ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
யாழ்.மின்சார நிலைய வீதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் குறித்த வீதியால் செல்லும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த காலங்களில் வெளிநோயாளர் பிரிவாக இருந்த குறித்த கட்டடம் தற்போது விபத்து பிரவாக புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் இந்தக் கட்டடம் யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதியுடன் இடிக்கப்பட்டு வருகிறதாக தெரிய வருகிறது. இப் புனரமைப்பு பணிகளால் வெளிவரும் கற்கள் தூசுகள் மூலம் அவ் வீதியினூடாக பயணம் செய்யும் மக்கள் மற்றும் அப் பகுதியை சார்ந்த இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். …
-
- 4 replies
- 779 views
-
-
மத்திய அரசாங்கமானது வடமாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முஸ்தீபு செய்கின்றது என வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளரும் ,ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான ஹோலியாங் சு விடம் வடமாகண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் வடக்கில் இராணுவத்தை குறைப்போம் என்று கூறியவர்கள் தற்போது இராணுவம் குறைக்கப்படமாட்டாது கூறுவதுடன் காணமல் போனவர்கள் தொடர்பாக பிரச்சினைக்கு இதுவரையில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபைய…
-
- 0 replies
- 911 views
-
-
நஞ்சற்ற உணவுப்பொருள் பாவனையை பொதுமக்கள் மத்தியில் வலுப்படுத்தும் முகமாக வாரந்தோறும் 'ஏ' ஆயசமநவ என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் (முழiஉய) கொய்க்கா நிதி அனுசரணையின் கீழ் வேல்ட் விஷன் (உலக தரிசனம்) நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட இயற்கை முறை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் நஞ்சற்ற உணவுப் பொருள் பாவனையை பொதுமக்கள் மத்தியில் வலுப்படுத்தும் முகமாகவும் வாரந்தோறும் நடைபெறவுள்ள இந்த 'ஏ' ஆயசமநவ என்னும் தொனிப்பொருளிலான திட்டம், பிரதேச செயலக வளாகத்தில் இன்று முதற் கட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. …
-
- 0 replies
- 333 views
-
-
நாடாளுமன்றத்தில் நிதிச் சட்ட மூலம் தோற்கடிக்கப்பட்டடுள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லையேல் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என்று தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கவேண்டும் என்ற பிரேரணையில் கையொப்பமிட்டுள்ள எம்.பிக்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், எதிர்க்கட்சித் தலைவராக தினேஷ் குணவர்த்தனவை நியமிப்பதற்கு பெரும்பான்மை காண்பிக்கப்பட்டுள்ளது என்றும், எனவே, அப்பதவியை சபாநாயகர் அவருக்கு வழங்கவேண்டும் என்றும் மேற்படி குழு வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் எம்.பிக்கள் முன்னாள் அமைச்சரான தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டுமென வலியுறுத்திவரும் எம்.பிக்கள் குழ…
-
- 0 replies
- 281 views
-
-
இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் கல்விக்கு பெற்றோர்கள் பெரும் தடையாகவுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் ஒருநாளில், அரைவாசிக்கு மேற்பட்ட பொழுதை தொலைக்காட்சியுடன் செலவிடுகின்றார்கள். தம் பிள்ளைகளின் கல்வி தொடர்பாக அக்கறை அற்றவர்களாக தொலைக்காட்சிப் பெட்டிக்குள் மூழ்கி விடுகின்றனர் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா தெரிவித்தார். இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம் ஆகியவற்றின் 13ஆம் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கலும் இணுவில் பொது நூலக கலாசார மண்டபத்தில் பொது நூலகத்தலைவர் ச.சிவசங்கர் தலைமையில் சனிக்கிழமை (04) நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து க…
-
- 6 replies
- 639 views
-
-
வணக்கம் காளமேகம் செய்திகள், தயாரித்து வழங்குபவர் பொய்யாமொழி, முதலில் தலைப்புச் செய்திகள் 1.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கீரிமலையில் 200 ஏக்கர் நிலத்தில் 200 கோடி ரூபா செலவில் ஜனாதிபதி மாளிகை அமைத்து சாதனை! மகிந்த ராஜபக்சவின் மைத்துனரான நிசாங்க விக்கிரமசிங்க இலங்கையின் விமான சேவையான ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தை அபிவிருத்தி செய்ய எடுத்த அர்பணிப்பான சேவைகளை ஊழல் மோசடி என்று அபாண்டமான குற்றச்சாட்டு மகிந்தவின் மருமகன் ரஸ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்த போது உக்ரேன் போராளிகளுக்கு ஆயுத விற்பனை என்ன செய்ய வேண்டமென்பது எனக்கு தெரியும். எனது விடயங்களில் ஊடகங்கள் மூக்கை நுழைக்கத் தேவையில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர…
-
- 1 reply
- 523 views
-
-
தானும் இலங்கை அரசும் இப்போது ஒருமித்த இலக்கொன்றினில் பயணிப்பதாக தெரிவித்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மகளிரணி தலைவியுமான அனந்தி சசிதரன்.என் கணவரை தேடிக்கண்டுபிடித்து தருமாறு கோரியே நான் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து வழக்காடி வருகின்றேன். அதே நேரம் விடுதலைப்புலிகளிற்கு ஆட்சேர்ப்பு நடந்ததாக கூறி என்னையும் எனது கணவரை தேடியும் அரச புலனாய்வு பிரிவு முல்லைத்தீவினில் அண்மையிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.அவர்களது கேள்விக்கும் பதிலளிக்க எழிலன் கிடைக்கவேண்டியுள்ளது. அதனால் தான் இலங்கை அரசை போன்றே நானும் படையினரிடம் ஒப்படைத்த எழிலனை மீள என்னிடம் கையளிக்க வலியுறுத்தி போராடிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத…
-
- 4 replies
- 893 views
-
-
எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சிறையில் தடுத்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேசிய நிறைவேற்றுப் பேரவையில் இது குறித்து பேசப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சில கட்சிகளினால் ஆன தேசிய நிறைவேற்றுப் பேரவையின் கைகளில் மித மஞ்சிய அதிகாரம் காணப்படுவதாகத் தெரித்துள்ளார். எந்த வீட்டை சோதனையிட வேண்டும் யாரை கைது செய்ய வேண்டும் என்பது குறித்து காவல்துறை திணைக்களமோ புலனாய்வு பிரிவினரோ தீர்மானிப்பதில்லை எனவும் தேசிய நிறைவேற்றுப் பேரவையே இவற்றை தீ…
-
- 4 replies
- 673 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வந்த வடபகுதி மீனவர்களை தற்போது தமிழ் அதிகாரிகளை திட்டமிட்டுப் பழிவாங்கி வருவது பெரும் விசனத்தை அம் மீனவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில்வள அதிகாரியான ரவீந்திரன் என்பவர் தனது மாவட்ட எல்லைப் பரப்பை மீறி யாழ்ப்பாண எல்லைப் பரப்புக்குள் புகுந்து இறால் வலைகளை அறுத்தெறிந்து அட்டகாசம் புரிந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கச்சாய் தொடக்கம் சங்குப்பிட்டிப் பாலம் வரையான பகுதிகளில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்துவரும் மீனவர்கள் தமது இறால் கூடுகளை பதித்து கடல் பகுதியில் இறால் பிடித்து வருகின்றனர். இவ்வாறு இறால் பிடிக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தில் பணிபுரியும் …
-
- 0 replies
- 500 views
-
-
யாழ்ப்பாணத்தில் தூய குடிநீருக்கான உண்ணாவிரதத்தின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள் APR 08, 2015 | 14:18by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் யாழ்ப்பாணத்தில், தூய குடிநீருக்கு உத்தரவாதம் அளிக்கக் கோரி, நேற்று முதல் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், இன்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவின் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தன்னார்வ அமைப்புகள் என்று கூறப்படும் விதைக் குழுமம், தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், சுற்றுச்சூழல் அமையம் ஆகிய அமைப்புகளால் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து, 8 பேர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்…
-
- 3 replies
- 957 views
-
-
வடக்கு மாகாணத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டிருந்த தென் யாழ்ப்பாணத்தின் சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை இரத்துச் செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய குறித்த மின் உற்பத்தி நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மத்திய நிலையத்தின் அதிகாரி ரவீந்திர காரியவசத்திடம் ஶ்ரீலங்கா மிரர் இணையத்தளம் கேட்டபோது, யாழ்ப்பாணம், சுண்ணாகம் பிரதேசத்தில் குடிநீரில் எவ்வித விஷயத் திரவமோ அல்லது வேறு எவ…
-
- 0 replies
- 409 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பதத்தை எவரும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உபயோகிக்காதிருக்கும் வகையில் தடை விதிக்குமாறு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு கடந்த மார்ச் 30ஆம் திகதியிட்டு ஆனந்தசங்கரி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எனது ஆட்சேபனைக்குரிய காரணத்தை தங்களை இலகுவாக விளங்கவைக்க த.தே.கூ ஆரம்பித்த காலம் தொட்டு கடைசியாக உபயோகிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றது வரையான வரலாற்றை தெளிவுபடுத்த வேண்டும். குழப்பங்களும் தவறான அபிப்பிராயங்களும்; ஏற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கென உரிய சின்னம் …
-
- 3 replies
- 456 views
-
-
யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகன் நேரடியாக சென்று திர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனைத் தொடர்ந்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் நடைபெற்ற நல்லூர் முன்றலுக்கு நேரடியாகச் சென்ற ஆளுநரும் அரச அதிபரும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த நீர்மாசடைதல் தொடர்பாக போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளுக்குச் சாதகமான தீர்வொன்றினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனை அடுத்தே உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. நீரைப்பருக வேண்டாம் என்றும், அறிக்கையை ஆராய்ந்து ஒரு வாரங்களுக்கள் முடிவை அறிவிப்பதாகவும், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து தூயநீருக…
-
- 0 replies
- 445 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் நேவிசம்பத் என்பவரின் வெள்ளைவான் குழுவினரே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என் ரவிராஜினை படுகொலை செய்துள்ளமை பெருமளவிற்கு உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2006 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 திகதி நாரஹென்பிட்டியில் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலைதொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், கடற்படையை சேர்ந்த நேவி சம்பத் என அழைக்கப்படும் சம்பத்முனசிங்க என்ற அதிகாரியையும்,பிரசாத் ஹெட்டியாரச்சி என்ற அதிகாரியையும் கைதுசெய்துள்ளது. இந்த சந்தேகநபர்கள் ரவிராஜினை கொலை செய்யுமாறு அரசபுலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் மகில் டோல் என்பவர் தமக…
-
- 0 replies
- 474 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்;கின்ற நான்கு கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்தின்போது முதலில் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலத்தடி நீர் பிரச்சினை சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது. இது சம்பந்தமான நிபுணர்குழு இது குடிப்பதற்கு பாதுகாப்பான தண்ணீர் என்று இறுதி அறிக்கையிடும் வரைக்கும் தொடர்ந்தும் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும், தண்ணீர் இன்னும் தேவைப்படுமிடத்து மேலதிக நீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இதற்காக ம…
-
- 0 replies
- 279 views
-
-
.இந்த ஊழல்கள் விசாரணைக் குழுவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளன - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட குழுவினர் முன்னைய ஆட்சிகாலத்தில் அந்த விமானச்சேவை தொடர்பாக இடம்பெற்ற பல மில்லியன் டொலர் ஊழல்கள் குறித்து கண்டுபிடித்துள்ளனர். இந்த ஊழல்கள் அந்த குழுவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. விமானத்துடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் பொறுப்பை யாருக்கு வழங்குவது போன்ற விடயங்களில் ஆரம்பித்து ஊழல் சகல விடயங்களிலும் இடம்பெற்றுள்ளது.தகுதியற்ற பணியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இது தவிர பாதுகாப்பு நடைமுறைகளில் பாரிய மீறல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட விசாரணைகளை மேற்கொண்ட மூத்த சட்டத்தரணி ஜே.சி வெலியமுன தலைமையிலான குழு…
-
- 7 replies
- 1.7k views
-
-
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சிங்கப்பூரில் மரணம் APR 08, 2015 | 7:21by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் மிகவும் செல்வாக்குப் பெற்ற இரண்டு பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின், மகாநாயக்க தேரரான, வண.உடுகம சிறீ புத்தரகித்த தேரர், இன்று சிங்கப்பூரில் காலமானார். நோயுற்ற நிலையில் சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் அவர் மரணமானதாக, தலதா மாளிகையில் தியவதன நிலமே அறிவித்துள்ளார். மரணமான அஸ்கிரிய பீடாதிபதி வண.உடுகம சிறீபுத்தரகித்த தேரருக்கு வயது 85 ஆகும். சிறிலங்காவில், அரசியல் செல்வாக்குப் பெற்ற முக்கியமானதொரு பௌத்த மத தலைவராக இவர் இருந்து வந்தார். சியாம் பௌத்த பாரம்பரியத்தைக் கடைப்பிட…
-
- 0 replies
- 343 views
-
-
யாழ். நகரப் பகுதியில் நடைபெறும் விளம்பர ஒலிபரப்பு சேவையான ’வணிகலயம்’ என்னும் பெயருடைய டான்ரீவி பணியாளரான ஜெயச்சந்திரனால் நடாத்தப்படும் ஒலிபரப்புச சேவை உரிய முறையில் கேள்வி அறிவித்தல் விடப்படாது நடைபெறுவதாகவும் இதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி கோரிக்கை முன்வைத்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றது. யாழ். மாநகர சபையின் கீழுள்ள இந்த விளம்பர ஒலிபரப்பு சேவையானது, உரிய முறையில் கேள்வி அறிவித்தல் விடாமல் சீரான முறையில் நடைபெறவில்லையெனவும் அதற்கு சபை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென முதலமைச்சரிடம் உறுப்பினர் கேள்வி எழுப்பினர். …
-
- 0 replies
- 647 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தற்போது ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பாக வெளியிட்டு வரும் தகவல்களால், மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய நபர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வருவதாக தெரியவருகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் வழங்கி பேட்டி ஒன்றில் கருத்து வெளியிட்ட மேர்வின் சில்வா, ராஜபக்சவினர் செய்யுமாறு கூறிய வேலைகளையே தாம் செய்ததாகவும் பின் அவர்கள் செய்நன்றி மறந்து போயினர் என்றும் கூறியிருந்தார். அத்துடன் வெள்ளை வான் சம்பவங்களின் பின்னனியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாகவும் அவர் வெள்ளை வான் கலாச்சாரத்தின் பிதாமகன் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டிருந்த…
-
- 0 replies
- 480 views
-
-
தேசிய அரசு உதயமாகிய பின்னர், நாடாளுமன்றில் முதன்முறையாக இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 21 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. திறைசேரி உண்டியலூடாக அரசு பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகையை 400 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்த இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இவ்வாறு பிரேரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பிக்கள் மேசைகளைத் தட்டியும், கூச்சலிட்டும் சபையில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரேரணையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை. அத்துடன், எதிர்க்கட்சித் தல…
-
- 3 replies
- 518 views
-
-
‘என்ர பிள்ளையின்ர முகத்தை பார்த்திட்டுத்தான் சாகவிரும்பிறம், என்ர பிள்ளை இருக்கிறானோ இல்லை எண்டு கண்டு பிடிக்கிறதக்கு உதவுங்கோ” என இராணவத்தால் கடத்தப்பட்ட ஊடகவியலளார் சுப்பிரமணியன் இராமச்சந்திரனின் பெற்றோர் தமிழ்நெற்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளனர். யாழ்.தினக்குரல் மற்றும் வலம்புரிப் பத்திரிகையின் வடமராட்சிப் பிராந்தியச் செய்தியாளராக இருந்த சுப்பிரமணியம் இராமச்சந்திரன் 2007 ஆம் ஆண்டு யாழ். வடமராட்சி கலகை சந்தியில் வைத்து சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்தார். 9 மற்றும் 12 வயதுள்ள இரு குழந்தைகளுக்குத் தந்தையான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு எட்டு ஆண்டுகள் உருண்டோடிய நிலையிலும் இதுவரை அவர் தொடர்பான எந்தத் தகவலும் தெரியாமல் கவலையடைந்துள்ள பெற்…
-
- 2 replies
- 649 views
-
-
தன்னை மஹா பராக்கிரமபாகு மன்னன் என்று கூறிகொள்ளும் நபரொருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி பெற்றுதருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே அவர், ஆர்ப்பாட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டுள்ளார். தான் மீண்டும் பிறந்து, நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக செயற்பட்டதாக கூறுகின்றார். பிங்கிரிய தளுபனயை வசிப்பிடமாக கொண்ட நீல் தம்மிக்க குணசிங்க என்பவரே இவ்வாறு தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சோவுக்கோ அழி…
-
- 10 replies
- 1.1k views
-
-
தூயகுடிநீருக்காக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பான செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த முன்னணி இளம் ஊடகவியலாளர்கள் மீது யாழினில் இலங்கை காவல்துறையினர் கட்டவிழ்த்து விட்ட கொலை முயற்சி அனைத்து தரப்பினையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இன்றிரவு நல்லூரினில் வைத்து கத்திகளுடன் கொலை நோக்கத்துடன் ஊடகவியலாளர்களை இருகாவல்துறையினர் துரத்தியுள்ளனர். நல்லூரினில் இரவிரவாக தொடரும் உண்ணாவிரத போராட்டம் தொடர்பான செய்திகளை சேகரித்து கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்ட ஊடகவியலாளர்களை நல்லூர் பின்வீதியினில் வைத்து தயார் நிலையினில் கத்தியுடன் மது போதையினில் பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளினில்( மோட்டார் சைக்கிள் நம்பர் BAL 2172) வழிமறித்துள்ளனர். அதையடுத்து சுதாகரித்துக்கொண்ட ஊடக…
-
- 2 replies
- 563 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் திருமண பந்தத்தில் போருக்குப் பின்னர் கையாளப்படும் புதிய அணுகுமுறை APR 08, 2015 | 1:25by நித்தியபாரதிin செய்திகள் வெளிநாடுகளில் வாழும், பணிபுரியும், புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைவதற்கான புதியதோர் மரபுசாரா முறைமை ஒன்றை, புலம்பெயர் தமிழர்கள் போருக்குப் பின்னான புதிய அணுகுமுறையாக உருவாக்கியுள்ளனர். ‘தற்போது நடைமுறையிலிருக்கும் மரபுசார் சாதி, சமூக நிலை, செல்வம் போன்றவற்றைச் சாராத சீதனம் மற்றும் திருமணம் போன்றன தொடர்பில் முற்றிலும் புதிய ஏற்பாடொன்றை போருக்குப் பின்னான புதிய அணுகுமுறையாக புலம்பெயர் மணமகன்கள் வரையறுத்துள்ளனர்’ என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் திணைக்களத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி …
-
- 0 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் புதுமையான திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மரங்களை அழித்து முற்றம் முழுவதும் சீமெந்திட்ட நிலையில் அழகிய யாழ்ப்பாணம் பங்குனி வெய்யிலால் கொளுத்துகிறது. இந்நிலையில் இன்று நடந்த திருமண நிகழ்வொன்றில் மரநடுகையை ஊக்குவிக்கும் முகமாக ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள் விநியோகித்தமை புதிய சிந்தனையை தூண்டியுள்ளது. நாச்சிமார் கோவிலில் நடந்த இத்திருமணத்தில் கொய்யாதேசி, மாதுளை, நெல்லி என பலவகை பயந்தரு மரக்கன்றுகள் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டன. திருமண நிகழ்விற்கு வந்தோர் மட்டுமன்றி வீதியால் சென்றோரும் இக்கன்றுகளை ஆர்வத்துடன் எடுத்துச்சென்றதை காணக்கூடியதாக இருந்தது. மரக்கன்றுகள் ஒவ்வொன்றிலும் தயவு செய்து என்னையும் பலரையும் பயிரிட்டு பயன் பெறுங்கள…
-
- 15 replies
- 1.6k views
-