம் சுமார் 20 ஆயிரம் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் புகைப்பிடித்தலுடன் தொடர்புடைய பொருட்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. http://ibctamil.com/news/index/17209
-
- 0 replies
- 302 views
-
-
இலங்கையுடன் பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை – பிரித்தானியா:- 19 ஜனவரி 2016 இலங்கையுடன் பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையுன் விரிவான பாதுகாப்பு உறவுகளைப பேண விரும்புவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகே ஸ்வாயார் தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், முழு அளவிலான பாதுகாப்பு உறவுசார் ஒப்பந்தம் கைச்சாத்திடுவது போன்ற விடயங்கள் குறித்து தற்போதைக்கு கவனம் செலுத்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக ரீதியாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து படைத்தரப்பிற்கு கற்ற…
-
- 0 replies
- 244 views
-
-
புலிகளின் சார்பில் நிதி திரட்டியதாக தமிழர் ஒருவருக்கு எதிராக வழக்கு - குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:- 19 ஜனவரி 2016 தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் நிதி திரட்டியதாக தமிழர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெர்மனிய பிரஜையான 53 வயதான ஜீ.யோகேந்திரன் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் பணம் திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஹம்பார்க் பகுதியில் பணம் திரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 81000 யூரோக்கள் வரையில் இந்த நபர் திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. த…
-
- 0 replies
- 383 views
-
-
டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றில் ஆரம்பம் [ Tuesday,19 January 2016, 05:27:11 ] நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு சாட்சி விசாரணை சென்னை மாவட்ட நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. முதல் சாட்சியான கூலித்தொழிலாளி நீதிமன்றத்தில் ஆஜராகி பொலிஸ் தரப்பு சார்பாக சாட்சியம் அளித்துள்ளார். டக்ளஸ் தேவானந்தா, தன் இயக்கத்தை சேர்ந்தவர்களுடன், 1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் வசித்து வந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் பட்டாசு வெடித்தனர். இதில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்களுக்கும், பொதுமக்களுக்கும் தகராறு ஏற்பட்டதில் டக்ளஸ் தேவானந்தா தரப்பினர் துப்பாக்கிய…
-
- 0 replies
- 657 views
-
-
புலிகள் அமைப்பு ஒருசில உதவிகளையாவது வழங்கியது, அரசாங்கம் எதுவும் செய்யவில்லை [ Tuesday,19 January 2016, 06:07:30 ] யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலைப் புலி பேராளிகள் பலர் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிடப்படுகிறது. மனிதாபிமான ஆய்வுகள் மற்றும் செய்திகளை வெளியிடும் உலகின் முன்னணி ஆய்வு ஊடகமான ஐ.ஆர்.ஐ.என் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் வட பகுதியில் ஸ்ரீலங்காவின் முன்னைய அரசாங்கம் பாரிய முதலீடுகளை மேற…
-
- 0 replies
- 366 views
-
-
ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்வதை தமிழகம் நிறுத்த வேண்டும்! ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்வதை தமிழக மக்கள் நிறுத்தி அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாண்டிச்சேரியில் நடைபெற்ற உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக உயிரை கொடுத்து செயற்படுவதற்கும் தயாராக இருக்கின்றது. இன்று ஸ்ரீலங்காவில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்தியாவிலிருந்து ஸ்…
-
- 3 replies
- 513 views
-
-
வடமாகாணம் ஆற்றாமைகளிலிருந்து இன்னமும் மீளவில்லை : வடக்கு முதல்வர் தெரிவிப்பு எமது வடமாகாணம் அவலங்களிலும், ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தேசிய பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது வடமாகாணம் அதன் அவலங்களிலும் ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீங்கப்படவில்லை, தனியார் காணிகளும் மக்கள் நலம் சார்ந்த கட்டிடங்களும் விடுவிக்கப்படவில்லை, காணமற்போனார் விபரங்களை அவர்களின…
-
- 8 replies
- 719 views
-
-
வல்வெட்டித்துறையில் பறந்த காற்றாடிகள் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தைத்திருநாளையொட்டி, வினோத விசித்திர பட்டப் போட்டித் திருவிழா நடைபெற்றிருக்கின்றது. வல்வெட்டித்துறையில் பறந்த காற்றாடிகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த பட்டத் திருவிழா வடக்கிற்குச் சென்ற உல்லாசப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்து ரசிக்கச் செய்திருக்கின்றது. பத்து, பதினைந்து, பதினெட்டு அடிகள் என நீளத்திலும் அகலத்திலும் அமைக்கப்பட்ட பல்வேறு உருவங்களைக் கொண்ட இந்த பட்டங்கள் சுமார் 60 அடி உயரத்தில் வானத்தில் பறக்கவிடப்பட்டு, பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியிருக்கின்றன. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வெட்டித்துறை உதயசூரிய…
-
- 19 replies
- 2.5k views
-
-
மகிந்த தலைமையில் புதிய கட்சிக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்- சிங்களத் தொலைக்காட்சி தெரிவிப்பு கடந்த சனிக்கிழமை வாரியபொலவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கட்சி ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடத்தக்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக சிரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் டி.பி. ஹேரத்தின் வாரியபொல வீட்டில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் வடமேல் மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தார். மஹா சங்கத்தினரும் இந்த கூட்டத்திற்கு ஆசி வழங்கியயுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரகசிய கல…
-
- 1 reply
- 370 views
-
-
காக்கைதீவு இறங்குதுறை நவீனமயப்படுத்தப்படவுள்ளது! காக்கைதீவு மீன்பிடி இறங்குதுறை நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கிணங்க, அபிவிருத்திக்குத் தேவையான நிதியை கணக்கிடும் வகையில் மொரட்டுவ தொழில்நுட்ப பல்கலைக்கழத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் இறங்குதுறையை ஆய்வு செய்து வருகின்றனர். வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த இறங்குதுறையை சாவல்கட்டு, காக்கைதீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், உயரப்புலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 மீனவர்கள் பயன்படுத்தி வருவதுடன், சுமார் 200 வள்ளங்கள் இந்த இறங்குதுறை வழியாக கடலுக்குச் சென்று வருகின்றன. இந்த இறங்குதுறை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் புனரமைப்புச…
-
- 0 replies
- 606 views
-
-
வட மாகாண சபை உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு! சுவிட்ஸலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு அணியொன்றினால் நடத்தப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று நடைபெற்றது. பேராசிரியர் நவரத்ன பண்டார தலைமையிலான அரசியலமைப்புக் கற்கை நிறுவனமும்,சுவிட்ஸலாந்தின் பிறிபோக் பல்கலைக்கழகமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஒழுங்கு செய்தன. 'அதிகாரப்பகிர்வு, அரசியலமைப்பு மாதிரிகள், பல்லின சமூகங்களில் சவால்கள் மற்றும் பார்வைகள்' எனுப் கருப்பொருளில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உ…
-
- 0 replies
- 293 views
-
-
ஜேர்மனி செல்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன [ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2016, 06:02.47 AM GMT ] சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் ஜேர்மனிக்கான நான்கு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வரும் பெப்ரவரி 13ஆம் நாள் இந்தப் பயணம் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபரின் ஜேர்மனிப் பயண சந்திப்புகள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு வேலைகளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும், ஜேர்மனி வெளிவிவகார அமைச்சும் ஈடுபட்டுள்ளன. அத்துடன் சிறிலங்கா அதிபருடன் பெர்லின் செல்லவுள்ள பிரதிநிதிகள் குழு இன்னமுமும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், அமைச்சர் பைசர் முஸ்தபா இந்தப் ப…
-
- 7 replies
- 780 views
-
-
வயது முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இம்சை வயது முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இம்சை செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இளம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வழிகளில் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் தொல்லைகளை கொடுத்து வருவதாக கொழும்பில் தகவலகள்; வெளியாகி உள்ளன. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளை அடிக்கடி தொட்டு வாழ்த்து தெரிவிப்பது, மேனி அழகை ஆபாசமான முறையில் வர்ணித்தல் போன்ற பல்வேறு வழிகளில் மூத்த பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை அசௌகரியத்தில் ஆழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 393 views
-
-
மிருசுவில் பகுதியில் கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு! யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஒருவரைக் கொலை செய்து அவருடைய ஹைஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்த குற்றவாளிகள் மூவருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் கொலைக்குப் பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த உலக்கையை குடமியன் இராணுவ முகாமுக்கு எதிரில் உள்ள வயலில் வீசியெறிந்தபோது, அதனை தொலைநோக்கியொன்றின் மூலம் கண்ட இராணுவ சிப்பாய் ஒருவரின் உடனடி நடவடிக்கையையடுத்து, முதலாம் குற்றவாளி கைது செய்யப்பட்டார். …
-
- 1 reply
- 516 views
-
-
விடுவிக்கப்பட்ட காணிகளின் இயற்கை வளங்களை அபகரிக்கும் திருடர்கள்! அதிகாரிகள் பாராமுகம்! அண்மையில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பலாலி வயாவிளான் மற்றும் தையிட்டி பகுதிகளில் உள்ள மக்கள் தமது காணிகளில் உள்ள இயற்கை வளங்களை கூட பாதுகாக்க முடியாத நிலைமையில் காணப்படுகின்றார்கள். கடந்த இருபத்தைந்து வருடங்களாக இடம்பெயாந்து தமது வீடு வாசல்களை இழந்து சொத்துக்களை இழந்து பல்வேறு துன்ப துயரங்களுக்கும் உள்ளாகிய மக்களின் காணிகளில் உள்ள இயற்கையாக கிடைத்த மரங்களைக் கூட பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளின் செல்வாக்குடன் திருடர்கள் வெட்டிச்செல்கின்றனர் என கவலை தெரிவித்துள்ளார்கள். …
-
- 0 replies
- 416 views
-
-
'பிழையான செய்திகள் வெளிவருவது வேதனையளிக்கின்றது' ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை தொடர்பாக சில ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளானது முற்று முழுதாக தவறானது என மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஓய்வு பெற்ற ஆயர் அதி வண ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மன்னார் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, சுகயீனம் காரணமாக் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது ஓய்வு பெற்றுள்ளார். ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தற்போது மன்னார் ஆயர் இல்லத்தில் நலமுடன் இருக்கின்றார்.ஆனால் அவர் மரணித்து விட்டதாக சில ஊடகங…
-
- 1 reply
- 744 views
-
-
மகிந்த ஏன் மயில்மாளிகையை விரும்புகின்றார் 18 ஜனவரி 2016 ஜோதிடம் மற்றும் அமானுஸ்ய சக்திகள் மீதான ஆர்வம் என்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை பொறுத்தவரை இரட்டைமுனை கத்திகளாகவே காணப்பட்டுள்ளன. அவற்றின் மீதான நம்பிக்கை அவரிற்குபாரிய வெற்றிகளை வழங்கிய அதேவேளை அதலபாதளத்திலும் தள்ளியுள்ளன. எனினும் ஜோதிடர் ஓருவரின் எதிர்வுகூறல் காரணமாக தனக்கு மிகவும் விருப்பமான பெலவத்தை மயில்மாளிகையில் குடியேறுவதற்கான மகிந்தராஜபக்சவின் விருப்பத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.அந்த மாளிகையில் குடியேறினால் முன்னாள் ஜனாதிபதியின் அரசியல்எதிர்காலம் மீண்டும் உச்சத்திற்கு செல்லும் இதனால் அந்த வீட்டை ம…
-
- 0 replies
- 530 views
-
-
புதிய முன்னணிக்கு கோட்டா தலைவர்? கூட்டு எதிரணி உறுப்பினர்கள் குழுவினால் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற புதிய முன்னணிக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த முன்னணியின் தலைமை பொறுப்பை, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வதற்கு மறுக்கும் பட்சத்திலேயே, அப்பதவியை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/163953/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%A9-%…
-
- 0 replies
- 328 views
-
-
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கை [ Sunday,17 January 2016, 05:57:49 ] யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். பலாலியில் நடைபெற்ற தேசிய பொங்கல் தின நிகழ்வில் பங்கேற்பதற்கு பதிவு செய்தவர்கள்,இராணுவத்தினருடைய வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு நிகழ்வு நடைபெற்ற கண்ணார் வயல் ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே உயர்பாதுகாப்பு வலையத்திற்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்ட போது வீதியின் இரு மருங்கிலும் இராணுவத்தினால் செய்யப்பட்ட விவசாய நிலங்கள் காணப்பட்டன. இப்பகுதியில் பப்பாச…
-
- 2 replies
- 487 views
-
-
சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை; ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு தொடர்பு [ Monday,18 January 2016, 06:11:04 ] இந்தியாவில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட 30ற்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளுடன் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச சிறுநீரக மோசடி மாற்று சத்திரசிகிச்சை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://ibctamil.com/news/index/17153
-
- 0 replies
- 216 views
-
-
இம்முறை வெளிவந்த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு பின்னால் யார் இந்த கீர்த்திகா? என்று அனைவரும் தேடும் அளவிற்கு மிகவும் பிரபலமாகிவிட்ட இந்த கீர்த்திகாவை பற்றி நாமும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தோம். மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளியில் புதுார் என்ற ஓர் சிறிய கிராமமே இவளது வசிப்பிடம். இந்த கிராமமும் இந்த கிராமத்தை சூழவுள்ள ஏனைய கிராமங்களும் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் கிராமங்களாகும். மேலும், இங்கு வசிப்பவர்கள் அனைவரும் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கியவர்களும், சுனாமியின் கோரதாண்டவத்திற்கு முகம்கொடுத்து அனைத்தையும் இழந்த மக்களுமே இங்கு வசித்து வரும் நிலையில், கீர்த்திகாவின் குடுபம்பமும் தந்தையை இழந்து ஆண் துணையின்றி ஓர் விதவைப் பெண்ணின் வ…
-
- 0 replies
- 445 views
-
-
அன்று உலகத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த தமிழன், இன்று தனகென்று ஒரு பிடி நிலமில்லாமல் அடிமை வாழ்க்கை வாழும் அவல நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். பூகோள வரலாற்றில் இன்னொருவருக்கு கீழ் கட்டுப்பட்டு வாழக்கூடிய நிலையில் தமிழன் இன்று உள்ளான். அதனால் தான் இன்று தமிழர்களிடம் விரக்தி நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார். பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு சிறப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். செம்மொழியான தமிழ் எங்கும் ஆட்சிமொழியாக இல்லை! உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் செம்மொழியான தமிழ் மொழி எந்த நாட்டிலும் அரசகரும மொழியாக இல்லை என உலகத் தமிழ்ப் …
-
- 14 replies
- 981 views
-
-
நெடுந்தீவு கடற்பரப்பில் மூன்று இந்திய மீனவர்கள் கைது -செல்வநாயகம் கபிலன் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இந்திய மீனவர்களை கடற்படையினர், நெடுந்தீவு கடற்பரப்பினுள் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளதுறை திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் ப.ரமேஸ்கண்ணா தெரிவித்தார். கோட்டைப்பட்டிணம், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து விசைப் படகில் வந்த குறித்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதோ கைது செய்யப்பட்டுள்ளனர். இராமையா பாலசுப்பிரமணியம் (வயது 33), கலைஞன் சந்தோஸ்குமார் (வயது 28), சந்திரன் பார்த்தீபன் (வயது 19) ஆகிய மூவருமே இவ்வாற…
-
- 1 reply
- 525 views
-
-
இம்முறை சுதந்திர தின விழா காலிமுகத் திடலில்! [Monday 2016-01-18 07:00] இலங்கையின் 68 ஆவது தேசிய சுதந்திர தின விழா இம்முறை கொழும்பு காலி முகத்திடலில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த சுதந்திர தின விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜெயசூரிய உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்வுள்ளனர். இலங்கையின் 68 ஆவது தேசிய சுதந்திர தின விழா இம்முறை கொழும்பு காலி முகத்திடலில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான…
-
- 0 replies
- 558 views
-