Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் சாதனை முதலாவது சோதனைக்குழாய் குழந்தை பிறந்தது. July 21, 20158:55 am யாழ்ப்பாண குடாநாட்டில் சோதனைக்குழாய் மூலம் உருவான முதற்குழந்தை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிறந்துள்ளது. திருநெல்வேலியில் அமைந்துள்ள நெதேர்ண் சென்ரல் வைத்தியசாலை யாழில் அதிகளவான மருத்துவ வசதிகளையுடைய தனியார் வைத்தியசாலையாக மாறி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சோதனைக்குழாய் குழந்தையையும் வெற்றிகரமாக பரசவிக்க வைத்துள்ளனர். வைத்திய நிபுணர்களான சுரேஷ்குமார், அருள்மொழி, ஜானகி ஆகியோர் வெற்றிகரமான சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்க வைத்துள்ளனர். குழந்தைப் பேறில்லாதவர்கள் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெறுவது சாதாரணமானதாக மாறிவரும்போதும், வடக்கிலுள்ளவர்கள் அதற்காக வேறிடம் சென்று பெரும் பணம் செலவ…

  2. கூட்டத்தில் மஹிந்த அடித்தாரா? அடி வாங்கினாரா? July 21, 20158:09 pm ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை அக்குரஸ்ஸவில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே் தனது கட்சி தொண்டரை தாக்கியமை அதிர்ச்சிப்படுத்தியுள்ளது. http://www.jvpnews.com/srilanka/117483.html

  3. மீரிஹானவில் சிக்கிய வெள்ளை வான் கோத்தாவின் நாடகம்? – கைதான படையினருக்குப் பிணைJUL 21, 2015by கார்வண்ணன்in செய்திகள் மீரிஹானவில் வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் சிவிலுடையில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிறிலங்காப் படையினர் மூவரும் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 7.30 மணியளவில் மீரிஹான பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். சிவில் உடையில் இருந்த இவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 13 ரவைகள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் இவர்கள் பயணம் செய்த வெள்ளை வானின் இலக்கத் தகடு மாற்றப்பட்டிருந்தது. மீரிஹான பகுதியிலேயே சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச,…

    • 0 replies
    • 675 views
  4. மீண்டும் கிளம்பியது வெள்ளை வான்- மூன்று சிறிலங்காப் படையினர் சிக்கினர்JUL 21, 2015 | 13:35by கார்வண்ணன்in செய்திகள் சிவில் உடையில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் பயணித்த மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மீரிஹான பகுதியில் வைத்தே நேற்றிரவு 7.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. தாம் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் ஒருவரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று, கைது செய்யப்பட்ட படையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான உண்மை நிலையை அறிய இராணுவ காவல்துறையுடன், சிறிலங்கா காவல்துறை தொடர்பு கொண்டுள்ளது. அதேவேளை, இந்தச் சம்பவம…

    • 0 replies
    • 518 views
  5. சுதந்திரக் கட்சிக்குள் ஆதிக்கத்தை விரிவுபடுத்துகிறார் மைத்திரிJUL 21, 2015by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அவிசாவளைத் தொகுதி அமைப்பாளராக பிரசன்ன சோலங்காராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் வைத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனக் கடிதத்தை வழங்கினார். பிரசன்ன சோலங்காராச்சி கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேச சபையின் முன்னாள் தலைவராவார். இவர் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தீவிர விசுவாசி என்பதுடன், அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பரப்புரைகளில் ஈடுபட்டவர். அண்மையில் மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும், ஹிருணிகா, ரா…

    • 0 replies
    • 298 views
  6. ஜனநாயகம் குறித்துப் போதிக்க வரவில்லை – ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுJUL 21, 2015by கி.தவசீலன்in செய்திகள் தாம் சிறிலங்கா வந்திருப்பது, தேர்தலைக் கண்காணிக்கவே தவிர, ஜனநாயகம் பற்றி போதிப்பதற்காக அல்ல என்று நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவர் கிறிஸ்டியன் பிரேடா தெரிவித்துள்ளார். இன்று கண்காணிப்பு பணியைத் தொடங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் கிறிஸ்டியன் பிரேடா, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாம் ஜனநாயகம் குறித்தோ, தேர்தல் நடைமுறைகள் குறித்தோ போதனை செய்வதற்காக இங்கு வரவில்லை. நாம் பல்வேறு நிபுணத்துவம் பெற்றவர்களுடன் இணைந்து தேர்தலைக் கண்காணிக்கவே இங்கு வந்துள்ளோம். ஜனநா…

    • 0 replies
    • 347 views
  7. இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படைக்கு உரிமை உள்ளதாம்JUL 21, 2015 | 7:37by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பெருங்கடலில், தனது நலன்களைப் பாதுகாக்கின்ற உரிமையை சீனக் கடற்படை கொண்டிருப்பதாகவும், அதற்கு இந்தியா பரந்த மனதுடன் இடமளிக்க வேண்டும் என்றும் சீன இராணுவத்தின் அதிகாரபூர்வ சிந்தனையாளர் குழாமின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் உள்ள சீன இராணுவத்தின் சிந்தனையாளர் குழாமைச் சேர்ந்த உயர்நிலை அதிகாரியும், இராணுவ விஞ்ஞான அக்கடமியின் புலமையாளருமான சோவூ போ, சீன அரசின் அதிகாரபூர்வ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பெருங்கடலில் தான் சீனாவின் சக்தி தொடர்பான நலன்கள் அதிகளவில் உள்ளதாகவும் அவர் வாதிட்டுள்ளார். கடந்த ஆண்டு சீன நீர்மூழ…

    • 0 replies
    • 203 views
  8. கட்டுநாயக்க தாக்குதலில் கோட்டை விட்டவரே கேத்தாராமவிலும் கோட்டை விட்டார்JUL 21, 2015by கி.தவசீலன்in செய்திகள் கொழும்பில் கேத்தாராம மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த சிறிலங்கா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியில், பார்வையாளர்களுக்கிடையில் மோதல் நடந்த போது, அந்தப் போட்டியின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி மதுபோதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா துடுப்பாட்டச் சபையினால் இந்தப் போட்டியின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக, அஜித் ஜெயசேகர என்ற முன்னாள் சிறிலங்கா விமானப்படை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். இவர் 2001ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய போது, அந்த த…

    • 0 replies
    • 312 views
  9. ராஜீவைத் தாக்கிய விஜித ரோகண முக்கியமான நபர் அல்லவாம்- பிஜேபி கூறுகிறதுJUL 21, 2015 | 6:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ராஜீவ்காந்தியைத் தாக்கிய முன்னாள் கடற்படைச் சிப்பாயான விஜேமுனி விஜித ரோகண டி சில்வா, ஒரு முக்கியமான நபர் அல்ல என்றும், அவர் கட்சியை விட்டு வெளியேறுவதால் தமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் பொது ஜன பெரமுன (பிஜேபி) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொது ஜன பெரமுனவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கருத்து வெளியிடுகையில், ‘திடீரென எமது கட்சியின் செயலகத்துக்கு வந்த விஜேமுனி விஜித ரோகண டி சில்வா கம்பகா மாவட்ட பரப்புரைத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று கேட்டார். நாம் அதற்கு மறுப்புத் தெரிவித்தோம். அதன் பின்னர் அவர் காணாமற்போய் விட்டார்…

    • 0 replies
    • 429 views
  10. புலிமுகச் சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகள் புலிகள் பகலவன் நூற்றுக்கு நூறு பொருத்தமாயிருக்கிறது ஊடகவியலாளர் ந.வித்தியாதரனுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம். ந.வித்தியாதரன் சிலந்தியாகவும் அவரால் பின்னப்பட்ட வலையில் வீழ்ந்தவர்களாக சில முன்னாள் தலைவர்களும் காணப்படுவதாக அர்த்தம் கொள்ளலாம். இந்தக் குழுவினர் பரப்புரைக்காக பெரிதாக செலவு செய்யத் தேவையில்லை. ந.வித்தியாதரனை கூட்டத்தின் முன்னால் நிற்கவைத்து புன்னகைக்கச் செய்தால் போதும் வெற்றி நிச்சயம். 'என் எழுத்தாயுதம்' எனும் அவரது நூலில் குறிப்பிடுவதைப் பாருங்கள். தலைவர் பிரபாகரன் தொடங்கி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச வரை, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க தொட்டு இராணுவத் தளபதிகள் ஜெனரல் பலகல்ல, ஜெனரல் சாந்த கொட்டெகொ…

  11. இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழ புதிய அரசியல் அமைப்பு ஒன்று தேவை என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீடிக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நாட்டில் தற்போது இருக்கும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் காண முடியாது என்றும், புதிய அரசியல் சாசனம் ஒன்றின் மூலமே அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழ வழி ஏற்படும் என்றும் அவர் பிபிசி சிங்கள சேவையான சந்தேஷ்யவுடன் ஃபேஸ் புக் மூலம் நடத்திய உரையாடலில் தெரிவித்துள்ளார். "இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, இந்நாட்டில் வாழும் சிங்கள, முஸ்லிம், தமிழ் மற்றும் பரங்கியர் அனைவரும் இலங்கையர்களாக வாழக் கூடிய, இலங்கையர்கள் எனும் அடையாளத்தை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத…

    • 0 replies
    • 364 views
  12. ஏற்கனவே அறிவித்தற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் சுமார் 324 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 50ஆயிரம் ரூபாய் வழங்கவுள்ளதாக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார், இதன் அடிப்படையில் முதல் கட்டமாக மன்னார் மாவட்டடத்தில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களை நேற்றுத் திங்கட்கிழமை மாலை 2 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது. அவர்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்காக எதிர்வரும் வாரம் கிராம அபிவிருத்தி திணைக்கத்தின் ஊடாக ஒவ்வொரு…

    • 0 replies
    • 253 views
  13. கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இணைத்துக் கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்பட்ட பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் மேடையில் கருணாவை இணைத்துக் கொள்வதற்குத் திட்டமிருப்பதாகவும் குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்த கருணாவிற்கு இம்முறை மகிந்த ராஜபக்ச தரப்பில் வேட்புமனுவோ, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியோ வழங்கப்படவில்லை. இதனால் ஐக்கிய…

    • 0 replies
    • 367 views
  14. தமிழ்த்தேசத்தை அழிப்பவனுக்கும் அவ்வழிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்க முயல்பவனுக்கும் இடையிலான போரட்டமே இன விடுதலைப் போராட்டம். எனவே தேசத்தை அங்கீகரிப்பதுதான் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வடமராட்சி குடத்தனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்இ இதுவரை கால இன விடுதலைப் போராட்டம் தமிழ்தேசத்தை அழிப்பவனுக்கும் அவ்ழிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்க முயல்பவர்களுக்கும் இடையிலான போரட்டமே. எனவே தேசத்தை அங…

    • 8 replies
    • 636 views
  15. யானைக்கு வாக்களித்தால் எல்லாம் சரியாகிவிடும் என தவறுதலாக முடிவு செய்யாது, எமக்கு அளிக்கும் விருப்பு வாக்கே எம் இனத்தின் பிரதிநிதித்துவ வெற்றியை உறுதிப்படுத்தும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொட்டாஞ்சேனை புளுமெண்டால் தொடர்மாடி குடியிருப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு விருப்பு வாக்குகளை வழங்கும் முறைதொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் ஒவ்வொரு கட்சி சின்னத்திலும் இருபத்தி இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். இதில் யானை சின்னத்தில் இரண்டு தமிழ் …

    • 0 replies
    • 347 views
  16. இது எங்கள் ஊர்களில் சொல்லப்படும் கதை. ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடலுக்குச் சென்று ஆமையைப் பிடித்துவந்து கரையில் விட்டுவிட்டு, மீளவும் ஆமை பிடிக்கச் செல்வார்கள். பிடிபட்ட ஆமைகள் தமது தலை, கால்களை ஓட்டினுள் அடக்கிக் கொள்ளும். இதைப் பார்த்தவர்கள் இனிமேல் ஆமை ஓடாது என்று நினைப்பர். எனினும் சிறிது நேரத்தின் பின் கரையில் விடுபட்ட ஆமைகள் ஆளரவம் இல்லாததும் கடலுக்குள் ஓடித் தப்பிவிடும். இப்படியே ஆமை பிடிப்பதும் அதை கரையில் விடுவதும் பின்னர் அந்த ஆமைகள் தப்பி ஓடுவதுமாக நிலைமை இருந்தது. இதைப் பார்த்த கடவுள் கவலை கொண்டார். ஒரு நாள் அசரீதியாக கடவுள் பேசினார். ஆமையைப் பிடிப்பவர் மல்லாத்துவார். அதை நாம் சொன்னால் பாவம். இது கடவுள் கூறிய வாக்கு. அந்த வாக்கை கேள்வியுற்றவர்கள் தாம் ப…

  17. மட்டக்களப்பு மாவட்டத்தில் தெங்குச் செய்கையை பரவலாக ஊக்குவிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மாவட்ட தென்னை பயிர்ச்; செய்கைச்சபையின் பிராந்திய முகாமையாளர் பிறேமினி ரவிராஜ் தெரிவித்தார். தென்னை பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் 2015ஆம் ஆண்டை இலக்கு வைத்த 'கப்றுக' செயற்றிட்ட பயிற்சிக் கருத்தரங்கு, பாசிக்குடாவிலுள்ள கிழக்கு தெங்கு அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதைக் கூறினார். தென்னை அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், தென்னை பயிர்ச் செய்கைச்சபையின் ஏனைய உத்தியோகஸ்தர்கள் உட்பட சுமார் 35 பேர் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர். தென்னங்காணிகளின் அபிவிருத்திக்காக மானிய உதவிகளை தெங்குச் செய்கையாளர்களுக்கு வருடம் தோ…

    • 0 replies
    • 226 views
  18. சர்வதேச விசாரணையே தமிழருக்கு நீதியைத் தரும்! - என்கிறார் மாவை [Saturday 2015-07-18 09:00] சர்வதேச விசாரணை மூலமே தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். எமக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும். அதையொட்டியே போர்க்குற்ற விசாரணை தொடரும் அப்படி தொடரும் என்பதால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார். ஐ.நா.மனித உரிமை பேரவையிடம் தொடர்ந்தும் சர்வதேச விசாரணை வேண்டும் என்றே கோருகிறோம். …

  19. பிரித்தானியாவில் பரபரப்பு... இலங்கையரிகளின் உறுப்புக்கள் விற்பனை அம்பலம்..... (படம் இணைப்பு) மனித உடலில் சிறுநீரகம் மற்றும் உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல் என பிரித்தானிய பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சட்ட வல்லுநர் சார்லாட் எல்வேஸ் அத தெரணவிடம் தெரிவித்தார். இலங்கையில் நபர்களிடம் இருந்து உடல் உறுப்புக்களை விலைக்கு கொள்வனவு செய்யும் மர்ம திட்டமொன்றில் பிரித்தானிய பிரஜைகள் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. முகப்புத்தகத்தை (facebook) பயன்படுத்தி இந்த திட்டம் மிகவும் சூட்சமமாக முன்னெடுக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாற்று சுற்றுலா என்ற திட்டத்தின் கீழ் உடல் உறுப்புக்கள் 75,000 டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது சர்வதேச ம…

    • 0 replies
    • 1.5k views
  20. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மைத்திரி [ திங்கட்கிழமை, 20 யூலை 2015, 02:58.55 PM GMT ] மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் விஜயமொன்றை இன்று மேற்கொண்டிருந்தார். வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதனை ஆராயும் நோக்கில் ஜனாதிபதி அங்கு விஜயம் செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளமையால், சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் தெரிவித்தனர். இது தொடர…

    • 2 replies
    • 937 views
  21. இலங்கையர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் உறுப்பினராகவிருந்ததும் விமானத் தாக்குதலில் உயிரிழந்ததையும் அறியாது இவ் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டுள்ளது. இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்குச் பெரும் அச்சுறுத்தலாகும் எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குருநாகலையில் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோளும் விடுத்தார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயற்பட இலங்கையின் கலேவலையைச் சேர்ந்த அபு சுரையாஹ் சைலானி என்பவர் சி…

  22. விடுதலைப் புலிகளை அனுமதிக்கின்றேன் - ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் அனுமதிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.வவுனியாவில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களது கொள்கைகளையே தாம் எதிர்த்ததாகவும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வேட்பு மனு வழங்க மறுத்துள்ளதாகவும், தமது கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்பாவி தமிழ் மக்களின் ஒரே எதிரியாக மாறியுள்ளத…

  23. ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் கடந்த வருடத்திலிருந்து யானைகளின் தொல்லை அதிகரித்துவருவதாகவும் இதனால், மலைகளின் உச்சிகளில் கூடாரங்கள் மற்றும் கொட்டில்களை அமைத்து இரவுவேளைகளில் தாங்கள் அங்கு தங்குவதாகவும்; அக்கிராமவாசிகள் தெரிவித்தனர். 1975ஆம் ஆண்டு சாந்;திபுரம் கிராமம் உருவாக்கப்பட்டதிலிருந்து 72 குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. இந்நிலையில், யானைகளின் தொல்லைக்கு பயந்து பல குடும்பங்கள் இக்கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளன. தற்போது தங்களின் ஜீவனோபாயத் தொழில் நிமித்தம் 24 குடும்பங்கள் மாத்திரமே இக்கிராமத்தில் வாழ்ந்துவருகின்றன. இக்கிராமத்தினுள் நுழையும் யானைகள், உணவுப்பொருட்கள் மற்றும் உடைமைகள், வீடுகளை சேதப்படுத்திவருகின்றன. எனவே, இந்…

    • 0 replies
    • 284 views
  24. சிறிலங்காவுடனான உறவுகளில் நல்லிணக்கம் மீது கூடுதல் கவனம் – இந்தியா கூறுகிறதுJUL 21, 2015 | 2:34by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுடனான உறவுகளில் சிறிலங்காவின் தேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளிலும் நடந்த தேர்தல்களுக்குப் பின்னர், சிறிலங்காவுடனான இந்தியாவின் உறவுகளில் தேசிய மீள்கட்டுமானம் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றின் மீது கவனம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் http://www.puthinappalakai.net/2015/07/21/news/8003

    • 0 replies
    • 346 views
  25. ராஜபக்சவினரை கடுமையாக சாடும் கருணா [ திங்கட்கிழமை, 20 யூலை 2015, 01:43.21 PM GMT ] வடக்கு, கிழக்கின் நிலைமைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான பரப்புரையும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே இருந்தது. இப்போது அவர் எப்படி மாறமுடியும்? அவரால் முடியா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.