Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.மனோசித்ரா) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்துவரும் ஒவ்வொரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று விட முடியும் என்று எண்ணுவது தவறான நிலைப்பாடாகும். கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறி விட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் யாரை பாராளுமன்றத்தை அனுப்புவது என்பதை தலைமை பீடம் தெரிவு செய்வதற்கு இது சீனா அல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தல் , மாகாணசபைத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நிலைப்பாடு பெரும்பாலானோர…

  2. 11 Oct, 2024 | 01:10 PM சவுதி அரேபியாவின் ரியாத் நகரை நோக்கிப் பயணித்த விமானம் ஒன்று சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் தொழினுட்ப கோளாறினால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான யு.எல் - 265 விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து, இந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் சிலர் வேறு விமானத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், ஏனையவர்கள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி ஒருவர…

  3. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (11) இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது. பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கருத்துப் பரிமாறப்பட்டதுடன், எதிர்காலத்தில் இலங்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் கொள்கைகளுக…

  4. ஓமந்தை, கதிரவேலு பூவரசன் குளம் பகுதியில் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை (10.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, கதிரவேலு பூவரசன் குளம் பகுதியில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையில் காணி தொடர்பாகச் சிறிய பிணக்கு ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் குறித்த இருவர் மீதும் மிளகாய்த் தூளை அள்ளி வீசிவிட்டு அவர்களை விரட்டி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர்மக்கள் தெரிவிக்கின…

  5. கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (10) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அதற்கமைய ஐந்து ஏக்கரை விட குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கென ஒழுங்கான பொறிமுறைமையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(10) பிற்பகல் சந்தித்த போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்ற…

  6. ராஜபக்சர்களின் பணம் உகண்டாவில் அல்ல உலகில் எந்த நாட்டில் பதுக்கி வைத்திருந்தாலும் அவை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியதுடன் மேலும் கருத்து வெளியிடுகையில், உகண்டாவில் ராஜபக்சர்கள் பணத்தை பதுக்கி வைத்திருந்தால் அவற்றை நாட்டுக்கு கொண்டுவருமாறு நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். உகண்டா அல்ல உலகில் எந்த நாட்டில் ராஜபகசர்கள் பணத்தை பதுக்கிவைத்திருந்தாலும் அவற்றை மீட்டு வருவதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். ரவி வைத்தியலங்காரவுடன் ‘டீல்’ செய்து மறைத்துவைக்கப்பட்ட ‘பைல்’ களை மீள எடுக்க மாட்டோம் என நாமல் ராஜபக்ச நினை…

  7. ஊழல் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தோல்வியிலிருந்து தப்புவதற்காக ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அடுத்த தேர்தலில் அவ்வாறான அரசியல்வாதிகள் வேட்பாளர்களாக நிற்காத நிலையை ஏற்படுத்தியமை பொதுத்தேர்தலிற்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெருவெற்றி என தெரிவித்துள்ளார். அனுரகுமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்யதமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும், இது இறுதியில் ஊழல் இனவாத அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்துவைத்தது என அவர் தெரிவ…

  8. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. [எ] அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com) அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com)

      • Haha
      • Like
      • Thanks
    • 22 replies
    • 1.2k views
  9. யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் வீதி மானிப்பாயில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த கடையினை பொலிஸார் சோதனையிட்டனர். சோதனையின் போது கடையின் பின் பகுதியில் இருந்து 50 மாத்திரைகளும், ஒரு தொகை வெற்று மாத்திரை அட்டைகளும் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து உரிமையாளரை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, தான் போதை மாத்திரைகளை உட்கொள்வதாகவும், தெரிந்த நபர்களுக்கு மாத்திரம் அவற்றை விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளார். …

  10. ஐக்கிய அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட பீச் கிங் (360 ER) ரக கண்காணிப்பு விமானத்தை உத்தியோபூர்வமாக ஏற்கும் வைபவம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நேற்று (10) இடம்பெற்றது. இந்த வைபவத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் ( ஓய்வு பெற்ற ) சம்பத் துய்யகொந்தா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச மற்றும் அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவன் கொளர் ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை விமானப்படையின் விளக்கம் 3 கடல் சார்ந்த படைப்பிரிவில் இந்த பீச் கிங் ரக விமானம் இணைக்கப்பட உள்ளது. அந்த வகையில் சம்பிரதாய முறை நீர் வரவேற…

  11. வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1403789

      • Like
    • 11 replies
    • 608 views
  12. தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் பெயர்கள் Freelancer / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 05:37 பாராளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளநிலையில், தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அதில் பிமல் ரத்நாயக்க, பேராசிரியர் வசந்த சுபசிங்க, கலாநிதி அனுர கருணாதிலக்க, பேராசிரியர் உபாலி பனிலகே, எரங்க உதேஷ் வீரரத்ன, அருணா ஜெயசேகர, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனித ருவன் கொடிதுக்கு, புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி, ராமலிங்கம் சந்திரசேகர், கலாநிதி நஜித் இந்திக்க, சுகத் திலகரத்ன, …

  13. அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். மருத்துவர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்ததுடன் இறுதி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! (newuthayan.com)

  14. (எம்.நியூட்டன்) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுக்களை இன்று புதன்கிழமை (09) தாக்கல் செய்தது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் களமிறங்குகிறது. வேட்பாளர் பட்டியலின்படி, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், குருசுவாமி சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் களமிறங்குகின்றனர். …

  15. 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியத்தை கட்டி காப்பாற்றுவதற்காக பாடுபட்ட தமிழரசுக் கட்சி தற்போது தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமாக மாறியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) ஆகியோராலேயே வடக்கு மற்றும் கிழக்கு கட்சிகள் தற்போது துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தனிநபரின் அடாவடித்தனம் தலைமைத்துவத்தை மதிக்காமல் தாங்களே கட்சிகளை கையிலெடுத்து செயற்படும் ஒரு எதேட்சையா…

  16. பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் அவரது பெயர் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. எனினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத்திலும், நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களில் பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் கையொப்பமிடும்…

  17. 11 Oct, 2024 | 04:19 PM எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 4 சுயேட்சைக் குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சரத் சந்திர தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியளவில் நிறைவுக்கு வந்திருந்தது. அந்த வகையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். …

  18. 11 Oct, 2024 | 04:26 PM ரொபட் அன்டனி இலங்கையில் பொதுவாக நோக்குமிடத்து சாதகமான வளர்ச்சி நிலை தெரிகிறது. வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்துள்ளது. பணவீக்கம் குறைந்திருக்கிறது. வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படவில்லை. தனியார் கடன்கள் அதிகரித்திருக்கின்றன. அரச வருமானமும் அதிகரித்திருக்கிறது. ஆனால், மறுபுறம் வறுமை அதிகரிப்பு உள்ளிட்ட சவாலான நிலையும் நீடிக்கிறது என்று உலக வங்கியின் இலங்கை குறித்த பொருளாதார நிபுணர் ஸ்ருதி லக்டகியா தெரிவித்தார். இலங்கையின் எதிர்கால வாய்ப்புகள் தொனிப்பொருளில் இலங்கை தொடர்பான புதிய அரையாண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வி…

  19. 11 Oct, 2024 | 05:48 PM எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகள், 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 17 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேவேளை மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய ஜனநாயக முன்னணி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர …

  20. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். இலங்கையில் உணவு நெருக்கடி நிலைமை தற்போது குறைவாக உள்ள போதிலும், தேவை ஏற்படும் போது புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக உணவுத் திட்டத்தின் தலைவர்கள் ஜனாதிபதியின் செயலாளரிடம் விருப்பம் தெரிவித்தனர். உலக உணவுத் திட்டத்தின் உள்ளூர் பணிப்பாளர் அப்துல் ரஹீம் சித்திக், அரசாங்க பங்காளித்துவ அதிகாரி முஸ்தபா நி…

  21. சிஐடியின் புதிய தலைவராக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பி. அம்பவில நியமிக்கப்பட்டுள்ளார் இவர் முன்னர் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்ததுடன், சட்டவிரோதபணபரிமாற்றங்கள், பிரமிட் திட்ட மோசடி போன்றவை குறித்த விசாரணைகளிற்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தார். இதேவேளை சிஐடியின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்துவந்த சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரொகான் பிரேமரட்ண உட்பட ஐந்து பிரதிபொலிஸ்மா அதிபர்களை தேசிய பொலிஸ் ஆணைக்குழு இடமாற்றம் செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது பெண் பிரதிபொலிஸ்மா அதிபர் ஒருவரும் இடமாற்றப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/196035

  22. இலங்கை அரசாங்கம் கடந்த கால கொள்கைகளை தொடர்வதற்கும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை எதிர்ப்பதற்கும் தீர்மானித்தமை ஏமாற்றமளிக்கின்றது - சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த கால கொள்கைகளை தொடர்வதற்கும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை எதிர்ப்பதற்கும் தீர்மானித்தமை ஏமாற்றமளிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி பிராந்திய இயக்குநர் பாபு ராம் பண்ட் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளமை இலங்கையில் காணப்படும் மனித உரிமைகள் கரிசனை குறித்து சர்வதேச சமூகம் தொடர்ந்தும் கவனம் செலுத்தவேண்டிய…

  23. இலங்கை தமிழ் அரசு கட்சி - மட்டக்களப்பில் வேட்புமனு தாக்கல் செய்தனர் Vhg அக்டோபர் 10, 2024 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் - சாணக்கியன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10-10-2024) ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். கட்சியின் வேட்பாளர்கள்..... 1:-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்- சாணக்கியன் 2:-முன்னாள்.பா.உறுப்பினர் ஞானமுத்து - சிறினேசன் 3:- மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேஜர் தியாகராசா- சரவணபவன் 4:-ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர்…

  24. கலைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேடம் Vhg அக்டோபர் 10, 2024 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேடம் கலைந்து விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (09-10-2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இவ்வளவு காலமும் போலி வேடங்களை போட்டு தேசியம் தேசியம் என பேசி மறுபக்கம் அரசாங்கங்களிடம் இலஞ்சங்களை வாங்கி கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளனர். காத்திரமான தலைமைத்துவம் எனவே, மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்க வேண்ட…

  25. மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய ஆசனங்களை பெறும்‌ கட்சியாக எமது கட்‌சி காணப்படும்‌ என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது : சிவனேசதுரை சந்‌திரகாந்தன்‌ ! By kugen எதிர்வரும்‌ பாராளுமன்ற தேர்தலில்‌ எமது கட்‌சி கிழக்கு மாகாணத்தில்‌ அதிகூடிய வாக்குகளை பெறும்‌ எனும்‌ நம்பிக்கை எமக்கு உள்ளது, இது வரலாற்றில்‌ ஓர்‌ திருப்புமுனையாக கூட இருக்கலாம்‌, என தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சியின்‌ தலைவர்‌ சிவனேசதுரை சந்‌திரகாந்தன்‌ தெரிவித்துள்ளார்‌. இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல்‌ செய்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்‌ போதே அவர்‌ இதனை தெரிவித்தார்‌. அவர்‌ மேலும்‌ தெரிவிக்கையில் , மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய ஆசனங்களை பெறும்‌ கட்சியாக எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.