ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
சீனாவைத் தொடர்ந்து பாதுகாப்பு நாளைக் கொழும்பில் கொண்டாடியது பாகிஸ்தான்SEP 07, 2015by கார்வண்ணன்in செய்திகள் சீனாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் சிறிலங்காவில் தனது பாதுகாப்பு நாளை பிரமாண்டமான முறையில் கொண்டாடியுள்ளது. பாகிஸ்தானின் 50ஆவது பாதுகாப்பு நாள் நேற்று கொழும்பில் கொண்டாடப்பட்டது. கலதாரி விடுதியில் நேற்று மாலை நடந்த இந்த விழாவுக்கு கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இந்த நிகழ்வில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க, முப்படைகளின் தளபதிகள், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அரசியல்வாதிகள், படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த விழாவில், பாகிஸ்தானின் 50ஆவது பாதுகாப்பு நாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டது. பாகிஸ…
-
- 0 replies
- 506 views
-
-
மிக அண்மைக்காலமாக இலங்கையில் பெரும் சவாலாக மாறி இருப்பது வீதிகளில் திரியும் கட்டா காலி நாய்களின் பெருக்கம். வீதிகளில், பள்ளிகூடங்களில் ,ஆலயங்களில் ,சந்தைகளில்,மருத்துவமனைகளில், நலன்புரி நிலையங்களில் மற்றும், இராணுவ,பொலிஸ் நிலைகளில் எல்லாம் இந்த பிரச்னை பாரதூரமாக காணப்படுகிறது.இந்த கட்டாக்காலி நாய்களின் பெருக்கத்தால் சமூக பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. நாய்க்கடிகளும் நாய்களால் ஏற்படும் விபத்துகளும் அண்மைகாலத்தில் அதிகரித்திருப்பதை பல புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதார திணைகளங்களும், நகர மற்றும் பிரதேச சபைகளும் திணறுவதையும் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.இந்த நிலைக்கு என்ன கரணம் யார் இத…
-
- 0 replies
- 4.3k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்ப இலங்கை அரச தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பும் ஜெனீவா பயணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சர்வதேச விசாரணையை எதிர்த்து உள்ளக விசாரணையை வலியுறுத்தி அரச தரப்பு ஜெனீவா செல்லும் நிலையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கூட்டமைப்பு குழுவும் ஜெனீவா செல்லத் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான ஆதரவை வலுப்படுத்தும் வகையில் இலங்கை அரச குழு பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.இதேவேளை ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பன சார்பில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்…
-
- 0 replies
- 455 views
-
-
போரின் இறுதியில் ஆட்டிலறிகளைப் பயன்படுத்தியது உண்மை – ஒப்புக்கொண்டார் சரத் பொன்சேகாSEP 07, 2015 | 2:04by கார்வண்ணன்in செய்திகள் போரின் இறுதிக்கட்டத்தில் இழப்புக்களைத் தவிர்ப்பதற்கு, சிறிலங்காப் படையினர் ஆட்டிலறிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. இந்தியாவின் அழுத்தங்களின் பேரில் போரின் இறுதிக்கட்டத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா இராணுவமும், அரசாங்கமும் கூறிவந்த நிலையில், போருக்குத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஆட்டிலறிகள், மோட்டார்களைப் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.…
-
- 4 replies
- 768 views
-
-
"தேசிய பட்டியலை விட எனக்கு தேசியமே முக்கியம்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 04.09.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் சிற்றம்பலம் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/vsicncjaqemx
-
- 0 replies
- 448 views
-
-
சர்வதேச ரீதியான விசாரணைகள் அவசியமில்லை – பிள்ளையான் 06 செப்டம்பர் 2015 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் அவசியமில்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஆட்சி அதிகாரம் மாற்றமடைந்துள்ள நிலையில் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை பொருத்தமானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரியளவில் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.படையினர் யுத்தக் குற்றச் செயல…
-
- 1 reply
- 248 views
-
-
அமெரிக்காவின் இலங்கைக்கான புதிய தூதுவர் அதுல் கெஷாப், எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=139985&category=TamilNews&language=tamil
-
- 5 replies
- 431 views
-
-
எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தனுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்வு நேற்றுமாலை திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு தெரிவான 11 பாராளுமன்ற உறுப்பினர்களும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரெட்ணசிங்கம், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரும் கலந்து கொண்டார்கள். நேற்று மாலை 4.00 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுடன் ஒன்றுகூடிய இவர்கள் விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டார்கள். பின்னர் அங்கிருந்து கடற்படைதள வீதி வழியாக நகர சபை மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இலங்கை தமிழரசுக்கட்சியினர் இவ்வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். வன்னி மாவட்…
-
- 0 replies
- 393 views
-
-
சீனாவின் உதவியில்லாமல் இறுதிப் போரில் இலங்கை இராணுவத்தினால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சீன செய்தி நிறுவனத்துக்கு சேவைக்கு கருத்துரைத்துள்ள அவர், சீனா இலங்கையின் பழைய மற்றும் வலுவான நட்பு நாடாகும். 2005ஆம் ஆண்டு முதல் அது இலங்கையின் போரை முடிவுக்கு கொண்டுவர உதவிகளை அளித்தது. எனவே அந்த உதவியை மறந்துவிடக்கூடாது. சீனாவுடனான உறவை இலங்கை தொடர்ந்தும் பேணவேண்டும் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்ற சீன- ஜப்பான் உலக பாஸிஸ எதிர்ப்பு போரின் 70வது நிறைவு நிகழ்வில் பங்கேற்ற சரத் பொன்சேகா, சீனா உலக சமாதானத்துக்காக பாரிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிட…
-
- 13 replies
- 1.2k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராபஜக்ச மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த விசேட நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த ராபஜக்ச மாறிவிட்டார் என நான் கருதவில்லை. பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போது மஹிந்த எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்தார். பல தடவைகள் என்னைப் பார்த்து கதைக்க முயற்சித்தார். நான் அவரை பார்க்காமலேயே இருந்தேன். பின்னர் ஹேமா பிரேமதாசவை விலக்கிக் கொண்டு எப்படி சரத் என மஹிந்த கேட்டார். அப்போது அதற்கு பதிலளிக்க போயிருந…
-
- 0 replies
- 385 views
-
-
விடுதலைப் புலிகளின் காலத்தில் நோர்வே நாட்டில் இடம்பெற்ற சந்திப்பில் அன்ரன் பாலசிங்கம் கையெழுத்திட்ட முக்கிய பகுதி என்ன? கருணா கூறுவதில் உண்மை உள்ளதா? இன்று சிலருக்கு பதில் கூறி அவர்களை பெரியவர்களாக சமூகத்தில் காட்ட முடியாது. காரணம் தமிழ் இன அழிப்பிற்கு காரணமாக இருந்தவர்கள். ஐ.நாவின் சகல பொறிமுறைகளும் தயார் நிலையில், 60 மேற்பட்ட தடவைகள் பாதுகாப்பு சபையைச் சந்தித்தார் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை. எதற்காக என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்ச்சியில் விளக்குகிறார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமார். http://www.tamilwin.com/show-RUmtyJTbSVjo4F.html
-
- 0 replies
- 576 views
-
-
லஞ்ச, ஊழல் ஆணை குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் புதிய ஆணையாளர்களை நியமிப்பதற்கு நீதி அமைச்சர் விஜேதாஸ் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அரசியலமைப்பு சபைக்கு எதிர்வரும் வாரத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். 10 பேர் கொண்ட அரசியலமைப்பு சபைக்கு சிவில் உறுப்பினர்கள் மூவரை நியமிப்பதற்கு அனுமதி பெற்றுகொள்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற சபை அமர்வின் பொது அல்லது அதற்கு பின்னர் மேற்கொள்ளப்படும். 19ஆம் திருத்தச் சட்டத்திற்கமைய அமைக்கப்படும் அரசியலமைப்பு சபைக்கு தலைவராக சபாநாயகர் செயற்படுவார். அரசியலமைப்பு சபை அமுலாக்கப்பட்டதன் பின்னர் 19ஆம் திருத்தச்சட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்த 10 சுயாதீன ஆணைக்க…
-
- 0 replies
- 169 views
-
-
இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணை நின்று போனமை தமிழ் மக்களுக்கு தாங்கொணாத வேதனையைத் தந்துள்ளது. தமிழ் மக்களின் முழு நம்பிக்கையும் போர்க்குற் றம் தொடர்பிலான சர்வதேச விசாரணை மீதிருந்த நிலையில், சர்வதேச விசாரணைக்கான சந்தர்ப்பமில்லை என்ற செய்தி மீண்டும் ஓர் இழப்பை சந்தித்தது போன்ற உணர்வை நம் அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழ் மக்கள் கடவுளுக்குச் சமமான அளவில் அமெரிக்காவை நம்பியிருந்தனர். ஆனால் மைத்திரி -ரணில் ஆட்சியில் சர்வதேச விசாரணை தேவையில்லை என்பதுபோல அமெரிக்கா நடந்து கொண்டமை பலத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது எனலாம். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை விவகாரத்தை எடுத்து, அது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் …
-
- 0 replies
- 306 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டமை சரியானதே என்றாலும், சம்பந்தனின் செயற்பாட்டிற்கு அமைய அவரை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வழியுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பாக போர்க்குற்றம் சுமத்தி இராணுவத்தினரை தண்டிக்க மற்றும் தனி அரசை உருவாக்க முயற்சித்தால், தேசிய நலன் கருதி அவரை பதவி விலக்கி வேறொருவரை நியமிக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=140006&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 371 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு செயல்திட்டமொன்றை வகுத்து, அதனை முன்னெடுத்துச் செல்வதாக கொழும்பு அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 08ஆம் திகதி நடைபெற்ற தோல்வியடைந்த பின்னர், பொதுத் தேர்தலில் பிரதமர் பதவியைக் குறிவைத்து போட்டியிட்ட போதிலும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. பொதுத் தேர்தலில் மகிந்தவை பிரதமராக்குவோம் என்ற கோஷத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களில் ஏராளமானோர் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். எனினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் சுமார் 45 உறுப்பினர்கள் வரை தொடர்ந்து செய…
-
- 0 replies
- 436 views
-
-
சனல்-4 காணாளி குறித்த சிறிலங்கா இராணுவத்தின் விசாரணை தீவிரம்SEP 07, 2015 | 2:22by கி.தவசீலன்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடங்குவதற்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில், சனல்-4 வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படத்தில் காணப்படும் படையினரை அடையாளம் காணும் விசாரணைகளை சிறிலங்கா இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கென புதிய இராணுவ விசாரணை நீதிமன்றம் ஒன்று நியமிக்கப்பட்டு, கொழும்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள தனியான இடமொன்றில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் உத்தரவின் பேரில் அவரது நேரடிக் கவனிப்பின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சனல…
-
- 0 replies
- 251 views
-
-
காணாமற்போகச் செய்யப்பட்டோர் குறித்த விசாரணைகளின் குறைபாடுகளை அம்பலப்படுத்தும் அறிக்கைSEP 07, 2015 | 1:43by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்காவில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களின் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள் தொடர்பாக, மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் அறிக்கை ஒன்றை தயாரித்து, ஐ.நாவுக்கும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் கையளித்துள்ளது. மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புகூறும் விடயத்தில் ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையிலும், அடுத்து நடத்தப்பட வேண்டியது உள்நாட்டு விசாரணையா அல்லது அனைத்துலக விசாரணையா என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையிலும், இந்த அறிககை வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா காவல்துறை…
-
- 0 replies
- 355 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரகடனம் மீது வட மாகாண முதலமைச்சர் எமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக தேர்தல் அறிக்கைக்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வகையில் அவரின் கருத்து அமைந்திருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் மீறி தமிழ் மக்கள் மிகப்பெருவாரியாக வெற்றியை தந்துள்ளார்கள் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு வவுனியா தமிழரசுக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்றபோNது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர் …
-
- 6 replies
- 445 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செப்டெம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா பொதுச் சபை அமர்வில் பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதியுடன் பாரிய பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த அமர்வில் பங்கேற்கவுள்ளதாக அறியமுடிகிறது. நியுயோர்க்கில் அமைந்துள்ள இலங்கையின் ஐ.நாவிற்கான நிரந்தர வதிவிட அலுவலகத்தின் ஏற்பாடுகள் குறித்து பரிந்துரைக்கும் அறிவித்தல் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை அலுவலகத்தின் தேவைக்கான வாடகை வாகனங்கள் தொடர்பில், குறித்த அலுவலகத்தின் உத்தியோபூர்வ இணையத்தளத்தில் வாடகை வாகனங்களுக்கான கட்டண மதிப்பீடு தொடர்பிலான அறிவித்தல் விளம்பரம் ஒன்று பிரசுரிக்க…
-
- 0 replies
- 130 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பிரதிநிதிகள் ஜெனீவாவிற்கு செல்ல உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அதிகாரிகளுடன் இந்தப் பிரதிநிதிகள் பேச்சு நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் இலங்கைக் குறித்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக இந்த பயணம் அமையவுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் வலியுறுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்ட விசாரணைப் பொறிமுறைமையை நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தாமும், செல்வம் அடைக்கலநாதன் மற்ற…
-
- 0 replies
- 243 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற முக்கியமாக குற்றங்களுக்கு ஐ.நாவில் பலமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இவ்வாறான ஆதாரங்களை வைத்துக் கொண்டு அடுத்த நிலைப்பாட்டுக்குச் செல்ல சர்வதேச விசாரணைக் குழுவில் யார் கொண்டு வருவார்கள் என்பதுதான் தற்போதைய கேள்வி என்கிறார் கனடாவில் வசித்து வரும் சட்டத்தரணி ஹரி ஆனந்த சங்கரி. லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் . - See more at: http://www.canadamirror.com/canada/48647.html#sthash.3DmqCEJK.dpuf
-
- 0 replies
- 406 views
-
-
சம்பந்தனின் அடகுவைக்கும் இராஜதந்திரம்? 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தின் தோல்வி 1983இல் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. ஆனால், அந்தப் போராட்டமும் 2009இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது. ஆகவே, தமிழர்களை 2009இல் யுத்தத்தில் வெற்றி கொண்டனர். 2015இல் நாடாளுமன்றத் தேர்தலுடன் அரசியல் ரீதியாகவும் தமிழர்களை வெற்றி கொண்டனர் என்று கூறலாம். அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இலங்கைத் தேசியம் என்பதை தமிழர்கள் ஏற்றுள்ளனர் என்று சர்வதேச நாடுகளுக்கு சிங்கள கட்சிகளினால் இலகுவாக சுட்டிக்காட்ட முடியும். அத்துடன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட உறுப்பினர் செல்வம் …
-
- 1 reply
- 574 views
-
-
தேர்தல் காலத்தில் நடைபெற்ற சில உண்மைகளை போட்டுடைத்த ஜனாதிபதி ஜனவரி 5ம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி பிரசார நடவடிக்கைகளின் போது, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி, பாதுகாவலர்கள் மற்றும் சாரதி தன்னை வீட்டில் தனியாக விட்டுச் சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இச் சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்கவே தனது வீட்டுக்கு வந்து தன்னை கூட்டத்துக்கு அழைத்துச் சென்றதாக அவர் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சுட்டிக்காட்டினார். இன்று சிறிகொத்தவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கடந…
-
- 0 replies
- 285 views
-
-
பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று கூடிய உறவினர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடத்தியிருந்தனர் இலங்கையில் 1990-ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்த தமிழர்களில் 158 பேர் இராணுவ சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல்போன சம்பவத்தின் 25-ம் ஆண்டு நிறைவை அவர்களின் உறவினர்கள் இன்று சனிக்கிழமை நினைவுகூர்ந்துள்ளனர். 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அகதிமுகாமில் சுமார் 45 ஆயிரம் தமிழர்கள் தஞ்சமடைந்திருந்ததாக முகாமை நிர்வகித்த பல்கலைக்கழக சமூகம் கூறுகின்றது. அவ்வேளை இராணுவத்தினரால் பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் இவர்களுக்கு நடந்தது என்ன என்று 25 ஆண்டுகளாகியும் இ…
-
- 1 reply
- 311 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றிக் கொள்வதற்காக மஹிந்த தரப்பு தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. இதுதொடர்பாக மஹிந்த தரப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா, ஊடகம் ஒன்றக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுமார் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்களுடன் இருப்பதாகவும், தமது அணி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நாடாளுமன்ற எதிர்க்கட்சியில் கூடுதல் உறுப்பினர்களைக் கொண்ட அணி என்ற வகையில் தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோரப் போவதாகவும் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார். எனினும் கடந்த புத…
-
- 3 replies
- 1.1k views
-