ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கைக்குள் வருவதை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை மற்றும் பராமரிப்பு, விநியோகம் என்பவற்றை பாகிஸ்தானின் க்வாடர் துறைமுகம் (Gwadar port) பொறுப்பேற்றுள்ளது. இந்த நகர்வு சீனாவை பொறுத்தவரை முக்கியமான ஒன்று என்று சங்காய் நிறுவக தென்னாசிய கற்கை நெறிகளுக்கான பணிப்பாளர் ஸாவோ கன்சேங் (Zhao Gancheng) தெரிவித்துள்ளார். இந்தநிலையில் க்வாடார் துறைமுகம் இனிவரும் காலங்களில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருட்களை ஏற்றி இறக்கும் முக்கிய துறைமுகமாக மாற்றமடையும் என்று கன்சேங் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சீனாவின் சியான்ஜிங் பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றத்து…
-
- 1 reply
- 478 views
-
-
சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர் தரப்பினருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. ( இந்த தமிழர் தரப்பு யார் என்பதை சில காரணங்களுக்காக தற்போது வெளியிடவில்லை) இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலில் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர் தரப்பினரால் சில கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் ஒப்பந…
-
- 24 replies
- 2.2k views
-
-
கணவன் இல்லாத வீட்டில் ஒரு மனிதர் இல்லாமைக்கான இடைவெளி மாத்திரம் காணப்படவில்லை என்று குறிப்பிடும் கிளிநொச்சி தர்மபுரத்தை சேர்ந்த அகிலன் சுகிர்தா ஆட்சி மாறியும் ஆண்டு புதிதாகவில்லை என்கிறார். நேற்றைய தினம் தமிழ் புதுவருடம். இந்த நாளில் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் சோபை இழந்திருந்தது. அவர்களுக்கு ஏதோ காயங்கள். யாருக்காகவோ காத்திருப்புக்கள். அலைக்கழிக்கும் நினைவுகள்.. வெறும் சம்பிரதாயபூர்வமாகக் கூட இந்த நாளைக் கடக்க முடியவில்லை என்று குறிப்பிடுகிறார் முல்லைத்தீவு குமுல முனையைச் சேர்ந்த இன்னொரு இளம் விதவை. ஈழப் போரினால் சுமார் எண்பதாயிரம் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டிருப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இதில் மிகச் சொற்ப எண்ணிக்கை…
-
- 0 replies
- 383 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியென்று மாற்றுக்குழுவை அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் பின் நிற்கப் போவதில்லை எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எதிர்க்கட்சித் தலைவராக தினேஷ் குணவர்தனவே நியமிக்கப்படுவாரென்றும் உறுதியுடன் தெரிவித்தார். இது தொடர்பில் வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுத் தேர்தலில் வாய்ப்பளிக்கபடும் எனத் தெரிவித்துள்ளார். இதனை வரவேற்கின்றோம். அவ்வாறு அம்முன்னணியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் ஏதாவது ஒரு விதத்தில் பறிக்கப்பட்டால் இந்தியாவில் இந்திரா காங்கிரஸைப் போன்று இ…
-
- 0 replies
- 384 views
-
-
வலி.வடக்கில் மக்களின் மீள்குடியமர்வுக்கு விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் அழித்தது போக எஞ்சியிருப்பவற்றை களவாடும் நடிவடிக்கைகளில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு களவாடிய 25 பேரை நேற்றுப் புதன்கிழமை பொலிஸார் கைது செய்தனர். வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 9 கிராமசேவகர் பிரிவுகள் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டன. இப்பகுதி மக்கள் தங்கள் காணிகளை துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தமக்கு சாதமாக்கிக் கொண்ட சிலர் குழுக்களாக இணைந்து இராணுவம் அழித்தது போக எஞ்சியிருக்கும் வீடுகளை உடைத்து கதவு, யன்னல்களின் நிலைகள், இரும்புக் கம்பிகள் என்பவற்றை களவாடுகின்றன. அத்துடன் இந்த திருட்டுக் குழுவினர் காணிகளில் நிற்கும் பெறுமதி வாய்ந்த மரங்களா…
-
- 1 reply
- 286 views
-
-
யாழ். குடாநாட்டு நிலத்தடி நீர் மாசடைவு தொடர்பில் கடந்த 12ம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இது தவறான ஓர் அணுகுமுறையாகுமென ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தர் முதலைக்கண்ணீர் வடித்துள்ளார். மக்களுக்கு தெளிவினை ஏற்படுத்தக்கூடிய பாரிய சமூகப் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு. ஒரு கலந்துரையாடலின் பின்னர், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளைக் கேட்டறிந்துகொள்வதைவிட, அக்கலந்துரையாடலில் முன்வைக்கப்படுகின்ற பல்வேறு கருத்துக்களையும், வாத, விவாதங்களையும் நேரில் கேட்டறிந்து, அவற்றினையும் உள்ளடக்கியதாக தங்கள் நோக்குகளில் செய்திகளை எழுதி வெளிவரச் செய்வதே அந்தச் செய்தியின் நம்பகத் தன்மையை மேலும் வலுப்பெற…
-
- 0 replies
- 688 views
-
-
பிரபாகரன் தப்பிச்செல்ல வழிவிட்டதா இந்திய அமைதிப்படை?- கேணல் ஹரிகரன் பதில் APR 16, 2015 | 1:10by புதினப்பணிமனைin செய்திகள் தனக்குத் தெரிந்தவரையில், இந்திய அமைதிப்படையினரால், ஒரே ஒருமுறை மாத்திரமே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்க முடிந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு முன்னரே தப்பிவிட்டதாகவும், இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போதைய இந்திய வெளிவிவகார இணை அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங், நேற்று முன்தினம் ராய்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியது குறித்து கருத்து வெளியிட்ட போதே, கேணல் ஹரிகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்திய அமைதிப்படையை…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஆனந்த சங்கரியின் தடுமாற்றம் எதனால்? ஆதாரத்துடன் மாகாண சபை உறுப்பினர் ஜனா சாடல் [ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 12:40.05 PM GMT ] ஆனந்த சங்கரி ஐயாவை நான் மிகவும் நேசித்தவன், இப்போதும் நேசிக்கிறவன். அவரது வயது, அரசியல் அனுபவம், நீண்டகாலமாக மக்களுக்கு குரல் கொடுத்தவர் என்ற ரீதியில் அவர் மீது ஒரு அபிமானம் இருந்தது. நான் முதல் முதலில் பாராளுமன்றம் சென்றது அவர் தற்போது வைத்திருக்கும் கூட்டணிக் கட்சியின் சின்னத்திலே தான். ஆனால் கடந்த சில வருடங்களாக ஆனந்த சங்கரி ஐயாவின் கட்டுரைகள், கடிதங்களைப் பார்க்கும்போது சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார். அவரும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பிலிருந்து வேறுபட்டுச் செல்வது மிகவும் மனவருத்தத்திற்குரியது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி …
-
- 1 reply
- 392 views
-
-
ஆதரவாளர்களுடன் மகிந்த இன்று முக்கிய சந்திப்பு APR 16, 2015 | 2:17by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தன்னைப் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு வலியுறுத்தி வரும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பு மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான தங்காலையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில். 19வது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச எந்த அரசியல் கட்சியின் மூலம் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவது என்பது குறித்தும், இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர …
-
- 0 replies
- 488 views
-
-
அரசியல் ஆடுகளம் சூடான பாதையில் அடுத்தடுத்த வாரங்களில் பயணிக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்.10 ஆண்டுகால அண்ணன் தம்பி ஆட்சி மீண்டும் மலருமா? - See more at: http://www.canadamirror.com/canada/41114.html#sthash.HJraMWnj.dpuf
-
- 0 replies
- 543 views
-
-
இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்கள் எதிர்வரும் காலங்களில் அந்நாட்டு விமான நிலையங்களிலேயே வீசாவினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று முதல் நடைமுறை வந்துள்ளது. இதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கான வீசாவை பெற்றுக்கொள்ள முடியும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாத இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது அவரால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இந்த வீசா முறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா ஏற்கனவே 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து…
-
- 1 reply
- 1.2k views
-
-
கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு சம அந்தஸ்து வழங்க வேண்டும்! - சுரேஸ் பிறேமச்சந்திரன் [Wednesday 2015-04-15 19:00] தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பாக கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்தை நாம் கோரியிருக்கின்றோம். தனித்தொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஏற்றுக் கொள்ளோம் என்று தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார். அங்கத்துவக் கட்சிகளின் தலமைகளுக்கிடையிலான சந்திப்பு நடத்தப்பட்டு அதில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது. மாவட்ட கட்சிக் கிளைகள் எடுக்கும் தீர்மானங்களை குறித்து நாங்கள் கவலையடையவில்லை. கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான புளொட…
-
- 0 replies
- 491 views
-
-
யாழ். கைலாசநாதர் கோவில் பிரதம குருக்களின் அஞ்சலிக் கூட்டமும் புதிய பிரதம குருக்கள் நியமனமும் [Wednesday 2015-04-15 19:00] யாழ்ப்பாணம் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் பிரதம குருக்களாக இருந்த மணிக்குருக்கள் என்றழைக்கப்படும் வைத்தீஸ்வரக் குருக்களின் அஞ்சலிக் கூட்டமும் கைலாசநாதர் கோவிலின் புதிய பிரதம குருக்களை நியமிக்கும் வைபவமும் கடந்த 11.04.2015 அன்று ஸ்ரீ கைலாசநாதர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. என். வேதநாயகன் அவர்களும் விசேட அதிதிகளாக பிரதம குருக்கள் சிவாச்சாரியாகர்கள் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்துகொண்டு மணிக் குருக்களின் ச…
-
- 0 replies
- 537 views
-
-
கோத்தபாய வளர்த்த சுறாக்களுக்கு மனிதர்கள் இரையாக்கப்பட்டனரா? - விசாரணை தீவிரம் [Wednesday 2015-04-15 19:00] வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்டவர்கள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் சுறா மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் வசித்து வந்த வீட்டில் 40 அடி நீளம், 10 அடி ஆழமுடைய மீன்தொட்டிகளில் மனிதர்களை உண்ணும் சுறா மீன்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இந்த சுறா மீன்களின் உணவிற்காக நாளொன்றிற்கு 50 கிலோ கிராம் இறைச்சி அவசியமாகியுள்ளதுடன், இலங்கை கடற்படையினரால் குறித்த மீன்தொட்டிகள்…
-
- 0 replies
- 590 views
-
-
தேர்தல் முறை மாற்றத்தினால் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து! - பஷீர் சேகுதாவூத் [Wednesday 2015-04-15 19:00] தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான முயற்சியானது சிறுபான்மை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக அமைந்து விடும் என முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். ‘தேர்தல் முறை மாற்றமும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலமும்’ என்ற தொனிப் பொருளிலமைந்த திறந்த கலந்துரையாடல் ஏறாவூர் வாவிக்கரையோரப் பூங்காவில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், தேர்தல் முறை மாற்றம் எ…
-
- 0 replies
- 509 views
-
-
அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சென்னையில் இலங்கைத் தமிழ் பிரமுகர்களுடன் சந்திப்பு APR 15, 2015by கார்வண்ணன்in செய்திகள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், சென்னையில் இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். சென்னையில் உள்ள அவுஸ்ரேலிய துணைத் தூதரகத்தில் இன்று நடந்த இந்தச் சந்திப்பு, ஆக்கபூர்வமானதாக அமைந்தது என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் ருவிட்டரின் சற்று முன்னர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், ஈழ ஏதிலியர் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் சந்திரகாசன் தலைமையிலான, இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவுஸ்ரேலிய வெளிவிவகார…
-
- 3 replies
- 729 views
-
-
சுன்னாகம் மற்றும் அதனையண்டிய பகுதிகளினில் நிலத்தடி நீர் நஞ்சூட்டப்பட்டமை தொடர்பிலான விழிப்புணர்வை அனைத்து மட்டங்களினில் ஏற்படுத்தவும் உண்மையை வெளிக்கொணரவும் ஊடகவியலாளர்கள் குழுமத்தினால் உருவாக்கப்பட்ட தகிக்கும் தண்ணீர் ஆவணப்படம் எதிர்வரும் 17ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. சுன்னாகம் மற்றும் அதனையண்டிய பகுதிகளினில் நிலத்தடி நீர் நஞ்சூட்டப்பட்டுள்ளமை உறுதியாகி வருகின்ற நிலையினில் யாழ்.ஊடக அமையத்தின் அனுசரணையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வாவணப்படம் அண்மைக்காலங்களினில் வடக்கினில் தயாரிக்கப்பட்டுள்ள விடயம் சார் ஆவணப்படங்களினில் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.யாழ்ப்பாணத்தின் முன்னணி இளம் ஊடகவியலாளர்களுள் ஒருவரான ஜெராவின் நெறியாள்கையினில் இவ் ஆவணப்படம் …
-
- 0 replies
- 457 views
- 1 follower
-
-
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகளின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது காலத்தின் தேவை என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். நடராஜா ரவிராஜ் கொலை மற்றும் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் வாதிடும் சட்டத்தரணி இதனைக் கூறினார். யாழ்ப்பாணம் – சாவகச்சேரியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிராஜ் தமிழர்களிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த அரசியல்வாதியாவார். தமிழர் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்திலும் வெளியிலும் அயராது குரல் கொடுத்து வந்தார் ரவிராஜ். இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி கொழும்பில் அவரது வீட்டின் அருகே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம …
-
- 0 replies
- 511 views
-
-
மைத்திரியின் மகள் சத்துரிகா பொதுத்தேர்தலில் போட்டி? [Wednesday 2015-04-15 10:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் பூட்டான் பிரதமர் இலங்கை வந்திருந்தபோது அவரது மனைவியின் உதவிப் பெண்ணாக மைத்திரியின் மகள் செயற்பட்டார். இதனையடுத்தே இந்தச் செய்தி கசிந்துள்ளது. சத்துரிக்கா சிறிசேன, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தனது தந்தையின் தேர்தல் பிரசார பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். தமது தந்தை பொதுவேட்பாளராக களமிறங்கியமை தொடர்பில், அப்போது அடிக்கடி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தும் வந்தார். தேர்தல் வெற்றியையடுத்து அவரது கணவரான திலின சுரஞ்ஜ…
-
- 2 replies
- 1.7k views
-
-
19வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக மாதுளுவாவே சோபித தேரர் அறிவிப்பு! [Wednesday 2015-04-15 08:00] உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கத்தின் கீழ் 19வது அரசியல் அமைப்பின் சரத்துக்கள் சில அகற்றப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொள்வதாக சமூகநீதி அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் தாம் கடுமையாக பாடுபட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், எனினும் தற்போது சாதகமான நிலை ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அடுத்த அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரும் தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சோபித தேரர் தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 536 views
-
-
நாடாளுமன்ற ஆசனங்களை 250ஆக அதிகரிக்கும் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவருவதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவந்து விவாதிக்கும் சந்தர்ப்பத்திலேயே 20ஆவது திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் கண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள சிங்கள தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொகுதி வாரியான தேர்தல் முறையில் 165 ஆசனங்களும், விகாதாசார தேர்தல் முறையில் 60 ஆசனங்களும், தேசியப் பட்டியலில் 25 ஆசனங்களும் அடங்கலாக மொத்தம் 250 ஆசனங்கள…
-
- 0 replies
- 490 views
-
-
தமிழக முதலமைச்சரின் 2014 ஆம் ஆண்டிற்கான கணனித்தமிழ் விருதினை இலங்கைத்தமிழரான திரு து குமரேசன் அவர்கள் பெற்றுள்ளார் இது தொடர்பான அறிவித்தலை தமிழக அரசின் அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியுட்டுள்ளது. http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr130415_151.pdf
-
- 1 reply
- 760 views
-
-
சிறிலங்கா அதிபர் நடத்தும் இரண்டு போராட்டங்கள் – ரைம் சஞ்சிகை கருத்து APR 15, 2015 | 12:52by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடினமான பணியை ஆற்றிக் கொண்டிருப்பதாகவும், ஒரு புறம் அவர், ஜனநாயகத்தை மீளக் கொண்டு வரவும் மறுபுறத்தில் பிரதான வல்லாதிக்க சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்கும் போராடி வருவதாகவும் ரைம் சஞ்சிகை தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செவ்வியுடன் புகழ்பெற்ற ரைம் சஞ்சிகையின் வெளியாகியுள்ளது. இந்த இதழுக்கு சிறிலங்கா அதிபர் அளித்துள்ள செவ்வியில், நாட்டின் அதிகாரங்கள் மையத்தில் ஒன்றுகுவிக்கப்பட்டுள்ளது பிரதானமான பிரச்சினையாக உள்ளது என்றும், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 449 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை விரைவில் நீங்குமாம்! [Wednesday 2015-04-15 08:00] இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை விரைவில் நீக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக கடற்றொழில் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ளது. இந்தநிலையில் குறித்த தடையினை நீக்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள வி.எம்.எஸ். உபகரணங்களை எதிர்வரும் மே மாதத்திற்குள் படகுகளில் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சும்,…
-
- 1 reply
- 570 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கோத்தாபய ராஜபக்ஷவும். விமல் வீரவன்சவும் கலந்துகொண்டனர். மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குடும்பத்தினர் உட்பட அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும் இதில் பங்குகொண்டிருந்தார்கள். பௌத்த பிக்குகள் பலரும் இதில் கலந்துகொண்டு பூஜை வழிபாடுகளை நடத்தினார்கள். பங்குகொண்டவர்கள் அனைவரும் இவ்வருட புதுவருட அதிஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடைகளுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய விளையாட்டுக்களும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. http://www.malarum.com/article/tam/2015/04/14/9608/%E0%AE%…
-
- 9 replies
- 1.7k views
-