ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/151520#sthash.a3QpB2JD.dpuf
-
- 4 replies
- 453 views
-
-
யுனெஸ்கோ(unesco) அமைப்பான அனைத்துலக ஐக்கியநாடுகள் சபை என்ற அமைப்பு தெற்காசியாவிற்கான மறைந்த நெல்சன் மண்டேலா என்ற விருது வழங்க அலோசித்து வருவதாக அமெரிக்காவில் உள்ள அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது. திரு. சம்பந்தன் அரசியல் தீர்க்கதரிசி என்றும், நேர்மை, தமிழ்தேசிய கொள்கை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.அவருக்கு புகழ்மாலைகள் வந்த வண்ணம் உள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள இலக்கிய வாதிகள், ஊடகங்கள், மக்கள், மற்றும் தாய் நிலத்தில் வாழும் மக்கள் மகிழ்ச்சி மழையில் நனைந்து வருகின்றனர். - See more at: http://www.canadamirror.com/canada/47187.html#sthash.f9CHisPw.dpuf
-
- 11 replies
- 3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் உடன்படிக்கை உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள குற்றச்சாட்டை அடியோடு மறுக்கின்றோம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது சமஷ்டி முறையில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சியின் கீழ்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எனத் தெரிவிக்கப்பட்டு…
-
- 15 replies
- 841 views
-
-
புலிகள் தலைதூக்கவோ, பிரிவினைக்கோ இடமில்லை – சம்பிக்க ரணவக்க கூறுகிறார்AUG 07, 2015 | 1:04by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மீண்டும் விடுதலைப் புலிகளோ, பிரிவினைவாதமோ தலைதூக்க இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், ‘நாட்டில் மீண்டும் புலிகள் தலைதூக்கி விட்டனர், நாட்டை பிரிக்கப் போகின்றார்கள் என்று, மக்களால் நிராகரிக்கப்பட்ட கொலைகார ஊழல், மோசடி, திருட்டுக் கும்பல் மீண்டும் வழமையான பரப்புரையை ஆரம்பித்துள்ளது. பொய்ப் பரப்புரைகளை செய்து இந்தக் கூட்டம் மீண்டும் வழமையான அரசியலைச் செய்ய முயற்சிக்கிறது. அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவுள்ள உறுதி…
-
- 0 replies
- 436 views
-
-
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா குறித்து விசாரணை நடக்கிறது- சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்AUG 07, 2015 | 1:51by கி.தவசீலன்in செய்திகள் வெள்ளை வானில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது தொடர்பாக, புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தி வருவதாகவும், அது முடிந்த பின்னர், தமது விசாரணை அறிக்கையை வெளியிடுவோம் என்றும் சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில், “மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தொடர்பாக சிறிலங்கா இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை நடத்தி வருகின்றன. புலனாய்வுப் பிரிவின் விசாரணை முடிந்ததும் அந்த அறிக்கையைப் பெற்று ஆராய்வோம். அதன் ப…
-
- 0 replies
- 505 views
-
-
இன்டர்போலின் சிவப்பு அறிக்கையில் ஏழு இலங்கையர். August 06, 20152:26 pm இலங்கையில் பாரிய அளவிலான போதைப்பொருள் வியாபாரங்களுடன் தொடர்புடைய 7 பேரை கைது செய்வதற்காக இன்டர்போல் காவல்துறை நேற்று சிவப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இவ் போதை பொருள் வியாபாரிகளின் பெயர்கள், பிரசன்ன ஜானக பெர்ணான்டோ, சுஜித் நிஷாந்த ஜயசிங்க, மொஹமட் மதிஸ் நிமல் பத்ம ஸ்ரீ பத்திரன, விதுர விஜேசிங்க, வசந்த லியனகே, மென்டிஸ் மற்றும் டப்ல்யூ.சாலிய ஆகியோர் என இன்டர்போல் வெளிப்படுத்தியுள்ளது. இவர்களில் அதிகமானோர் இத்தாலியின் மிலானே நகரத்தில் மற்றும் சுற்றிலுள்ள உள்ள நகரங்களில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. இப்போதை பொருள் வியாபாரிகளுக்கு நன்கு ஆங்கிலம் பேச முடியும் என தெரியவந்துள்ளது. பாரிஸ்…
-
- 8 replies
- 637 views
-
-
இருபது வயதுக்குள் ஒருவர் பின் ஒருவராக இரண்டு பேரைக் காதலித்து அவர்கள் இருவராலுமே கைவிடப்பட்ட இளம் பெண் ஒருவர் விரக்தியினால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. பு.தயாரூபி (வயது 20) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். இவரின் மரண விசாரணையை காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் நடத்தினார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்தவரின் மாமியான செ. இரத்தினகுமாரி அவரின் சாட்சியத்தில் கூறியதாவது. இறந்தவர் எனது சகோதரரின் மகள். இவர் கொத்தியாபுலை என்னும் இடத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து அவருடன் குடும்பம் நடத்தினார். ஆனால் பதிவுத் திருமணம் செய்யவில்லை. எட்டு மா…
-
- 1 reply
- 530 views
-
-
காணாமல் போனவர்களை முன்னிறுத்தி பொதுசன ஜக்கிய முன்னணி வேட்பாளர் அங்கயன் இராமநாதன் நடத்திய பிரச்சார கூட்டம் அடிதடியினில் முடிந்துள்ளது.காணாமல் போனவர்களை விடுவிப்பதற்காக நடவடிக்கை எனக்கூறி அவர்களின் உறவுகளை யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்த அங்கஜன் பிரசார கூட்டமொன்றை அவர்களிடையே நடத்த முயற்சித்திருந்தார்.இந்நடவடிக்கைகளினால் அதிருப்தி அடைந்த காணாமல் போனோரது உறவுகள் முரண்படத்தொடங்கின.இதனை தவறென தட்டிகேட்க முற்பட்ட சகாதேவன் என்பவர் மீது அங்கயனின் ஆதவாளரான பெண்மணியொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து நடந்த குழப்பங்களையடுத்து இலங்கை காவல்துறை தலையீடுகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைக்கென அழைத்து சென்று வாக்குமூலங்களை பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.அத்துடன் நீதிமன்றி…
-
- 15 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா அரசியலில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும்- மன்னார் ஆயர் சார்பாக அறிக்கைAUG 06, 2015 | 13:31by புதினப்பணிமனைin செய்திகள் தமிழ்த் தேசிய நலன்களை முன்னிறுத்தக் கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம், சிறிலங்கா அரசியலில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையின் சார்பாக- மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஏ.விக்டன் சோசை அடிகளார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசெப் ஆண்டகை சார்பாகவும், அவர் தம் ஆலோசனை மன்றத்தின் சார்பாகவும் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு.…
-
- 3 replies
- 1.5k views
-
-
மின்சார நாற்காலியும்! பிரதமர் நாற்காலியும்! - புகழேந்தி தங்கராஜ் [ வியாழக்கிழமை, 06 ஓகஸ்ட் 2015, 10:27.47 AM GMT ] இந்த மாதம் (ஆகஸ்ட்) இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்தல். அடுத்த மாதமே, ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டம். இந்த இரண்டு நிகழ்ச்சி நிரலையும் இணைக்கிற ஒரே வார்த்தை, ஒற்றை வார்த்தை - 'நாற்காலி'. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நாற்காலியில் அமர்ந்தே ஆகவேண்டும் என்கிற இக்கட்டான நிலை, மகிந்த ராஜபக்சவுக்கு! தோற்றுவிட்டால், மின்சார நாற்காலியில் தன்னை உட்கார வைத்து விடுவார்களோ என்கிற அச்சம் அதிகரித்தபடியே இருக்கிறது அந்த மிருகத்துக்கு! மகிந்த தரப்பிலிருந்து கேட்கிற புலம்பல் ஒன்று, மகிந்தனின் அச்சத்தை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தியிருக்கிறது. "…
-
- 0 replies
- 379 views
-
-
இலங்கை பெண்களே உஷார்….? வெறியர்களின் புதிய ஆயுதம்…! August 06, 20157:39 am “ROHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்…! Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால்சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…! பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும்கண்டு புடிக்க முடியாது. மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால்அடிமை ஆகி விடுவார்களாம். அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன்வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது. மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும்என்கின்றனர் மருத்துவர்கள். இதைப் போன்றநிறைய மருந்து…
-
- 0 replies
- 800 views
-
-
இலங்கை யின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஆகியோரை மிஞ்சியுள்ளார் சுமந்திரன். வன்னி இறுதி யுத்த சாட்சியங்களாக இருந்த வைத்தியர்களை முன்கூட்டியே தயார்படுத்தி அழைத்து வந்து கோத்தா கும்பல் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டை மிஞ்சியதாக சுமந்திரன் யாழ்.ஊடக அமையத்தினில் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தி முடித்துள்ளார். ஆண்மை நாட்களாக சுமந்திரன் பற்றி குற்றச்சாட்டுக்களினை எழுப்பி வந்திருந்த சக வேட்பாளரான மதினி ஜெபநேசன்,அழையா விருந்தாளி புகழ் வடமாகாணசபை உறுப்பினர்களான கஜதீபன், சுகிர்தன், சயந்தன், சிவயோகன், ஆனோல்ட் சகிதம் இந்த பத்திரிகையாளர் மாநாட்டை அவர் நடத்தியிருந்தார். ஏற்கனவே முன்தயார் செய்யப்பட்ட உரைகள் போன்றிருந்த அவர்களது பேச்சுக்கள் …
-
- 3 replies
- 1.1k views
-
-
புலிகளின் குண்டுகள் துளைத்த காருடன் திருமலைக்கு பரப்புரை செய்ய வந்த சரத் பொன்சேகாAUG 06, 2015by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள் ஜனநாயக கட்சியின் தலைவரும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று திருகோணமலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். 2006ஆம் ஆண்டு கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில், தன் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது, தான் பயணம் செய்த காரையும் அவர் தேர்தல் பரப்புரைக்காக கொண்டு வந்திருந்தார். குண்டுகளால் துளைத்த அந்தக் காரை வைத்து அவர் ஒவ்வொரு மாவட்டமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் திருகோணமலை நகரசபை மண்டபத்தில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில் பீ…
-
- 0 replies
- 422 views
-
-
சிறிலங்காவை இந்தியா தக்கவைத்துக் கொள்ள முடியுமா? – கேணல் ஹரிகரன்AUG 06, 2015 | 11:48by நித்தியபாரதிin கட்டுரைகள் சீனா ஒருபோதும் சிறிலங்காவைக் கைவிடப் போவதில்லை. இந்திய மாக்கடலிலும் தென்னாசியாவிலும் சீனா மிகப் பாரிய மூலோபாய நலனைக் கொண்டுள்ளது. இந்திய மாக்கடலில் சீனாவின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் சிறிலங்கா மையமாக விளங்குகிறது. இவ்வாறு colombo telegraph ஊடகத்தில் கேணல் ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மத்தியிலும் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. பொதுத்தேர்தலின் மூலம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிப்பீடத்தில் ஏறவேண்டு…
-
- 0 replies
- 403 views
-
-
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக பதவியேற்கிறார் அதுல் கெசாப் – செனட் ஒப்புதல்AUG 06, 2015 | 9:23by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அதுல் கெசாப் (வயது 44) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு அமெரிக்க செனட் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவினால், சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதுவராக முன்மொழியப்பட்ட, அதுல் கெசாப்பின் நியமனம், அமெரிக்க செனட் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து. கடந்த ஜுன் 23 ஆம் நாள் அவர் அமெரிக்க செனட் வெளிவிவகாரக் குழு முன்பாக சிறிலங்கா தொடர்பான கொள்கைகள் குறித்து உரையாற்றியிருந்தார். இந்த நிலையில் நேற்று அமெரிக்க செனட் கெசாப்பின் நியமனத்தை…
-
- 0 replies
- 228 views
-
-
தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பின்னர் சுமந்திரனோடு இணைந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்த சிறீதரன் தனது தனித்த ஓட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சுமந்திரனது ஆதவாளர்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைக்க தொடங்கியுள்ளனர். தினம் இவ்விவகாரம் வடமராட்சி பகுதிகளினில் சூடுபிடிக்கின்ற விவகாரமாக இருந்திருந்தது. தபால் மூல வாக்களிப்பு நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையினில் சிறீதரன் தனிப்பட்டதாக தனது செயற்பாட்டாளர்களிடம் சுமந்திரனை வாக்களிப்பின் போது புறக்கணிக்க அறிவுறுத்தியுள்ளார்.இதனையடுத்தே இருவரிற்குமிடையேயான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனக்கான விருப்பு வாக்கு தொடர்பினில் கூடிய ஆர்வம் கொண்டுள்ள சிறீதரன் கிளிநொச்சியினில் தனது கட்சி சார்ந்த ஏனைய தரப்…
-
- 2 replies
- 1.3k views
-
-
தேர்தலின் நிமித்தம் 15 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிரதமர் அலுவலகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் விடயத்தில் இன்னும் எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் சில அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்கள் எதிர்வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.http://www.pathivu.com/news/42061/57/15/d,article_full.aspx
-
- 1 reply
- 362 views
-
-
என்னிடமிருந்து கௌரவத்தைப் பெறவேண்டுமானால் மரியாதையாக வெளியே சென்றுவிடுங்களென எச்சரித்து தனது அமைச்சர்கள் இருவரை வெளியேற்றியுள்ளார் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன். நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கியெறிய வேண்டிவருமென எச்சரித்த அமைச்சர்களான குருகுலராஜா மற்றும் சத்தியலிங்கம் ஆகியோரையே முதலமைச்சர் இவ்வாறு கூறி வெளியேற்றியுள்ளார். தன்னை வடமாகாணசபையில் அமைச்சு கதிரையேற்றிய சிறீதரனை வெல்ல வைக்க குருகுலராஜா பாடுபட்டு வருகின்றார். இந்நிலையில் முதலமைச்சர் தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாக அறிவித்தமை கூட்டமைப்பிற்கு குறிப்பாக அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய முற்பட்ட சிறீதரனிற்கு பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று வவுனியாவில் பலமான தமிழரசுக…
-
- 1 reply
- 445 views
-
-
பொறுப்புக்கூறல் குறித்த பேச்சுக்களில் வடக்கு மாகாணசபையின் பங்கேற்பு அவசியம் – ஐ.நா பேச்சாளர்AUG 06, 2015 | 6:01by கார்வண்ணன்in செய்திகள் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்கும் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாணசபையும் உள்ளடக்கப்படுவது அவசியம் என்று ஐ.நா நம்புவதாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நேற்று செய்தியாளர்களிடம், கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்கா அரதசாங்கம் மற்றும் மக்களுக்கான ஐ.நாவின் உதவி தொடர்பாக விளக்கங்கள் மற்றும் மேலதிக தகவல்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளேன். கடந்த வெள்ளிக்கிழமை, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சிறிலங்கா அரசாங்கம் மற்றும் மக்களின் நடவடிக்கைகளுக்கு, ஐ.நா ஆதரவளிப்பதாக கூறியிருந்தேன். …
-
- 2 replies
- 989 views
-
-
நாட்டை அழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். மஹர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை எந்தவொரு அரசியல் சக்தியினாலும் திசை திருப்ப இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் கோசங்களை எழுப்பி நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்ல முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சிறுபான்மையாக இருந்த அரசாங்கத்தை பெரும்பான்மை பலமுடையதாக மாற்றும் தேர்தலே இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் அழிவடைந்திருந்த நாட்டை ஆறு மாத காலங்களில் வேறும் திசைக்…
-
- 0 replies
- 359 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக சாவகச்சேரி பொலிசாரினால் சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள் கடந்த 31ம் திகதி சாவகச்சேரி பஸ் நிலையத்தில் தேர்தல் துண்டு பிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்த போது அவர்களை சாவகச்சேரி பொலிசார் கைது செய்ய முற்பட்டனர். அதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருக்கும் பொலிசாருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது. அந்த சம்பவம் தொடர்பிலையே பொலிசாரினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பொலிசாரின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை, தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி துண்டு பிரசுரங்களை விநியோகித்தமை ஆகிய …
-
- 0 replies
- 216 views
-
-
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பாதுகாத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். லசந்த கொலையாளி தொடர்பில் இந்த அரசாங்கம் விசாரணை நடத்தாமல் இருப்பதற்கான காரணம், கொலையாளி அரசாங்கத்தில் இருப்பதனாலா? என கேள்வி எழுப்பியுள்ளார். லந்தவை இவர்தான் கொன்றார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்துவதாகவும், அவ்வாறு என்றால் விசாரணை நடத்த முடியும் தானே என அவர் தெரிவித்துள்ளார். ஏன் விசாரணை நடத்தப்படவில்லை அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சந்தேக நபர்கள் அல்லது தொடர்புடையவர்கள் இந்த அரசாங்க…
-
- 0 replies
- 514 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் வேடபாளரும் முன்னாள் பெண்கள் விவகார பிரதியமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ வரைபடத்தை பயன்படுத்தி தனது தேர்தல் பிரசார பதாகைகளை வடிவமைத்தமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சமஷ்டி தீர்வு ஏற்படுத்தப்படாது, ஒற்றையாட்சியின் கீழ்தான் அதிகாரப் பரவலாக்கம் என ஐக்கிய தேசியக் கட்சி கூறிவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் தமிழீழ வரைபடத்தை பயன்படுத்துவது தேர்தலில் வாக்கை பெறுவதற்கான உத்தியா என்று கேள்வி எழுப்படுகின்றது. திருமதி விஜயகலா மகேஷ்வரன் தனது தேர்தல் பிரசார பதாகை ஒன்றின் பின்புறமாக தமிழீழ வரைபடத்தை இணைத்து தனது தேர்தல் பிரசார வாகனத்தில் பொருத்தியுள்ளார். அதே வாகனத்தின் அருகில் பிரதமர் ரணிலின் …
-
- 0 replies
- 273 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிபாரிசு செய்யும் சமஷ்டி முறையிலான தீர்வு எவ்வகையிலும் வடக்கிற்கு வழங்கப்பட மாட்டாது என ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும், அமைச்சரும், ஐக்கிய தேசிய முன்னணியில் கொழும்பு மாவட்டத்தின் வேட்பாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கியமுள்ள ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே ஐக்கிய தேசிய முன்னணியில் இம்முறை போட்டியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு புறநகர் பகுதியான பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று (05) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ''நாட்டைப் பிளவுபடுத்தும் யோசனைகள் முன்வைக்கப்படுவதாக மகிந்த தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும், நாட்டைப் பிளவுபடுத்தும் யோசனையை மகி…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தபோதுதான் அதற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தாரென திருவாய் மலர்ந்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா. பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிவரைக்கும் ஆதரவாக இருந்தது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளுக்கும் நாம் ஆதரவு வழங்கினோம். அவர்களை உயர்வாக மதித்தோம். எனவே,முன்னால போராளிகள் எமக்க…
-
- 0 replies
- 391 views
-