Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய கொள்கையின் கீழ் ஒக்டோபர் முதல் வாகன இறக்குமதி! 304 HS குறியீடின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்பு செயல்முறைக்கு இணங்க, நிதி அமைச்சின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு, 2024 ஒக்டோபர் 01 முதல் மூன்று கட்டங்களாக இந்தத் தடை நீக்கப்படும். இந்நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது ஏற்பட்டிருந்த அழுத்தத்தை முகாமைத்துவம் செய்ய 2020 மார்ச் மாதத்தில் முதன் முதலில் விதிக்கப்பட்ட இந்தத் தடை மூலம், மருந்துகள், எரிபொருள் மற்ற…

  2. ஞானசாரவுக்கு எதிரான நீதிமன்றின் அதிரடி உத்தரவு! கொழும்பு, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள 100 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர வீட்டினை கலபொட அத்தே ஞானசார தேரரார் பலவந்தமாக கைப்பற்றியமை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்துள்ளது. இதேவேளை, சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை உடனடியாக விடுவிக்குமாறு ஞானசார தேரர் மற்றும் பிரதிவாதிகள் இருவருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவினை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிவான் எச்சரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/…

  3. இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் (The People for Equality and Relief in Lanka (பேர்ல்) அமைப்பு, புதிய ஒரு சட்ட விளக்கக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், 2009 இல் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு நிரூபித்துள்ளது. இனப்படுகொலை ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வுடன் இணைந்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 2009 ஜனவரி முதல் மே 18 வரை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தனது கொடூரமான அட்டூழியங்களை 'பயங்கரவாதத்திற்கு எதிரான' மொழியில் மூடிமறைத்தது மற்றும் காசா உட்பட …

  4. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியில் வேட்பாளர்கள் பெருந்தொகை டொலர்களை விளம்பரங்களுக்கு செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேஸ்புக் Ad Library மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை 13 முதல் செப்டெம்பர் 10 வரையான காலப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக 49,300 டொலர்களை செலவிட்டுள்ளார். பேஸ்புக் விளம்பரம் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும், அவரை விளம்பரப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள Join Ranil என்ற பேஸ்புக் பக்கத்திற்கு செலவிடப்பட்ட தொகை 38,400 டொலர்களை அண்மித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி…

  5. Published By: VISHNU 14 SEP, 2024 | 02:35 AM ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை(13) மாலை 4.30மணியளவில் மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம் பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் இடம் பெற்றது. இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கினர். குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல…

  6. Published By: VISHNU 14 SEP, 2024 | 02:09 AM இறுதி யுத்தத்தில் மக்கள் பலர் கொல்லப்பட்டதோடு . பொதுமக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்ததோடு தமது சொத்துக்கள் உடமைகளையும் இழந்தனர். கடந்த கால அரசுகள் கிறிஸ்பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தனர். 2005ல் தமிழ் மக்கள் ரணிலுக்கு அளிக்காத வாக்குகளையும் இம்முறை அளித்து ரணிலை வெற்றி பெறச்செய்வோம் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். இன்று சுழிபுரத்தில் இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்க விற்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். அவர…

  7. Published By: VISHNU 14 SEP, 2024 | 02:12 AM யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.vir…

  8. Published By: VISHNU 13 SEP, 2024 | 11:32 PM வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் வெள்ளிக்கிழமை (13) உத்தியோகப்பூர்வமாகப் பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் பெயரிடப்பட்டன . இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம அவர்களும், முதலீட்டு பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு கொண்டனர். இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்களிலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. …

  9. தென்னிலங்கையின் முகவா்களாக சிலா் வடக்கில் செயற்படுகின்றனா் – அரியநேந்திரன்! ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்குமாறும், ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் கோாிக்கை விடுத்துள்ளாா். யாழில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கோாிக்கை விடுத்துள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”எட்டு மாவட்டங்களிலும் எமது பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்த வாக்குக்களை விட அதிக வாக்குகள் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு வந்துள்ளது. மக்களிடம் நாம் சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என்றே கோரி வருகிறோம…

  10. Published By: VISHNU 14 SEP, 2024 | 02:02 AM தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. அந்நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க கோரி யாழ், நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வெள்ளிக்கிழமை (13) மனு தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முன்னெடுப்பதாகவும் அன்றைய தினம் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செல்வராசா கஜ…

  11. இலங்கை – இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாண சபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்குக் கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால், எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது. ஏனெனில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் கட்சிதான் எமது கட்சியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக மக்களைக் கொன்ற கட்சிதான் ஜே.வி.பி. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவர்களையும் ஜே.வி.பி. கொன்றது. இந்திய மருத்துகளைக் கொண்டு வந்த அதிகாரிகளையும் இந்தக் கட்சி கொலை செய்தது. இந்தியப் பொருட்களைப் புறக்க…

  12. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவலர் மண்டபத்தை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சாவடியாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரி சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் இராமச்சந்திரக் குருக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் என்ற உன்னத புருஷரைச் சைவத் தமிழ் உலகம் என்றும் நினைவில் கொள்ளும் வகையிலும் அவர் தம் கொள்கைகளை பேணும் நினைவாலயமாக ஆறுமுகநாவலர் கலாசார மண்டபம் உருவாக்கப்பட்டது. பொதுச் செயற்பாடுகளுக்கும் பொதுச் சேவைகளுக்கும் இந்த மண்டபம் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த போதிலும் அதன் புனிதத் தன்மையைப் பேணவேண்டும் என்ற விடயம் கவனத்தில் கொள்ளப…

      • Like
      • Haha
    • 3 replies
    • 474 views
  13. 13 Sep, 2024 | 05:24 PM (எம்.நியூட்டன்) தமிழர் விவகாரங்களுக்கு தீர்வுகாணும் முயற்சியை புதிய திசை நோக்கியதாக நகர்த்துவதற்கான ஆரம்பப் புள்ளியாக தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழர்கள் அனைவரும் சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடியிடுவோம் என தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்தார். தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பரப்புரை நடவடிக்கையின் தொடர்ச்சியாக மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் பேச்சி அம்மன் கோயில் முன்றலில் இரா.மயூதரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று உ…

  14. (எம்.நியூட்டன்) தமிழ் மக்களுக்கான நேர்மையான தீர்வினை வழங்க ரணில் விக்கிரமசிங்கவால்தான் முடியும். அவருக்கே தமிழ் மக்களின் வாக்கு என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முடிவைப் பார்த்து மக்கள் தீர்மானிக்க மாட்டார்கள். மக்கள் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவைத்தான் தெரிவு செய்வார்கள். அவரால்தான் தமிழ் மக்களின் பிரச்சினையை நேர்மையாக தீர்க்க முடியும். இலங்கை தமிழ் அரசு கட்சிதான் தமிழ் மக்களின் கட்சி என கூறுவார்கள். ஆனால், இன்று இதன் நிலை என்ன? கட்சியில் நேரத்துக்கு ஒரு கதை. சிலர் கட்சியை கைப்பற்றி முடிவுகளை தாமாக அறிவிக்கிறார்கள். முடிவுகளை ஜனநாயக ரீதியாக எடுக்…

  15. Published By: Vishnu 13 Sep, 2024 | 05:59 PM (நா.தனுஜா) நாட்டுக்கு வருகைதரவிருக்கும் 9 நாடுகளைச்சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள், எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக வழமைபோன்று இம்முறையும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது. …

  16. 13 Sep, 2024 | 05:47 PM தமிழ் மக்களின் விருப்பங்கள், அபிலாஷைகளை நிறைவேற்றாத தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் எமக்கு என்ன தேவை என கூறியுள்ளோம். ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு எந்த சுபீட்சமும் இல்லை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களில…

  17. இலங்கை: கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள் படக்குறிப்பு, கொழும்பின் பிரதான பகுதியில் தற்போது மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் பல பத்தாண்டுகளாக அவ்வப்போது மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவது தொடரும் நிலையில், தற்போது தலைநகரத்தின் முக்கிய வளாகம் ஒன்றிலும் மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் பிரதான பகுதியும், அதிவுயர் பாதுகாப்பு வளையமுமான பகுதி ஒன்றிலிருந்தே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …

  18. 13 SEP, 2024 | 12:16 PM கனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடா நாட்டில் வசித்து வருகிறார். அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். அவருக்கு குறித்த காணியை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த காணி தரகர் ஒருவரே அடையாளம் காட்டி, காணி உரிமையாளருடன் பேச்சுக்களையும் நடத்தியுள்ளார். அதனை அடுத்து காணியை கொள்வனவு செய்வதற்கு 85 இல…

  19. 13 SEP, 2024 | 11:46 AM எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக முதன் முறையாக விசேட தேவையுடையவர்களுக்கான விசேட அடையாள அட்டையை தேர்தல் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 526 விசேட தேவையுடையவர்களுக்கு இந்த அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. முதல் தடவையாக இன்று மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு விசேட வாக்களிப்பு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட…

  20. 1915 இல் தூக்கிலிடப்பட்டவருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு! கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஆளுநரால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் நியாயமற்ற விசாரணையைத் தொடர்ந்து,எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறி…

  21. Published By: RAJEEBAN 13 SEP, 2024 | 10:49 AM இலங்கை கடற்பரப்பில் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு சீன கப்பல்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா சில நாடுகள் இது தங்களிற்கு கிடைத்த வெற்றி என சில நாடுகள் கருதுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதரக அதிகாரி யன்வெய் சூ இதனை தெரிவித்துள்ளார். சீனாவின் நட்பு நாடான இலங்கை ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது என சீனாவில் சமூக ஊடக பயனாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். மூன்றாம் தரப்பொன்றின் அழுத்தம் காரணமாகவே இலங்கை இந்த நடவடிக்கையை எடுத்தது என குறிப்பிட்டுள்ள அவர் சில நாடுகள…

  22. Published By: DIGITAL DESK 3 13 SEP, 2024 | 03:18 PM திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று வெள்ளிக்கிழமை (13) நீதிச்சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து, ஜனாப் பயாஸ் ரசாக் மாவட்ட நீதிபதியாகவும், ஜீவராணி கருப்பையா பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும் இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். https://www.virakesari.lk/article/193590

  23. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள திகதி அறிவிப்பு! 13 SEP, 2024 | 01:30 PM 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/193581

  24. ஜனாதிபதித் தேர்தல்-பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை! ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 9 நாடுகளில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க அவர்கள் வருகை தந்துள்ளதாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். இதில் சார்க் வலய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய கண்காணிப்பாளர்களும் இந்த கண்காணிப்பு குழுக்களில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399264

  25. கலாபூஷணம் பரீட் இக்பால் கிளிநொச்சியில் பறிபோகும் நிலையில் 50 வருடம் வாழ்ந்த இடம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக விடுதலை புலிகளினால் ஒட்டுமொத்த வடமாகாண முஸ்லிம்களும் குறுகிய மணித்துளியில் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் உலகம் அறிந்த விடயம். . 34 வருடங்கள் கடந்தும் விரட்டி அடிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் சிலரால் அபகரிக்கப்பட்டதால் கிளிநொச்சி பிரதான வீதி கந்தசாமி கோயில் முன்பாக இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமான முறையில் அவர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 34 வருடம் கடந்தும் அவர்கள் புத்தளம் போன்ற பகுதிகளில் அகதிகளாக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் பல தடவை மாவட்டச் செயலகம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.