Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. டெல்லி: மத்திய அரசின் செயலற்ற வெளியுறவுக் கொள்கையால் இலங்கையின் யாழ். பலாலி விமான நிலையம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றி விமானப் படை மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்கா அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேபாள விவகாரத்தில் ஏற்கனவே இந்திய வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தழுவியது. பல ஆண்டுகளாக இந்தியாவுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்த நேபாளத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தது முதலே அங்கே சீனா ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டது. இந் நிலையில் சர்வதேச அரசியலில் இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்கிற பெரும் போட்டி நடைபெற்று வருகிறது. அதிலும் இலங்கை திருகோணமலை துறைமுகம் யார் ஆதிக்கத்தில் இருக்கிறதோ அவர்களே தென்னாசியாவை ஆட்டிப் படைத்து ஆள…

    • 5 replies
    • 1.5k views
  2. 27 அரசியல் கைதிகளுக்கு ஜனவரி 4 வரை விளக்கமறியல் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 27 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று திங்கட்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி அருணி ஆட்டிக்கல முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியல் கைதிகளில் சிங்களவர்களும் உள்ளடங்குகின்றனர். அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், பிரான்ஸிலுள்ள ரூபன் என்பவரின் தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்ப…

  3. அரசாங்கம் ஐந்து ஆண்டு ஆட்சியை பூர்த்தி செய்யும் - அர்ஜூன ரணதுங்க: குளோபல் தமிழ்ச் செய்தியாளா்:- அரசாங்கம் ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தைப் பூர்த்தி செய்யும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். யார் என்ன சொன்னாலும் அரசாங்கம் ஐந்து ஆண்டு ஆட்சிய பூர்த்தி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் பதவி கவிழ்க்கப்படும் என சிலர் கருதிய போதிலும் அவ்வாறு அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக எவரினாலும் பதவி கவிழ்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட…

  4. தமிழ் மக்கள் பேரவை: 'மாற்றுத் தலைமையை உருவாக்கும் நோக்கம் இல்லை' ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்கின்ற ஒரு பொது முடிவின் அடிப்படையில் தீர்வு காண்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது' இலங்கையில் தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மருத்துவ நிபுணர் டாக்டர் லக்ஸ்மன், மட்டக்களப்பு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் வசந்தராஜா ஆகியோர் இந்த அமைப்பின் இணைத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரையில் தமிழ் மக்கள் பேரவையின்…

  5. மைத்திரியின் யாழ் பயணமும் வாக்குறுதிகளும் தேசியபாதுகாப்பு‬ அச்சுறுத்தல் என கூறுபவர்கள் . வடக்கிற்கு வந்து மக்களை சந்திக்கலாம் ‪ஜனாதிபதி:- அரச நத்தார் கொண்டாட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (20) பிற்பகல் யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில். அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கையை புத்திஜீவிகள் புரிந்து கொண்டுள்ளனர். மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். புரிந்துகொள்ள முடியா சில அடிப்படைவாதிகள் கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி எதுவேணுமென்றாலும் விமர்சனங்களை முன்வைக்கலாம் பாராளுமன்றம் மாகாணசபைகளில் எங்கும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியும். சுதந்திர…

    • 8 replies
    • 1.2k views
  6. கிளிநொச்சியில் மீள்குடியேற 748 குடும்பங்கள் பதிவு [ Monday,21 December 2015, 06:30:10 ] கிளிநொச்சி மாவட்டத்தில் 748 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான பதிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 2009 ஆம் ஆண்டின் இறுதி முதல் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் 748 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்து பதிவுகளை மேற்க…

  7. சீன முதலீட்டாளர்களுக்கு விசேட வலயம்! -அரசாங்கம் புதிய திட்டம் [Monday 2015-12-21 08:00] இலங்கையின் தென் பகுதியில் சீன முதலீட்டாளர்களுக்கு விசேட வலயம் ஒன்றை வழங்குவது தொடர்பாக இலங்கை ஆராய்ந்து வருகிறது. இந்த வலயம் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படுமென முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார். இவ்விடயமாக இலங்கை அதன் தீர்மானத்தை ஏற்கனவே அறிவித்துவிட்டது. சீனாவின் முடிவை எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் தென் பகுதியில் சீன முதலீட்டாளர்களுக்கு விசேட வலயம் ஒன்றை வழங்குவது தொடர்பாக இலங்கை ஆராய்ந்து வருகிறது. இந்த வலயம் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படுமென முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார். இவ்விட…

  8. குற்றச் செயலுடன் தொடர்புடைய இலங்கையருக்கு உதவிய இந்திய காவல்துறை அதிகாரியின் பணி இடைநிறுத்தம்:- 21 டிசம்பர் 2015 குற்றச் செயலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவருக்கு உதவிய இந்திய காவல்துறை அதிகாரியின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. மண்டபம் காவல் நிலையத்தின் காவல்துறை இன்ஸ்பெக்டரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர், குற்றச் செயலுடன் தொடர்புடைய இலங்கையருக்கு முன்ஜாமீன் வழங்க லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்ததாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏ.தனபாலன் என்ற காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு பணி இடைநிறுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். 50000 ரூபா பணமும் தமது காருக்கு புதிய டயர்களையும் லஞ்சம…

  9. மைத்திரியின் யாழ் பயணமும் வாக்குறுதிகளும்:- 20 டிசம்பர் 2015 அரச நத்தார் கொண்டாட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (20) பிற்பகல் யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில். அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கையை புத்திஜீவிகள் புரிந்து கொண்டுள்ளனர். மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். புரிந்துகொள்ள முடியா சில அடிப்படைவாதிகள் கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி எதுவேணுமென்றாலும் விமர்சனங்களை முன்வைக்கலாம் பாராளுமன்றம் மாகாணசபைகளில் எங்கும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியும். சுதந்திரத்தை தேசிய நல்லிணக்கத்துக்காக பயன்படுத்த வேண்டும் ஆனால் அடிப்படை வாதிகள் சிலர் இந்த அரசாங்கம் பதவி…

  10. இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு ஆறு மாதங்களில் தீர்வு; ஜனாதிபதி உறுதி [ Monday,21 December 2015, 03:00:37 ] வட மாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளை ஆறு மாதங்களில் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி அளித்துள்ளார். யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகையின் தலைமையில், கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். மாநர சபை மைதானத்தில் நடைபெற்ற தேசிய நத்தார் தின விழாவில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகைளை தீர்ப்பதற்காக விசேட செயலணியொன்றை உருவாக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.…

  11. கிறிஸ்துமஸ் மரத்திற்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் தேவாலயத்தில் இடமில்லை' இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் (நத்தார் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்) கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று ஆயர்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை ஆயர்கள் மன்றத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 'கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வழிபாட்டுக்கு உரியவை அல்ல' என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய வழிபாட்டு இயக்குநர் அருட்தந்தை இக்னேஷியஸ் வர்ணகுலசிங்கம் பிபிசி தமிழோசையிடம் கூறினார். 'கிறிஸ்துமஸ் மரங்கள் வீடுகளுக்கு உரியவை- அவை தேவாலயங்களுக்கு …

    • 3 replies
    • 360 views
  12. நிஷா பிஸ்வால் இலங்கைக்கு திடீர் பயணம் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் மீண்டும் இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவர் இன்று இலங்கை நேரப்படி அதிகாலை 5மணிக்கு இலங்கையை சென்றடைந்தார். திடீரென நிஷா பிஸ்வால் விஜயம் மேற்கொண்டிருப்பது அரசியல் ரீதியான முக்கிய சந்திப்பிற்காகவே என்று தெரிவிக்கப்படுகிறது. அவரை வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். இலங்கை சென்றுள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இவர் கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு ச…

  13. பத்திரிகையாளர்களின் கேள்வியும் முதலமைச்சரின் பதிலும் மிகவும் அந்தரங்கமாக தமிழ் மக்கள் பேரவை கூட்டத்திற்குப் போய் விட்டு வெளியில் வந்து “நான் ஊமை” என்று கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் வேறொரு கட்சியைத் தொடக்கி வைத்துள்ளீர்கள் என்று கூறப்படுகிறது. அது உண்மை தானா? தேர்தலில் தோற்ற பலரும் கூட்டத்திற்கு வந்தார்களாமே? பதில் - தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். பலவிதமான மக்கள் குழுக்களும், ஒன்றியங்களும், கட்சிகளும் சேர்ந்து நல்லை ஆதீனம் போன்ற மதாச்சாரியார்கள் உள்ளடங்கலாகத் தொடங்கியுள்ள ஒரு மக்கள் இயக்கம் அது. இதற்கு தலைமை வகிக்க ஏற்பாட்டாளர்கள் குழு என்னை அழைத்தார்கள். உண்மையில் இணைத்தலைவராகத் தான் என்னை அழைத்தார்கள். வைத்திய கலாநிதி இலக்ஷ்மனும் மட்டக்க…

  14. சீபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு தமது அரசுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், அதில் நாம் சிக்கவில்லை. இந்த விடயத்தில் புதிய அரசும் விழிப்பாகவே இருக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். எந்தவொரு திட்டத்தை எடுத்தாலும் முன்னாள் அரசு மீது குற்றம் சுமத்தாமல் எப்படி முன்னோக்கிச் செல்லலாம் எனச் சிந்தியுங்கள். முடியாது என எதிர்மறையாக சிந்திப்பதைவிடுத்து முடியும் என்று நேர்மறையாக சிந்தியுங்கள். முடியும் எனக் கூறித்தான் நாம் யுத்தத்தை முடித்தோம். வெடிகுண்டுகளுக்கு அஞ்சவில்லை. உயிரைப் பணயம் வைத்தே போர் ம…

  15. சஜித் பிரேமதாஸவை கட்சியின் உதவி தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் சிரேஸ்ட அங்கத்தவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஏற்கனவே கட்சியில் தவிசாளர், செயலாளர், பொருளாளர் என்ற பதவிகள் உள்ள நிலையில் உதவித் தலைவர் என்ற பதவி கட்சிக்கு நன்மை பயக்காது என்று இந்த அங்கத்தவர்கள் ரணிலிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இயல்புக்கு மாறாக புதிதாக ஏற்படுத்தப்பட்ட பதவிகளை ரத்துச் செய்யுமாறு அவர்கள் கோரியுள்ளனர். எனினும் உதவித் தலைவர் என்ற பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கியமையை ரணில் விக்கிரமசிங்க, சிரேஸ்ட உறுப்பினர்களிடம் நியாயப்படுத்தியுள்ளா…

  16. செம்மணி புதைகுழி வழக்கிற்கு நான் சென்ற போது, சைக்கிளில் சென்று கொண்டிருந்த என் ஆசானிடம் ஆசீர்வாதம் வாங்கும் போது இது ஆபத்தான வழக்கு. அச்சப்படாதே கடமையை செய். ஆபத்து வரும் தான். ஆனால் கடவுள் இருக்கிறான் என எனது ஆசான் தெரிவித்தார் என்று கண் கலங்கி அழுதார் யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியர் ஜீவானந்தம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் கண்கலங்கி அழுதுள்ளார். என்னை ஒரு சிறந்த மனிதனாக, என்னை நீதிபதியாக, பார்க்க வேண்டும் என்று கனவு கண்டவர் என் ஆசான் என்றும் அவர் கண்ணீர் மல்கி அழுதுள்ளார். http://www.tamilwin.com/show-RUmtzCRUSWko6H.html

  17. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொழும்பில் இரண்டு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக புலனாய்வுத்துறையினரை மேற்கோள் காட்டி திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவற்றில் கொழும்பில் இரண்டு வங்கிகளில் முறையே 55 மில்லியன் மற்றும் 30 மில்லியன் ரூபா பணமாக வைப்புச் செய்யப்பட்டுள்ளமையும் உள்ளடங்குகின்றது. இவை தவிர வெள்ளவத்தையில் தொடர்மாடி வீடு, கட்டுநாயக்க விமான நிலையம் அருகில் காணி, ஜெம்பட்டா வீதியில் அச்சகம் என பல்வேறு சொத்துக்களை விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொண்டிருந்துள்ளனர். மேலும் கொழும்பில் உள்ள வங்கியொன்று விடுதலைப் புலிகள் சார்பு அமைப்பொன்றுக்கு சுமார் 700 மில்லியன் ரூபா கடன் வழங்கியிருந்த நிலையில், போர் நடைபெற்ற காலத்தில் அக்…

  18. ரணில் விக்கிரமசிங்க சிறீலங்காவின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் சனவரி 8 திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001ல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மிக நுட்பமான முறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். சர்வதேச பாதுகாப்பு வலை திட்டத்தின் ஊடாக புலிகளை உலகளாவிய ரீதியில் பலவீனப்படுத்திய ரணில், கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் தனது வலையில் சிக்கவைத்ததனூடாக புலிகளை உள்நாட்டில் பலவீனப்படுத்தினார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா நீக்கப்பட்டு சரியாக ஒரு மாதத்தில் ரணில் தனது பிரதமர் பதவியை இழந்தார். அதன் பிற்பாட…

  19. மூதூரில் 17 தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு, இராணுவத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்காமை காரணமாக தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகள் தொடர்பில் விசாரணையை சீஐடியினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். மூதூரில் அக்சன் பெய்ம் தன்னார்வு நிறுவன தொண்டர்கள் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதியன்று கொல்லப்பட்டார்கள்.இதேவேளை 2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதியன்று திருகோணமலை கடற்கரையில் வைத்து ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்தக்கொலைகள் தொடர்பில் பாதுகாப்பு படையினர் மீதே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து இது தொடர்பான தகவல்களை தருமாறு இரா…

  20. மாகாணசபைக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் 'கிராம இராஜ்ஜியம்' திட்டம் அமைந்துள்ளதால் அதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக, நிதி ஆகிய மூன்று அமைச்சுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:- 2015ஆம் ஆண்டைவிட 2016இல் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்குப்பட்டுள்ளது. போர் இல்லாத சூழ்நிலையிலும் 13 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. வல்லாண்மை நாடுகளில்கூட பாதுகாப்புத்துறைக்கான செலவீனங்களுக்கு 4முதல் 7 சதவீதம் வரையான ஒதுக்கீடே இடம்பெறும். எனவே, இங்…

  21. வடிவேல் சுரேஷ் எம்.பி. தீக்குளிக்க முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சக்திவேல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தீக்குளிக்க முயற்சித்துள்ளார் என தெரிவியவருகிறது. - See more at: http://www.tamilmirror.lk/161937/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%B7-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AF%E0%AE%B1-%E0%AE%9A-#sthash.KUKvCGnz.dpuf வடிவேல் சுரேஷ் தீக்குளிக்க பெற்றோலுடன் வருகை : பாராளும…

  22. புதிய அரசியல் யாப்பு : அமெரிக்கா, இந்தியா அரசிற்கு அழுத்தம் புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தற்போது பேசப்படுகின்றது. ஆனால் இனப்பிரச்சினை தீர்வு அது குறித்த பேச்சுக்கள் என்று எதுவுமே இல்லாமல் புதிய அரசியல் யாப்பு பற்றிய செய்திகள் உலாவுகின்றன. அதுவும் இந்திய மத்திய அரசின் அனுமதியுடன் அல்லது இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானம் எடுப்பவர்கள் என பலரும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு விடயத்தில் தீவிரமாக ஈடுபடுவதாக அறியமுடிகின்றது. ஆனால் 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை சந்தித்த தமிழச் சமூகத்துடன் புதிய யாப்பு தொடர்பாக பேசப்பட்டதா அல்லது அவர்களின் யோசனைகள் பெறப்பட்டதா என்பது சந்தேகமே. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவை …

  23. Posted by twnewsfeatures on 15 December 2015, 11:16 pm டி.பி.எஸ்.ஜெயராஜ் “புரூட்டசைப் பொறுத்தவரை அவன் சீசரின் பிரியமான தேவதூதன் என்பது உங்களுக்குத் தெரியும். தேவர்களே, சீசர் அவனை எவ்வளவு பிரியமாக நேசித்தார்,என்பதை நீங்களே மதிப்பிடுங்கள்! இதுதான் எல்லாவற்றையும் விட கொடூரத்தனமான வெட்டு, உன்னதமான சீசர் அவன் குத்துவதை கண்டபோது, அது நன்றிகெட்ட தனமானதாகவும் துரோகிகளின் கரங்களைவிட மிகவும் வலிமையானதாகவும் இருந்தது, அது அவரை பெருமளவு தோற்கடித்துவிட்டது: அப்போது அவரது பலமான இதயம் வெடித்துச் சிதறியது” – வில்லியம் ஷேக்ஸ்பியர் – “ஜூலியஸ் சீசர்” (காட்சி 2 நடிப்பு 3) தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்(ரி.என்.ஏ) நிலவிய அரசியல் பதட்டங்கள் கடந்தவாரம் ஒ…

    • 20 replies
    • 1.2k views
  24. யாழ்ப்பாண குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 18 டிசம்பர் 2015 யாழ்ப்பாண குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக வட மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலகம் வெப்பமயமாகுதலினால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் யாழ்ப்பாண குடாநாட்டை நீரில் மூழ்கச் செய்யும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் ஒரு மணித்தியாலயத்தில் 40,000 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும், அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்து முழுமையாக இன்னமும் மீளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனர்த்தம் இடம்பெற்ற டிசம்பர் மாதம்…

  25. ஆங்கிலக் கல்வியை முன்னேற்ற கிளிநொச்சியில் நவீன பயிற்சி கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் ஆங்கிலக் கல்விப் பயிற்சி இலங்கையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாகிய கிளிநொச்சி மாவட்டத்தில், ஆங்கிலக் கல்வியில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் நவீன கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். சிங்கப்பூரின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர் என தன்னைக் குறிப்பிடுகின்ற கலைவாணி ராகுலன் என்ற ஆங்கில ஆசிரியை இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கின்றார். சிங்கப்பூரில் உயர்நிலைப் பள்ளியொன்றில் ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கிய பாடங்களை கற்பித்து வரும் இவர், மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்காக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.