Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழருக்கு புதிதாக எதுவும் தரவில்லை ; பறித்தவற்றையே வழங்குகிறது மைத்திரி அரசு - முதலமைச்சர் எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு அரசின் அமைச்சர்கள் முன்பாக, கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு அரசு வேண்டிய பண உதவிகளையும் அனுசரணைகளையும் வடக்கு-கிழக்கு மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.…

  2. இந்திய – சிறிலங்கா நல்லுறவு – அமைதித் தீர்வுக்கு வழிகாட்டுமா? MAR 01, 2015 | 9:30by நித்தியபாரதிin கட்டுரைகள் இனப்பிரச்சினைக்கு அமைதியான தீர்வை எட்டுவதற்கு, முற்போக்கு புலம்பெயர் தமிழர்களையும், சிறிலங்கா அரசாங்கத்தையும் ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். இவ்வாறு ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில், எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் வி.சூரியநாராயண். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் இந்தியாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டதானது இந்திய-சிறிலங்கா உறவில் புதியதொரு அத்தியாயத்தைத் திறந்துள்ளது. சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத…

    • 0 replies
    • 359 views
  3. கிழக்கு மாகாண சபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் மீண்டும் உட்கட்சி ஜனநாயகம் மறுக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சுப் பதவி தொடர்பில் த.தே.கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்தோசிக்காமல், கட்சிகளுக்கு பங்கிட்டு வழங்காமல் தனியே சம்பந்தர் ஐயா மாத்திரம் எடுத்த தன்னிச்சையான இத்தெரிவை நாம் மிகுந்த வருத்தத்துடன் நிராகரிக்கின்றோம். கிழக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளருமாகிய சிவசக்தி ஆனந்தன் தமது அதிரு…

    • 11 replies
    • 2.8k views
  4. சீன மீன்பிடிக் கப்பல்களுக்கான அனுமதியை மீளப்பெற்றது சிறிலங்கா MAR 01, 2015 | 0:41by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு எட்டு சீன நிறுவனங்களின் கப்பல்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது. சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாட்டை மீறி செயற்பட்டதற்காகவே, சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதிகள் ரத்துச் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, சீன நிறுவனங்கள் தாம் பிடிக்கும் மீன்களின் அளவு, மீன்பிடிப்பதற்கு தாம் கையாளும் பொறிமுற…

    • 2 replies
    • 404 views
  5. 67 வருடங்களாக எம்மை ஏமாற்றியது போன்று இனியும் ஏமாற்றக்கூடாது - முதலமைச்சர் விக்னேஸ்வரன் கௌரவ ஆளுநர் அவர்களே, மத்திய அரசாங்க அமைச்சர்கள் அவர்களே, பிரதி அமைச்சர்அவர்களே, வடமாகாண அமைச்சர்களே, கௌரவ அதிதிகளே, அலுவலர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே! இன்று எம்மிடையே மூன்று மத்திய அரசாங்க அமைச்சர்கள் வந்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. புதிய அரசாங்கம் வந்த பின் ஒரு வித்தியாசமான அரசியல் கலாசாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது மத்திய அரசாங்கம் வேண்டிய பண உதவிகளையும் அனுசரணைகளையும் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது வட கிழக்கு மாகாண மக்களுக்கு. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் எமக்குத் தரப்படுவன யாவும் எமக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டியவையே ஒளிய புதியன அல்ல என்ற எண்ணம…

    • 3 replies
    • 510 views
  6. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படாதமை கவலையளிப்பதாகவும், இருப்பினும் அடுத்த செப்ரெம்பர் மாதம் அந்த அறிக்கை வலுவானதான அமையும் என எதிர்பார்ப்பதாகவும், ஐ.நா. உயர் அதிகாரியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், நேற்று இலங்கை வந்தடைந்தார். இலங்கை வந்த அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பிலேயே மேற்படி விடயத்தை அவர்கள் ஐ.நா. அதிகாரியிடம் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசு…

    • 1 reply
    • 457 views
  7. எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு அரசின் அமைச்சர்கள் முன்பாக, கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு அரசு வேண்டிய பண உதவிகளையும் அனுசரணைகளையும் வடக்கு-கிழக்கு மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் எமக் குத் தரப்படுவன யாவும் எமக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டியவை. அவை புதியன அல்ல என்ற எண்ணம் எங்கள் மக்கள் மனதில் எழாமல் இருக்க முடியாது. …

  8. முன்னைய ஆட்சியின் போது இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் சவாலாக விளங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28 வது கூட்டத்தொடர் நாளை 2ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. ஆரம்ப தின நிகழ்வில் உரை நிகழ்த்தவுள்ள மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல்- ஹுசைன் இலங்கை விவகாரம் பற்றியும் சுருக்கமாக குறிப்பிடவுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கை மீதான விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இதன்போது அவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார். அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த அறிக்கையும் மார்ச் முதல் வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் பற்றியும், நாடுகள் முன…

  9. யாழ்.மாவட்டத்தில் காரைநகர் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் கடமைக்குச் சென்ற, பாலூட்டும் தாயான ஆசிரியை ஒருவரை கெட்டவார்த்தைகளால் திட்டியதால், மயங்கீ வீழ்ந்த ஆசிரியை யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது: தனது மகப்பேற்று விடுமுறையை முடித்துக் கொண்டு கடமைக்குத் திரும்பிய ஆசிரியை கையொப்பமிடச் சென்ற போது, கையொப்பப் பதிவேட்டை எடுத்து எறிந்த அதிபர், மிக மோசமான கெட்டவார்த்தைகளாலி் அவரைத் திட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக சக ஆசிரியர்களால் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக சு…

  10. ஐ.நா உயர் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன் கூட்டமைப்பு, மைத்திரியுடன் பேச்சு FEB 28, 2015 | 15:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்கு இன்று வருகை தந்த ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர்மட்டப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று காலை கொழும்பிலுள்ள விடுதியொன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, போர் குறித்த உள்நாட்டு விசாரணை மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விசாரணைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஐ.நா பிரதிநிதியிடம் எடுத்துக் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரே…

    • 1 reply
    • 401 views
  11. கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்­கின்­றன. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் உறுப்­பி­னர்கள் 14 பேர் தாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்­சி­ய­மைக்க ஆத­ரவு தெரிவித்து வழங்கிய சத்தியக் கட­தா­சி­களை வாபஸ் பெறப்போவதாக அறி­வித்­துள்­ளதை அடுத்து இந்த நிலை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு. முன்னணியும் முஸ்லிம் காங்கி­ர ஸும் செய்து கொண்டுள்ள உடன்பாட்டில் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் பதவியை முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு முன்னைய ஒப்பந்தத்தின்படி விட்­டுக்­கொ­டுப்­ப­தாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பொறுப்­புக்­களில் மாற்றம் செய்வதில்லை எனவும் இருத­ரப்­பு­களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கிழக்கு மாகா…

    • 1 reply
    • 1k views
  12. உள்ளக விசாரணைப் பொறிமுறைமையை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. உள்ளக விசாரணைப் பொறிமுமைக்குத் தேவையான சட்ட அடிப்படைகளே முதலில் பூர்த்தி செய்யப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக உள்ளக விசாரணைப் பொறிமுறமையை பூர்த்தியாக்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணை தொடர்பிலான அறிக்கை இந்த மாத அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும், இலங்கை அரசாங்கத்தின்…

    • 0 replies
    • 280 views
  13. நாட்டு மக்களின் நன்மைகருதி அலரி மாளிகையைச் சுற்றி அழகுபடுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பூங்கன்றுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு, கடந்த ஆட்சியாளர்களினால் குறித்த பூங்கன்றுகள் வைத்து அலரி மாளிகை சுற்றுப்புறம் அழகுபடுத்தப்பட்டிருந்தது. அவற்றை பராமரிப்பதற்கான செலவு அதிகமாக காணப்படுவதாகவும் இவற்றை பராமரிப்பதற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுவதாகவும் நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் நன்மை கருதியே இந்த நடவடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவைளை அலரி மாளிகையிலிருந்து அகற்றப்படும் அ…

    • 0 replies
    • 310 views
  14. புதிய காத்தான்குடியில் இடைநிறுத்தப்பட்டிருந்த மஸ்ஜிதுல் அக்ஷா வடிவிலான பெரிய பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணத்துக்கு நிதியுதவிம்ஆ பள்ளிவாசலின் நிர்மாணப்பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக சவூதி அரேபிய அரசாங்கம் நிதியுதவி அளித்துள்ளது. நிதியின்மை காரணமாக இந்த பள்ளிவாசலின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், நாளை திங்கட்கிழமையிலிருந்து இதன் நிர்மாணப்பணிகள் தொடரப்படவுள்ளன. இந்த பள்ளிவாசலின் மேலதிக நிர்மாணப்பணிகளுக்காக சவூதி அரேபிய அரசாங்கம் 87 மில்லியன் ரூபாய் நிதியை முதல் கட்டமாக வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இந்த காசோலையை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் …

    • 0 replies
    • 263 views
  15. தமிழ் இளைஞர்கள் கடத்தல் குறித்து சிறிலங்கா கடற்படை முன்னாள் பேச்சாளரிடம் விசாரணை MAR 01, 2015 | 1:00 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்பிலும், திருகோணமலையிலும், தமிழ் இளைஞர்களும் அவர்களின் பெற்றோரும் கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்கவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டுக்கும், 2009ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கொழும்பு மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கடத்தப்பட்டு காணாமற்போயிருந்தனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில், 2010ம் ஆண்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தி…

    • 0 replies
    • 363 views
  16. தொடங்கியது புறக்கணிப்பு! அல்லாடுகின்றது உள்ளக விசாரணை!! முன்னைய மஹிந்த அரசினால் காணாமல் போனோர் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு எதிர்வருங்காலங்களினில் ஒத்துழைப்பதில்லையென்ற தீர்மானம் இன்று முதல் அமுல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சிவில் சமூக அமையமும் காணாமல் போகச் செய்யப்பட்ட நபர்களின் நலன் பேணும் அமைப்பும், காணாமல் போனோர் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் அனைத்தையும் எதிர்காலத்தில் பகிஸ்கரிப்பதென்று முடிவு செய்திருந்தன. அவ்வகையினில் திருகோணமலையினில் இன்று 28ம் திகதி முதல் பெப்ரவரி - 3 மார்ச் 2015ம் திகதி வரை நடைபெறவுள்ள ஆணைக்குழுவின் அமர்வுகளை பகிஸ்கரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. முன்னதாக தமிழ் சிவில் சமூக அமையத…

    • 0 replies
    • 575 views
  17. வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா வருகிறார் சுஸ்மா MAR 01, 2015 | 0:21by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வரும் 6ம் நாள்- வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்கு, இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சராக சுஸ்மா சுவராஜ், கடந்த ஆண்டு பதவியேற்ற பின்னர், சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இரண்டு நாட்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கும் அவர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரும் 7ம் நாள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதால், இந்திய வெளிவிவகார அமைச்சரை அவர் பெரும்பாலும் சந்திக்…

    • 0 replies
    • 358 views
  18. கச்சதீவு செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞர் இராமேஸ்வரத்தில் கைது FEB 28, 2015 | 12:31by அ.எழிலரசன்in செய்திகள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், அனுமதியின்றி கச்சதீவு செல்ல முயன்ற கிளிநொச்சியைச் சேர்ந்த இலங்கை அகதி ஒருவர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்த 27 வயதான பிரசாந்த என்ற இந்த இளைஞர், இன்று கச்சதீவு செல்லும் பயணிகளுடன் புறப்பட முயன்ற போது, முறையான ஆவணங்களின்றி பயணம் செய்ய முயன்றதாக கூறி, கியூ பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, கச்சதீவுக்கு செல்ல முயன்ற ஊடகவியலாளர் ஒருவர் உள்ளிட்ட 23 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்…

    • 0 replies
    • 423 views
  19. பிரிகேடியர் கெப்பிட்டிவலன இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கம் FEB 28, 2015 | 12:14by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் டி.சி.கெப்பிட்டிவலன, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரிகேடியர் கெப்பிட்டிவலன கொழும்பு நகர பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த காலப்பகுதியில், நடந்த காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், மற்றும் படுகொலைகள் தொடர்பாக அரசாங்கம் சிறப்பு விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைகளில் இவர் தலையீடு செய்யலாம் என்பதாலேயே, இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளர் பதவியில் இருந்து…

    • 0 replies
    • 242 views
  20. இந்திய வரவு செலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு FEB 28, 2015 | 11:49by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்தியாவின் 2015/16ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்காவுக்கான உதவித் திட்டங்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று 2015/16ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இதில் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 19 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக, வெளிநாடுகளில் பொருளாதார , தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு 9107 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வரவுசெலவுத…

    • 0 replies
    • 224 views
  21. வடமராட்சி கிழக்குஇ குடாரப்பு மண் தமிழர் வரலாற்றில் பெருமை மிக்கது. திருப்பு முனையை தந்தது. போராட்டத்தின் ஒரு பெரும் மைல் கல். பால்ராஜ் எனும் போர் வீரனும் அவர் தம் தமிழ் படையும் தரையிறங்கி எதிரிகள் மீது தாக்குதல் தொடுத்து எதிரிகளை திகைக்க வைத்த மண் என கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க லண்டன் குணா அறக்கட்டளை வடமராட்சி கிழக்கு குடாரப்பு மாணவர்களுக்கு இன்று அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளது. இந்த நிகழ்வு குடாரப்பில் வடமாராட்சி கிழக்கு அமைப்பாளர் சூரியகாந் தலைமையில் நடைபெற்றது. இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்இ குடாரப்பு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அரு…

    • 5 replies
    • 978 views
  22. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூத்த மகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் எதிர்வரும் பொது தேர்தல் மூலம் அரசியலுக்குள் பிரவேசிக்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அவரின் மகள் செயற்பாட்டு ரீதியான அரசியலை ஆரம்பிக்க உள்ளதாகவும் அந்த சிங்கள ஊடகம் கூறியுள்ளது. எவ்வாறாயினும் தனது பிள்ளைகள் எவரையும் அரசியலுக்கு கொண்டு வரப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவரது மகள் அர…

  23. மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாட்டில் முழக்கம்:- மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாட்டில் முழக்கம்:- சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரு நாடு என்ற எமது கொள்கையை அடைய போராடுவோம்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாடு இன்று காலை 10.30 மணிக்கு கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. மேற்படி நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசார செயலாளரும், காரைநகர், வேரப்பிட்டி சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபருமான திரு சிவகுரு இளங்கோ அவர்களது தலைமையில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக கட்சிகளின் கொடிகள் ஏற்றப்பட்டது. தமிழ்த் தே…

  24. லண்டனுக்குச் செல்கிறார் மைத்திரி – மகிந்தவுக்கு கிடைக்காத வரவேற்புக்கு மகாராணி ஏற்பாடு FEB 28, 2015 | 0:36by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் லண்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் மார்ச் 7ம் நாள் பிரித்தானியா செல்லும் சிறிலங்கா அதிபர், லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறும், கொமன்வெல்த் வார கொண்டாட்டங்களில் பங்கேற்கவுள்ளார். சிறிலங்கா அதிபரே கொமன்வெல்த் அமைப்பின் தலைவராக இருக்கின்றார். இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, தனிப்பட்ட பார்வையாளராகச் சந்திக்க பிரித்தானிய மகாராணி இணக்கம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் ஒர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.