ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
நோ பயர் சோன்” திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்குமாறு மெக்ரே மைத்திரியிடம் கோரிக்கை இலங்கையின் போர்க்குற்றங்களை சித்தரிக்கும் “நோ பயர் சோன்”; விவரணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கெலம் மெக்ரே கோரியுள்ளார். சிங்கள மொழியில் பிரதி செய்யப்பட்ட இந்த படம் நேற்று பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. இதன்போதே இலங்கையின் தொலைக்காட்சிகள் இந்த படத்தை காண்பிக்க வேண்டும் என்று மெக்ரே கோரிக்கை விடுத்தார். இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுக்கக்கூடாது என்றும் அவர் கோரினார். இதன்மூலம் போரின் போது நடந்த உண்மைகளை சிங்கள மக்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் மெக்ரே குறிப்பிட்டார். …
-
- 19 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு அடிப்படை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அக்கறை செலுத்தக்கோரி போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினால் உண்ணாவிரத போராட்டமொன்று இன்று யாழ். பொது நூலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இப்போராட்டம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில், வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் கலாசாரத்திலும், பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் கொண்டுள்ள பற்றுறுதியை பிரதிபலிக்கும் வைகயில் ஈழத்தின் சிரசென விளங்கும் உலக தமிழர்களின் கலாசார வாழ்விடமான யாழ்ப்பாணத்தில் இம் மாதம் 14ம் திகதிக இந்திய அரசால் 900 ம…
-
- 0 replies
- 359 views
-
-
தேசிய நிறைவேற்றுப் பேரவையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் விசாரணை நடத்த கோத்தபாயவை கைது செய்ய வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற தேசிய நிறைவேற்றுப் பேரவையில் விரிவாக ஆராய்பட்டது. காலி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில் காலி நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கோத்தபாய உள்ளிட்ட நால்வரை வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் குறித்த விடயம் பற்றி பேசப்…
-
- 0 replies
- 487 views
-
-
மலக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் ஒன்றினை தாம் உருவாக்கி வருவதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் எஸ். பிரணவநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாநகர சபை எல்லைக்குள் இருந்து அகற்றும் மலக்கழிவுகள் கடந்த காலங்களில் கல்லுண்டாய் வெளியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு குறித்த பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து மலக்கழிவு கொட்டுவது நிறுத்தப்பட்டதுடன் மாற்று நடவடிக்கை ஒன்றினையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதனையடுத்து, மலக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்குவதற்காக தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு, எங்கள் ஊழியர்களைக் கொண்டு இயந்திரத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். இதற…
-
- 0 replies
- 374 views
-
-
புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் றூவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பொலிஸ் பேச்சாளராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன அண்மையில் வெளிநாட்டு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றூவான் குணசேகர பதில் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். இந்தநிலையில் பொலிஸ் பேச்சாளராக றூவான் குணசேகர பொலிஸ் தலைமையகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையும் பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றிய அஜித் ரோஹண கொழும்பு – வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=823313913212790482
-
- 0 replies
- 218 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண வருகையிட்டு வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் - கீரிமலை வீதியின் இரு மருங்கிலும் உள்ள பற்றைகள் வெட்டி அகற்றப்படுவதுடன் கீரிமலையில் இருந்து சேந்தான்குளம் செல்லும் வீதியில் சில பகுதி கற்கள் போடப்பட்டு துப்பரவு செய்யப்படுகின்றன. இந்தியப் பிரதமர் 14ஆம் திகதி கீரிமலைக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றை திறந்து வைக்கின்றார். இதனால், இப்பகுதியில் துப்பரவு பணிகள் இராணுவத்தினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. http://seithy.com/breifNews.php?newsID=128112&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 420 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடாகியுள்ளது. இதற்காக ராஜபக்ச நாளை தமது ஊரில் இருந்து கொழும்புக்கு வரவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தமையை அடுத்து அவர் பெரும்பாலும் தமது ஊரான தங்காலையிலேயே தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மோடியை ராஜபக்ச சந்திப்பாரா? என்று புதுடில்லியில் வைத்து இந்திய வெளியுறவு செயலாளர் எஸ் ஜெயசங்கரை செய்தியாளர்கள் கேட்டபோது, தம்மிடம் இதுகுறித்த தகவல்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ht…
-
- 0 replies
- 206 views
-
-
சிறிலங்கா பேரினவாத அடக்குமுறைகளுக்குள் தொடர்ச்சியாக அவலவாழ்வை எதிர்நோக்கும் எம்முறவுகளின் வாழ்வில் எந்தமாற்றமும் இன்னும் ஏற்படவில்லை. பறிபோன தமிழர் நிலமும் காணாமல்போன உறவுகளின் கண்ணீரும் சிறையில் வாடும் எம்சொந்தங்களின் ஏக்கங்களும் இன்னும் ஒரு மாற்றத்தையும் பெற்றுக்கொடுக்கவில்லை. பறிக்கப்பட்ட நிலத்தை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கும் காணாமல்போன உறவுகளை பற்றி இனியேனும் அறிவதற்கும் இன்னும் அவகாசம் வேண்டும் எனக்கோருகின்றது சிறிலங்கா அரசு. அடிப்படை சுதந்திரவாழ்வை இழந்தவர்களையே இன்னும் பொறுங்கள் என கோருகின்றன சர்வதேச அரசுகள். இத்தகைய நெருக்கடிவாழ்விலும் 18000 பேரின் விபரங்கள் முறையான விதத்தில் காணாமல்போனவர்கள் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டிருந்தும் இன்னும் உரு…
-
- 0 replies
- 237 views
-
-
என்னை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது தூதரகங்களை வெளிப்படையாகவே பயன்படுத்தின என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். சீனாவை தேவையற்ற விதத்தில் உள்நாட்டு அரசியலுக்குள் இழுப்பதன் மூலமாக இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த நாட்டுக்கு அநீதியான விதத்தில் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'சௌத் சீனா மோர்னிங் போஸ்டி'ற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். சீனா அளித்த உதவிகளுக்காக அவர்கள் அந்த நாட்டுக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும். அதற்கு மாறாக இவர்கள் சீனாவை ஒரு குற்றவாளிபோன்று நடத்த முயல்கின்றனர். சீனாவை இது தனது நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக கருதவேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன், …
-
- 2 replies
- 345 views
-
-
28 ஆண்டுகளின் பின் இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கை செல்கிறாhர். இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமரின் தற்போதைய பயணம் அங்கு ஓர் நிரந்தரத் தீர்வையும் அமைதியையும் உண்டாக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியப் பிரதமர் ஒருவர் வடமாகாணம் செல்வது இதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குக் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு வாழ் தமிழரின் சிக்கல்களுக்குத் தீர்வுகாண மதிப்புக்குரிய பிரதமர் மோடி அவர்கள் தனிப்பட்ட முறையில் உறுதி பூண்டிருப்பதைக் கனடியத் தமிழர் பேரவை வரவேற்கிறது. 2009ஆம் ஆண்டின் பின் நில அபகரிப்பு, தடுத்து வைத்…
-
- 0 replies
- 155 views
-
-
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய , உள்நாட்டு விசாரணை ஒன்றை இன்னும் சுமார் ஒரு மாதத்தில் அமைக்கலாம் என்று தான் நம்புவதாக, இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். லண்டனுக்கு வந்திருந்த சிறிசேன, பிபிசியின் சிங்கள மொழிப்பிரிவிடம் பேட்டியளித்தபோது, இந்த விசாரணை என்பது இலங்கைஇன் சட்டதிட்டங்களுக்கு அமைய செயல்படும் ஒன்றாக இருக்கும் என்றும், இலங்கையின் அரசியல் சட்ட வரையறைக்குள் இயங்கும் என்றும் கூறினார். அந்த விசாரணையில் பணியாற்றும் அதிகாரிகள் சுயேச்சையாகவும், பக்கசார்பற்ற முறையிலும் செயல்படுமாறு கோரப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். விசாரணையின் முடிவில் தவறிழைத்ததாகக் கண்டறியப்படும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என…
-
- 0 replies
- 208 views
-
-
சரண்யா தாய், தந்தையர் அற்ற ஏழைச் சிறுமி என்பதால் காடையர்கள் பலரால் பாலியல் வன்கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த பின்னும், சிறுமிக்காக நீதி வேண்டிக் குரல் கொடுக்க இலங்கையின் பெண்கள், சிறுவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தன்னார்வ அமைப்புக்கள், நிறுவனங்கள் எவையுமே எட்டிக்கூடப் பார்க்கவில்லை! ஏழைகளின் நிலை இதுதான். கனகராயன்குளம் மன்னகுளத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி செல்வராசா சரண்யாவைப் பாலியல் வன்கொடுமைப்படுத்தி சிறுமியின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் சிறுமி, தாய் தந்தையர் அற்றவர் என்பதாலும் சிறுமியின் குடும்பம் ஏழ்மைக் குடும்பம் என்பதாலும் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாவர்கள் இன்னமும் கைது செய்யப்படாது ஏனோதானோ …
-
- 3 replies
- 2k views
-
-
ஈழத்தில் ஜனநாயகம் தளைத்தோங்குகிறது என்பதைக் காட்டுவதாகவே அங்கு இடம்பெறும் உருவப் பொம்மைகள் எரிப்புப் போராட்டங்கள் காட்டி நிற்கின்றன. ஆனால் தலைவர்களின் உருவப் பொம்மைகளை எரிக்கும் செயல்கள் மக்களின் எழுச்சியால் இடம்பெறவில்லை. என லங்காசிறி வானொலியின் இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்வைத்து அரங்கேற்றப்படும் ஒரு நாடகம் இந்த உட்கட்சிப் போட்டி என்பதை தெளிவாகக் காண்கின்றார்கள். மாறாக தமிழினம் தனது துன்பங்களிலிருந்து சிறிதாவது மீளக்கிடைத்துள்ள சூழ்நிலையைக் குழப்புவதற்காக உணர்ச்சி அரசியலை சிலர் முன்னெடுக்கின்றனர். யாழ் தேர்தல் மாவட்டப் பிரதிந…
-
- 7 replies
- 820 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான செயற்பாடுகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லையென குற்றம் சுமத்தியுள்ளார் சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல். பிணையில் வெளிவந்த ஜெயக்குமாரிக்காக இதுவரை நீதிமன்றில் ஆஜராகி வாதாடி வந்த இவர், ஏனைய அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலும் தொடர்ந்தும் குரல்கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இதனை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்தி…
-
- 1 reply
- 443 views
-
-
சீனாவை குற்றவாளி போல நடத்துகிறது புதிய அரசாங்கம்- மகிந்த விசனம் MAR 12, 2015 | 0:22by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீனா விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும், சீனாவை குற்றவாளி போல நடத்துவதாகவும், குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. ஹொங்கொங்கில் இருந்து வெளியாகும் சவுத் சைனா போஸ்ட் நாளிதழுக்கு அளித்துள்ள தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தேவையின்றி உள்நாட்டு அரசியலுக்குள் சீனாவை இழுத்துள்ளது. இது நியாயமற்றது. சீனா வழங்கிய உதவிகளுக்காக இவர்கள் நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். ஆனால், இவர்கள் குற்றவாளியைப் போல சீனாவை நடத்துகிறார்கள்”என்றும்…
-
- 1 reply
- 455 views
-
-
உள்நாட்டு விசாரணையில் ஐ.நா தேவையில்லை – பிபிசி செவ்வியில் மைத்திரி MAR 12, 2015 | 0:51by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் ஐ.நா அதிகாரிகளின் தலையீடு இல்லாத உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அடுத்த மாதத்துக்குள் நிறுவப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறுவ்முடியும் என்று நம்புகிறேன். அனைத்துலக அழுத்தங்கள் இருந்தாலும், ஐ.நா விசாரணையாளர்கள் இதில் தொடர்புபடமாட்டார்கள். மனிதஉரிமை மீறல்கள் தொட…
-
- 1 reply
- 372 views
-
-
13வது திருத்தம் இறுதித் தீர்வல்ல என்பதை மோடியிடம் வலியுறுத்துவோம் – விக்னேஸ்வரன் MAR 12, 2015 | 1:35by அ.எழிலரசன்in செய்திகள் 13வது திருத்தச்சட்டத்துக்குப் பதிலீடாக, கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தி ஹிந்து நாளிதழுக்கு, மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “13வது திருத்தச்சட்டம் தமிழர்களின் பிரச்சினைக்கு இறுதியான தீர்வாக இருக்க முடியாது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாம் வரவேற்கிறோம். அவர் ஒரு நண்பர். வடக்கிற்கு வரும் அவரது, எம்மைப் பற்றிய கரிசனைகளை மதிக்கிறோம். அவரிடம் நாம், 1987ம் ஆண்டு செய்து க…
-
- 1 reply
- 433 views
-
-
நாளாந்தம் 3.8 இலட்சம் டொலர் இழப்பு – சிறிலங்காவுக்கு சீன நிறுவனம் எச்சரிக்கை MAR 12, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தமக்கு நாளொன்றுக்கு, 3.8 இலட்சம் டொலர் இழப்பு ஏற்படுவதாகவும், தமது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், சீன நிறுவனம் எச்சரித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகர கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனமே இந்த எச்சரிக்கையை நேற்று விடுத்துள்ளது. புதிய அரசாங்கத்தினால் மார்ச் 6ம் நாள் இந்த திட்டப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதில் இருந்து, இன்று வரை 2.33 மில்லியன் டொலர் இழப்பு தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. “இறுதியான முடிவ…
-
- 0 replies
- 440 views
-
-
உள்நாட்டு விசாரணை ஆவணங்கள் ஜூலையில் வெளியிடப்படும் – பிரித்தானியாவிடம் வாக்குறுதி MAR 12, 2015 | 0:07by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நா விசாரணையாளர்கள் வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, சிறிலங்காவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஆவணத்தொகுதி வெளியிடப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். பிரித்தானியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் எட் மில்லிபான்டைச் சந்தித்த போதே இந்த வாக்குறுதியை அளித்திருக்கிறார். சிறிலங்கா அதிபர் தங்கியிருந்த லண்டன் ஹில்டன் விடுதியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, பொறுப்புக்க…
-
- 0 replies
- 241 views
-
-
சீனத் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுடன் பேசுவார் மோடி – இந்திய பாதுகாப்பு நிபுணர் MAR 11, 2015 | 8:36by கார்வண்ணன்in செய்திகள் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகள் குறித்து, சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவார் என்று இந்திய பாதுகாப்பு நிபுணர் குவாமர் அகா தெரிவித்துள்ளார். இந்திய செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “இந்தப் பிராந்தியத்தில் தனது பாதுகாப்புத் தளங்களை அமைப்பதன் மூலம் இந்தியாவைச் சுற்றிவளைப்பதே, சீனாவின் திட்டமாகும். தனியே இந்தியா மட்டுமன்றி, தனியே இந்தியா மட்டுமன்றி, சிறிலங்காவும் கூட தனது நாட்டை சீன இராணுவம் பயன்படுத்துவதை விரும்பவில…
-
- 0 replies
- 291 views
-
-
இந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள் MAR 11, 2015 | 7:54by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்தியாவில், ஒரு இலட்சத்து, இரண்டாயிரத்து நான்கு இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாக, இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில், எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில அரசாங்கங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 2014 டிசெம்பர் 1ம் நாள், 1,02,004 இலங்கை அகதிகள் தங்கியிருக்கின்றனர். இவர்களில், 64,931 அகதிகள், தமிழ்நாட்டில் உள்ள 109 முகாம்களிலும், ஒடிசாவில் உள்ள ஒரு முகாமிலும், வசித்து வருகின்றனர். எஞ்சிய 37,073 இலங்கை அகதிகள், அருகிலுள்ள காவல்நிலையங்களில் பதி…
-
- 0 replies
- 296 views
-
-
மார்ச் 07 2015 சனிக்கிழமை அன்று கனடாத் தமிழ்ச் சமூக ஆர்வலர் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் ரொறொன்ரோ நகரிலுள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. “தாயகம தேசியம் தன்னாட்சியுரிமை நோக்கித் தமிழீழ அரசியல் தலைமையைச் செம்மைப்படுத்துவோம்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தை நீண்ட காலத் தமிழின உணர்வாளரான திரு. பாபு அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார். மண்டபம் நிறைந்த மக்களின் ஆர்வமிக்க வருகையானது இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தையும் தமிழீழ அரசியல் தலைமைமேல் கனேடியத் தமிழர் கொண்டுள்ள அதிருப்தியையும் வெளிக்காட்டுவதாக அமைந்தது. கனேடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்…
-
- 1 reply
- 507 views
-
-
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பாரியாரும் இச்சந்திப்பின் போது கலந்து கொண்டுள்ளார். http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu6G.html
-
- 1 reply
- 585 views
-
-
கொழும்பு துறைமுகம் இந்தியாவிற்குரியதா அல்லது இலங்கைக்குரியதா என இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் ஜி சியான்லயாங் கேள்வி எழுப்பியுள்ளார் கொழும்பில் உள்ள தூதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். கடந்த வருடம் இலங்கை துறைமுகத்திற்கு சீனா நீர்மூழ்கிகள் வந்தவேளை பலரும் அதனை பெரிதுபடுத்தி கூச்சலிட்டதை கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீனா நீர்மூழ்கிகள் இலங்கைக்கு வரும் வேளைகளில் மாத்திரம் அது பெரிதுபடுத்தப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். நீர்மூழ்கிகள் குறித்து இந்தியா கரிசனை வெளியிட்டிருந்தால் நான் அது குறித்து இங்குள்ள எனது இந்திய நண்பருடன் ஆராய்வேன், இது அரசியல் அல்லது தந்திரோபாய காரணங்களுக்காக அல்ல மா…
-
- 2 replies
- 695 views
-
-
கடந்த காலங்களில் இடம்பெற்ற போரில் இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள்.அவ்வாறு போரினால் அகதிகளாகவும் அரசியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்த நாம் வருங்காலத்தில் சூழலியல் அகதிகளாக இடம் பெயர கூடாது என வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு கடற்கரை சார் சூழலியல் திட்டங்கள் குறித்த முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தின் தரை மயோசின் காலத்துச் சுண்ணாம்புப் பாறைகளாலானது. நொய…
-
- 1 reply
- 346 views
-