ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
20 NOV, 2024 | 07:16 PM தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/315 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும், ஜே/328 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/56 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட…
-
-
- 7 replies
- 624 views
- 1 follower
-
-
வவுனியா வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்தவாரம் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது இளைஞர் ஒருவர் ஆண் ஆசிரியர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, மாணவி ஒருவரிடம் பேசவேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு ஆசிரியர் மறுப்பு தெரிவித்த நிலையில் அதனால் ஏற்பட்ட முரண்பாட்டினால் அன்றையதினம் மாலை ஆசிரியர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற இளைஞர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக நேற்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸிடம் ஒப்படைத்த நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/199138
-
-
- 5 replies
- 291 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் 150 லீற்றர் கசிப்பு போதைப்பொருளுடன் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள் கசப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டன. மறைத்து வைக்கப்பட்ட நிலையிலும், விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் சுமார் 150 லீற்றர் கசிப்புகளும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு! Vhg நவம்பர் 19, 2024 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது. இப்பிரிவுக்கான ஆசிரியர்கள் அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை இவர்கள் பட்டதாரிகளாக ஆரம்…
-
-
- 18 replies
- 1.2k views
- 1 follower
-
-
திக்கம் வடிசாலை முன்னாள் அமைச்சரால் சூறையாடல்; அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என்கிறார் சகாதேவன் திக்கம் வடிசாலை கடந்த பத்துவருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இங்கு நடைபெற்ற அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என பனைஅபிவிருத்திச்சபையின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் நகரப்பகுதியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச்சபையின் கீழ் உள்ள கற்பகம் பனை உற்பத்திபொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தை பார்வையிட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.. …
-
- 2 replies
- 463 views
-
-
ஐ.தே.க.விற்கு அடுத்த 6 வருடத்திற்கு ரணிலே தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வரும் நிலையிலும் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தக்க வைப்பதற்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் மூன்று தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை இவர் தன்னகத்தே கொண்டுள்ளமை முக்கிய விடயமாகும். ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளில் படுதோல்வி அடைந்தது. 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் வெற்றி பெற முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்…
-
-
- 1 reply
- 804 views
-
-
புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் இல்லை! adminNovember 19, 2024 முந்தைய விதிகளின் நடைமுறையிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் இராஜாங்க அமைச்சர்கள் என்ற கருத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது, ஆனால் அதற்கு பதிலாக 26-28 துணை அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படுவர் என அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என டெய்லி மிரருக்கு தெரிவித்தார். தேர்தலுக்கு முன்னதாக நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 353 views
- 1 follower
-
-
7:30 நிமிடத்தில்
-
-
- 21 replies
- 1.6k views
-
-
கொதித்தெழும் ஷிராஸ் யூனஸ் (தமிழர்கள் தேசிய போராட்டம் குறித்த மிகவும் மோசமான பார்வை கொண்டவர்)
-
-
- 96 replies
- 5.9k views
-
-
தமிழ்த் தேசியத்தை விட்டு தமிழ் மக்கள் விலகவில்லை; விளக்குகிறார் கஜேந்திரகுமார் இம் முறை பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மூன்று ஆசனங்களுக்கான வாக்குகளையும் எடுத்து நோக்கினால் கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், அங்கஜன் இராமநாதனுக்கும் கிடைத்த வாக்குகளையும் விடக் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. எனவே தமிழ்மக்கள் தமிழ்த்தேசியத்தை விட்டு விலகியதாகவோ, தமிழ்த்தேசியத்தை நிராகரிக்கின்ற தேசிய மக்கள் சக்திக்குப் பெருமளவு வாக்குகளை அளித்துள்ளதாகவோ கூறப்படும் கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கின்றோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம…
-
- 2 replies
- 403 views
-
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது இடிந்து வீழ்ந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டுவரை இபாட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான வேலைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகளால் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் முரசுமோட்டை ஊரியான் ஆகிய பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளகொங்கிறீட் சுவர்கள் உரிய முறையில் அமைக்கப்படாத நிலைய…
-
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை இலங்கைக் கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க(Thushara Karunatunga) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (18)ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் இடம்பெற்றுள்ளது. கடல் போக்குவரத்து வசதி இதன்போது யாழ். தீவுப் பகுதி மக்களின் கடல் போக்குவரத்து மற்றும் தீவுகளில் வசிக்கும் மக்களுக்கான வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைக் கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/north-governer-meet-for-sl-navy-1731932865#google_vignette
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சம்பளம் பெற்றுக் கொள்ளாது தமது கடமைகளை முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளனர் என கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான ஆரம்ப இனக்கப்பாடு ஏட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஊடக சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த 76 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்வது என்பது மக்களுக்கு வெறும் கனவாக காணப்பட்டது என அவ…
-
-
- 6 replies
- 537 views
- 1 follower
-
-
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோருக்கு எதிராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் அதிருப்தி அடைந்துள்ளதாக கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த தேர்தலில் சிறீதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோர் மக்கள் மத்தியில் பெரும்பான்மையை பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று விட கூடாது என்னும் வகையில் சுமந்திரன் செயற்பட்டார். இது தொடர்பில் முன்னதாக சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்தர்ப்பம் ஒன்றிலும் சிறீதரனுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், சுமந்திரனின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக சிறீதரன் வெற்றி பெற்றுள்ளமை சுமந்திரனுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக…
-
- 0 replies
- 404 views
-
-
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதே அளவானது எனவும், அதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, …
-
- 1 reply
- 228 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் (22) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய 23ஆம் திகதியிலிருந்து 2025 ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மீண்டும் 2025ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி முதல் 17ஆம் திகதி வரை 2024 கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. இந்த விடுமுறை காலப்பகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன. 2025 கல்வியாண்டுக்கான முதலாம் …
-
- 0 replies
- 665 views
- 1 follower
-
-
நாடாளுமன்ற தேர்தல் இலங்கையில் பிரிவினைவாத அரசியலிற்கு முடிவுகண்டுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் கலாச்சாரம் வடக்கை தெற்கிற்கு எதிராகவும்தெற்கை வடக்கிற்கு எதிராகவும் நிலைநிறுத்தும் அரசியலால் நீண்டகாலமாக வரையறுக்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தேர்தல் பிரிவினைவாத அரசியல் பிளவுபடுத்தும் அரசியல் இனி எடுபடாது என்பதை இந்த தேர்தல் காண்பித்துள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199070
-
-
- 1 reply
- 348 views
- 1 follower
-
-
தேசிய மக்கள் சக்தியானது விசேட தேவையுடைய ஒருவருக்கு தனது தேசிய பட்டியலில் வாய்ப்பளித்துள்ளது. இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வாவுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை பாராளுமன்றத்தில் முதல் தடவையாக உடல் ஊனமுற்ற ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பார்வையற்றவர்களின் பிரதிநிதியாக பாராளுமன்றில் செயற்படவிருப்பதால் அவரது நியமனம் மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது. மேலும் அனைவருக்கும் சமத்துவம் என்ற கொள்கையில் இருக்கும் தேசிய மக்கள் சக்தியின் இந்த முயற்சி மிகவும் முற்போக்கானதாகவும் பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/199076
-
-
- 3 replies
- 435 views
- 1 follower
-
-
“தேசம்” ”சுயநிர்ணய உரிமை”: இனவாதமல்ல Sri Lanka.4 hours ago தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்ததன் மூலம் வடபகுதி மக்கள் இனவாத்தை கைவிட்டுள்ளதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். ஆனால் ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” ”மரபு வழித் தாயகம்” என்பதை உள்ளடக்கிய அரசியல் விடுதலைப் போராட்டம் 'இனவாதம்' அல்ல. “இனவாதம்” என்பது ஒரு இனம் ஏனை இனங்களைவிட மேலானது என்ற உள்ளார்ந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” என்பது 'சுயநிர்ணய உரிமை' 'தேசம்' பற்றிய கோட்பாட்டுக்குள் அடங்கும். ஆகவே இவற்றை இனவாதம் என்றால் 'இலங்கை அரசு' என்ற கட்டம…
-
-
- 9 replies
- 679 views
-
-
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது. போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போரின் போது உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதில் தமிழ் சமூகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலி அறிக்கை எனினும் இந்த ஆண்டு முதல் அவ்வாறு எவ்வித தொந்தரவுகளும் இன்றி நினைவு கூர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க தரப்பு எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிட…
-
-
- 18 replies
- 1.4k views
- 1 follower
-
-
இலங்கைக்கான சீனத் தூதுவர் நாளை யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார். பாராளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக யாழ்ப்பாணத்துக்கு சீனத் தூதுவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொள்கின்றார். இதன்போது அவர் பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். https://thinakkural.lk/article/312232
-
-
- 14 replies
- 989 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) தேசிய சொத்துக்களை கொள்ளையடித்த கள்வர்களை கைது செய்வதாகவும், அந்த சொத்துக்களை மீட்பதாகவும் அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்திருக்கிறது. அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சியாக எமது முழுமையான ஒத்துழைப்பை நாம் அரசாங்கத்துக்கு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதான எதிர்க்கட்சியாக மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவாகியுள்ளது. மூன்றில் இரண்டுக்கும் அதிக பெரும்பான்மையுடைய ஆளுங்கட்சியுடன் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டியுள்ளது. அ…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். ஹரிணி அமரசூரிய-(பிரதமர்) – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் விஜித ஹேரத்-வெளிநாட்டு அலுவல்கள்,வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை சஞ்சன அபேரத்ன -பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ஹர்ஷண நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் விவகாரம் கே,டி.லால்காந்த -விவசாயம் ,கால்நடைகள்,காணி மற்றும் நீர்ப்பாசனம் https://thinakkural.lk/article/312253
-
-
- 68 replies
- 12.2k views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சியின்(TNA) தேசியப் பட்டியல் தொடர்பிலான சர்ச்சை நிலைகள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தற்போது வலுப்பெற்று வருகிறது. எனினும் தமது கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அந்த நியமனங்களில் ஒருவராக கருதப்படும் பா. சத்தியலிங்கத்தினது உள்வருகையானது முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் திட்டமிடலின் ஒரு அங்கம் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அந்த வகையில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. இளம்பிறையன் தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெறும் பல்வேறு முரணான கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார். மேலும், சுமந்த…
-
-
- 13 replies
- 870 views
-