Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி நல்லாட்சி காலத்தில் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்க முன்னெடுத்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றப் போவதான அறிவிப்பு சரித்திரத்தில் முதல் தடவையாக விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கும் எங்களுடைய தலைவிதியை அடிப்படையிலே மாற்றி அமைக்கக்கூடிய தேர்தலாக இருக்கின்றது என மக்களை எச்சரிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். எனவே, இந்த வரலாற்று மாற்றத்தை தடுக்க இந்த முறை எமது கட்சி 10 பேரை நாடாளுமன்றம் அனுப்ப மக்கள் ஆணை வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்க…

  2. - எம்.மனோசித்ரா எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகரமான நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பாகும். தற்போதைய அரசாங்கத்துக்கு இது ஒரு சிறந்த முன்னறிவிப்பு இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது. எதிர்க்கட்சியின் உறுப்பினராக இருந்த போது கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது எந்தளவு கடினமானது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது புரிந்து கொண்டிருப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகரமான நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பாகும…

  3. ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,601,949 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 117,141 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 10 மாதங்களில் 16 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை | Virakesari.lk

  4. எதிர்காலத்தில் நானும் எனது நண்பர்களும் போல்கார்ட் (ballguard) சின்னத்தின் கீழேயே தேர்தலில் போட்டியிடவேண்டியிருக்கும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது நீங்கள் அனைவரும் எந்த கட்சி என யோசிக்கின்றீர்கள்,நானும் எனது நண்பர்கள் சிலரும் நாங்கள் இதனை முயற்சி செய்து பார்க்கவேண்டும் என விரும்பினோம்,நாங்கள் கட்சியொன்றை உருவாக்கி ஆர்வத்தை ஏற்படுத்துவோம் என நினைத்தோம். ஆனால் கட்சிக்கான பெயர்களை தேடியபோது எல்லா பெயர்களிலும் ஏனையவர்கள் பதிவு செய்திருந்தனர். அதன் பின்னர் கட்சியின் சின்னத்துடன் ஆரம்பிப்போம் என தீர்மானித்து கிரிக்கெட் மட்டையை தெரிவு ச…

  5. யாழ்ப்பாணம், வல்லை - அராலி வீதியின் மீதமுள்ள வீதியையும் மக்கள் பாவனைக்காக திறந்து விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வல்லை - அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரையிலான வீதி கடந்த 34 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகிறது. குறித்த வீதியில் வெள்ளிக்கிழமை (01) பலாலி வீதியில் உள்ள வசாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி தோலாகட்டி சந்தி வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரமான வீதியே திறந்து விடப்பட்டுள்ளது. மிகுதி வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளேயே காணப்படுகிறது. அத்தனையும் விரைவில் மக்கள் பாவனைக்கு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்…

  6. (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை மக்களில் நூற்றுக்கு 58 வீதமானவர்கள் பாராளுமன்ற முறையை அனுமதித்துள்ள நிலையில் பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை. சிலிண்டருக்கு வாக்களித்தால் மாத்திரமே பாராளுமன்ற முறைமையை பாதுகாத்துக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை (30) தம்புள்ளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பமாக பாராளுமன…

  7. மாவீரர் தினத்தை நினைவு கூரும் போதும் அநுர அரசாங்கத்தின் உண்மை முகத்தை அறியமுடியும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கு பகுதியிலும் எமது இளைஞர்கள் அநுரகுமாரவுக்கு பின்னால் அணிதிரள்வது போன்ற ஒரு நிலமை இருக்கிறது. அது உண்மையில் ஒரு மாயை. அரசியல் நோக்கத்திற்காக இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் என்பதற்காக சினிமா பாணியில் கருத்துக்களை கூறுகிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் அவர்களுடைய உண…

  8. யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (01) துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இன்றிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துப்புரவுப் பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் இணைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/197624

  9. யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைக்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்வது தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (29) வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வட மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுராட்சி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவி செயலாளர், வலி. வடக்கு பிரதேச சபையின் செயலாளர், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் இராணுவ உயர் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர். விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு செல்லும் பாதைகள் பற்றைக் காடாக காணப்படுகின்றமையால் காணிகளுக்கான பாதைகள…

  10. 200 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதியினர் விசேட அதிரடிப்படையினரால் கைது! 200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள் குழுவொன்று செவநகர நுகேகலய, கிரிவெவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. வீட்டின் முன்றலில் புதைக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் மறைத்து வைத்திருந்த 53 கிலோ 65 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அந்த வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரி…

  11. மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருதரப்பினரதும் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விடயங்களாக காணப்படுவதால் அவற்றை மனிதாபிமான முறையில் கையாண்டு நிவர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென இந்திய - இலங்கை தரப்பினரும் இணங்கியுள்ளனர். அத்துடன் இரக்கம், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறை மட்டுமே இருதரப்பு மீனவர்களாலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்கு நீடித்த அடித்தளமொன்றினை உருவாக்குமெனவும் அவர்கள் இணங்கியிருந்தனர். மீன்பிடி விவகாரங்கள் குறித்த இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஆறாவது அமர்வு ஒக்டோபர் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. இந்த அமர்வில் கலந்துகொண்டிருந்த இந்திய தூதுக்குழுவ…

  12. கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமைபெறும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. சீனாவுடன் உயர்தர, முன்னுரிமை திட்டங்களுக்கு புதிய நிதியுதவி உட்பட வலுவான நிதி உறவை மீண்டும் தொடங்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என்று திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (30) இரவு நடைபெற்ற சீன உதவிப்பயிற்சி மற்றும் பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கைக்கான சீனாவின் ஆதரவு, நாட்டின் அபிவிருத்திக்கு குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார உதவித் துறையில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது. …

  13. இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளை சீன அரசாங்கம் முழுமையாகப் பரிசீலித்து, பொருத்தமான பயிற்சித் திட்டங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் புதன்கிழமை (30) இரவு நடைபெற்ற சீன உதவிப்பயிற்சி மற்றும் பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், சீன - இலங்கை மனித வள ஒத்துழைப்பின் நன்மைகளைக் கொண்டாடவும், சீன - இலங்கை நட்புறவு என்றும் நிலைத்திருப்பதை வாழ்த்துவதற்காகவும், சீன உதவிப் பயிற்சி பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வு முதற்தடவையாக நடைபெறுகின்றது. சீன பழமொழி “ஒரு மனிதனுக்கு ஒரு ம…

  14. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் கூட்டணியின் வேட்பாளர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், குருசுவாமி சுரேந்திரன், சி.வேந்தன், பா.கஜதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, கட்சியின் முதன்மை பெண் வேட்பாளரான சசிகலா ரவிராஜ்ஜீம் கலந்து கொண்டிருந்தார். இம்முறை , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படு…

  15. காங்கேசன்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள்! நாகபட்டினம் காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் தொடர்ச்சியாக மக்கள் பல்வேறு விதமான குற்றாச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் காங்கேசன்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள் இடம் பெறுவதுடன் மக்களை திட்டமிட்டு தாமதப்படுத்தும் செயற்பாடுகளிலும் சுங்க அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர் காங்கேசன்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளிடம் நீண்ட நேர விசாரணைகள் மேற்கொள்வதாகவும் நபர் ஒருவருக்கு 35 தொடக்கம் 40 நிமிடம் வரை விசாரணை செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர் அடிப்படை வசதிகள் அற்ற அமர்வதற்கு கதிரைகள…

  16. மன்னார் காற்றாலையை அமைக்கும் அதானியின் திட்டம் கைவிடப்படுமா? இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணி தொடர்பில கலந்துரையாடல்களை நடத்த எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு ஆரம்பகட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டத்தின் ஊடாக 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. என்றாலும், இத்திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியிருந்ததுடன், தற்போதைய அரசாங்கம…

    • 2 replies
    • 313 views
  17. 2024 ஆம் ஆண்டில் இதுவரை தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று சுகாதார அமைச்சகத்தின் மருத்துவப் பொருட்கள் பிரிவு தெரிவித்துள்ளது. தர சோதனையில் தோல்வியடைந்த 71 மருந்துகளில், சுமார் 39 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, பத்து மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, மற்றவை சீனா, கென்யா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்தவை. இதுகுறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், இந்தியா உலகின் முன்னணி மருந்து உற்பத்தியாளர்களில் ஒருவர் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் தரக் குறைபாடு ஏற்படுவது சாதாரண நிகழ்வு என்றும் …

  18. புதிய அரசும் சிங்கள தேசியவாதத்தையே பேசுகிறது தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்கமுடியும் என்பதுடன் அனுர அரசாங்கமும் சிங்களதேசிய வாதத்தையே பின்தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னிமாவட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை (31) வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , தமிழ்கட்சிகள் ஒற்றுமை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள ஆதங்கம் உண்மையானது. அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோ…

  19. யாழில் கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு! யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். 50 மற்றும் 51 வயதான 2 பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தக…

  20. 0 Less than a minute wp-content/uploads/2024/10/Picsart_24-10-31_11-55-15-628-780x922.jpg ஜ‌ன‌நாய‌க‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சிக்கும் லைக்கா மொபைல் நிறுவ‌ன‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை என‌ ஐக்கிய‌ ஜ‌ன‌நாய‌க‌ குர‌ல் க‌ட்சியின் ச‌பாப‌தியும் ஸ்தாப‌க‌ த‌லைவ‌ருமான‌ முபாற‌க் ம‌ஜீத் முப்தி தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, எம‌து க‌ட்சியை லைக்கா நிறுவ‌ன‌ம் வாங்கியுள்ள‌து என‌ ப‌ல‌ரும் குற்ற‌ம் சாட்டுகிறார்க‌ள்..எம‌து க‌ட்சிக்கும் லைக்காவுக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லை. எம‌து க‌ட்சியின் நிர்வாக‌த்தில் லைக்காவின் உரிமையாள‌ர் அங்க‌த்த‌வ‌ராக‌ இல்லை. அத்துட‌ன் முன்னாள‌ பாராளும‌ன்ற‌ உறு…

  21. முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து குறித்து ரணில் கேள்வி! முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அரசாங்கம் நீக்கியதன் காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சந்திரிக்காவின் கணவரின் கொலையுடன் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தொடர்புபட்டுள்ளது. அவருக்கும் குண்டுவெடிப்பினால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்காக மட்டுமே நாங்கள் ஒன்றிணைந்து செய…

      • Haha
    • 2 replies
    • 501 views
  22. இலங்கைக்கான புதிய விமான சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்! போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வார்சா – கொழும்பு இடையிலான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 2025 மார்ச் இறுதி வரை தொடர்ந்து இயங்கும் என என்டர் ஏர் கூறியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. அதன் முதல் விமானமானது நேற்றைய தினம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA)வந்தடைந்தது. விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அதற்கு நீர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை சுற்றுலாத்துறையால் ஏற்பாடு…

  23. ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது October 30, 2024 ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை தமிழ் மக்கள் இழைத்துவிடக் கூடாது. அதற்கு எதிராகப் போராடக் கூடிய கட்சியாகிய தமிழ்த் தேசிய முன்னணிக்கு வாக்களித்து அக்கட்சியைப் பலப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக் கிழமை (27.10) மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திற் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ‘இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தமிழ்…

      • Like
    • 4 replies
    • 612 views
  24. ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி! தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கு ஒளிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஒளியை பரவச் செய்வதாக அமையட்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அந்த செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றன…

  25. மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை. மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரான சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், அங்குள்ள இலங்கையர் யாருக்காவது நாட்டுக்கு வரவே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.