ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142786 topics in this forum
-
25 SEP, 2024 | 03:34 PM இலங்கையின் வடக்கு - கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (25) இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களிலும் இருந்தும் சுமார் 100 மாணவர்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத் திட்டத்துக்கான ரூபா 30 இலட்சம் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்த…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். https://thinakkural.lk/article/309881
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
கிளிநொச்சி சிறுவனின் சாதனை நடைபயணம்! சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவன், நாடளாவிய ரீதியாக நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய மாணவன் முழு நாட்டையும் சுற்றி நடை பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த பயணத்தை இவர் ஆரம்பித்துள்ளார் என்று குறித்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். அந்தவகையில், இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் முல்லைத்தீவு நோக்கி குறித்த மாணவன் தனது சாதனை பயணத்தை ஆரம்பித்துள்ளார். இந்த பய…
-
- 2 replies
- 520 views
-
-
வடக்கிற்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்! December 27, 2023 வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே புகையிரத சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2023/199101/
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 25 SEP, 2024 | 12:27 PM இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை. அதன் இறைமையை மதிப்பது என்ற கொள்கையை பின்பற்றியவாறு இலங்கையின் நிலையான பொருளாதார சமூக அபிவிருத்திக்கு உதவுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின்ஜியான் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். செப்டம்பர் 21ஆம் திகதி தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள அவர், இலங்கையின் நட்புறவுமிக்க அயல்நாடு என்ற அடிப்படையில் சீனாவும் இலங்கையும் ஒருவரையொருவர் பரஸ்பரம…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் மற்றும் 1981 ஆம் ஆண்டு இலக்கம் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 வது பிரிவின் விதிகளின்படி ஜனாதிபதி வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்தை 2024 நவம்பர் 21 ஆம் திகதி கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேதியாகவும் அது நிர்ணயிக்கிறது. வர்த்தமானி அறிவித்தல் மேலும் அக்டோபர் 04 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11, 2024 நண்பகல் 12 மணிக்கு முடிவடையும் காலத்தை வே…
-
-
- 37 replies
- 2.4k views
- 2 followers
-
-
நீங்கள் கனவு காணும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அநுரகுமாரவும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஒருவராக இருக்கின்றார். அவர்கள் சோசலிசவாதிகளாக தங்களைக் காட்டிக்கொண்டிருந்தாலும் துரதிஸ்டவசமாக அவர்களது அமைப்பு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பிற்கு கடந்தகாலங்களில் முழுமையாக துணைநின்றது. ஒன்றரை இலட்சம் அப்பாவி தமிழ்மக்கள் இறுதிப்போரில் மடிவதற்…
-
-
- 8 replies
- 813 views
-
-
24 SEP, 2024 | 03:00 PM தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, பிரதமர் நியமனத்தை தொடர்ந்து இடைக்கால அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளதுடன் அதனை தொடர்ந்து இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றமும் கலைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/194696
-
-
- 33 replies
- 2.3k views
- 1 follower
-
-
Published By: VISHNU 25 SEP, 2024 | 03:27 AM மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை (24) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் 44 வயதுடைய சசிகுமார் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் கணவன் மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். எனினும் கணவன் மனைவி இருவருக்கும் இடையிடையே தகராறுகள் இடம்பெற்று வருவதாக அயலவர்கள் தெரிவித்தனர். குறித்த குடும்பப் பெண் தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். சம்பவதினமான செவ்வாய்…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 24 SEP, 2024 | 06:47 PM (நா.தனுஜா) மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுவருவதற்குப் பங்களிப்புச் செய்யக் கூடிய வகையில் கடின முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனும், அவரது அணியினருடனும் இணைந்து செயற்பட எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுமுடிந்தது. இத்தேர்தலுக்கு முன்பதாக சுமார் ஒருமாதகாலம் நாடளாவிய ரீதியில் சகல வேட்பாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களின் பிரதான பேசுபொ…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் வலுவான சுயாதீன வெளிவிவகார கொள்கை என்ற அணுகுமுறைக்கான விருப்பத்தை அவர் வெளியிட்டுள்ளார். சர்வதேச சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் புவிசார் அரசியல் மோதல்களில் இருந்து விலகியிருப்பதற்கான தனது அரசாங்கத்தின் விருப்பத்தினை அனுரகுமாரதிசநாயக்க வெளியிட்டுள்ளார். அவரது தலைமைத்துவத்தின் கீழ் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையின் இரண்டு நெருங்கிய அயல்நாடுகளான சீனா இந்தியாவுடன் சமநிலையான உறவுகளை பேண முயலும் என குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்ள முயலாது என தெர…
-
-
- 4 replies
- 413 views
-
-
சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்; அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்றையதினம்(25) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் கடந்த கால அரசியல், பொருளாதார, அபிவிருத்தி, சமூக நல பொது சேவைகள் அது தொடர்பான கொள்கைகள், கட்டமைப்புகள் என்பவற்றோடு அரசியல் கலா…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து! இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ” இந்தியா-இலங்கை இடையே காணப்படும் நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்துள்ளார். https://athavannews.com/2024/1400986
-
- 0 replies
- 130 views
-
-
Published By: VISHNU 25 SEP, 2024 | 02:50 AM பொதுக்கட்டமைப்பின் அழைப்பை ஏற்று மிகவும் குறுகிய ஒரு காலப்பகுதியில் எந்தவிதமான முன்னாயத்தங்களும் இல்லாமல் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கும், தமிழ் தேசியத்தை நேசித்து அதனை பலப்படுத்தும் வகையில் அரியநேத்திரனுக்கு வாக்களித்த அத்தனை தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளை தமிழ்மக்கள் சார்பாகவும் தமிழ் மக்கள் கூட்ட…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சஜித் பிரேமதாச! ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த கூட்டணியையும் அமைக்கப் போவதில்லை” என ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது” பொது தேர்தலை இலக்கு வைத்து பிரச்சாரம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தயாராகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகங்களில் இருந்து எனக்கும் ஆதரவு கிடைத்தது. இலங்கையின் முன்னேற்றத்திற்கான எனது அர்ப்பண…
-
- 0 replies
- 557 views
-
-
Published By: VISHNU 22 SEP, 2024 | 07:55 PM கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு …
-
-
- 25 replies
- 1.3k views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் 15 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன. பிரதமரின் செயலாளர், அமைச்சின் செயலாளர் உட்பட 15 அமைச்சுக்களின் செயலாளர்கள் வருமாறு, பிரதமரின் செயலாளர் -சபுநந்திரி அமைச்சரவை செயலாளர் - எம்.டி.ஜே. பெர்னான்டோ, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் - டி.எஸ்.ருவன் சந்திர, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கைத் திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் - கே.எம்.எம். சிறிவர்தன, வெளிவிவகார…
-
- 1 reply
- 563 views
-
-
நரம்பியல் வைத்திய நிபுணரின் செயலால் தவிக்கும் நோயாளர்கள்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் அவர்கள் கடந்த ஆறு நாட்களாக விடுதிக்கு வருகை தராமையினால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு நரம்பியல் வைத்திய நிபுணர்கள் கடமையில் உள்ளார்கள். அந்தவகையில் வைத்திய நிபுணர் திருமதி. கவிதா மற்றும் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் ஆகியோர் கடமையில் உள்ளார்கள். வைத்திய நிபுணர் திருமதி. கவிதா அவர்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை கூட பாராமல் தினசரி வைத்தியசாலை விடுதிக்கு சென்று தனது நோயாளிகளை பார்வையிட்டு வருகின்றார். ஆனால் வைத்தி…
-
- 0 replies
- 356 views
-
-
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேட்புமனுத் தயாரிக்கும் போது புதிதாக ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்குமாறும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. Thinakkural.lk
-
-
- 15 replies
- 949 views
- 2 followers
-
-
23 SEP, 2024 | 03:11 PM இலங்கை தனது இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்துள்ளது என ஜேவிபியின் மத்தியகுழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். இந்த ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்கு பின்னர் நீங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை பார்க்கமாட்டீர்கள் என அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் அரசியல் உறுதிப்பாடுடைய ஒருவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார், இந்த நோக்கத்திற்கு மக்கள் தங்களின் ஆதரவை தரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ள சுனில் ஹந்துநெத்தி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளார். https://www.virakesari.lk/article/194619
-
- 1 reply
- 329 views
- 1 follower
-
-
நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ! ShanaSeptember 24, 2024 இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவர் பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடன் ராஜபக்சேவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாகவும், அவரை நேபாளத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணம் அரசியலை விட தனிப்பட்ட மற்றும் குடும்பம் சார்ந்தது. …
-
- 7 replies
- 471 views
- 1 follower
-
-
தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை வழங்காமல் உண்மையான மாற்றம் சாத்தியமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ளவேண்டும் - பா.உ கஜேந்திரகுமார் Published By: DIGITAL DESK 7 24 SEP, 2024 | 10:19 AM (நா.தனுஜா) தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று, அவர்களைத் தனித்தேசமாக அங்கீகரித்து, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்காமல் தென்னிலங்கை மக்கள் கோருகின்ற மாற்றம் முழுமையடையாது என்ற உண்மையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அம்மக்களுக்குக் கூறவேண்டும். அதேபோன்று தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல், முன்நோக்கிப் பயணிக்கமுடியும் என கருதினால், அது ஒருபோதும் சாத்தியமாகாது என்பதையும் அவர் புரிந்துகொள்ளவேண்டும் என தமி…
-
-
- 6 replies
- 347 views
- 1 follower
-
-
23 SEP, 2024 | 05:55 PM (இராஜதுரை ஹஷான்) எமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் அந்த பாடத்தை சிறந்த முறையில் கற்றுக் கொண்டு மீண்டும் சவால்களை வெற்றிக் கொள்ள தயாராகுவேன். நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தலில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதா…
-
- 3 replies
- 268 views
- 1 follower
-
-
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார Published By: RAJEEBAN 24 SEP, 2024 | 12:22 PM இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் வலுவான சுயாதீன வெளிவிவகார கொள்கை என்ற அணுகுமுறைக்கான விருப்பத்தை அவர் வெளியிட்டுள்ளார். சர்வதேச சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் புவிசார் அரசியல் மோதல்களில் இருந்து விலகியிருப்பதற்கான தனது அரசாங்கத்தின் விருப்பத்தினை அனுரகுமாரதிசநாயக்க வெளியிட்டுள்ளார். …
-
- 1 reply
- 321 views
- 1 follower
-
-
யார் இந்த அநுர குமார திஸாநாயக்க? கடந்து வந்த பாதை!! #முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க. #பிறப்பு – 1968.11.24. #பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார். #ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம். #உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி. குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார். 1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார். #அரசியல் வாழ்க்கை! #1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். #1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1…
-
-
- 15 replies
- 2.3k views
- 1 follower
-