Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -நன்றி பதிவு இணையதளம் - ஞாயிறு, ஜூலை 26, 2015 - 22:33 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் வடமராட்சி தமிழரசினை புறக்கணித்தது! சுமந்திரனிற்கு ஆதரவு தேடும் வகையினில் பருத்தித்துறை கடற்கரையினில் தமிழரசுக்கட்சியினால் கூட்டப்பட்ட பொதுக்கூட்டத்தை வடமராட்சி மக்கள் பகிஸ்தரித்துள்ளனர். வெறும் நூறிற்கும் குறைவான மக்களுடன் கூட்டம் கூடி கலைந்துள்ளது.கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா பங்கு கொண்ட கூட்டத்தினில் பங்காளிக்கட்சிகள் எவையும் பங்கெடுத்திருக்கவில்லை. அதன் தலைவர்கள் மற்றும் அதன் சார்பினில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் பங்கெடுத்திருக்காமை சுமந்திரனை புறக்கணிக்கும் மனோநிலையினில் உள்ளமை மற்றும் உள்கட்சி முரண்பாடுகளை வெளிப்படுத்தி நி…

    • 5 replies
    • 418 views
  2. இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2015 அமைதியாக நடந்து முடிந்துவிட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெற வைத்த வட கிழக்கு தமிழ் மக்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையி ஆழ்ந்துள்ளனனர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வழங்கிய ஆணை தொடர்வேண்டும் என் திரு சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார். திரு சம்பந்தனுக்கு ஈழ தமிழர் வளங்கிய ஆணை அரசியல் தீர்வுக்கு உகந்த தேசிய சர்வதேசிய சூழலை உரூவாக்கி தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்று தருவதாகும். தேசிய அரசை வெளியில் இருந்து ஆதரித்தல் அல்லது அமைச்சராக இணைந்து கொள்ளுதல் போன்றவை தவறான சமிக்ஞையாகி விடலாம். ஈழத்தமிழர் சம்மதத்துடன் இனப் பிரச்சினையைத் தீர்பதற்க்கான உழ்வாரிப் பொறிமுறை ஒன்று உருவாகியுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை நா…

  3. நல்லூர் கந்தன் ஆலயத்திருவிழா நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு பெருந்திரளான மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் குறித்த நல்லூர் திருவிழாவில் அனைத்து மதத்தவர்கள்,இனத்தவர்களும் கலந்து கொள்வதுடன் இத்திருவிழா காலங்களில் வெளிநாட்டவர்களது வருகையும் சற்று அதிகரித்து காணப்படுவது வழமை. எனினும் வெளிநாட்டவர்களும் இத்திருவிழாவில் கலந்து கொள்வதுடன் அவர்களும் யாழ்.கலாசாரத்தை பேணும் வகையில் நடந்து கொள்வது வியக்கத்தக்கது. குறிப்பாக நல்லூர் ஆலயச் சூழலில் அவர்கள் பாதணிகளை அணியாது கைகளில் கொண்டு செல்வதும், ஆண்கள் மேலாடைகளை களைந்து நல்லூர் கந்தனை தரிசிக்க உட்செல்வதையும் காணக்க…

  4. கனேடிய அரசாங்கத்தினால், வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில்கள் காரணமாக மொரட்டுவ மற்றும் பேராதனை பல்கலைக் கழக மாணவர்கள் பயன் அடையவுள்ளார்கள். எலிசபெத் மகாராணியார் முடிசூடி 60 வருட நிறைவை ஒட்டி, இந்த புலமைப்பரிசில்கள் கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகளுக்கு இந்த புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ள நிலையில், இலங்கைக்கான புலமைப் பரிசில்கள் மொரட்டுவ மற்றும் பேராதனை பல்கலைக் கழகங்கள் பெறுகின்றன. இதற்கு அமைய எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியினில், நான்கு கோடி கனேடிய டொலர் பெறுமதியான ஆயிரத்து 500 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.canadamirror.com/canada/47792.html#sthash.pBCjNb37.dpuf

    • 0 replies
    • 1.4k views
  5. திருகோணமலையில் சம்பந்தனுக்கு கீரிடம் சூட்டி வரவேற்பு! [Wednesday 2015-08-19 18:00] திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு,நேற்று மாலை மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று மாலை திருகோணமலை பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்திற்குச் சென்று, சம்பந்தன் வழிபாடு நடத்தினார். இதன்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி, கிரீடம் வைத்து, ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெருமளவு ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். நாடாளுமன்ற தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் 33,853 விருப்பு வாக்குகளைப் பெற்று சம்பந்தன் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  6. சிறுவயது முதலே பொதுப்பணிகளில் ஈடுபட்டு, இலட்சிய தாகத்தை வளர்த்துக்கொள்பவர்கள் பின்னாளில் அனைவராலும் போற்றப்படும் தலைவர்களாக உருவாகிறார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாகவும் பரிணாமிப்பது உண்டு. இதற்கு அமரர்,மாமனிதர் சிவமகாராசா ஓர் உதாரணம். ஆனால், இன்று அரசியல்வாதிகள் பெரும்பாலும் உருவாக்கப்படுகிறார்கள் என்று வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அமரர்சி.சிவமகாராசா கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதோடு, இரண்டு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். ‘நமது ஈழநாடு’ பத்திரிகையின் நிர்வாக இயக்குநராகவும் இருந்த இவர் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகளால் ‘மாமனிதர்’ பட்டம் வழங்கிக் கௌரவிக…

  7. உங்களுடைய ஆட்களால்தான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையடுத்து அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு எதிராக அங்குள்ள 49 தமிழ்க் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை இன்று காலை ஆரம்பித்திருக்கின்றார்கள். தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையடுத்து சிறைச்சாலை அதிகாரியான உப்புல்தெனிய மற்றும் அபேயசிங்க, சுனில் போன்ற சில அதிகாரிகள் தமிழ்க் கைதிகளுடன் கடுமையாக நடந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சிறிய செல் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு 49 கைதிகளும் நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்…

  8. 20 ஆகஸ்ட் 2015 இலங்கையின் பிரபல ரக்பிவீரர் வாசிம்தாஜூடீனை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் விசேட மரணப்படையணியினரே படுகொலை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரக்பி வீரர் படுகொலைசெய்யப்பட்ட அன்றிரவு யோசிதராஜபக்சவுடன் காணப்பட்ட ரக்பி வீரர்கள் குழுவொன்றின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அன்றிரவு யோசிதவிற்கும் குறிப்பிட்ட ரக்பி வீரரிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும்,அதனை தொடர்ந்து கடும் சீற்றமடைந்து காணப்பட்ட யோசித கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து தாஜூடீனைமுடித்துவிடுமாறு கோரியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட ரக்பி வீரரை கடற்படையில் இணைப்பதற்கு பல முறை யோசித முயன்றதாகவும்,எனினும் அவர் அதனை பல தடவைகள் நிராகரி…

  9. ரூபா 4,996,000 பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் திணைக்களம் [ வியாழக்கிழமை, 20 ஓகஸ்ட் 2015, 10:49.49 AM GMT ] நடைபெற்ற 8வது பாராளுமன்றத் தேர்தலில், சுயேட்சைக் குழுக்களில் போட்டியிட்டவர்களால் பிணையாக வைக்கப்பட்ட 49,96,000 ரூபாய் பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட், 2498 வேட்பாளர்களின் பிணைப் பணம் இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் 201 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் அதிகமான சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது. http://www.tamilwin.com…

    • 0 replies
    • 494 views
  10. சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட மேற்கு நாடுகள், சீனா விருப்பம்AUG 20, 2015 | 13:17by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் ஒருவர் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் நியாயமாகவும், அமைதியாகவும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வகையிலும் இடம்பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயங்களாக, நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துவது மற்றும் பொறுப…

    • 0 replies
    • 423 views
  11. தேசிய அரசு அமைக்க சுதந்திரக் கட்சி மத்திய குழு அங்கீகாரம்AUG 20, 2015 | 12:37by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று அங்கீகாரம் அளித்துள்ளதாக, கட்சியின பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார். இன்ற காலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த மத்திய குழுக் கூட்டத்திலேயே தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், நிமால் சிறிபால டி சில்வா,சரத் அமுனுகம,…

    • 0 replies
    • 345 views
  12. அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/thayagam/1n0qnzhljhf9

  13. நடைபெற்று முடிந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ள ஆசனங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும், எந்த அளவிற்கு விசமப் பரப்புரைகள் செய்யப்பட்டிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது எமது மக்கள் கொண்டுள்ள நீங்காத நம்பிக்கை அவர்கள் வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, துல்லியமாகத் தெரிகின்றது. இந்த தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளன. எவ்வித சலனமோ அன்றி அச்சமோ இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொண்டு எமது மக்கள் அவர்கள் வெற்றிவாகை சூடும்படியாக தங்கள் ஆதரவை அளித்துள்ளார்கள். எனவே எமது மக்கள் தமிழ்த் த…

    • 2 replies
    • 362 views
  14. கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்க வேண்டும்! – என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல [Thursday 2015-08-20 07:00] புதிய ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டுமென முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 'இத் தேர்தலில் மக்கள் மீண்டும் நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கி அதனை தொடர்வதற்கு ஆணை வழங்கியுள்ளனர். எனவே ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஸ்திரமான நல்லாட்சி நாட்டில் அமைவது உறுதியாகும். இதனால் புதிய நல்லாட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். அதனை விடுத்து தொடர்ந்தும் அரசியலில் எல…

  15. மஹிந்த எங்கள் தோல்விக்கு பொறுப்பு கூற வேண்டும்; தோல்வியடைந்த முன்னணி உறுப்பினர்கள் [ வியாழக்கிழமை, 20 ஓகஸ்ட் 2015, 06:18.44 AM GMT ] இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னணி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பில் எஸ்.பீ.திஸாநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, திலங்க சுமத்திபால, பியசேன கமகே, விஜயமுனி சொய்ஸா, ஜகத் புஷ்பகுமா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். குறித்த அனைவரும் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவை சந்தித்து தங்கள் தோல்விக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். ராஜபக்சவினால் மேற்கொண்டு செல்லப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியி்ன் பிரச்சார நடவடிக்கையின் முறை காரணமாக தான் உட்பட க…

  16. தேசிய கொள்கையை செயல்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒருங்கிணைந்த அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாக ஶ்ரீலங்கா மிரர் இணையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த அரசாங்கத்தை ஸ்தாபித்து குறித்த தேசிய கொள்கையை சமர்ப்பித்து இன்று (20) மாலை நடைபெறும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தல் காலத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கப்படமாட்டாது என தொடர்ச்சியாக கூறிவந்த நிலையில், அரசியலமைப்பில் உள்ள சிக்கலை கவனத்தில் கொண்டு ''தேசிய அரசாங்கம்'' என்ற பெயரை பயன்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த அரசாங்கம் ஐக்கிய தேசியக…

    • 3 replies
    • 755 views
  17. அடுத்து வரும் இரு வருடங்களுக்கு மைத்திரி தலைமையிலான அரசாங்கம்! [ வியாழக்கிழமை, 20 ஓகஸ்ட் 2015, 10:03.03 AM GMT ] எதிர்வரும் இரு வருடங்களுக்காவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க, ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியது. ஜனாதிபதி கட்சி தலைவராக மேற்கொண்ட அனைத்து தீர்மானங்களுக்கும் மத்திய செயற்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்ட…

    • 0 replies
    • 353 views
  18. தோல்வியடையாமல் தொடர்ந்து 38 வருடங்களாக எம்.பியாகி சாதனை படைத்தார் ரணில்! [Thursday 2015-08-20 07:00] பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக 38 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையை நிலைநாட்டியுள்ளார். தொகுதிவாரித் தேர்தல் முறையின் கீழ் 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பியகம தொகுதியில் முதல் தடவையாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, 22,045 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். அதன் பின்னர் தொடர்ச்சியாக இன்றுவரை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார். இதன் மூலம் இலங்கையில் தொடர்ச்சியாக 38 வருடங்கள் கடந்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே அரசியல்வாதி என்ற பெருமை ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தன்னுடை…

  19. நிமாலுக்கு பிரதி பிரதமர் பதவி? - தேசிய அரசுக்கு தீவிர முயற்சி[Thursday 2015-08-20 07:00] பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொள்வது தொடர்பிலேயே இரண்டு தரப்புக்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து பதுளை மாவட்டத்தில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள நிமல் சிறிபால டி. சில்வாவுக்கு பிரதி பிரதமர் பதவியை வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. குறிப்பாக சிறிலங்கா…

  20. தோல்வியுற்ற எம்.பிக்கள் தேசியப்பட்டியலுக்காக முண்டியடிப்பு! [Thursday 2015-08-20 07:00] பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.எஸ்.பி.திசாநாயக்க, நந்திமித்ர ஏக்கநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, மஹிந்த சமரசிங்க ஆகியோரே அவ்வாறு தேசியப்பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சிக்குள் தனது கையை பலப்படுத்த மேற்குறித்த நால்வருடன் பிரசன்ன சோலங்க ஆராச்சிக்கும் தேசியப் பட்டியல் உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்…

  21. பிரகீத் கடத்தலுடன் தொடர்புடையோரை பாதுகாக்கும் இராணுவம்! [Thursday 2015-08-20 07:00] ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரை உயர்மட்ட அதிகாரிகள் பாதுகாப்பதற்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிசார் இதனைத் தெரிவித்துள்ளனர். எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட மூன்று இராணுவப் புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து மேலும் நான்கு இராணுவத்தினரை கைது செய்ய பொலிசார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் குறித்த நான்கு இராணுவத்தினரையும் இராணுவ உயரதிகா…

  22. பாராளுமன்றத்தில் கூட்டமைப்புக்கு மூன்றாவது இடம் – வரவேற்கிறார் சோபித தேரர்! [Thursday 2015-08-20 07:00] பாராளுமன்றத் தேர்தலில் 3 ஆவது இடத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார் சமூக நீதிக் கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர். கொழும்பு சன சமூக நிலையத்தி்ல் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அவர்களுக்கான பலத்தை வழங்கத் தவறாது என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டு மக்களும் அவர்களை சிறுபான்மை என்பதையும் விட அவர்களும் நாட்டு பிரஜைகளே என்று …

  23. பிக்குகளுக்கு புதிய நாடாளுமன்றில் இடமில்லை! [Thursday 2015-08-20 07:00] நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 150 பௌத்த பிக்குகளில் ஒருவரும் நாடாளுமன்றிற்கு தெரிவாகவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் போது பல்வேறு கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் ஊடாக சுமார் 150 பௌத்த பிக்குகள் போட்டியிட்டனர். எனினும், நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொள்ளும் அளவிற்கான வாக்குகளை எந்தவொரு பௌத்த பிக்குவும் பெற்றுக்கொள்ளவில்லை. பொதுபல சேனா அமைப்பு இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன என்னும் பெயரில் போட்டியிட்டது. குறைந்தபட்சம் பத்து ஆசனங்களை வெற்றிகொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தது. எவ்வாறெனினும், மிகவும் சொற்ப அளவிலான வாக்குகளையே நாடு முழுவதிலும் பொதுஜன பெரமுன கட்சி பெற…

  24. தேசிய அரசாங்கத்தை உருவாக்க சு.க அனுமதி தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று (20) கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அனுமதியளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினாலேயே, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜெயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் அமுனுகம மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் அடங்கிய குழுவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை தாங்கினார். - See more at: http://www.tamilmirror.lk/152437#sthash.WkbAg0AR.dpuf

  25. ஓரணியில் அணி திரள்வதன் மூலம் பலமான அரசியல் சக்தியாக தம்மை முன்னிறுத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் மீண்டும் தமது உறுதிப்பாட்டினை பொதுத் தேர்தலினூடும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி அதனையே காட்டுகின்றது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனும் நிலைப்பாட்டினை பருமட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஏற்றி வைப்பதற்கும் அது காரணமாக அமைந்திருக்கின்றது. வடக்கு- கிழக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். எனினும், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் கட்சியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விளங்கும் என்று சற்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, தமிழ்த் தேசிய வாக்குகள…

    • 0 replies
    • 278 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.