ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
விகாரை ஒன்றில் இருந்து மண்டையோடு மீட்பு அனுராதபுரம் பதவிய குடா ரத்மலே போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து மனித மண்டையோடு மீட்கப்பட்டுள்ளதாக பதவிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். விகாரையின் விகாராதிபதி தேரர் வசித்து வந்த அறையில் இருந்து இந்த மனித மண்டையோடு கைப்பற்றப்பட்டுள்ளது. விகாரையை துப்புரவு செய்வதற்காக அறங்காலர் சபையினர் மேற்கொண்ட சிரமதானத்தின் போது இந்த மண்டையோடு அறையில் இருப்பதை கண்ட துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், அது குறித்து பதவி காவற்துறை நிலையத்திற்கு அறிவித்தனர். மேற்படி விகாரையின் விகாராதிபதியாக இருந்த தேரர் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த…
-
- 0 replies
- 617 views
-
-
இரு முக்கிய புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் - கோத்தபாய அரசாங்கம் விரைவில் விடுதலைசெய்யவுள்ள விடுதலைப்புலி உறுப்;பினர்களில் கொழும்பில் இடம்பெற்ற அனைத்து முக்கிய தாக்குதல்களையும் திட்டமிட்டு நடத்திய இரு முக்கிய புலி உறுப்பினர்கள் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவரின் பெயர் மொறிஸ்,விடுதலைப்புலிகளின் கொழும்பு திட்டத்தின் சூத்திரதாரி இவரே,முன்ளாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா மீதான தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இவரே, மற்றைய நபர் ஜின் என்ற பெயரினால் இனம் காணப்படுபவர். சரத்பொன்சேகாவா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்த…
-
- 10 replies
- 1.5k views
-
-
இலங்கைச் சிறைச்சாலைகளில் 7,975 சிறைக்கைதிகள் தடுத்து வைப்பு இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் மதகுருமார்கள், சிறுவர்கள் உட்பட 7 ஆயிரத்து 975 சிறைக்கைதிகள் உள்ளதாக சிறசை்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். இதற்கமைய, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 1,211 பேரும், போதை பொருள் குற்றம் தொடர்பில் 2,995 பேரும், மதகுருமார்கள் 17 பேரும் மற்றும் சிறையிலேயே பிறந்த குழந்தைகள் 58 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். …
-
- 1 reply
- 480 views
-
-
இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டநபர் தமிழகத்தில் உயிருடன் இருப்பதாக தகவல்? இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்பட்ட சென்னை சாரதியொருவர் தமிழகத்தில் உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 41 வயதான பூமிதுரை என்ற சென்னை டாக்ஸி சாரதியொருவர், அண்மையில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் உயிரிழந்த அவரது சடலம் திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்டதாகவும் இலங்கை இந்திய ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. குறித்த நபரின் உயிரிழப்பினை உறுதி செய்வதற்கான ஆதாரமாக, சென்னை சாரதிகள் சங்கத்தில் வழங்கப்படும் விசேட அடையாள அட்டை காண்பிக்கப்பட்டது. எனினும், குறித்த நபர் தற்போது உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்…
-
- 1 reply
- 645 views
-
-
கூட்டமைப்பின் தலைவராக விக்னேஷ்வரனை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை; சம்மந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையி…
-
- 13 replies
- 1.7k views
-
-
இராணுவம் பிடித்துச் சென்ற இரு மகன்களையும் இன்றுவரை காணவில்லை : தாயார் கண்ணீர் மல்க யாழில் சாட்சியம் இராணுவத்தினர் எனது இரு மகன்களையும் பிடித்துச் சென்று இன்று வரை தகவல் எதுவும் தெரியாது என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு முன்னால் தாயொருவர் சாட்சியமளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1996ஆம் ஆண்டு ஜீன் மாதம் மூத்த மகனான கருப்பன் பாலகிருஸ்ணன் என்பவரை மணியந்தோட்டத்தில் வைத்து இராணுவம் பிடித்துச் சென்றது. இதனை இவரின் சித்தப்பா நேரில் கண்டுள்ளார். அவர் சாட்சியமளிக்க எங்கும் போக தயார் என்றும் கூறியிருக்கிறார். அதேபோல் 1996ஆம் ஆண்டு ஜீலை மாதம் கடற்தொழிலில் ஈடுபட்…
-
- 0 replies
- 424 views
-
-
புலிகள் இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் இருவரையும் ஜனவரி 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வணாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா இராணுவ கஜபா படையணியின் கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட 8 பேர் பயணித்த ஜீப்பின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அவர்களை படுகொலைச்செய்தனர் என்று அவ்விருவர் மீதும் அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றது. வில்பத்து தேசிய வனாந்தரத்தில் வைத்தே அவ்விருவரும் இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கை ஜனவரி 18,19…
-
- 0 replies
- 450 views
-
-
ஐ.நா.வை அனுமதித்திருக்காவிடின் விளைவு மோசமாக இருந்திருக்கும் : ராஜித்த சேனாரத்ன திருகோணமலை கடற்படை முகாமுக்குள் ஐ.நா.குழுவினரை அனுமதித்திருந்தோம். இதில் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அமெரிக்காவின் குழுவொன்றை அனுமதித்திருந்தாலே குற்றமாகும். மேலும் ஐ.நா. வுடன் இணைந்திருக்காவிட்டால் திருகோணமலை கடற்படை முகாமில் இரகசிய வதை முகாம் ஒன்று இருப்பதாகவே சர்வதேசத்துக்கு தகவல் வழங்கியிருப்பர் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன நேற்று தெரிவித்தார். ரகர் வீரர் தாஜீதீனின் படுகொலை தொடர்பான சி.சி.டிவி கமரா வீடியோக் காட்சிகள் அழிக்கப்பட்டிருக்கின்ற போதி…
-
- 2 replies
- 491 views
-
-
வடக்கில் தனது விசாரணைகளை ஆரம்பித்தது ஜனாதிபதி ஆணைக்குழு காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி இன்றைய முதலாவது விசாரண யாழ்ப்பாணம் கச்சேரி கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக 200 முதல் 300 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்காக கச்சேரி கேட்போர் கூடத்தில் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்…
-
- 2 replies
- 624 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது நியாயமானது : மங்கள விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களையும் சர்வதேச புலி இணைப்பாளர்களையும் பாதுகாத்துக்கொண்டு சாதாரண மக்களை தண்டித்தமை எந்த விதத்திலும் நியாயமற்றது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுவிப்பது எந்தவிதத்திலும் நாட்டை பாதிக்கும் செயற்பாடோ அல்லது சட்டத்தை மீறும் செயலோ அல்ல. ஆகவே இவர்களை விடுவிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான கருத்தாகும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற…
-
- 1 reply
- 744 views
-
-
ஆணழகருக்கான போட்டி : வடக்கிலிருந்து 12 வீரர்கள் பங்கேற்பு 2015ஆம் ஆண்டுக்கான ஆணழகருக்கான போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆனந்த கல்லூரி குலரத்ன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 68ஆவது தடவையாக நடைபெறவுள்ள ஆணழகர் போட்டிகளுக்கு இம்முறை மொத்தம் 140 வீரர்கள் பங்குபற்றகின்றார்கள். வடக்கிலிருந்து 12 வீரர்கள் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மிஸ்டர் ஸ்ரீலங்கா என்ற பெயரில் நடத்தப்படும் ஆணழகருக்கான போட்டிகள் குறித்து உத்தியோ கப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை பொடிபில்டிங் சம்மேளனத்தின்தலைவர் கித்சிறி…
-
- 0 replies
- 939 views
-
-
அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிப்பார் : விக்கினேஸ்வரன் தாமதமின்றி தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவிப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். அவ்வாறு விடுவித்தால்தான் எமது நாட்டில் எமது ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக் கும் நோக்கம் உண்டென்று உணரக்கூடியதாக இருக்கும். ஜனாதிபதி நாட்டின் நற்பெயர் கருதி நமது இளைஞர், யுவதிகளைப் பொது மன்னிப்பில் விரைவில் விடுவிப்பார் என்று எதிர் பார்க்கின்றேன் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். மக்களின் காணிகளை இராணுவம் கையேற்று வைத்திருப்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு முரணானது. எமது நாடு மனித …
-
- 0 replies
- 557 views
-
-
பலவந்தமாகக் காணாமல் செய்யப்படுதலில் இருந்து காப்பாற்றுதல் சர்வதேச சாசனத்தில் இலங்கை கைச்சாத்து! அனைத்து நபர்களையும் பலவந்தமாகக் காணாமல்செய்யப்படுதலில் இருந்து காப்பாற்றுதல் குறித்த சர்வதேச சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். நியூயோர்க்கில் நேற்று இலங்கை இந்த சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை இந்த வருடம் இலங்கை வெறுமனே சம்பி…
-
- 0 replies
- 450 views
-
-
ஜனவரியில் ஒரு பகுதி காணிகளை பலாலியில் விடுவிக்கத் தீர்மானம் : பிரதமர் அறிவிப்பு! யாழ்ப்பாணம் பலாலியில் இராணுவத்தின் வசமுள்ள ஒரு தொகைக் காணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவோம்' என்ற தொனிப்பொருளில் நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தேசத் துரோகிகள் என்ற நாமம் எங்களுக்குச் சூட்டப்பட்டது. இன்று இலங்கையில் சர்வாதிகாரத்தை ஒழித்து ஜனநாயகத்தை நி…
-
- 0 replies
- 452 views
-
-
பிரிந்து செல்லும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் : வடக்கு முதலமைச்சரிடம் வலியுறுத்தினார் இந்தியத் தூதுவர் உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும் எனக் கொழும்பில் உள்ளவர்கள் கருதுகின்றனர். இதனால் எந்த வித்த்திலும் எப்பொழுதும் பிரிந்து செல்லும் நிலைக்கு வரக்கூடாது என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனை அறிவுறுத்தினார். யாழ்.குடாநாட்டிற்கு நேற்றைய தினம் வருகைதந்த இந்தியத் தூதுவர் இன்று வட மாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார் இச் சந்திப்பின் போதே மேற்படி வேண்டு கோள் ஒன்றினையும் முன்வைத்ததோடு வேறு பல விடயங்களையும் உரையாற்றியதாக வட மாகாண முதலம…
-
- 0 replies
- 475 views
-
-
உலங்கு வானூர்தியில் மன்னாரை வந்தடைந்தார் இராயப்பு ஜோசப் ஆண்டகை மன்னார் மாறைமவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இன்று பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூரில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று நாடு திரும்பியுள்ளார். இன்று காலை பண்டாரநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த ஆயர். அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் ஏ32 வீதியில் அமைந்துள்ள மன்னார் தள்ளாடி விமானதளத்தை வந்தடைந்தார். ஆயருடன் ஆயரின் செயலாளர் அருட்தந்தை ஏ.முரளிதரன் மற்றும் அருட்தந்தை எமில் எழில்ராஜ் ஆகியோரும் சிங்கபூரில் இருந்து வருகை தந்திருந்தனர். …
-
- 12 replies
- 1.2k views
-
-
ஆட்சி மாறிய பின்னரும் வெள்ளைவான் கடத்தல் தொடர்கிறது : வடக்கு முதல்வர் குற்றச்சாட்டு ஜனவரி 8க்குப் பின்னரும் அதாவது ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட வெள்ளைவான் கடத்தல்கள் நடைபெற்றுள்ளளன. மனித உரிமைகளைப் பேணுபவர்கள் நாம் என்று இலங்கை அரசாங்கத்தினர் மார்தட்டிக் கூறுவதாகவிருந்தால் தமிழ் மக்களின் அவலங்களை நீக்கும் விதத்தில் அவர்களின் சுயநிர்ணய உரிமையை மதித்து அவ்வுரித்தின் அடிப்படையில் ஒரு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் அப்பொழுதுதான் உலக மனித உரிமைகள் தினம் இலங்கைக்குப் பொருந்தும் ஒரு தினமாக ஏற்றுக்கொள்ளப்படலாம் என வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 40 ஆவது அமர்வு …
-
- 8 replies
- 825 views
-
-
12/09/2015 இனியொரு... 1 COMMENT தமிழ்ப் பேசும் மக்களின் இனப்படுகொலையை சிங்கள அதிகாரவர்க்கம் மட்டுமே திட்டமிட்டு நடத்தவில்லை. இன்று தமிழர்களின் மத்தியிலுள்ள புல்லுருவிகளின் இறுக்கமான வலையமைப்புக்களின் ஊடாக இனச் சுத்திகரிப்பும் இனப்படுகொலையும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றது என்பது மறுபடி ஒரு முறை ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. வெற்று வார்த்தைகள், வெற்றுத் தீர்மானங்கள் ஊடாக மக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மக்களை அழித்து கொழுக்கும் கூட்டம் ஒன்று கழுகுகள் போல மக்களைச் சுற்றிவருகிறது. இவர்களுக்கு எதிரான போராட்டங்களும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாவிட்டால் போலி தேசிய முகமூடி அணிந்த கயவர் கூட்டம் மக்களையும் மண்ணையும் அழித்துத் துவம்சம் செய்துவிடும். இ…
-
- 1 reply
- 829 views
-
-
இலங்கை சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் : கொக்கரிக்கிறார் ஞானசார தேரர் வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவுமே ஏனைய இனத்தவர் இந்த நாட்டுக்கு வந்தனர். இந்த நாடு சிங்களவர்களின் நாடு. நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது சிங்களவர்களின் நாடு. இந்த நாட்டில் வாழ்வதற்கு …
-
- 17 replies
- 1.7k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் பிரபாகரனை விடவும், கே.பியே தண்டிக்கப்பட வேண்டியவர் என அமைச்சவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான நகுலேஷ்வரன், தமிழினி, கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை விடுதலை செய்தது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், சிறு குற்றங்களை இழைத்த கைதிகளை தற்போது விடுதலை செய்ய முயற்சிக்கின்ற நிலையில், அது குறித்து அவர்கள் தவறான…
-
- 0 replies
- 493 views
-
-
அண்மையில் சென்னையிலும் தமிழகத்தின் வேறு பல பகுதிகளிலும் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் பல வடமராட்சி கரையோரங்களில் கரையொதுங்கி வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கதவுகள், மற்றும் இலகுவாக மிதக்கக்கூடிய பொருட்களே இவ்வாறு அதிகளவில் கரையொதுங்குகின்றன.இதனால் வடடமராட்சியின் கரையோரங்களில் அதிகளவு குப்பைகள் தேங்கியுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=146644&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 459 views
-
-
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ஜோவான் டூர்னேவார்ட், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். http://www.seithy.com/breifNews.php?newsID=146641&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 482 views
-
-
பெண் பணியாளரைக் கடைக்குள் பூட்டி வைத்த செய்தியை வெளியிட்டமைக்காக யாழ்.பத்திரிகை நிறுவனத்திற்குள் சென்று கும்பல் ஒன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் தனது கடையில் பணியாற்றும் யுவதி கணக்கில் தவறு விட்டார் என கூறி செவ்வாய்க்கிழமை கடையினுள் அடைத்து வைத்து இருந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் யுவதியின் தாயார் யுவதியை தேடி கடைக்கு சென்ற போது, உங்கள் மகள் கணக்கில் தவறு விட்டு உள்ளார் என கூறி தாயாரை கடைக்கு வெளியில் நிறுத்தி வைத்துள்ளார் கடை உரிமையாளர். சிறிது நேரத்தில் கடைக்குள் இருந்து யுவதி அவலகுரல் எழுப்பி உள்ளார். அதனை அடுத்து யுவதியின் தாயாரும் அவல குரல் எழுப்ப அப்பகுதியில் நின்…
-
- 0 replies
- 407 views
-
-
அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை 4ஆவது இடம் விரைவாக அமைதியை நோக்கிப் பயணிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.விஷன் ஓப் ஹ்யூமனிட்டி அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான சர்வதேச அமைதி நாடுகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த பட்டியலின் பிரகாரம் இலங்கை, மொங்கோலியா, இஸ்ரேல், சாட் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகள் உள்நாட்டு யுத்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டு விரைவாக அமைதியான நிலைக்குத் திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உலகின் அமைதியான நாடுகள…
-
- 19 replies
- 2.3k views
-
-
என்னை கொலை செய்ய முயற்சித்த புலி உறுப்பினர்களை மன்னிக்கத் தயார் – சரத்பொன்சேகா 10 டிசம்பர் 2015 தம்மை படுகொலை செய்ய முயற்சித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை மன்னிக்கத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 1971ம் ஆண்டு மற்றும் 1987ம் ஆண்டு போன்ற காலப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஏன் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவது குறித்து அண்மையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரண்ட…
-
- 1 reply
- 708 views
-