ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இமாம் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையினை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196760 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே அனைத்து விடயங்களும் தெரியும் - உதயகம்மன்பில குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்…
-
-
- 7 replies
- 722 views
- 1 follower
-
-
இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்ன தான் செய்வது என்று அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதில் காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை. பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரம் என வட மாகாணசபை உறுப்பினரும், வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான து.ரவிகரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று (19) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அபிவிருத்தியோடு எமது தீர்வை நோக்கி பயணிப்பதே எமது இலக்கு. ஆனால் எமது நில…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 9 டிப்போகளில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான வாகனங்களை புதுப்பிப்பதற்கு 10 ஆயிரம் ரூபாவை உடனடியாக செலுத்த வேண்டும் என கூறி ஏமாற்றி இந்த நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான நிதி மோசடிகள் தொடர்பில் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நிதி மோசடிக்காக பயன்ப…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
(நேர்காணல் - நா.தனுஜா) சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே அதுபற்றிப் பேசுகின்றன எனவும் கூறுகிறார். காலங்காலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படைக்கோட்பாட்டை அவர்கள் கருத்திலெடுக்கவே தயாரில்லை என்ற செய்தியை அவர்களாகவே வெளிப்படுத்திவிட்டார்கள். தற்போது அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான ஒட்டுமொத்த அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருக்கின்றன. ஆகவே இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அதன் கருத்துக்களை வாபஸ் பெறாவிட்டால், பொதுத்தேர்தலின் பின்னர் நாம் அவர்களுடன் பேச்சுவார்…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
From Wikipedia, the free encyclopedia National People's Power ජාතික ජන බලවේගය தேசிய மக்கள் சக்தி Abbreviation NPP Leader Anura Kumara Dissanayake General Secretary Dr. Nihal Abeysinghe Founder Anura Kumara Dissanayake Founded 13 July 2019 (5 years ago)[1] Preceded by …
-
- 0 replies
- 858 views
- 1 follower
-
-
சுயேட்சை குழுக்கள் இம்முறை பல ஆயிரக்கணக்கான நிதிகளை செலவிட்டு தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துளார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷின் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழர்களின் ஒற்றுமை நிலைத்திருக்க சங்கு முழங்கட்டும் எனும் தலைப்பின் கீழ் தமிழ் தேசியத்தின் சின்னமாக சங்கு சின்னத்தில் இடம்பெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதனால்தான் தீவக மக்கள் எனது சேவைக்கு இன்னும் பக்கபலமாக இருந்து என்னை நாடாளுமன்றுக்கு அனுப்பி வருகின்றார்கள் என்றார். அத்துடன், இம்முறையும் அந்த ஆதரவு தொடரும் என வலுவாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். வேலணை மற்றும் வடக்கு நாரந்தனை, நாரந்தனை மத்தி ஆகிய பிரதேசங்களின் மக்களுடனான சந்திப்புக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) ந…
-
- 4 replies
- 526 views
- 1 follower
-
-
சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மூலம் இலங்கையில் இயலாமையுடன் கூடிய நபர்களின் சமூக உள்ளடக்கம் எனும் வேலைத்திட்டத்தினை ஆதரித்து பரிந்துரையாடல் எனும் நிகழ்வு இயக்கச்சி றீ(ச்)ஷா இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு, நேற்றையதினம் (19.10.2024) இயக்கச்சி றீ(ச்)ஷா பண்ணையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை வரை நடைபெற்றுள்ளது. இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் இயலாமையுடன் கூடிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இயலாமை உள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி முன்மொழியப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பான முன்வைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கலந்து கொண்டோர் குறித்த பரிந்துரையாடலில் இயலாமையுடன் கூடிய நபர்களின் பொருட்கள் சந்தைப்படுத்த…
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற்கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் (2024) தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்திருக்கும் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை நாட்டு மக்களாகிய நாம் மீண்டுமொரு தேர்தலை எதிர்நோக்கி நிற்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோட…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி Vhg அக்டோபர் 20, 2024 தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று (19-10-2024) மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராகி வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவை அரசியல்வாதிகள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். தமிழ் தேசிய ஒற்றுமை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோ…
-
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன். மட்டக்களப்பில் இருந்து உருவாகிய கருதான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். அவரது தேர்தல் அலுவலகமொன்று நேற்று சனிக்கிழமை (19) மாலை மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மகிழூர் கிராமத்தில் திறந்துவைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களிலே நான் ஒருபோதும் த…
-
-
- 4 replies
- 890 views
- 1 follower
-
-
முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்தை கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என திறைசேரியின் பிரதிசெயலாளர் ஆர்எம்பி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்தை மாற்றீடு செய்வதற்காக புதிய யோசனைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் யோசனையை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்காது என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த மதிப்பாய்வில் சமர்ப்பிப்பதற்காக அரசாங்கம் பல மாற்றுயோசனைகளை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்திற்கு பதில் திறைசேரி அதிகாரிகள் பல மாற்றுயோசனைகளை ஆராய்…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 163 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், 20 வாகனங்கள் உட்பட பல சலுகைகளை கோரினார். அவற்றை நிராகரித்துவிட்டேன் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி 163 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், 20 வாகனங்கள், 16 சமையல்காரர்கள் உட்பட பல சலுகைகளை கோரினார் என அனுர குமார திசாநாயக்க தங்காலையில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மூன்று வாகனங்களே வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அரசநிதியை முன்னாள் ஜனாதிபதிகளிற்கு பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படும்,என தெரிவித்துள்ள அனுர குமார…
-
-
- 4 replies
- 496 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) இறக்குமதி செய்யப்படும் ஐந்து பண்டங்களுக்கு வரி விதித்து 2023.10.13ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வர்த்தமானி எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறக்குமதி செய்யப்படும் பண்டங்களுக்கு புதிதாக விசேட வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை என நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க விசேட பண்ட வரி சட்டத்தின் பிரகாரம் 2024.10.14ஆம் திகதியன்று 2406\02 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல…
-
- 1 reply
- 170 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அரச நிதி முகாமைத்துவ சட்டத்தை எதிர்த்த ஜே.வி.பி. இன்று அந்த சட்டத்துக்கமையவே செயற்பட்டு வருகிறது. நல்லாட்சி அரசாங்கத்திலேயே அதிகளவான கடன் பெறப்பட்டதாக அன்று குற்றஞ்சுமத்தப்பட்ட போதிலும், அதனை விட அதிகக் கடனைப் பெற வேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார். பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக வாரத்துக்கொரு முறை புதிய கடனை பெற வேண்டும் என்ற யதார்த்தத்தை தற்போது ஜே.வி.பி. உணர்ந்திருக்கும் எனக் குறிப்பிட்ட கலாநிதி ஹர்ஷ, வருமானத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்ப…
-
- 3 replies
- 314 views
- 1 follower
-
-
2021 ஆம் ஆண்டு 06மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக தனது சகோதரன் படுகொலை செய்யப்பட்டதாகவும் இதற்குரிய விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கையற்ற நிலையில் புதிய ஜனாதிபதி இது தொடர்பான உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2021-06-21ஆம் திகதியன்று மட்டக்களப்பு மன்றேசா வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்திரம் என்பவர் உயிரிழந்திருந்தார். இது தொடர்பில் குறித்த இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த…
-
- 2 replies
- 338 views
- 1 follower
-
-
வட மாகாண மட்ட சிங்கள தின போட்டி நிகழ்வுகள் நேற்றைய தினம் (18) யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கோட்டக்கல்வி அலுவலக கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. எந்த விதமான அடிப்படை ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் இந்த போட்டி நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நடுவர் குழு உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் பல்வேறு பாடசாலைகளில் இருந்து மாணவர்களை அழைத்து வந்த பொறுப்பாசிரியர்களை நடுவர்களாக நியமித்தமை தொடர்பில் பல்வேறுபட்ட ஆட்சேபனைகளை வெளியிட்ட பெண் ஆசிரியை ஒருவரை கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுகநிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (18) காலை நடைபெற்றது. இந்த நிகழ்வு நா.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். வன்னிமாவட்டத்தில் இம்முறை தமிழரசுக்கட்சி சார்பாக, முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து. ரவிகரன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன், சமூக செயற்ப்பாட்டாளர் தே. சிவானந்தராசா, ஆசிரியர் பா. கலைதேவன், விரிவுரையாளர் ந. ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ.…
-
- 0 replies
- 639 views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் வெளிப்படுத்திவரும் கருத்துகள் தொடர்பில் புதுடில்லி அவதானம் செல்லுத்தியுள்ளது. பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்துவைத்துவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவான பின் முதல் இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டதுடன், ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல்வேறு த…
-
- 2 replies
- 431 views
- 2 followers
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட வேளையில் இந்தியா வழங்கிய உதவிக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகால தொடர்புகளை சுட்டிக்காட்டினார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா வழங்கிய உதவிகளையும் கடன் மறுசீரமைப்பின்போது இந்தியா வழங்கிய ஆதரவையும் நினைவுகூருகின்றோம் என்றும் இதன்போது வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/196640
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று சனிக்கிழமை (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். இக்கப்பலின் கட்டளை அதிகாரி சுனில் குல்ஹாரி ஆவார். கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்த கப்பலின் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இலட்சத்தீவுகளில் ஒன்றான கல்பேனி தீவின் பெயரே இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலானது கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக…
-
-
- 4 replies
- 613 views
- 1 follower
-
-
வெள்ளம் படிப்படியாகக் குறைவடைந்தாலும் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள நிலத்தில் விளையக்கூடிய கீரை வகைகளை உண்பதை தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஊட்டச்சத்து நிபுணர்கள் மேலும் தெரிவிக்கையில், “கடும் மழை காரணமாக கழிவறைகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தண்ணீரில் கலந்து நிலத்தில் தேங்குவதால் நிலத்தில் விளையும் கீரை வகைகளை உண்பது மிகவும் ஆபத்தானது" ஆகும். இதனால், மழை வெள்ளம் குறையும் வரை அகத்தி, முருங்கை போன்ற கீரை வகைகளை மாத்திரம் உண்பது சிறந்ததாகும். மேலும், கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், இயன்ற…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக மையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து மௌன இறைவணக்கம் இடம்பெற்றது. இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற பட…
-
- 3 replies
- 495 views
- 1 follower
-
-
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சி : யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு October 19, 2024 தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும் அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது, …
-
- 0 replies
- 228 views
-
-
ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய மேலதிக அரசாங்க வாகனங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை அவை கையளிக்கப்படவில்லை என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https:/…
-
-
- 11 replies
- 925 views
-