Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாலேந்திரன் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மார்ச் 10 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு காலியிலுள்ள பூசா தடுப்பு முகாமில் சுமார் ஒரு வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி கடந்த வாரம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று கொழும்பு நீதிவான நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிவரை சிறைச்சாலையில் தடுத்துவைத்திருப்பதற்கான உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார். - http://www.malarum.com/article/tam/2015/02/24/8796/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%A…

  2. உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருவது ஒருபோதும் இனவாதமாக முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். வடமாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் குறித்து, "நல்­லாட்­சி­மிக்க அர­சாங்­கத்­துடன் விளை­யாட வேண்டாம். இதுவே இன­வா­தி­க­ளுக்­கான எனது இறுதி எச்­­சரிக்கை" என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டுகையில், எம் மக்களுக்கு நடந்ததை வெளியிடுவதை இனவாதம் என்று பிரதமர் சொல்லியிருப்பது வருத்தத்தைத் தருகின்றது. உண்மை கூறுவது ஒருபோதும் இனவாதமாக முடியாது. இனவாதத்தை வேண்டுமானா…

  3. உலகத்திலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என்று பாராட்டியவர்களே சரத் பொன்சேகாவை கழுத்தை பிடித்து, இழுத்து சென்று, சீருடையை கழற்றி, சிறையிட்டது மறந்து விட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கூறியதாவது, பிறப்பு சான்றிதழில் சொந்த பெயரை மாற்றலாம். அதற்கு சட்ட வழிமுறைகள் உள்ளன. ஆனால், பிறந்த திகதி, பிறந்த இடம், பெற்றோர் பெயர்கள் ஆகியவற்றை ஒருபோதும் மாற்ற முடியாது. அவற்றை மாற்றுவது மோசடியாகும். இது சட்டப்படி குற்றம். ஆகவே அது தொடர்பாக போலிஸ் நடவடிக்கை உ…

  4. நீதிமன்றத்தில் சசி வீரவன்ச கொடுத்த அதிர்ச்சி FEB 25, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நோயாளர் காவு கட்டிலில் நேற்றிரவு வெலிக்கடைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச இன்று காலை சாதாரணமான முறையில் நீதிமன்றத்துக்கு நடந்து வந்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இராஜதந்திரக் கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக மாலபேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் சசி வீரவன்ச. மருத்துவமனையில் அவரைக் கைது செய்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்ட மருத்துவ அதிகாரியின் ஆலோசனைக்கமைய அங்கேயே தொடர்ந்து தங்கிய…

    • 0 replies
    • 2.6k views
  5. மனித உரிமை மீறல்களுக்கு எதிராக புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அனைத்துலக மன்னிப்புச் சபை FEB 25, 2015 | 11:57by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அனைத்துலக மன்னிப்புச் சபை தனது ஆண்டறிக்கையில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச்சபையின் 2014ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில், மனித உரிமைகள் குறித்து ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 29 நாடுகள் உட்பட உலகின் 160 நாடுகளில் நிலவிய போக்குகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. அதில் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நீண்ட பட்டியலை அனைத்துலக மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் கார…

  6. சிறிலங்காவின் புதிய அரசாங்கம் – ‘நியூயோர்க் டைம்ஸ்’ இன் பார்வை FEB 25, 2015 | 4:53by நித்தியபாரதிin கட்டுரைகள் வடக்கு மாகாண சபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் ‘இனப்படுகொலை’ என்கின்ற பதத்தை பயன்படுத்தியது புதிய அரசாங்கத்திலுள்ள பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ‘நியூயோர்க் டைம்ஸ்’ நாளிதழில், GARDINER HARRIS எழுதியுள்ள செய்திக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’ தேர்தலின் மூலம் சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் சிறிலங்காப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் தனது பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார். இவர் தற்ப…

  7. போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, இராஜதந்திரக் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை வரும், 25ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதுடன், அவர் வெளிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம், மாலபேயில் உள்ள மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்ட சசி வீரவன்ச, தொடர்ந்தும், காவல்துறை பாதுகாப்புடன், அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலபே மருத்துவமனைக்குச் சென்ற கொழும்பு பிரதம நீதிவான், சசி வீரவன்சவை 25ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். சந்தேக நபர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லத் திட்டமிட்டதாகவும் எனவே அவரது கடவுச்சீட்டை முடக்க வேண்டும் என்றும் குற்றப்ப…

  8. அரசியலைப் பொறுத்தவரையில் எங்களை தமிழன் என்று அடையாளப்படுத்தியவர் தந்தை செல்வா என்பதை மறந்து விடக் கூடாது என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தந்தை செல்வா அவர்கள் கூறிய விடயத்தை நான் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். உங்களுக்கு ஒரு அடையாளத்தைத் தந்தேன். ஒரு மொழியைத் தந்தேன். ஒரு கலையைத் தந்தேன். நான் தமிழன் என்ற அடையாளமே அது என கூறியிருந்தார். நாம் ஒன்றை மட்டும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தந்தை செல்வா அவர்கள் தந்த அடையாளத்தை உலக ரீதியாக அடையாளப்படுத்தியது தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதை நாம் மறக்கக் கூடாது என்றார். கிளிநொச்சியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.jvpnews.com/srilanka/98621.ht…

  9. 'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்லிம் அமைப்பு 22 பிப்ரவரி 2015 வடக்கு மாகாண முஸ்லிம்கள் 1990-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என்று சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்ற பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூ…

  10. முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பதற்கு உள்ளூராட்சி அமைச்சுக்கு உரிய முறையில் கோரிக்கையினை முன்வைத்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாணமுதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 25 ஆவது மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் ரவிகரன் முதலமைச்சரிடம் வாய்மொழி மூலமாக முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பதற்கான பிரேரணையை கடந்த 2014.01.27 ஆம் திகதி சபை அமர்வில் கொண்டு வந்திருந்ததாகவும் அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் அதற்குபதிலளிக்குமாறும் கேட்டிருந்தார். அதற்கமைய குறித்த வினாவிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக…

  11. தேசிய பிரச்­சி­னை­களை தாண்டி ஒன்­று­பட்ட இலங்­கை­யினை கட்­டி­யெ­ழுப்பும் ஒரே நோக்­கத்­திற்­கா­கவே தேசிய அர­சாங்­கத்­தினை அமைத்து ஆட்சி நடத்­து­கின்றோம். சிங்­கள பௌத்த உரி­மை­களைப் போல் தமி­ழரின் உரி­மை­க­ளுக்கும் உணர்­வு­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்­கப்­பட வேண்டும் என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். கிடைத்­தி­ருக்கும் வாய்ப்­பினை மீண்டும் சர்­வா­தி­கா­ரி­களின் கைகளில் கொடுத்து நல்­லாட்­சியின் பாதை­யினை மாற்­றி­ய­மைக்க நாம் தயா­ரா­க­வுள்ளோம் எனவும் அவர் தெரி­வித்தார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை மீண்டும் ஆட்சி பீடத்­திற்கு கொண்டு வரும் முயற்­சியில் ஹெல உறு­மய அங்கம் வகிக்­குமா என வின­விய போதே அவர் …

  12. யாழில் நடைபெற்ற பேரணிக்கு ஆதரவாக சென்னையில் ஐ.நா. அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம்! [Tuesday 2015-02-24 19:00] இனப்படுகொலை செய்யப்பட்ட மூன்றரை லட்சம் தமிழீழ மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். ஐ.நா சபை தாமதமின்றி போர்க்குற்ற விசாரணை அறிக்கை உடனே வெளியிடக் கோரி பேரணி நடத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. யாழ் பேரணிக்கு ஆதரவாக சென்னையில் சமநேரத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவலை மீண்டும் இலங்கை மீதும் தமிழ் மக்கள் மீதும் திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழர்களின் உரிமைக்கும…

  13. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செயற்பட வேண்டும் இதற்கான பகிரங்க அழைப்பை இந்த இடத்தில் விடுக்கிறேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் சமர்ப்பிக்கப்படவிருந்த போர்க்குற்ற அறிக்கை, அடுத்த செப்டெம்பர் அமர்வுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளமை எமக்கு வருத்தமளிக்கிறது. அந்த அறிக்கையை 28 ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை சர்வதேசத்திடம் நாம் வலியுறுத்தியிருந்தோம். எனினும் அது …

    • 25 replies
    • 1.4k views
  14. அடுத்த சில வாரங்களில் தேசிய அரசு – 100 ஆக அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை FEB 25, 2015 | 1:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேசிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடமளிக்கும் வகையில், வரும் வாரங்களில் சிறிலங்காவின் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 55 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த தகவலை சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். நேற்றுக்காலை அமெரிக்க வர்த்தக மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலையுணவுச் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”ஏற்கனவே தேசிய அரசாங்கம் ஒன்றுதான் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜேவிபியும் எதிர்…

  15. புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல் பரப்புரை இன்று நள்ளிரவுடன் முடிவு FEB 25, 2015 | 1:35by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு வரும் 28ம் நாள் நடக்கவுள்ள தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளன. ஆனாலும், இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் ஆர்வம் காட்டவில்லை என்று உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. 2011ம் ஆண்டு, நாட்டின் பிற உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட போது, இந்த இரண்டு பிரதேசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், வேட்புமனுக் கையளிக்கப்பட்ட பின்னர், மேல்முறையீட்டு மனுவில் செய்யப்பட்ட ம…

  16. உயர்மட்டப் பிரதிநிதியை கொழும்புக்கு அனுப்புகிறார் ஐ.நா பொதுச்செயலர் FEB 25, 2015 | 1:04by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நா பொதுச்செயலரின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கை வெளியிடப்படுவது ஆறு மாதங்களுக்குப் பிற்போட முடிவு எடுக்கப்பட்ட நிலையில், ஐ.நா உயர்பிரதிநிதியின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. ஐ.நா பொதுச்செயலரின் உயர்மட்ட அரசியல் பிரதிநிதியான ஜெப்ரி பெல்ட்மன், வரும் சனிக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார். அவர், மூத்த அரசாங்க அதிகாரிகள், அரசியல்கட்சிகள், சிவில் சமூக குழுக்கள…

  17. ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் முடிவை அறிவிப்பதென்று கூட்டமைப்பினர் மத்தியில் தெரிவித்துள்ளார் அதன் தலைவர் இரா.சம்பந்தன்.நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாதப்பிரதிவாதங்களை செவிமடுக்காமலேயே மைத்திரபாலவிற்கு ஆதரவளிப்பதென சம்பந்தன் முடிவெடுத்துவிட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் ஊடாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் மருத்துவத்துக்காகத் தெரிவித்து சம்பந்தன் இந்தியா பயணமாகியிருந்தார். நேற்று நாடு திரும்பிய அவர், ஏனைய உறுப்பினர்களை அழைத்து மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவளிப்பதாகவும் அதற்காக அனைவரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தியு…

  18. தமிழ்க் கைதிகளை விடுதலை செய்ய புதிய அரசாங்கமும் தயங்குகிறதா? 23 பிப்ரவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:44 ஜிஎம்டி பிரிட்டிஷ் பிரஜையான தமிழ் கைதி கோபிதாஸ் விஸ்வலிங்கம் இலங்கைச் சிறையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்[/size] இலங்கைச் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் புதிய அரசாங்கமும் தயக்கம் காட்டி வருவதாக தமிழ்த் தலைவர்களை மேற்கோள்காட்டி விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் வரும் மார்ச் மாதமளவில் இறுதிப் பெயர்ப் பட்டியல் தயாராகிவிடும் என்றும் நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு கூறியுள…

  19. சண்டிலிப்பாயில் 16 வயதுச் சிறுமி கஞ்சாவுடன் கைது! - கணவருக்காக கொண்டு சென்றாராம். [Tuesday 2015-02-24 19:00] யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 16 வயது சிறுமியை, நேற்றிரவு கைதுசெய்ததாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஸ், தெரிவித்துள்ளார். சிறுமியிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பொதிகள் இரண்டு கைப்பற்றப்பட்டன. இந்தச் சிறுமி திருமணம் ஆகியவர் என்றும், தனது கணவருக்கு வழங்குவதற்காக கஞ்சாவை கொண்டு சென்ற போதே கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிக…

  20. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசார நடவடிக்கைகளில் பிரதான பங்கை வகிக்கவுள்ளார். சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகுக்கும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருந்து வந்தார். எனினும், மஹிந்த தலைமையில் மூன்றாம் கூட்டணியொன்று உருவாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், எதிர்கால அரசியல் நிலைவரங்களைக் கருத்தில்கொண்டு அவர் இவ்வாறானதொரு முடிவுக்கு வந்துள்ளார். அதாவது, பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சுதந்திரக்கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்காவிட்டால், அக்கட்சியில் உள்ள பலர் மஹிந்தவின் பக்கம் செல்லக்கூடும். அத்துடன், சு.க…

  21. சம்பூரிலிருந்து கடந்த 2006ஆம் ஆண்டில் யுத்த நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து மூதூர் அகதி முகாங்களில் வசிக்கும் மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் குடியேற்ற நிறைவேற்று சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிறைவேற்று சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸ்ஸ நாயக்க தெரிவித்தார். கொழும்பு தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை சம்பூர் மக்கள் தமது பாரம்பரிய நிலத்திலிருந்து முன்னைய அரசால் விரட்டியடிக்கப்பட்டதாகவும் இதனால் அந்த மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியதாகவும் அனுர குமாரதிஸ்ஸ நாயக்க இதன்போது தெரிவித்தார். அத்துடன் அந்த மக்களின் பாரம்பரிய நிலத்தை பறித்து அந்நிய தனியார் நிறுவனங்களுக்கு …

  22. அரசியல், சமூக, மொழி, இன ரீதியாவும் கலாச்சார வழிமுறைகள் ரீதியாகவும் நாம் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு தமிழர்கள் என்ற காரணத்தினாலே பலர் கொல்லப்பட்டனர் என வணக்கத்துக்குரிய ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை, இயற்கையோடு ஒட்டியுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் உருவாக்கப்பட்டது. அவ்வாறான கடவுளால் கொடுக்கப்பட்ட மாண்பை மதியால் மிதிக்கின்றதைத் தான் இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து .நோக்குகிறோம். இவ்வாறு இலங்கையில் தொடர்ந்து மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு வருகின்றது. அது தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளிக்கின்றது என கிளிநொச்ச…

  23. ஸ்ராஸ்பூர்க் மாநகரில் துணைத் தூதரங்களை ஊடறுத்து எழுச்சிபூர்வமாக நடைபெற்ற பேரணி: [Tuesday 2015-02-24 11:00] நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முந்நிலையிலிருந்து தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி, விடுதலைச்சுடர் பேரணி ரஷ்யா, பிரித்தானியாபோன்ற ஐரோப்பிய ஆலோசனை சபையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் துணைத்தூதரகங்களை ஊடறுத்து, ஐரோப்பிய ஆலோசனை சபை முன்வரையில் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வை தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்புக்குரிய திரு.மு.க. சிவாஜிலிங்கம் ஐயா அவர்களும், மாநகர உதவிமேயர் அவர்களும,அல்சாஸ் மாநில கட்சித் தலைவியும்; ஆரம்பித்துவைக்க பேரணி ம…

  24. பூநகரி விபத்தில் செங்குந்தா இந்து ஆசிரியர் பலி! [Tuesday 2015-02-24 19:00] கிளிநொச்சி, பூநகரியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில், யாழ்.செங்குந்தா இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்தில் கோப்பாய் இராச வீதியை சேர்ந்த குமாரசாமி ஜெகதீஸ்வரன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வீதியில் காயப்போடப்பட்டிருந்த நெல்லுக்கு மேல் மோட்டார் சைக்கிளை ஏற்றிய போது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே வீழ்ந்ததில் இருவரும் படுகாயமடைந்தன…

  25. யாழ்.பல்கலைக்கழகப் போராட்டம் பெருவெற்றி! தமிழ் சமூகம் முழு ஆதரவு!! 4 ஆயிரம் வரையான மக்கள் பங்கேற்பு யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் மிகப்பெரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் காலை 10 மணியளவினில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியிருந்தது. யாழ்.பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி பேரணியாக பலாலி வீதியை சென்றடைந்து பின்னர் கந்தர்மடம் சந்தியினூடாக நல்லூர் வீதியை வந்தடைந்திருந்தது. நல்லூர் ஆலய முன்றலில் ஒன்று கூடிய போராட்டகாரர்கள் ஜ.நாவிற்கான தமது மகஜரை எடுத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.