ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாபரணம் சுமந்திரனின் கொடும்பாவி, வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக கடந்த சனிக்கிழமை (21) எரிக்கப்பட்டமைக்கு வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அமர்வில் கலந்துகொண்ட மீன்பிடி, போக்குவரத்து மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி காணாமற்போனோரின் உறவினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் எரிக்கப்பட்டமையை கண்டிக்கின்றோம்' என்றார். 'எமது கட்சி சார்ந்த உறுப்பினர் ஒருவரின் கொடும்பாவி எ…
-
- 3 replies
- 491 views
-
-
திக்கம் வடிசாலை விரைவில் ஆரம்பம் திக்கம் வடிசாலையின் செயற்பாடுகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. தற்போது பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் கீழ் இருக்கும் இந்த வடிசாலையின் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று கடந்த சனிக்கிழமை சமாச மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் கே.நடராஜா ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாகச் செயற்பாடு இன்றி முடங்கிக் கிடந்த வடிசாலை மீள திறக்கப்பட்டுள்ளது. வடிசாலையின் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிப்பது மற்றும் அதன் அபிவிருத்தி குறித்து இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. இந்…
-
- 1 reply
- 492 views
-
-
முதல் பல்கலைக்கழகக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பம் இலங்கையில் முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி அமைச்சின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழகக் கல்லூரியில் நேற்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. விரைவில் அது திறந்து வைக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி ஜே. ஜூட் வோல்ட்டன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமுர்த்தியிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாகவும் சமுர்த்தி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசமானிய அடிப்படையில் குறைக் கப்பட்ட கட்டண அறவீட்டுடனும் இந்தக்கற்கை நெறிகள் ஆரம்பமாகவுள்ளன. 8 பாடப் பகுதிகளைக் கொண்ட …
-
- 1 reply
- 538 views
-
-
யாழ் பல்கலைக் கழக ஆர்ப்பாட்டம் நேரலை 24-02-15 - IBC Tamilஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்படவுள்ள அறிக்கை ஒத்தி வைக்கப்பட்டமையை கண்டித்து யாழ் பல்கலைக் கழக மாணவர்கள். ஆசிரியர் சங்கம், பல அரசியற் கட்சிகள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலம் ஐபிசி வானொலியல் நேரடியாக ஒலிபரப்பாகியது. நேரலை தொகுத்து வழங்கியவர்: தினேஷ் குமார் http://www.ibctamil.co.uk/radio/24-02-15/69/play.aspx#.VOx2JBCO67w.gmail http://www.ibctamil.co.uk/radio/24-02-15/69/play.aspx
-
- 0 replies
- 449 views
-
-
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விமர்சிக்காமல் இருக்க ஆஸ்திரேலியா இணங்கியிருந்ததாக இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இலங்கையிலிருந்து கடல் வழியாக மனிதக் கடத்தல்கள் நடப்பதை முறியடிக்க இலங்கை அரசாங்கம் உதவுகின்றமைக்கு கைமாறாக ஆஸ்திரேலியா இந்த உடன்பாட்டை செய்திருந்ததாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆஸ்திரேலியாவை நோக்கி தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்செல்லும் படகுகளை தடுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ, ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட்டுடன் உடன்பட்டிருந்ததாக ரணில் தெரிவித்துள்ளார். பதிலுக்கு, மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புகார்களை செய்யப்போவதில்லை என்று ஆஸ்திரேலியாவ…
-
- 3 replies
- 645 views
-
-
கடந்த காலங்களில் இந்த நாட்டில் ஒரு ஊடக மாநாடு நடத்த முடியாது. ஒரு பொதுக்கூட்டம் நடத்த முடியாது. ஒரு ஜனநாயக ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது. ஒரு அரசியல் ஊர்வலம் நடத்த முடியாது. இன்று எவரும் கூட்டம், ஊடக மாநாடு, ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று ஜனநாயக வரம்பு அனுமதித்த எதையும் செய்யலாம். அங்கு அரசியல் பேசி மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என பிரகடனம் செய்யலாம். அவற்றை செய்ய முழுமையான உரிமைகள் இன்று உள்ளன. நாம் இன்று ஏற்படுத்தியுள்ள நல்லாட்சி சூழலின் வெளிப்பாடுத்தான் இதுவாகும். அதன் இன்னொரு வெளிபாடாகத்தான் இன்று கொழும்பு மாநகரசபையில் இந்த இந்து விழா நடக்கின்றது என கொழும்பு மாநகரசபையில் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர் கே. ரீ. குருசாமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநகரசபையின் 150…
-
- 0 replies
- 357 views
-
-
மைத்திரிபால சிறிசேனா அரசு இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஜே.வி.பி.யின் மாற்றுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய அரசாங்கத்துடன் புதிய`அரசு சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் என்ன என்ன என்பது குறித்து வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி. கட்சியின் மாற்றுக் குழு அழைப்பாளர் அனுருத்த பொல்கம்பொல தெரிவித்துள்ளார். கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது நான்கு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் குறித்து நாட்…
-
- 0 replies
- 310 views
-
-
இலங்கையில் கதிரியக்க கழிவுப் பொருள்களை இந்தியா குவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க. "இந்தியா - இலங்கை இடையேயான அணுசக்தி ஒப்பந்தம், அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் கையயழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, இந்திய அணு மின் நிலையங்களின் கதிரியக்க கழிவுகளை, இலங்கையில் குவிக்க முடியாது. இந்தியாவுக்கு இதற்கான அனுமதியை, கதிரியக்க கழிவு மேலாண்மை வழங்கவில்லை.'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "அணுசக்தியை அமைதியான முறையில், ஆக்கபூர்வ பயன்பாட்டுக்கு பயன்படுத்தவே, இந்தியாவும்- இலங்கையும் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, அண…
-
- 0 replies
- 438 views
-
-
இனவாதத்தை தூண்டி நாட்டில் மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுக்கச் செய்யும் விதத்தில் சில சிங்கள ஊடகங்கள் செயற்பட்டு வருவதாக தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த ஊடகங்கள் இதனை கைவிடத் தவறினால் அவற்றுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என எச்சரித்துள்ளார். இந்த ஊடகங்கள் கடந்த 10 வருடங்களாக தன்னை அரசியலிலிருந்து விரட்டுவதற்கு முனைப்புடன் செயற்பட்டுத் தோல்விகண்டுவிட்ட நிலையில் இப்போது எமது அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி நாட்டில் இரத்த ஆறு ஓடச் செய்யும் ஒரு மோசமான ஊடகக் கலாசாரத்தில் இறங்கியிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். குருநாகல் மாவட்ட கொபே கனவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பில்…
-
- 0 replies
- 353 views
-
-
இந்தியப் பிரதமரின் யாழ்ப்பாண வருகையை முழு மனதுடன் ஒட்டுமொத்த தமிழினத்தின் சார்பில் வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியப் பிரதமரின் வருகையானது யாழ்ப்பாணத்துக்கும் வந்தார் என்ற வரலாற்றுடன் மட்டும் நின்று விடாது தமிழ் மக்களின் துன்ப துயரங்களைப் போக்க வழி திறக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கும் வருகை தரவுள்ளார். பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஜயத்தை தமிழ் மக்கள் அனைவரும் வரவேற்கின்றனர். பிரமரின் விஜயத்திற்கு முன்னதாக சில கோரிக்கைகளை நாம் முன…
-
- 0 replies
- 247 views
-
-
தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நீதி விசாரணை அறிக்கையினை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடுவதாக கூறி வெளியிடாமல் மேலும் ஆறுமாத காலம் பிற்போடப்பட்டுள்ளது. அதனை கண்டித்தும் நீதி விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடக்கோரியும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் 24.02.2015 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும் "பொங்குதமிழராய் ஒன்றிணைவோம்" என்ற எழுச்சியுடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு பிரித்தானியா தமிழர் பேரவை முழுமையான ஆதரவை தெரிவித்து கொள்கின்றது. http://seithy.com/breifNews.php?newsID=127154&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 207 views
-
-
யாழ் பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைவோம்> ''சீற்றங்கொண்ட பூகம்பத்தின் குமுறலாக எழும் எமது இனத்தின் எழுச்சி குரலை சிங்கள தேசமும், சர்வதேச சமூகமும் அசட்டைசெய்ய முடியாது'' -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன். இலங்கை தேசமென 1948 ஆம் ஆண்டிலிருந்து இணைக்கப்பட்ட இருத்தனி தேசங்களை சிங்கள பயங்கர வாதத்தின் கைகளில் விற்று விட்டு சென்றது அன்றைய பிரிதானியா அரசு. ஆம்; தனித் தேசங்களில் வாழ்ந்த தார்மிக தமிழர்கள் ஒரு பெரும் ஆதிக்க சக்திகளால் அன்றிலிருந்து அழிக்கபட்டும், இலங்கை தேசம் என்பது தனி சிங்களவர்களின் தேசமாக மாற்றி வரும் சிங்கள இனவாத அரச பயங்கரவாதத்தின் கொள்கைகளின் அடிப்படையில் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. காலம்காலமாக மிகப்பெ…
-
- 0 replies
- 203 views
-
-
சிறிலங்காவின் வணிகச் செயற்பாடுகளில் இந்தியா தலையிடக் கூடாது – சம்பிக்க ரணவக்க FEB 23, 2015by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இராணுவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல், முற்றிலும் வணிக நோக்கம் கொண்டதாக இருந்தால், அதுகுறித்த இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இது குறித்து விளக்கமளித்தார். கொழும்புத் துறைமுகமோ, துறைமுக நகரமோ, எந்தவகையான இராணுவ நடவடிக்கைக்கும் சீன அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டால், அது இந்தியாவிலும் சிறிலங்காவிலும் மோசமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, இவை வணிக நோக்கம் மட்டும்…
-
- 1 reply
- 479 views
-
-
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இடையே மோதல்! ஒருவர் காயத்துடன் வைத்தியசாலையில். [Monday 2015-02-23 19:00] வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களுக்குள் ஏற்பட்ட குழு மோதலில், மாணவன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று காலை பாடசாலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் போது சாதாரண தரத்தைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒரு மாணவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். முத்துலிங்கம் கபிலராஜ் (வயது 16) என்ற மாணவனே காயமடைந்…
-
- 1 reply
- 430 views
-
-
வடகாணசபை போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து இரு மணி நேரம் அவை ஒத்திவைப்பு வடக்கு மாகாணசபை இரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்பாணத்தில் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாகாணசபை அமர்வு காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. சபையில் உறுப்பினர் ரவிகரன் குறித்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வந்தார். அதனடிப்படையில் ஏகமனதாக பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை 2 மணித்தியாலங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/38040/57//d,article_full.aspx
-
- 0 replies
- 322 views
-
-
யாழ்ப்பாணம் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் FEB 21, 2015 | 12:12by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் அடுத்த மாதம் மூன்று நாள் பயணமாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 13ம் நாள் சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பிக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறுநாள், யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில், இந்திய பல்வேறு மீள்கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்…
-
- 38 replies
- 2.2k views
-
-
யாழ். மாவட்டத்தில் வறுமைச் சுட்டி 8 வீதமாக குறைந்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வந்திருந்த,இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாகவும், கனடா அரசாங்கத்திடமிருந்து எவ்வாறான உதவிகளை எதிர்பார்க்கின்றீர்கள், தாம் எவ்வாறான உதவிகள் செய்ய வேண்டியுள்ளதென்றும் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் அரசாங்க அதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்போது, அரசாங்க அதிபர் யாழ். மாவட்டத்தினை கடந்த கா…
-
- 3 replies
- 616 views
-
-
விமல் வீரவன்சவும் பிறந்த திகதியை மாற்றியுள்ளது அம்பலம்! - இரகசிய பொலிஸார் நீதிமன்றத்துக்கு தகவல் [Monday 2015-02-23 19:00] முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தனது பிறந்த திகதியையும் மாற்றியுள்ளதாக இரகசிய பொலிஸார் இன்று நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ 1965.03.07ஆம் திகதி பிறந்துள்ளார். எனினும் அவர் 1970.03.07ஆம் திகதி என அதாவது ஐந்தது வருடங்களில் தனது பிறந்த வருடத்தை குறைத்துள்ளார். அதேபோன்று அவரது மனைவி ஷசி வீரவன்ச நான்கு வருடங்களுக்கு தனது வயதை குறைத்துள்ளார். 1967.02.01 ஆம் திகதி பிறந்தவர் 1971.02.03 ஆம் திகதிக்கு மாற்றியுள்ளார். அவர்கள் இவ்வாறாக பிறந்த திகதியை மாற்றியிருப்பது தங்களது பிள்ளைகளின் பிறப்பு சான…
-
- 1 reply
- 376 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று காலை 8.12 என்ற சுபநேரத்தில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட ஆறு அங்குலம் உயரமான திரிசூலம் ஒன்றில் வெள்ளி காசு ஒன்றை கட்டி தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். துட்டகைமுனு மன்னன் போருக்கு செல்லும் முன்னர் இப்படியான வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றியதாக வரலாற்று கதைகளில் கூறப்பட்டுள்ளது. இதனால், மகிந்த ராஜபக்சவின் வேண்டுதலில் ஏதேனும் விசேடம் இருக்கலாம் என பலர் கூறுகின்றனர். சில நேரம் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வர எண்ணியிருக்கலாம் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி நேற்று கதிர்காமம் சென்றிருந்ததுடன் 84 ஆயிரம் விளக்குகளை ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டதுடன் கிரிவேஹேர விகாரையில் இரவு தர்ம உபதேசத்திலும…
-
- 3 replies
- 1.2k views
-
-
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடாத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை பின்போடப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற சகல அரசியல் படுகொலைகளும் விசாரணை செய்யப்பட வேண்டும். அந்தவகையில் தவறுகள் செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதுடன் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எம…
-
- 4 replies
- 528 views
-
-
ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு சாதகமான அம்சங்களைக் கொண்டது: எம்.ஏ.சுமந்திரன் இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்த விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் மாதம் வெளியிடப்படாமல், ஆறு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அறிக்கை பிற்போடப்பட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் இனப்படுகொலை தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சிகளை முழுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்…
-
- 17 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் இந்த வருடம் 750 ஏக்கர் தொடக்கம் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு (மறுபயிர்ச்செய்கை) பயிர்ச்செய்கை மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் திங்கட்கிழமை (23) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைகள் பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளன. நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலங்களில் மாற்றுச் பயிர்ச் செய்கையாக உப உணவு பயிர்களாக பயறு, உழுந்து, நிலக்கடலை என்பன பயிரிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு இரணைமடுக் குளத்தை நம்பி 150 ஏக்கரில் உபஉணவுச் செய்கை மேற்கொள்ளப்பட்டு, அது வெற்றியளித்திருந்தது. இந…
-
- 0 replies
- 477 views
-
-
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு என்ற தீர்மானத்தை தாம் எச்சரிக்கையுடன் பார்ப்பதாக டெல்லியை மேற்கோள் காட்டி ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி அரசு தமிழர் சார்பில் செயற்படுமா? எனும் உண்மைகளை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள். தமிழர்கள் பல்வேறு பகுதிகளால் ராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எமது தாமதங்கள் ஆபத்தாகும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கு எங்கள் செயற்பாடுகள் என்ன என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையின், சிறப்பு வட்ட மேசையில் கனடாவில் வசிக்கும் சிரேஸ்ர ஊடகவியலாளர் குயின்டன் துரை சிங்கம் மற்றும் ஐரோப்பாவை தளமாக கொண்டு இயங்கும் ஊடகவியலாளர் நிர்மானுசன், ஆகியவர்கள் தெரிவித்தனர். - See more at: http://www.canad…
-
- 0 replies
- 473 views
-
-
இலங்கையில் சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் எதிர் பார்த்தவாறும் திட்டமிட்டபடியும் இலங்கை சம்மந்தப்பட்ட ONHRC விசாரணை அறிக்கை சமர்பிப்பதை UNHRC வரும் புரட்டாதி 2015 ல் சமர்பிப்பதற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எமது தாயகத்தில் வாழுகின்ற எமது சகோதர சகோதரிகள் கோபமும் விரக்தியும் அடைந்துள்ள நிலையில் இவ் முடிவை எதிர்த்து இந்த அறிக்கை முற்கூட்டியே வரவிருந்த பங்குனி 2015 ல் வெளியிடுமாறு UNHRC க்கு வேண்டு கோள் விடுகின்றனர். இவர்களுடன் தமிழ் இளைய சமுதாயமாகிய நாமும் இணைந்து நிற்கின்றோம். இது போன்ற முடிவுகள் எமது தாயகமாகிய ஈழத்துக்கு ஆச்சர்யத்தை கொடுக்க போவதில்லை என்றாலும், தாயகத்திலே படுகின்ற எமது உறவுகளின் அவலம் அரசியலாக்கப்பட்டுவிட்டதை நினைக்கும் போது தாயகத்…
-
- 0 replies
- 373 views
-
-
கிளிநொச்சி குழு மோதலில் ஒருவர் படுகாயம்! [Monday 2015-02-23 19:00] கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிராம இளைஞர்களிற்கு இடையிலேயே இன்று காலை 9 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் ஒருவர் மீது ஆயுதம் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் படுகாயமடைந்த அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற…
-
- 0 replies
- 355 views
-