Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீர்த்திருத்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை இலங்கை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. விரைவில் வரவிருக்கும் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது தவணைக்கு மதிப்பாய்வை நோக்கி விரைவாக முன்னேறும் வகையில் அதை நிலைநிறுத்தியுள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197087

  2. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனமானது (FAO), நோர்வே அரசாங்கத்தின் நிதி உதவியுடன், மேம்பட்ட குளிரூட்டும் தொழில்நுட்பம் மற்றும் எரிபொருளைச் சேமிக்கும் குமிழ் வில் (பல்பஸ்பவ்/ bulbous bow) அமைப்பு ஆகியவற்றை கொண்ட பலநாள் தங்கியிருந்து மீன் பிடிக்கக்கூடிய படகினை கையளித்தமையின் மூலமாக இலங்கையின் மீன்பிடித்துறையில் மீண்டெழுதிறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியானது மீன்பிடி செயற்பாடுகளுக்குப் பிந்தைய இழப்புகளை குறைப்பதற்கும், செயற்படுத்தல் செலவீனங்களைக் குறைப்பதற்கும், உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்குமான மீன்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதை …

  3. யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். புலோலி தென்மேற்கு, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிராஜ் (26) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தவருக்கு கடந்த 22 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் உறவினர்கள் அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதி…

  4. பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால் தகாத முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். அவ்வாறு செயல்படும் மதகுருமார்கள் மீது ஆணையம் வழக்குப் பதிவு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரசபையில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் பணிப்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெற்றோரின் குடும்பத் த…

  5. ரத்தொலுவையில் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுதின நிகழ்வுகளில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் கலந்துகொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 1988-89ம் ஆண்டுகளில் ஜேவியின் கிளர்ச்சியின் போது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் 33 வருடங்களாக நீதிக்காக போராடுகின்றனர். இந்த வருடம் 34வது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன ஜனாதிபதியை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜேவியின் இரண்டாவது கிளர்ச்சி காலத்தின் போது 60,000க்கும் அதிகமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர், …

  6. சிறிநேசனை தோற்கடிக்க சுமோவும் சாணாவும் மாஸ்டர் பிளான் – கோட்டை பிடிபடுமா? Vhg அக்டோபர் 24, 2024 மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் ஶ்ரீநேசனின் ஆதரவலையை குறைக்க சாணக்கியன் போட்ட இரகசிய சதித்திட்டம் தீட்டுவது அம்பலமாகியுள்ளது. மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சாணக்கியன் நேற்று முன்தினம் (22,10,2024) இரவு 7.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணிவரை களுவாஞ்சிகுடி கடற்கரை தோட்டத்தில் உள்ள தனது பங்களாவில், ஶ்ரீநேசனை தோற்கடிக்க, சுமந்திரன் வழங்கிய சதித்திட்ட ஆலோசனையை ஆதரவாளர்களுடன் பகிர்ந்துள்ளார். அன்று இடம்பெற்ற இரவு விருந்தில், தமிழரசு கட்சியில் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வே…

    • 2 replies
    • 260 views
  7. யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு டிஜிட்டல் வலயங்கள் அரசாங்க சேவையை இலகுபடுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தற்போதைய அரசாங்கம் நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தெளிவான பார்வையை கொண்டுள்ளது. தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவா…

  8. ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நீதி வழங்காது; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறீலங்காவிற்கும் தமிழீழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தின் போது இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் செயல்முறையில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது. மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செயற்பாட்டிற்கும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அவரது நேர்மையான, விரிவான அறிக்கைக்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றது. எவ்வாறாயினும், பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இன்மையால் ஈழத்தமிழ் மக்கள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இதுதொடர்பில் நாடுகடந…

  9. புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை! பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இணையும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது என எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனக்குக் கிடைத்த தகவலைத்தான் வெளிப்படுத்துகின்றேன். …

  10. கையடக்கத் தொலைபேசிகள் வெடிக்கும் என்ற வதந்திகள்! கையடக்கத் தொலைபேசிகளுக்கு பதிலளித்தால் உடனடியாக வெடித்துவிடும் எனும் பொய்யான வதந்தி அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. அவ்வாறான காணொளிச் செய்தியினால் மக்கள் பீதியடைய வேண்டாம் என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு அறிவித்துள்ளதாக டெய்லி மிரர் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் பல அழைப்புகள் வந்துள்ளதாக மேற்குறித்த குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனபொல கூறியதாகவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீடியோவில், பார்வையாளர்கள் இதனை கவனமாகக் கேட்டு இச் செய்த…

  11. மதுபான அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு. அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மதுபான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு தேவையான அனுமதி சான்றிதழ்களை விண்ணப்பிப்பது தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும், மேலும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளுக்கு பணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிகள் தேவைக்கேற்ப செலுத்தப்பட்டிருக்க வேண்டும், மற்ற வரிகளுக்கு பதிவு செய்தால், அது தொடர்பான அறிக்கைகள் கொடுக்கப்பட்டு செலுத்தப்பட வேண்டும். வரி செலுத்தப்பட…

  12. தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் ஏன் பிரிந்து நின்று செயற்படுகின்றன என இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்,நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் கஜேந்திரன் ஆகியோரை சந்தித்தவேளையிலேயே மேற்படி வினாவை தொடுத்திருக்கிறார். இந்த சந்திப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்; ஏன் தமிழ்த் தரப்புகள் பிரிந்து நிற்கின்றன என்ற கேள்வியை தூதுவர் எழுப்பியிருந்தார்.எங்களைப்பொறுத்தவரை 13 ஆவது திருத்தம் என்ற விடயத்தினால் தான் …

  13. புலனாய்வு தகவல்கள் கிடைத்ததும் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் - செய்தியாளர் மாநாடுகளை நடத்துவதில்லை - அனுர புலனாய்வு தகவல்களை தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உறுதியளித்துள்ளார். புலனாய்வு தகவல்கள் குறித்து நாங்கள் செய்தியாளர் மாநாடுகளை நடத்துவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாங்கள் துரிதமாக செயற்பட்டு சிலநபர்களை கைதுசெய்துள்ளோம் என தெரிவித்துள்ளார். செய்திகளில் வெளிவராவிட்டாலும் அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்ன…

  14. இலங்கைக்கு Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலவசமாக வழங்கியுள்ளது. இந்த விமானம் விமானப்படையின் வான்வழி கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை விரிவுபடுத்துவதுடன், அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைப் பேணுவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பங்களிக்கும். அவுஸ்திரேலியா இந்த விமானத்தை இலங்கைக்கு வழங்கியமை, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை வலியுறுத்துவதோடு, மனித கடத்தலை தடுப்பதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. https://www.vi…

  15. மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை இரவு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக நீதிமன்றப் பதிவாளருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று நேற்று இரவு வந்ததையடுத்து உடனடியாகப் பொலிஸாருக்கு அவர் அறித்துள்ளார் இதனையடுத்து நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்குப் பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் கட்டடத்தைச் சுற்றிவர பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகி…

  16. யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். இதில் சங்கரத்தையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு கடந்த 21 ஆம் திகதி சுகயீனம் அடைந்ததை அடுத்து மறுநாள் சங்கானைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். குறித்த நபருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உடற்கூற்றுப் பரிசோதனையில் எலிக் காய்ச்சலின் காரணமாக மரணம் சம்பவித்துள்ளமை உறுதிப்படுத்த…

  17. ஈஸ்டர் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு கிடைத்ததாகவும், ஆனால் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதிலிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிக்கை பின்வருமாறு “இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங…

  18. எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் உறுதியளித்துள்ளார். வட மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது. …

  19. தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் அமெரிக்க தூதுவரை சந்தித்த வேளையிலேயே மேற்படி விடயம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இந்த சந்திப்பின் போது அமெரிக்க தூதுவர் முக்கியமாக ஜனாதிபத…

  20. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார, ஜனாதிபதி பதவிக்கான சம்பளத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளார். பொதுமக்களுக்கான நிதியுதவிகள் அதன் பிரகாரம் அவர் தனது சம்பளத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். குறித்த நிதியத்தின் மூலம் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான சம்பளம், பொதுமக்களுக்கான நிதியுதவிகள் என்பன மேற்கொண்டு வரப்படுகின்றமை குறி்ப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/president-donates-salary-to-parliamentarians-fund-1729742381

  21. இலங்கையில் இருந்து வருடம் தோறும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மேலும் ஐயப்ப யாத்திரைகளுக்கு இந்திய அரசாங்கம் இலவச வீசாவையும் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் தங்களது பிரயாண காலத்தில் விமான டிக்கெட்டுக்காக அதிக செலவு காரணமாக கஷ்டங்களுக்குள் உள்ளாகின்றனர் என பல ஐயப்ப பக்தர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பாபு சர்மாவிடம் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் முன்னைநாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் காரணமாக காங்கேசன் துறைக்கும் காரைக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை நடைபெற்று வருகின்றது. அதே நேரம் போக்குவரத்துக்கான செலவுகளும் குறைவாக இருக்கின்றது. அதேவேளை இந்த வசதி…

  22. இன்றையதினம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என அங்கு கடமையில் இருந்த சிங்கள பொலிஸார் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், ஊடகவியலாளர் ஒருவர் செய்தி ஒன்றினை உறுதிப்படுத்துவதற்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் 0212263227 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டுள்ளார். இதன்போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர், தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என தெரிவித்துள்ளார். தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என்றால் ஒரு அவசர முறைப்பாட்டினை பதிவு செய்வதற்கு ஒருவர் வந்தால் என்ன செய்வீர்கள் என வினவியவேளை, அவர்கள் நாளையதினம் தான் முறைப்பாடு பதிவு ச…

  23. ! சாணக்கியன் ஒரு தௌவல். அவருக்கு நல்ல குரல்வளம் உள்ளது. ஆட்களை கவரக்கூடிய கவர்ச்சித் தன்மை உண்டு. அதை சரியாக பாவித்தால் சாணக்கியன் ஒரு தலைவராக வரலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் "இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரான திரு.சிறிநேசன் அவர்கள், திரு.பா.அரியநேந்திரன் அவர்களை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவோ, கட்சியின் நிகழ்வுகளில் ஈடுபடுத்தவோ கூடாது. அவர் தமிழரசுக் கட்சியால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்ப…

  24. 16 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்றிரவு வியாழக்கிழமை(23) இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளின் பின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (ச) 16 இந்திய மீனவர்கள் கைது!

  25. யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட 07 கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று காலை நடத்தப்பட்ட சோதனையின்போது வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.