Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாம் பின்கதவால் வந்தவர்களல்ல, முன் கதவால் வந்தவர்கள் - வடக்கு முதல்வர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்: தமிழ் மக்கள் பேரவையில் உள்ள எவரும் பின் கதவால் வந்தவர்கள் அல்ல, அனைவருமே முன் கதவால் வந்தவர்கள்.என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம் ஞாயிறு காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், …

  2. அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் உபகுழுவில் இடம்பெற்றுள்ள 15 பேர் விபரம் DEC 28, 2015 தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வுத் திட்ட ஆவணத்தை தயாரிக்க 15 பேர் கொண்ட உபகுழுவொன்றை தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ளது. யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை நடந்த பேரவையின் இரண்டாவது கூட்டத்தின் பின்னர், நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், இணைத் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் பி.லக்ஸ்மன் இதனை அறிவித்தார். ”அரசியல் தீர்வு சம்பந்தமாக விஞ்ஞான பூர்வமான ஆவணமொன்றை முன்வைப்பதற்காக 15 பேர் கொண்ட உப குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில் தலா இரண்டு பேரை முன்மொழிந்துள்ளன. ம…

  3. சித்தார்த்தனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் : மாவை எம்.பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தொடர்பாக விசாரணை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிடம் கோரியுள்ளது. புளொட் அமைப்பின் தலைவர் சித்தர்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன் அனுமதியின்றி அந்த அமைப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/…

  4. காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகளின் போது இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலவே விடுதலைப் புலிகள் மீதும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய வெறுமனே இராணுவத்தை மாத்திரம் தண்டிக்க முடியாது என காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். 'இறுதி யுத்தத்தின் போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் அதில் ஒரு கட்டமாகவே இந்த காணாமல்போனோர் தொடர்பில் கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. கடந்த காலத்தில் இருந்தே நாம் இந்த விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். வடக்கு …

  5. அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மையப்படுத்தி உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று கல்முனை நகரில் தமிழர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு பேரணியொன்றும் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் அழைப்பின் பேரில் ஆனைக்குட்டி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து தமிழ் பிரிவு பிரதேச செயலகம் வரையில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு பேரணியில் ததேகூவின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். …

    • 4 replies
    • 726 views
  6. மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு உயர்ந்துள்ளன. ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாவாக விற்கப்படுகின்றது.ஏனைய உள்ளுர் மரக்கறிகளும், பீர்க்கு 200, கறிமிளகாய் 600, வெண்டைக்காய் 200, கத்தரிக்காய் 200, போஞ்சிக்காய் 400, கரட் 200 ரூபா என அதிக விலையில் விற்கப்படுகின்றன. சாதாரண மக்கள் இந்த மரக்கறி விலையேற்றத்தால் அதிகம் சிரமப்படுவதாக உள்ளுர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் நிலவிய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையே உள்ளுர் மரக்கறிகளின் உற்பத்தி குறைவிற்கும், அதனால் உண்டான விலையேற்றத்திற்கும் காரணம் என விவசாயத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மிளகாய் விலை கடந்த மூன்று மாதங்களாக ஒரு கிலோகிராம் 1000 ரூபாவைத் தாண…

  7. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தடைசெய்யப்படவுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடனே இவ்வாறான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 மைக்ரோன்களுக்கு குறைவான கனவளவை கொண்ட பொலித்தீன் பொதிகள், பயன்பாட்டுக்கே எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. தடையுத்தரவுகளை மீறி பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் தண்டப்பணமாக ரூ 10,000 விதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இல. 1466/5 இன் 23w பிரிவின் கீழுள்ள தேசிய சுற்றாடல் சட்டம் இ…

  8. கிணற்று நீரைக் குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? : மக்கள் ஆர்ப்பாட்டம் யாழ் மாவட்டத்தில் சுன்னாகம் பகுதி கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பால் பாதிப்படைந்த குடி நீரை குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களே பதில் கூறுங்கள் எனக்கோரி யாழ்.சுன்னாகம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று நடத்தினர். சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புகளின் ஒழுங்கமைப்பில் குறித்த கவனயீர்ப்பு சுன்னாகம் முனியப்பர் கோவில் முன்றலில் இடம்பெற்றது. வடமாகாண நீர்வழங்கல் அமைச்சு நிபுணர்குழு ஒன்றை உருவாக்கி குறித்த நிபுணர்கள் குழு இறுதி அறிக்கையினை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. இந்த …

  9. உள்ளாடைகளை களைந்தெறியும் நிகழ்ச்சிகளுக்கு இனிமேல் இடமில்லை : ஜனாதிபதி திட்டவட்டம் நாட்டின் கலாசாரம், நாகரிக வளர்ச்சியைச் சீரழிக்கும் வகையில், வெளிநாட்டுப் பாடகர்களை வரவழைத்து அநாகரிகமான இசை நிகழ்ச்சிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். உள்ளாடைகளைக் களைந்தெறியும் நிகழ்ச்சிகளுக்கு, இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடளாவிய ரீதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில்…

  10. தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டமை தொடர்பாகவும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் அமெரிக்கா அவதானித்து வருவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக வழிமுறைகளில் உரிமைகளை பெறுவதற்கான மக்கள் செயற்பாடுகளை அமெரிக்கா வரவேற்கும். ஆனாலும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயலாற்றுவது அவசியம் என அமொிக்கா எதிர்ப்பார்ப்பதாக தூதரக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசிதிகள் முழுமையாக செய்யப்பட வேண்டும். ஆனாலும் நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு கிழக்கில் இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது என்றும் எனினும் அரசியல் தீர்வுக்கான வேலைத் திட்டங்களில் அனைத்து தரப்பினரும் உரிய முறையில் ஈடுபட வேண்டும் என எதிர்ப்பார…

  11. பருத்தித்துறை முனையில் படகு கவிழ்ந்தது; ஒருவர் பலி, இன்னொருவரைக் காணவில்லை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு தொடக்கம் நிலவுகின்ற மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பருத்தித்துறை முனை பகுதியில் கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மற்றுமொருவரைக் காணவில்லை என்றும் அவரை கடற்படையினர் உதவியுடன் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் வடமராட்சி கடல் தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் வைத்திப்பிள்ளை அருள்தாஸ் பிபிசி தமிழோசையிடம் கூறினார். நேற்றிரவு கடலில் வீசப்பட்டிருந்த வலைகளைப் பார்த்துவிட்டு அவற்றில் மீன்கள் சிக்கியிருந்தால் அவற்றை எடுத்து வருவதற்காக இன்று காலை…

  12. தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளப் போவதில்லை – மாவை சேனாதிராஜா தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளப் போவதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துகொள்ளுமாறு நேற்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராஜாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் இந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளதாக அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில…

  13. அவதூறான செய்திகளை நீக்க கப்பம் கோருகின்றனர்: துவாரகேஸ்வரன் -சொர்ணகுமார் சொரூபன் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் சார்ந்து அவதூறான செய்திகளை சில இணையதளங்கள் வெளியிட்டுவிட்டு, அவற்றை அந்த பக்கங்களில் இருந்து நீக்குவதற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து கப்பம் கோரும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'சில இணையதளங்களில், மாணவிகள், யுவதிகள், வர்த்…

  14. ஜே.ஆர்.தொடக்கம் மகிந்த வரை – அச்சிடத் தயார் நிலையில் மகாவம்ச நூலின் புதிய பதிப்பு மகாவம்ச நூலின் மேலதிக இணைப்பாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம் தொடக்கம் மகிந்த ராஜபக்சவின் காலம் வரையான புதிய பகுதிகள் அச்சிடப்படவுள்ளன. சிங்களவர்களின் வரலாற்றைக் கூறும் மகாவம்ச நூலில் புதிய பகுதிகளாக நவீன சிறிலங்காவின் அரசியல் வரலாற்றை இணைக்கும் முயற்சிகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலம் தொடக்கம், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் வரையான காலப் பகுதியை (1978 தொடக்கம் 2010 வரை) உள்ளடக்கியதாக இந்தப் புதிய இணைப்பு அச்சிடப்படவுள்ளது. உள்நாட்டு விவகார, வயம்ப அபிவிருத்தி, மற்றும் கலாசார அமைச்சினால் நாடாளு…

  15. 'செல்பி' மோகத்துக்கு இலங்கையின் ஆதிவாசிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். தங்களைப் பார்வையிடுவதற்கு வருபவர்கள் தமது வரலாறு, கலாசாரம் என்பவை பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்றும், மாறாக, புகைப்படம் எடுப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றும் ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ கவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஒருசில பகுதிகளிலேயே ஆதிவாதிகள் வாழ்ந்து வருகின்றனர். இதில் குறிப்பாக மஹியங்கனை தம்பான பகுதியிலேயே ஆதிவாசிகளின் தலைவர் இருக்கிறார். அங்கு அவர்களுக்குத் தனிக் கிராமமொன்றே இருக்கிறது. மஹியங்கனை பகுதிக்குச் சுற்றுலா செல்பவர்கள் தம்பான பகுதிக்குச் செல்வதற்கு மறப்பதில்லை. டிசம்பர் மாதம் பாடசாலை விடுத…

  16. அளவெட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றிரவு துப்பாக்கி சகிதம் உள்நுழைந்த ஆயுதக்குழு பெரும் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது. அளவெட்டி ஜெயா பிறஸ் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு ஞாயிறு இரவு 7.30 மணியளவில் துப்பாக்கி , வாள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளுடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் ஐன்னல் கண்ணாடிகள், வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஆகியவற்றை அடித்து நொருக்கியுள்ளனர். அதனால் அச்சமடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவல குரல் எழுப்பினர். அதையடுத்து அயலவர்கள் ஒன்று கூட ஆயுத குழுவினர் தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் குறித்து சுன்னாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்த…

  17. விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் 'பிஸ்டல் அணியினர்' பயன்படுத்திய இரு கைத்துப்பாக்கிகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செவனகல பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக நடத்திய விசாரணைகளின் பிரகாரமே இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் இராணுவத்திலிருந்து தப்பிவந்து பின்னர் சட்டபூர்வமாக அதிலிருந்து விலகியவர் (வயது 45 ) என்று பொலிஸார் தெரிவித்தனர். செவனகல பொலிஸாருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் கிடைத்த இரகசிய தகவலொன்றின் பிரகாரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையிலேயே சந்தேகநபர் நேற்றுமுன்தினம் செவனகல, கொவுல்ஹான பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 13 ரவைகளும் …

  18. இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணைய தளம் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. இணைய தளத்திற்குள் ஊடுருவிய குழுவினர் அரை மணித்தியாலம் அதனை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள் இராணுவத்தின் உத்தியோகபூர்வ விபரங்களை மாற்றியதுடன் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் உருத்ரகுமாரனின் புகைப்படமொன்றையும் இணைய தளத்தில் பிரசுரித்தனர். எவ்வாறெனினும் துரித கதியில் செயற்பட்ட படையினர் இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை கட்டுப்பாட்டை மீளவும் பெற்றுக்கொண்டதுடன் தேவையற்ற தகவல்களை நீக்கியுள்ளனர். நாச வேலைகளை மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறு இணைய தளம் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வா கொழும்பு ஊடகமொன…

  19. 24 எம்.பிகளுக்கு நாட்டிலிருந்து வெளியேறத் தடை தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில், தான் உள்ளிட்ட 24 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை, மாவரல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் மக்களை சந்தித்தபோது ஞாயிற்றுக்கிழமை அவர் இதனை கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/162504/-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%A…

  20. குறிப்பிட்ட பொலிஸார் தான் கைது செய்ய வேண்டும் என்ற வரையறையில்லை -எம்.றொசாந்த் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபரை இலங்கையின் எப்பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸாரும் கைது செய்ய முடியும்.குறிப்பிட்ட பொலிஸார் தான் கைது செய்ய வேண்டும் என்ற சட்டவரையறை இல்லை என ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் தெரிவித்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு திங்கட்கிழமை (28) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது,சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்கு வந்திருந்த வேளையில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸார் என்னை விடுதலை செய்திருந்த போதும், வெள்ளவ…

  21. கட்சி சார்பாக கலந்து கொண்டதாக சிற்றம்பலம் தெரிவித்துள்ள கருத்துக்கு மாவை மறுப்பு சொர்ணகுமார் சொரூபன் தமிழ் மக்கள் பேரவையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கலந்து கொண்டுள்ளதாக, கட்சியின் சிரேஷ்ட தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ள நிலையில், தமது கட்சி சார்பாக எவரும் பேரவையில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவ்வாறு கலந்து கொண்டவர்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. இதன் முடிவில் இடம்பெற்ற ஊடகவியாலர் சந்திப்பின்போது, சபையில் இருந்த பே…

  22. வித்தியா படுகொலைச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு புங்குடுதீவு வித்தியா படுகொலைச் சந்தேக நபர்கள் 10பேரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவிட்டார். இன்றைய தினம் புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார். மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கின் சான்று பொருட்களின் ஆய்வு அறிக்கையானது இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதேவேளை, இந்தக் கொலை வழக்…

  23. மக்கள் பேரவையின் ஊடாக அனைவரும் கைகோர்க்கும் போது நல்லிணக்கம் பெற வாய்ப்புண்டு : முதலமைச்சர் தழிழ் மக்கள் பேரவையின் ஊடாக சேர்ந்து அனைவரும் கைகோர்க்கும் போது புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற வாய்ப்புகள் இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தழிழ் மக்களுடைய கரிசனைகள் பல இருக்கின்றது. வருங்காலத்தில் தழிழ் மக்களுடைய காலம் எவ்வாறு அமைய வேண்டும். எமது பாரம்பரியத்தில் பண்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றது. அதற்கு அமைவாக அரசியல் யாப்பு அமைப்பு தொடர்பிலும் எங்களுக்கு கரிசனை இருக்கின்றது. வருங்கால மக்களுக்கு இவ்வாறான அமைப்பு இல்லை யெனின் அவர்களுக்கான உத்தரவாதம் எவ்வாறு அளிப்பது என்பது இன்றைய நிலைமை. அ…

  24. அவுஸ்திரேலியாவில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரவிராஜ் கொலை சந்தேகநபர்? இலங்கையின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான ரவிராஜின் கொலையுடன் தொடர்புபட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் பொலிஸ்; உத்தியோகத்தர் ஓருவர் அவுஸ்திரேலியாவில் மறைந்து வாழ்வதுடன் அங்கு வர்த்தகமொன்றில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றது. குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் பேபியன் ரோய்ஸ்டன் டுசைன்ட்(Fabian Royston Toussaint )என்பதை உறுதிசெய்துள்ள இலங்கை பொலிஸார் அவரை கைதுசெய்வதற்கு அவுஸ்திரேலிய பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதை உறுதிசெய்துள்ளனர். குறிப்பிட்ட நபர் சூழல் ஆலோசனை நிறுவனமொன்றை நடத்தி வருவதாகவும் அதன் உரிமையாளரான பெண்மணி தன்னை அமெரிக…

  25. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இலங்கையர் 45 பேர் இலங்கையிலுள்ள 9 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொள்வதற்காக சிரியா சென்றுள்ளதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச நாடுகள் இரண்டிலிருந்து இலங்கைக்கு தகவல்கள் வழங்கியுள்ளதாகவும் இன்றைய சிங்கள தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது. இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்போர் அதிகரித்து வருவதாக புலனாய்வுத் துறையினர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இரகசிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதிகமானோர் ஐ.எஸ்.ஐ.எஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.