Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (05) நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அறிவுறுத்தல்கள் அனைத்து பாடசாலை விண்ணப்பதாரிகள் தங்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாகவும், தனியார் விண்ணப்பதாரிகள் தாமாகவே இணையத…

  2. மத்திய கிழக்கில் போர் பதற்றம்! அதிர்ச்சியூட்டும் வரலாறு காணாத தங்க விலை அதிகரிப்பு மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலை காரணமாக உலகளவில் தங்கத்தின் விலையில் மிக வேகமான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்க விலை உயர்வு இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தங்கம் ஒரு அவுன்சின் விலையானது, இலங்கை ரூபாவின் படி 802,401.19 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் மற்றும் 22 கரட் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு சில நாட்களாக 200,000 ரூபாவை தாண்டியுள்ளது. ஒக்டோபர் 31ஆம் திகதி வரை செட்டித்த…

  3. புதிய கடவுச்சீட்டை பெறவிரும்புபவர்களிற்கு ஆறாம் திகதி முதல் இணையவழி முன்பதிவு திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இணையவழி முன்பதிவு முறை மூலம் பொதுமக்கள் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு முன்பதிவு செய்துகொள்ள முடியும் என குடிவரவுகுடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுசா பாலசூரிய தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் கடவுச்சீட்டை பெறுவதற்காக முன்பதிவை மேற்கொள்வதற்காக டோக்கன்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள…

  4. பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை 11 மணியளவில் மன்னாருக்கு விஜயம் செய்தார். பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன் போது தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டார். இதில் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்கலாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மன்னார் நகரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொள்ளச…

  5. மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார். இதன்படி, குறித்த பிரேரணையை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி இலங்கை மின்சார சபை, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது. அதில், மின் கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க இலங்கை மின்சார சப…

  6. 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் நன்மைகளை இழந்தவர்கள் மற்றும் அநீதி இழைக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் சம்பந்தப்பட்ட அமைச்சு மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவினால் பத்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உரிய விசாரணைகளை நடத…

  7. இந்தியத் தூதரகத்தினால் திருமலையில் 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு வரலாற்று ரீதியாக இலங்கையின் மீனவ சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் மீன்பிடித்தல் என்பது இங்கு ஒரு தொழில் மட்டுமல்ல. ஒரு வாழ்க்கை முறையாகும், இது பழங்கால பாரம்பரியமாக செய்துவரும் இத்தொழில் மூலம் பல்லாயிரம் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்று இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலை…

  8. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தனது வாக்குறுதியை - அர்ப்பணிப்பை மதிக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கான முயற்சிகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைவு கரிசனை வெளியிட்டுள்ளது. சட்டத்தரணிகள் ஒன்றிணைவு மேலும் தெரிவித்துள்ளதாவது, பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் தக்கவைக்கப்படும் என சுட்டிக்காட்டும் வகையிலான அறிக்கைகள் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம். 1979இல் நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச்சட்டம் பரந்துபட்ட அவசரநிலை போன்ற நிறைவேற்றதிகார அதிகாரங்களை கொண்ட ஆபத்தான சட்டம். ஆனால் இதனை சாதாரண தருணங்களிலும் பயன்படுத்தலாம். பய…

  9. மட்டக்களப்பில் கருணா - பிள்ளையான் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் ! வேட்பாளர் உட்பட மூவர் வைத்தியசாலையில் Batticaloa மட்டக்களப்பில் கருணா கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கருணாவின் கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (3) இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது; மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதியில் ஜனநாயக முன்னணி கட்சியான கருணாவின் கட்சியின் வேட்பாளரின் காரியாலயத்தின் முன்னாள் உள்ள வீதியில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழ…

  10. ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி adminNovember 4, 2024 மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(3) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் நினைவு கூரப்படவுள்ள நிலையில் ,மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் தூவி,சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் குறித்த சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. https://globaltamilnews.net/2024/208000/

  11. (எம்.மனோசித்ரா) வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் தீர்மானிக்க முடியாது. அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய பின்னரே இது குறித்த இறுதி தீர்மானத்தை எடுக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்தார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போது, 'வடக்கிலுள்ள முகாம்களை அகற்றுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?' என கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மே…

  12. காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கி, 13வது சீர்திருத்தத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். மாகாணசபை முறைமை மூலம் தமிழ் மக்களுடைய உரிமைகள் பாதுக்காப்பட வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள சகோதரமொழி பேசும் இளைஞர் அமைப்பின் பிரதிநிதியான திரு.அர்ஜுன தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அரசியல் பிரமுகர்களுடன் குறித்த இளைஞர் குழுவினர் சந்திப்புகளை நடாத்தி, அவர்களது கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்றும், இன்றும் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து, அங்குள்ள அரசியல் பிரமுகர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மே…

  13. புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கம்பஹாவில் தேசிய மக்கள்சக்தியின் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும் வசதிகள் குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ இல்லங்கள் உட்பட ஏனைய வசதிகள் மட்டுப்படுத்தப்படும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களின் பணியாளர்களாக நியமிக்க முடியாது என தெரிவித்துள்ள பிரதமர் ஏற்றுக்கொள்வதற்கு தாங்கிக்கொள்வதற்கு கடினமான விடயமா…

  14. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக இன்றைய தினம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார் இன்றையதினம் ஞாயிற்றுகிழமை மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் தான் மதுபான சாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புகொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் …

  15. மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு! தமிழரசுக் கட்சியால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசியத்தை மீள உருவாக்குவதில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் என சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தமிழரசு கட்சியிலிருந்து ஏன் விலகினோம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் அதை பற்றி நான் இங்கு கூற விரும்பவில்லை. …

      • Haha
    • 12 replies
    • 812 views
  16. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதியும் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று (02) தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நியாயமான சம்பளம் தொடர்ந்தும் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், “தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர், மே தினமன்று கொட்டகலையில் 1750 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள், ஆனால் எந்த தோட்டத் தொழிலாளிக்கும் அந்த சம்பளம் வழங்கப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயம…

  17. - எம்.ஆர்.எம்.வசீம் தொழிற்சங்கங்களை இல்லாதொழித்து ஏகாதிபத்திய ஆட்சியே முன்னெடுப்பதே தேசிய மக்கள் சக்தியின் திட்டம். அதுவே தற்போது லக்ஷ்மன் நிபுணாரச்சியின் வாயால் வெளி வந்திருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், தெற்காசியாவிலேயே சிறந்த தொழில் சட்டம் இருப்பது இலங்கையிலாகும். என்றாலும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொழிற்சங்க தலைவர்களின் போராட்…

  18. சிறுவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களில் 75% வீதமானவை தரமற்றவை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றும் தரமில்லாத இவ்வாறான பொருட்கள் உள்நாட்டு சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த பொருட்கள் சிறுவர்களுக்கு பாரிய ஆபத்தை விளைவிப்பதாக தெரிவித்தார். இவைகள் சீனா போன்ற நாடுகளில் இருந்து கட்டுப்பாடு இல்லாமல் இறக்குமதி செய்யப்படுகிறது. இவை பிள்ளைகளை மிகவும் ஆபத்தான முறையில் பாதிக்கிறது. இருப்பினும், சந்தைக்குச் செல்லும் வாடிக்கையாளர் இந்தப் பொருட்களை வாங்கும் போது ஏதேனும் …

  19. புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள், நாட்டில் வந்து முதலீடு செய்வதற்கு புதிய அரசாங்கம் அழைப்பு விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கையில் முதலீடு தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம், முதலீட்டு துறைகளில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள டயஸ்போராக்களுக்கு இலங்கையில் முதலீடுகளை மேற்…

  20. அம்பாறைத் தமிழர்கள் மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் வாக்குப் பலத்தைச் செலுத்தாவிடின் நிச்சயம் மாற்றுச் சமூகங்களின் அடிமைகளாகிவிடுவோம் : தவராசா கலையரசன் ! on Sunday, November 03, 2024 By kugen NO COMMENTS (சுமன்) அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் எமது வாக்குப் பலத்தைச் செலுத்தவில்லை என்றால் நாங்கள் நிச்சயம் மாற்றுச் சமூகங்களின் அடிமைகளாகிவிடுவோம். எனவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விட்ட தவறினைத் திருத்தியமைக்க வேண்டும். என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். …

      • Haha
    • 8 replies
    • 446 views
  21. பாசிக்குடாவில் பலத்த பாதுகாப்பு ரீ.எல்.ஜவ்பர்கான் அறுகம்பே சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா கடற்கரை இலங்கையின் புகழ்பெற்றதும் உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களின் ஒன்றாகவும் கருதப்படுகிறது குறித்த பாசக்குடா கடற்கரையில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனர் விடுமுறை தினங்கள் மற்றும் முழுமதி போயாதினங்கள் உட்பட பல்வேறு பண்டிகை காலங்களிலும் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் ப…

  22. வாகன இலக்கத் தகடு விநியோகம் இடைநிறுத்தம்! வாகன இலக்கத் தகடு அச்சிடும் நிறுவனத்துக்கு பணம் கொடுப்பத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால், வாகன இலக்கத் தகடு விநியோகிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உரிய கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், வாகன உரிமையாளர்களுக்கு வாகன இக்கத் தகடு வழங்கப்படாத காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாகன எண்ணை காகிதத்தில் அச்சிட்டு காட்சிப்படுத்த தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1406962

  23. ”சுமந்திரன் போன்றோர் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்” சுமந்திரன் போன்றோர் எங்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும் அநுர ஜனாதிபதி தேர்தலின் போது மிக தௌிவான கொள்கை பிரகடனம் ஒன்றை வௌியிட்டு இருந்தார். தேர்தல் விஞ்ஞாபனங்களில் நாங்கள் கூறியுள்ள பல்வ…

      • Like
    • 5 replies
    • 556 views
  24. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் $37.5 பில்லியனாக உயர்வு! 2024 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான அமைச்சின் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மொத்தக் கடன் சேவைக் கொடுப்பனவுகள் 503 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இதில் 275.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அசல் திருப்பிச் செலுத்துதலுக்காகவும், 227.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வட்டி செலுத்துதலுக்காகவும் ஒதுக்கப்பட்டது. …

  25. மட்டக்களப்பு ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சியின் மாற்றுத்திறனாளி வேட்பாளர் ஒருவர் மீது வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் (02.11.2024) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் பன்சாலை வீதியிலுள்ள வீடொன்றில் குறித்த கட்சியின் வேட்பாளரும் அவரது தாயாரும் வாழ்ந்து வருகின்றனர். வாக்குவாதம் இந்தநிலையில், சம்பவ தினத்தன்று பகல் ஒரு மணியளவில் வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் 6 பேர் ஆதரவு கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர், வேட்பாளரின் தாயாரிடம் சிறுபான்மையான நாங்கள் பெரும்பான்மை இன கட்சியில் போட்டியிடக் கூடா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.