Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் மிகவும் அரிய வகை இனத்தைச் சேர்ந்த பறவையாக கருதப்படும் கரு நீலதாழைக்கோழி எனும் பறவையின் முட்டைகளை சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 30,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து புத்தளம் மேலதிக மாவட்ட நீதவான் இன்று திங்கட்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார். இந்த பறவையானது, மிகவும் பாதுகாப்பான முறையில் வளர்க்கப்படுகின்ற உயிரினமாகும். இதன், சுமார் 28 முட்டைகளை சேகரித்து வைத்திருந்த நபரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்திருந்தனர். வனாதவில, மொரபாதாக பகுதியைச் சேர்ந்த அசித குமார (வயது 21) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர், வில்பத்து போன்ற சில காடுகளில் வ…

  2. ஓடும் பஸ்ஸினுள் வைத்து தனது ஆணுறுப்பை பாடசாலை மாணவிக்கு காட்டிய நபரை பஸ்ஸினுள் இருந்தவர்கள் நையப்புடைத்த சம்பவம் குளியாபிட்டி பிரதான பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தாயுடன் பயணம் ஒன்று செல்வதற்காக பஸ்ஸில் ஏறி ஆசனத்தில் அமர்ந்திருந்த போது மாணவியின் ஆசனத்திற்கருகில் அமர்ந்திருந்த சந்தேக நபர் தனது காற்சட்டையின் சிப்பை நீக்கி தனது அந்தரங்கத்தை மாணவிக்குக் காட்டியுள்ளார். இதன் பின்னர் இது பற்றி குறித்த மாணவி தனது தாய்க்குக் கூறியதையடுத்து தாய் தனது கையிலிருந்த குடையினால் அந்நபரைத் தாக்கியுள்ளார். பின்னர் பஸ்ஸிலிருந்த ஏனைய பயணிகள் அந்நபரைப் பிடித்து தாக்கி குளியாபிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட…

    • 0 replies
    • 846 views
  3. யாழ்.புலோலி தெற்குப் பகுதியில் பெண்ணொருவரின் கையைப் பிடித்து இழுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தையல் கடை உரிமையாளரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, திங்கட்கிழமை (15) உத்தரவிட்டார். பிறந்த தினத்துக்கு உடுப்புத் தைப்பதற்காக, கடந்த 13ஆம் திகதி தையல் கடைக்கு சென்ற பெண்ணை, தையல் கடைக்காரர் கையைப் பிடித்து இழுத்து, தவறாக நடக்க முற்பட்டுள்ளார். பிடியிலிருந்து நழுவிய பெண், இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். சந்தேகநபருக்கு பிணை வழங்காமல் விளக்கமறியலி…

    • 0 replies
    • 445 views
  4. 600 பொலிஸாருக்கு நடந்த கதி தொடர்பில் விசாரணை ஆரம்பம்; பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பாணை காணாமற்போனவர்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, அம்பாறையில் 600 பொலிஸார் காணாமற் போனமை குறித்த தனது விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது. இதற்காக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனை எதிர் வரும் 22ஆம் திகதி ஆணைக் குழுவுக்கு வருகை தருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டமையை ஆணைக்குழு வட்டாரங்கள் "உதயன்' பத்திரிகையிடம் உறுதிப்படுத்தின. இறுதிப் போரின் போது பல ஆயிரக் கணக்கானவர்கள் காணாமற் போயுள்ளனர். அரச புள்ளிவிவரங்களின் படி சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று…

  5. யாழ்ப்பாணம் முழுவதும் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட மணல் அகல்வு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஊழல் ஒழிப்புக் குழு செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மகேஸ்வரி நிதியத்தினால் இந்த சட்டவிரோத மணல் அகல்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி வகிக்கின்றார். பருத்தித்துறை பிரதேச சபைத் தலைவர் பி.சஞ்ஜீவன் இன்று காலை இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தார். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் சமூகமளித்திருந்தார். சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட மணல் அகல்வுகள் குறித்தும், மணலுக்காக பொதுமக்களிடமிருந்து அளவுக்கதிகமாக பணம் அ…

    • 3 replies
    • 1.2k views
  6. எதிரி சார்பில் சட்டத்தரணி ஆஜராவதை எவராலும் தடுக்க முடியாது; ஊர்காவற்றுறை நீதவான் எதிரி சார்பில் ஆஜராகும் எந்தவொரு சட்டத்தரணியையும் தடுப்பதற்கு எவருக்கும் முடியாது . அவ்வாறு தடுத்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் அதற்கான நடவடிக்கையினை எடுப்பேன் என ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான மரண விசாரணை நேற்று மன்றில் இடம்பெற்றது. இதன்போது வித்தியாவின் மரணம் தொடர்பில் 7பேர் சாட்சியமளித்தனர்.எனினும் கடந்த வழக்குத் தவணையின் போதே சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகளை நியமிக்குமாறு நீதவான் தெரிவித்திருந்தார். எனினும் நேற்றைய விசாரணையின் போதும் சட்டத்தரணிகள் எவரும் குற்றவாளிகள் சார்பில் ச…

  7. மாகாணங்களின் தேவைகள், அபிலாசைகளை கொண்டே மத்தியஅரசு கொள்கைகளை வகுக்க வேண்டும்! - விக்னேஸ்வரன் [Tuesday 2015-06-16 07:00] மாகாண மக்களினுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் மனதிற்கு எடுத்து மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்க வேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதமர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றும் போதே இவ்வாற…

  8. மாகாணசபை முறையை மீளாய்வு செய்யும் காலம் வந்து விட்டது! - ஜனாதிபதி [Tuesday 2015-06-16 07:00] கடந்த 28 வருட காலமாக நடைமுறையிலுள்ள மாகாண சபை முறைமையின் குணாம்சங்களை மீளாய்வு செய்வதற்கான காலம் வந்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் எப்போதும் தமக்குள்ள அதிகார வரையறைகளையே சிந்திக் கின்றன. இதிலிருந்து மாகாண சபைகள் விடுபட வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் சிறப்பான இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு அபிவிருத்திகளை துரிதப்படுத்துவது தொடர்பாக இடம்பெற்ற தெளிவுபடுத்தும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்று…

  9. தமிழீழ விடுதலைப் புலிச் சாயம் வெளிப்படும் முன்னதாக தேர்தலை நடாத்த ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானம் தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு விடுதலைப் புலி ஆதரவாளர்களைக் கொண்டு மீண்டும் புலிகளுக்கு உயிரூட்ட முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சாயம் வெளிப்படுவதற்கு முன்னதாகவே பொதுத் தேர்தலை நடாத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி விரும்புவத…

    • 0 replies
    • 314 views
  10. மத்­திய அர­சுக்கும் மாகாண அர­சுக்கும் இடையில் இருக்கும் உற­வு­முறை சந்­தே­கத்­திற்கு இட­மின்றி உண­ரப்­படல் வேண்டும். அத்­துடன் மாகாண மக்­க­ளி­னு­டைய தேவை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் மன­திற்கு எடுத்து மத்­திய அர­சாங்கம் கொள்­கை­களை வகுக்­க­வேண்­டு­மே­யொ­ழிய தான்­தோன்­றித்­த­ன­மாக மத்­திய அர­சாங்­கத்­தி­னு­டைய கொள்­கை­களை நாங்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று எதிர்­பார்ப்­பது பிழை­யா­னது என வடக்­கு ­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். நேற்று கொழும்பில் ஜனா­தி­பதி தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் ஒன்­பது மாகா­ணங்­க­ளிலும் உள்ள ஆளு­நர்கள், முத­ல­மைச்­சர்கள், அமைச்­சர்கள் மற்றும் பிர­தமர் கலந்து கொண்­டனர். இக்­கூட்­டத்தில் வட­மா­காண முத­ல­மைச்சர்…

    • 0 replies
    • 501 views
  11. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இவ்வருட இறுதியில் இலங்கைக்கு வருகை தருவார் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். - http://www.tamilmirror.lk/148437#sthash.Akj5JjAk.dpuf

    • 0 replies
    • 264 views
  12. ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள், மகிந்தவிற்கு நெருக்கமானவர்கள் புரிந்த மோசடி, குற்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் சிலவற்றை சுமனதாஸ அபேகுணவர்தன வெளியிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாக பதவி வகித்தபோது மகிந்த ராஜபக்சவின் மிகநெருக்கமான சோதிடராக சுமனதாஸ அபேகுணவர்தன பணியாற்றியிருந்தார். நிதி குற்றவியல் பொலிஸ் பிரிவில் சோதிடர் சுமனதாஸ நேற்று (15) சுமார் எட்டு மணி நேரம் தமது வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளார். ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்களுக்கு காணிகள், வீடுகள், கட்டிடங்கள் வாங்கும்போதும், நிர்மாணிக்கும் போது சோதிட கணிப்புக்களை சுமனதாஸவே மேற்கொண்டுள்ளார். இந்த காணிகள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ள இடங்களையும் அவர் இதன்போது வெளியிட்டுள்ளதாக தெர…

  13. தென்னிலங்கை மக்களை திருப்திப்படுத்தாத எந்தவொரு விடயத்தை செய்தாலும் தங்களது வாக்குப் பலத்தை இழந்துவிடுவார்கள் என்ற எண்ணம் புதிய அரசாங்கத்தினரிடமும் இருப்பதாகத் தெரிவிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆசியர் சங்கத் தலைவருமான அமிர்தலிங்கம் இராசகுமாரன், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை இந்த அரசாங்கமும் முன்வைக்காது என்றே தோன்றுகிறது என்றும் கூறுகிறார். நேர்க்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில் - “போர் முடிவடைந்த பிறகு தங்களது வாழ்வில் ஓரளவாவது முன்னேற்றம் ஏற்படும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அது நேர்மாறாகத்தான் நடந்தது. போரில் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்‌ஷ தான் ஒரு பேரரசர் என்ற நிலை…

  14. சம்பூர் காணி விடுவிப்பு தொடர்பான இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஜூலை மாதம் 10ஆம் திகதிவரை உயர்நீதிமன்றத்தால் நேற்று திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணியயான்றை தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலைக்காக வழங்குவதற்கு கடந்த அரசால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கே உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. தொழிற்சாலையை அமைக்கவிருந்த ஸ்ரீலங்கா கேட்வே இன்டஸ்ட்ரீஸ் தனியார் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்தபோதே நீதிமன்றம் கடந்த மாதம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவி…

    • 2 replies
    • 392 views
  15. த.தே.கூ சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட பலர் விண்ணப்பித்துள்ளனர் - அரியநேத்திரன் எம்.பி எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வேட்பாளர் தேரிவு பற்றி கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். கட்சிசெயலாளருக்கு மட்டுமன்றி எமக்கும் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன எனினும் தெரிவு இன்னும் நடைபெறவில்லை. அதனை தெரிவுக் குழுவே தீர்மானிக்கும். இக்குழுவில் நாங்கள் இடம் …

    • 1 reply
    • 534 views
  16. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈட்டுக்காக விண்ணப்பிக்கலாம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நஷ்டஈடு பெறுவதற்காக விண்ணப்பங்களை புனர்வாழ்வு அதிகார சபைக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள நிறைவேற்று சபை தயாராகவுள்ளதாகவும் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.புவனேந்திரன் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் புனர்வாழ்வு அதிகார சபையினால் நடத்தப்பட்ட நடமாடும் சேவையில் கலந்து கொண்ட பணிப்பாளரிடம் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் சம்மந்தமாக வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் தேக…

  17. 14 ஜூன் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:36 ஜிஎம்டி இலங்கையில் ஆட்சிமாற்றம் நடந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் இறங்குமுகத்தை நோக்கிச் செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது பற்றி இலங்கையின் பொருளாதாரத்துறை பகுப்பாய்வாளர் முத்துகிருஷ்ணன் சர்வானந்தன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் கேட்கலாம். http://www.bbc.com/tamil/sri_lanka/2015/06/150614_maithri_economy

    • 0 replies
    • 429 views
  18. இலங்கை 2.2 பில்லியன் (2200 மில்லியன்) டொலர் பெறுமதி ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது: ஆய்வு இலங்கை, கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் இருந்து 2.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டொக்கொம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ரஸ்யாவில் இருந்தே அதிக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆசிய வலயத்தில் இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகம் செய்துள்ளன. அமெரிக்காவை பொறுத்தவரையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு ஆயுதம் வழங்கும் பிரதான விநியோகஸ்தராக செயற்பட்டுள்ளது. இதேவேளை இஸ்ரேல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஆயுத விநியோகஸ்தராக செயற்பட்டுள்ளது. இந்தநிலையில் இ…

  19. எனக்கு விடுதலைப் புலிகளின் தலைவருடன் கதைக்க நீண்ட நாள் ஆசை, சண்டை உக்கிரமடைந்தது. இறுக்கமான நேரங்களில் அரசியல் துறைப் பெறுப்பாளரிடம் புலிகளின் தலைவரை கேட்டேன். அவரின் பதில் என்ன..? தயங்குகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன். சரணடைதலில் நான் நேரடியாக பங்கு வகித்தேன். அப்படியாயின் எங்கு தவறு இடம்பெற்றது..? விடுதலைப் புலிகள் மீது சூடு நடத்தியது யார்..? கடைசியில் வன்னிச் சமரில் இடம் பெற்ற முழுவதையும் ஆதாரத்துடன் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் சந்திரநேரு சந்திரகாந்த http://www.tamilwin.com/show-RUmtyGSZSUfp4H.html

    • 0 replies
    • 1.2k views
  20. நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த கூட்டமைப்பு ஆதரவு – சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு! நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எமக்குத் தெரியாது. தற்போதைய நிலையில் புதிய நாடாளுமன்றம் அமைவதையே நாம் விரும்புகின்றோம். நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக திட்டவட்டமான தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனவே தேர்தல் வருவதை நாமும் விரும்புகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், 'வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை கைய…

    • 2 replies
    • 625 views
  21. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை, வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடருக்கு முன்னர் உருவாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் இன்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது அமர்வில், நிகழ்த்திய ஆரம்ப உரையின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில், ‘சிறிலங்காவின் புதிய அரசாங்கம், அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீளப் புதுப்பிக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். பொறுப்புக்கூறல் ம…

  22. வடமாகாணத்தினில் அதிகாரிகள் மட்டத்தினில் தமது ஆதரவாளர்களினை கொண்டு நிரப்ப கூட்டமைப்பின் பிரமுகர்கள் சிலர் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதினில் வடமாகாண பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,அமைச்சர்களான ஜங்கரநேசன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தினில் புறுபுறுப்புக்கள் எழுந்துள்ளன. தன் வசமுள்ள விவசாய அமைச்சிற்கு வரிசையினில் பின்னிற்கு நிற்கும் பற்றிக் ரஞ்சன் என்பவரினை ஜங்கரநேசன் சிபார்சு செய்து நியமித்துள்ளார்.இவர் முன்னைய காலப்பகுதியினில் யப்பான் அரசு வழங்கிய மானிய உதவியினில் மோசடிகள் செய்திருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. அதே போன்று தற்போதும் கடமையிலுள்ள அதிகாரிகள் சிலரை பந்தாடி தமக்கு தேவையானவர்களை நியமிக்க முயற்சி…

    • 2 replies
    • 484 views
  23. நாங்கள் சிறிது சிறிதாகச் சேர்த்த பொருளாதாரத்தைச் சிங்களம் வறுக நினைக்கிறது. புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மையம் கொண்டு சிங்கள தேசம் எடுத்திருக்கம் அடுத்த நகர்வானது தமிழ் மக்களை மேலும் இன அழிப்பை கச்சிதமாக நடத்தி முடிக்க உதவும் என பிரித்தானியாவைத தளமாக் கொண்டு இயங்கும் மனித நேயச் செயற்பாட்டாளர் கோபி சிவந்தன் அவர்கள் கூறியுள்ளார். அவர் பதிவு இணையத்திற்காக வழங்கிய கருத்துப் பகிர்வை இங்கே முழுமையாகப் பார்க்கலாம். http://www.pathivu.com/news/40861/57//d,article_full.aspx

    • 3 replies
    • 491 views
  24. புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் 9 பேரும் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையினில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நடந்து கொண்டிருந்த வேளை இன்றைய தினமும் வித்தியாவின் தாய் மட்டுமல்லாது அவளது சகோதரனும் மயங்கி விழுந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேக நபர்கள் சம்பவம் தொடர்பாக விபரிக்கையினில் அமர்வை பார்த்தவாறிருந்த வித்தியாவின் சகோதரன் நெஞ்சை பிடித்தவாறு மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக ஊர்காவற்துறை அரசினர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். http://www.pathivu.com/news/40867/57//d,article_full.aspx

    • 0 replies
    • 838 views
  25. புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் 13ம் திகதி ஜுலை மாதம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதுவரையில் இந்த கொலை சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் பயங்காரவாத தடுப்பு பிரிவிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன் போது அங்கு பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இற்கிடையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது புங்குடுதீவு மாணவியின் தாயாரும், சகோதரனும் மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். http://www.pathivu.com/news/40866/57//d,article_full.aspx

    • 0 replies
    • 731 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.