ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
யாழில் பேரிடர் பணியில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்தில்! Published By: DIGITAL DESK 7 28 NOV, 2024 | 05:31 PM தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் தஙகவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இ…
-
-
- 7 replies
- 549 views
-
-
28 NOV, 2024 | 02:00 PM இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று புதன்கிழமை (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றது. இதன்போது, புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றி கொள்ள இலங்கைக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து அஜே பங்கா (Ajay Banga) கருத்து தெரிவித்ததோடு, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைத்திட்டங்களை செயற்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்ப…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்ற போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவது தொடர…
-
-
- 5 replies
- 365 views
- 1 follower
-
-
பொதுமக்களுக்கு உதவுவதற்கான முக்கிய அம்சங்களை அணுகக்கூடிய வகையில் இலங்கை பொலிஸ் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் www.police.lk நேற்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொலிஸ் நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ புதுப்பிப்புகளைப் பகிர்வதைத் தவிர, இந்த இணையதளம் பொதுமக்கள் முறைப்பாடுகளைத் தாக்கல் செய்யவும், பொலிஸ் அனுமதிப் பதிவுகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் அனுமதிக்கும். புதிய இணையத்தளத்தில் ஏனைய அம்சங்களையும் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/312788
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
இலங்கையின் புகழ்பெற்ற ‘தீகதந்து 1’ யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட மின்சார வேலியிலிருந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. 40 – 50 வயதுக்கிடைப்பட்ட இந்த யானை, கலா வெவா மற்றும் கஹல்ல-பல்லகெல்ல காப்புக்காடுகளுக்கு அடிக்கடி வந்து செல்வதாக அறியப்படுகிறது. https://thinakkural.lk/article/312832
-
- 3 replies
- 374 views
- 1 follower
-
-
28 NOV, 2024 | 12:01 PM இலங்கை - சீன சட்டவாக்க நிறுவனங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன் புதிய பாராளுமன்றத்திலும் இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாக சீன தூதுவர் சபாநாயகர் அசோக ரன்வலவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும், சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜியின் வாழ்த்துக்களை சீன தூதுவர் சபாநாயகரிடம் தெரிவித்தார். இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையி…
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளர்களைக் கண்டறிதல் மற்றும் முறையான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பதிவான எச்.ஐ.வி தொற்றுக்களில் 15 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என அந்த திட்டத்தின் இயக்குநர், சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் விந்தியா குமரிபெலி தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். “கடந்த ஆண்டு, எச்.வி.ஐ வைரஸால் பாதிக்கப்பட்ட 694 புதிய நோயாளிகள் நம் நாட்டில் பதிவாக…
-
- 1 reply
- 582 views
- 1 follower
-
-
புலிகளின் தலைவர் படம் மறைப்பு! வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் போது அங்கு வந்த வல்வெட்டித்துறை காவல்துறையினா் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை காட்சிப்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும், புகைப்படத்தினை நீக்கிவிட்டு பிறந்தநான் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துங்கள் எனவும் அறிவுறுத்தினார்கள். அதன் பிரகாரம் பதாகையில் இருந்த புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை மறைத்து விட்டு பிறந்தநாள் நிகழ்வினை சிறப்பாக கொண்டாடினார்கள். https://at…
-
- 1 reply
- 814 views
-
-
07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை! 2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி, கொழும்பு மட்டக்குளிக்கு அருகிலுள்ள கடற்கரையில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசெல்லும் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இதன்படி, சட்டமா அதிபர், பிரதிவாதிகளுக்கு …
-
-
- 2 replies
- 492 views
-
-
NPP எம்.பி.க்கள் செல்ஃபி எடுக்கின்றனர்;சாடுகிறார் காசிலிங்கம் தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தி, வடமாகாணத்திலிருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஃபெங்கல் சூறாவளி பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தவறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கீதாநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். "தேசிய மக்கள் சக்தியின் ஊடாக வடக்கிலிருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தவறிவிட்டனர்" என்று காசிலிங்கம் கூறினார், யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கானோர் உட்பட நாடு முழுவதும் 250,000 க்கும் மேற்பட்ட நபர்கள…
-
- 0 replies
- 548 views
-
-
உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக்க மாவீரர்நாள் நினைவேந்தல்! யாழ் பல்கலைக்கழக்கத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (27) யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேஜர் விநோதரனின் தாயார் பாலசுந்தரம் பொதுச்சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்தமையடுத்து, ஏனையோர் ஈகச் சுடர்களை ஏற்றி மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் மாவீரர்களின் உறவுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தலில் ஈடுபட…
-
- 0 replies
- 243 views
-
-
நாட்டில் அதிகளவில் உயிரைமாய்த்துக்கொள்பவர்கள் ஐஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் 10 பேர் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 16 மற்றும் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்பாடானது உடல் ஆற்றலை அதிகரிப்பதுடன், குழப்பம், பதற்றம், விரைவான இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் நலப்பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். அத்துடன், தூக்கமின்மை, நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட உடல் …
-
- 0 replies
- 823 views
- 1 follower
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப் பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதி பகுதிகளில் நீர் புகுந்துள்ளது. மேலும், பல ஊழியர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அவர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமது வீட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல் பல ஊழியர்கள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், சாதாரண வைத்திய சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கக்கூடும் என அறிவித்திருந்தோம். இருப்பினும் பெரும்பாலான ஊழியர்கள் மக்களுக்கான…
-
- 0 replies
- 626 views
- 1 follower
-
-
கலாபூஷணம் பரீட் இக்பால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கொழும்பு – அல் ஹிக்மா நிறுவனத்தின் அனுசரணையில் ஜும்மா பள்ளிவாசல் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச்.ஷேஹுத்தீன் (மதனி) அவர்கள் கலந்து திறந்து வைத்தார். மேலும் கெளரவ அதிதியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜா அவர்களும் அனைத்து பீட பீடாதிபதிகளும் மூவின மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். நான்கு மதத்தினருக்கும் சரிசமமாக தலா 2 ஏக்கர் காணி, அவரவர் மத ஸ்தலங்களை அமைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜா அவர்கள் ஒதுக்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். த…
-
- 0 replies
- 762 views
-
-
27 NOV, 2024 | 09:37 PM புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை நாடு முழுவதிலும் ஸ்தாபிக்க அரசாங்கம் கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு எந்த நேரத்திலும் ஆதரவளிக்க தயாரெனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார். …
-
- 1 reply
- 191 views
- 1 follower
-
-
விமானத்தில் பெண்ணின் கைப் பையை திருடினார்! லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (26.11.24) மதியம் வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் அலுவலக உதவியாளரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையினர் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் வசிக்கும் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த, இரட்டைக் குடியுரிமையுடைய 55 வயதான அலுவலக உதவியாளர் சிறி ஷ்யாமலி வீரசிங்கவின் கைப் பையே திருடப்பட்டிருந்தது. அவர் செவ்வாய்க்கிழமை (26.11.24) மதியம் 01.30 மணியளவில் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தார். அவளது கைப்பையில் 14 இ…
-
-
- 8 replies
- 809 views
- 1 follower
-
-
உதவிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குங்கள் யாழில் 634 பேர் இடைத்தங்கல் முகாமில் யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடலானது மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க முன்வரும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பிரதேச செயலகத்தில் …
-
-
- 6 replies
- 375 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக கொட்டும் மழைக்கும் மத்தியில் நினைவேந்தப்பட்டது! 27 NOV, 2024 | 08:59 PM வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்…
-
-
- 3 replies
- 497 views
- 1 follower
-
-
இன்றைய ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: தியாகங்களின் பெறுமதி? ஜனதா விமுத்திப் பெரமுன (ஜே.வி.பி) ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்று நம்பி, இரண்டு முறை ஆயுதக் கிளர்சியில் ஈடுபட்டது. இரண்டு தடவைகளும் படு மோசமான அழிவை சந்தித்தது - இறுதியில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களையும் இழந்து போனது. மகாவலியாற்றில் தினமும் சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. அதன் தலைவர் (ருகுணு) றோகண விஜயவீர படுகொலை செய்யப்பட்டார். அவர் அரை உயிரில் இருக்கும் போதே எரியூட்டப்பட்டதாகவே பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜே.வி.பியின் உறுப்பினர்களை அழித்தொழித்த விடயத்தில் உள்ளுக்குள்ளும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி அவர்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவல்லை. ஆனா…
-
-
- 12 replies
- 1.1k views
-
-
-
-
- 30 replies
- 2.4k views
-
-
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாமல், அனர்த்தங்களை எதிர்கொண்ட பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் - ஜனாதிபதி அறிவுறுத்தல் 27 NOV, 2024 | 04:53 PM தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டு செயற்படாமல் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களுக்கு சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள…
-
-
- 1 reply
- 202 views
- 1 follower
-
-
27 NOV, 2024 | 04:07 PM (நா.தனுஜா) இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த இரட்டைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறைக்குப் பதிலாக நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 'ஓரிரவு கொள்கை வீதம்' என அழைக்கப்படும் ஒற்றைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறையை அறிமுகப்படுத்தியிருக்கும் இலங்கை மத்திய வங்கி, அதனை 8 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான இறுதி மீளாய்வுக்கூட்டத்தில் (6 ஆவது) மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (27) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பிலேயே மேற்குறித்த அறிவ…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
வடக்கின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெருமளவான வெள்ள நீர் வெளியேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்வதனால் மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அத்துடன் பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கள் முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் …
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
27 NOV, 2024 | 11:31 AM நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருவதால் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள், இடர்ப்பாடுகள் தொடர்பில் அறிவிக்க தமிழ் பேசும் மக்களுக்கென பிரத்தியேகமாக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் பேசும் மக்களுக்கள் 107 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அனர்த்தம் தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199814
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
27 NOV, 2024 | 09:12 AM நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது. அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அவ்வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புனாணை பகுதியில் புகையிரதப் பாதையை குறுக்கறுத்து நீர் அதிகரித்துச் செல்வதால் மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத சேவையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199797
-
- 0 replies
- 537 views
- 1 follower
-