ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
மஹிந்தவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 எண்ணத் தெரியவில்லை. சபாநாயகருக்கு வழங்கிய ஆவணத்தில் ஆறு கையொப்பங்கள் குறைவாகக் காணப்படுகின்றது. ஆவணத்தில் 82ஆம் இலக்கத்திற்கு பின்னர் 88 என்னும் இலக்கம் இட்டதன் காரணமாக இவ்வாறு ஒப்பங்கள் குறைவடைந்துள்ளன. 88ஆம் இலக்கத்தை இட்டு கையொப்பமிட்டவர் நாடாளுமன்ற உறுப்பினர் நிர்மல கொதலாவல ஆவார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதியை அழைத்தமை சட்டவிரோதமானது எனக் கோரி இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவணமொன்றில் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு வழங்கியிருந்தனர். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸை நீக்குமாறும் கோரியிருந்தனர். http://www.tamil.srilankamirror.com/news/item/23…
-
- 0 replies
- 393 views
-
-
கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஜந்த லியனகே சற்று முன்னர் கறுவாத்தோட்டைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதி மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.tamil.srilankamirror.com/news/item/2355-2015-04-24-11-24-39
-
- 0 replies
- 517 views
-
-
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தமிழ் அரசியல் தலைவர்களே!! என்றும் தமிழ்த்தேசியப்பாதையிலே நீங்கள் பயணிக்கவேண்டும் என்றும் எதற்காக தமிழர்கள் ஈடுசெய்துகொடுக்கமுடியாத இழப்புக்களையும் தியாகங்களையும் செய்தார்களோ! அதன் நோக்கம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதற்காக எந்த ஒரு அரசியல் கட்சியினையும் சாராத ஒரு தமிழ் மகனாகிய நான் இந்த கடிதத்தினை தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரதும் கவனத்திற்காக வரைகின்றேன். இதன் நோக்கம் யாரையும் விமர்சனம் செய்யவேண்டும் என்பதோ அல்லது என்னை அறிவாளி என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்பதோ அல்ல. மேலும் எதற்காக இவளவு இழப்புக்களை சந்தித்தோமோ அதற்கு நியாயமான ஒரு தீர்வு வேண்டும். உடலிலும் மனதிலும் வலிகளை சுமந்து நடமாடிக்கொண்டிரு…
-
- 2 replies
- 675 views
-
-
முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் சந்தியிலிருந்து நூறு மீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து எரியூட்டப்பட்டதாகத் சந்தேகிக்கப்படும் சடலமொன்று நேற்று முன்தினம் புதன்கிழமை மீட்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆணா அல்லது பெண்ணா என அடையாளம் தெரியாத வகையில் தீயினால் கருகிப்போயுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இச்சடலம் முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் காட்டுப்பகுதியில் தூர்ந்து போன பதுங்குகுழியிலிருந்து கைப…
-
- 0 replies
- 824 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தை தேவையில்லையென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் விசேட பேச்சுவார்த்தை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் மகிந்த ராஜபக்ஷவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார். எமக்கிடையில் விசேட பேச்சுவார்த்தை தேவையில்லை. ஏனெனில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ.ல.சு.க.வின் தலைவர். நான் அக்கட்சியின் போஷகர். எமக்கிடையில் பாரிய இடைவெளி கிடையாது. அதனால் எமக்குள் விசேட பேச்சுவார்த்தை எதுவும் தேவையில்லை என்று மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலான சந்த…
-
- 0 replies
- 541 views
-
-
வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன்! - ஜனாதிபதி மைத்திரி. [Thursday 2015-04-23 19:00] ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆட்சிக்கு வந்த போது நாட்டு மக்களுக்கு சில உறுதி மொழிகளை வழங்கினேன். அந்த உறுதி மொழிகளிலிருந்து ஒரு போதும் விலகப் போவது இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் விஹாராமகாதேவி பூங்காவில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 19 ஆவது திருத்தத்திற்கு பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும் கைதூக்கி ஆதரவு வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நான் ஆட்சிக்கு வந்ததன் பின்பு ஊடக…
-
- 3 replies
- 568 views
-
-
இப்போது இடம்பெறும் ஊழல் விசாரணை என்பது மகிந்தாவின் சம்ராஜ்யத்திற்கான அரசியல் ஊழித்தீயாக மாறிவிடும் அபாயம் நிறையவே உள்ளது. இது அவருக்கு மேற்குலம் விடுக்கும் இரண்டாவது அபாய அறிவிப்பாகும். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அடுத்த வாரம் இலங்கை செல்லும் போது இலங்கை அரசும் எதிர்க்கட்சிகளும் காத்திரமான செய்தியொன்றைப் பெறப்போகின்றன என இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்கள் தெரிவித்தார். - See more at: http://www.canadamirror.com/canada/41577.html#sthash.sjHzNVHf.dpuf
-
- 2 replies
- 625 views
-
-
கோத்தாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கையில் சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி APR 23, 2015by கார்வண்ணன்in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், ஆதரவாளர்களும், சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட சிறிலங்காவின் தேசியக்கொடியை வைத்திருந்தது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோரின் கைகளிலும், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கைகளிலும், …
-
- 4 replies
- 670 views
-
-
1977ஆம் ஆண்டில் இலங்கைத் தீவில் இரு பேரலைகள் எழுந்தன. வடக்கு கிழக்கில் தனி நாட்டுக்கோரிக்கை என்ற பேரலை எழுந்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அவ்வாறே தென்னிலங்கையில் ஜே.ஆர். அலையெழுந்து தென்னிலங்கையில் மாபெரும் தேர்தல் வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்றுக்கொடுத்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டுக்கு அந்தப் பெரும்பான்மையை அடைய வழிவகுத்தது. தானுண்டு தன் தொழிலுண்டு என வழக்கறிஞர் தொழில் பார்த்து வந்த இரா.சம்பந்தனை காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்கள் சட்டத்தரணிகள் கட்சி என்ற மரபின் அடிப்படையில் திருமலை தொகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளராக நிறுத்தினார். தனி நாட்டுக் கோரிக்கை அலை சம்பந்தனை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக்கியத…
-
- 0 replies
- 766 views
-
-
மெதமுலன ராஜபக்ஸக்களும் பரிவாரங்களும் சிறுபான்மை இனங்களை முற்றாக நிராகரித்தனர்: 23 ஏப்ரல் 2015 "சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட வாளேந்திய சிங்கம் காணப்படும் கொடிகளை கைகளில் ஏந்தினார்கள்" கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்டு தனியே வாளேந்திய சிங்கம் காணப்படும் கொடிகளை கைகளில் ஏந்தி இருந்தார்கள் இலங்கை சுதந்திரம் அடைந்ததும் இலங்கைக்கு நாட்டுக்கு என தேசிய கொடி தேவை ஏற்பட்டது. அதுவரை பிரித்தானிய ஒன்றியக் கொடியே இலங்கை கொடியாக இருந்து வந்தது. இலங்கை சுதந்திரமடைந்த வேளை பிரதமராக இருந்த டி. எஸ். சேனாநாயக்க இலங்கையின் …
-
- 3 replies
- 628 views
-
-
"ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான தேசிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஆக்கபூர்வமான சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன'' - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் தேசிய அரசு அமையப்பெற்று நூறு நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு …
-
- 7 replies
- 2.4k views
-
-
நாடாளுமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி கலைப்பு? நாடாளுமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி அல்லது மே முதல் வாரத்தில் கலைக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் இடம்பெற்ற தேசிய நிறைவேற்றுச் சபையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜூன் மாத இறுதி வாரத்தில் பொதுத் தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார். அதேபோன்று நடப்பு விகிதாசார முறையிலேயே பொதுத் தேர்தலையும் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த காலங்களைப் போல இத்தேர்தலில் விருப்பு வாக்கு முறைமை இருக்காது என்றும் மனோ கணேசன் கூறினார். ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் முடிவுகள் கணக்கிடப்படும் முறையின் அடிப்படையிலே க…
-
- 1 reply
- 485 views
-
-
அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வது சாதாரணம்: மகிந்த அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வது சாதராண விடயம் நான் மூன்று மாத சிறைவாசம் அனுபவித்தவன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வதை பாரதூரமான விடயமாக கருதக்கூடாதுஇ அது அவர்களை பொறுத்தவரை சாதராணமான அனுபவம் நானும் மூன்று மாத சிறைத்தண்டனையை அனுபவித்து உள்ளேன். பௌத்த மதத்தை சேர்ந்தவன் என்ற வகையில் நான் வேறு எந்த மதத்திற்கு எதிராகவும் பாகுபாட்டை காட்டவில்லை.வெறுப்புணர்வு அரசியலிலும் நான் ஈடுபடவில்லை. ஆனால் நல்லாட்சி அரசு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறாமலே பசில் ராஜபக்சவை சிறைச்சாலைக்கு அனுப்ப முயல்கின்றது. கடந்த 100 நாட்களில் எங்களால் குற…
-
- 1 reply
- 591 views
-
-
புலம்பெயர்தமிழ்உறவுகளும்,மத்தியகிழக்கு நாடுகளில் தொழில் புரியும் முன்னால் போராளிகளும் இலங்கைக்கு தற்போதைக்கு வரவேண்டாம்: - பா.அரியநேத்திரன் . [Thursday 2015-04-23 19:00] இந்தநாட்டில்இன்னுமொருபொதுத்தேர்தல் வந்து அரசியலில் ஸ்திரமான தன்மை வரும் வரைக்கும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் மத்தியகிழக்கு நாடுகளில் தொழில்நிமிர்த்தம் சென்ற முன்னாலபோராளிகளும இலங்கை வருவதனை தவிர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். நேற்றும்(22/04/2015)கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ரகுபதி கனகசூரியம் கைது செய்யப்பட்டமை பற்றி கருத்துக் கூறும் போதே இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பாகஅவர்கருத்துரைக்க…
-
- 0 replies
- 516 views
-
-
அமைச்சரவை அங்கீகரித்த புதிய தேர்தல் முறை – சுமந்திரன் உள்ளிட்ட மூவர் குழு நியமனம் APR 23, 2015 | 13:25by கி.தவசீலன்in செய்திகள் புதிய தேர்தல் பொறிமுறை தொடர்பான வரைவைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் தகவல் வெளியிட்ட அவர், “அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 238 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில், தேர்தல் முறைச் சீரமைப்பை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போதுள்ள 225 உறுப்பினர்களுக்கு மேலதிகமாக 13 உறு…
-
- 0 replies
- 349 views
-
-
துறைமுக நகரத் திட்டத்தில் ஊழல் இடம்பெறவில்லை – சிறிலங்கா அரசு APR 23, 2015 | 10:15by கி.தவசீலன்in செய்திகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் எந்த ஊழலும் இடம்பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, சிறிலங்காவின் பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் எந்த ஊழலும் இடம்பெறவில்லை என்றும், பொருத்தமான நடைமுறைகள் கையாளப்பட்டுள்ளனவா என்பதே, கரிசனைக்குரிய விவகாரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சீனாவின் முதலீட்டிலான திட்டம் துவங்கப்பட முன்னதாக, முன்னைய அரசாங்கத்தினால் ச…
-
- 0 replies
- 295 views
-
-
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் பாரிய நகைச்சுவையுடன் நிறைவடைந்துள்ளது. எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டஅபிவிருத்தி திட்டங்களை திறந்து வைப்பதையே 100 நாள் திட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. எம்மை பொறுத்தவரை 100 நாள் வேலைத்திட்டம் நகைச்சுவையாகவே…
-
- 5 replies
- 812 views
-
-
ரணலின் பயண இரகசியம்! - குருவாயூரப்பனுக்கு எதற்காக காணிக்கை? [Thursday 2015-04-23 07:00] 19வது அரசியலமைப்பு சீர்திருத்தம் எவ்வித பிரச்சினைகளும் இன்றி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வேண்டுதலுக்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு சென்றிருந்தாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் ரணில் விக்கிரமசிங்க குருவாயூர் ஸ்ரீகிருஸ்ணா கோயிலுக்கு வழிபாட்டுக்காக சென்றிருந்தார். இதன்போது அவர் 77 சந்தனக்கட்டைகளை சுவாமிக்கு வேண்டுதலுக்காக செலுத்தினார். ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் 2005ம் ஆண்டு தேர்தல் வெற்றியின் பின்னர் இந்தக் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். http://www.seithy.com/breifNews.php?newsID=13075…
-
- 2 replies
- 558 views
-
-
அமைச்சரவையில் புதிய யோசனை! - எம்.பிக்கள் தொகை 255 ஆகிறது. [Thursday 2015-04-23 07:00] ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளும் உள்ளடங்கியதாகவே புதிய தேர்தல் மறுசீரமைப்பு தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றத்தில் ஆராயவும் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளவும் சுமார் 3 மாத காலம் பிடிக்கும் என ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். புதிய திருத்தத்தின் பிரகாரம் தொகுதிவாரியூடாக 165 உறுப்பினர்களும் மாவட்ட விகிதாசார அடிப்படையில் 66 உறுப்பினர்களும் தேசியப் பட்டியலினூடாக 24 உறுப்பினர்களும் தெரிவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையாளரினால் தயாரிக் கப்பட்ட யோசனையின் பிரகாரம் கட்சிக…
-
- 1 reply
- 376 views
-
-
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குவது என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இன்று (23) தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் இணக்கம் வெளியாகியுள்ள நிலையில், இதற்கமைய எதிர்வரும் பொதுத் தேர்தல் புதிய தேர்தல் முறையில் நடத்துவதற்கு பிரதான கட்சிகள் இணக்கம் கண்டுள்ளன. இதற்கமைய ஜூலை மாதம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து இன்று கூடிய தேசிய நிறைவேற்றுச் சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முற்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடும் என தேசிய நிறைவேற்றுச் சபையின் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 451 views
-
-
19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 20ம் திருத்தச் சட்டத்தை கூடிய வரையில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamil.srilankamirror.com/news/item/2343-19
-
- 0 replies
- 389 views
-
-
ஈழத்து ஊடகப் பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் தராக்கி’ சிவராம். ஏப்ரல் 28, 2005 ஆம் ஆண்டு மாமனிதர் ‘தராகி’ சிவராம் கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற ஊர்தி ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லபட்டு படுகொலை செய்யப்பட்டார். மாமனிதர் ‘தராகி’ சிவராம் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இவரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் ஊடகவியலாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பங்குபெறும் கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இடம் - கவிக்கோ அரங்கம் ,சென்னை நாள் - 28.04.2015 நேரம் - 5.45 மாலை http://www.pathivu.com/news/39484/57//d,ar…
-
- 0 replies
- 505 views
-
-
நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்குமுறைகள் அனைவருக்கும் பொதுவானது நீதிக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் எவரும் நீதியை மீறி அதற்கு மேலாக செயற்பட முடியாது என நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதிக்கு விசாரணையில் ஈடுபடுவதற்கான அழைப்பாணை பிறப்பித்தும் அவர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் மின்சாரக் கதிரையில் எத்தனை முறையும் அமர…
-
- 1 reply
- 722 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கடந்த நாட்களில் பாராளுமன்றில் பகலிரவாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதுவும் நல்லாட்சியின் வெளிப்பாடே ஆகும். மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பாராமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தினத்தன்று இரவில் மின்சாரத்தை துண்டித்து குளிரூட்டியை தடைசெய்திருப்பார். நாங்கள் அவ்வாறு செய்திருந்தால் அவர்களால் எவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதுவே நல்லாட்சியின் வெளிப்பாடாகும். மேலும் அவர்களின் ஜனநாயக உரிமை என அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப…
-
- 0 replies
- 761 views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள வரைபில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக கட்சிகள் மட்டத்தில் ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இக் கூட்டம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், இன்றைய (நேற்று) கூட்டத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்…
-
- 0 replies
- 618 views
-