Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஓடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனத்திற்காகவும் ஐநா முன்றலில் தீக்குளித்து இறந்த முருகதாசன் நினைவு நாளான இன்று சென்னை அடையாரில் உள்ள ஐநா யுனிசெப் பணிமனை முன்பாக பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடை பெற்றது. இவ் போராட்டத்தை மே17 இயக்கத்தினர் ஒழுங்கு செய்தனர். * ஐநா உறுதி செய்துள்ள பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அமல்படுத்து * தமிழீழ பகுதியை தன்னாட்சி பிரேதேசமாக உடனே அறிவி.பதிவு இணையதள செய்தி * பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை இடைக்கால நிர்வாக சபையை அமை. * தமிழீழத்திலிருந்து சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற்று. முருகதாசன் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்!! வீரவணக்கம் வீரவணக்கம், முருகதாசனுக்கு வீரவணக்கம்.. இனவழிப்பில் பங…

    • 2 replies
    • 633 views
  2. யாழ்ப்பாணம், பொம்மைபெவளி பிரதேச இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 8 பயனாளிகளையும் உடனடியாக அந்த பட்டியலில் இணைத்து அவர்களுக்கான வீட்டு வசதியைப் பெற்றுக்கொடுக்குமாறு மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உரிய அதிகாரிகளுக்கு நேற்று புதன்கிழமை (11) பணிப்புரை விடுத்தார். இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு, கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்ட 8 பயனாளிகளின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார். இந்திய வீட்டுத்திட்டம் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வருகின்றன. 3ஆம் கட்ட நிர்மாணப் பணிகளும் முடிவுற்றுள்ளன. இருந்தும் மீள்குடியேறியுள்ள முஸ்லீம் மக்கள் உதா…

  3. மஹிந்த மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் தம்மிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும், அவற்றை தேவையான சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவோம் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனாதிபதியின் செலவுக்கென கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கீடு, விமானக்கொள்வனவு, வாகனங்கள் மீட்பு, மற்றும் ஊழல் மோசடி உட்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக அரசு பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை என்று கடந்த திங்கட்கிழமை அறிக்கையொன்றினூடாகத் தெரிவித்திருந்தார். தனக்கு எதிராக …

  4. இலங்கையின் வடக்கே யாழ் தீவகப்பகுதியாகிய சுருவில் மண்டைதீவு போன்ற மிள்குடியேற்றப் பகுதிகளில் பல கிணறுகள் மூடிக்கிடப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என உள்ளூர் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக மகளிர் விவகாரத் துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அந்தக் கிணறுகளில் அப்பிரதேசங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் ஐயப்பாடுகள் உள்ளன என்று மக்கள் கருதுவதாகவும் அவர் கூறுகிறார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவசரக் கடிதம் ஒன்றையும் தான் பொலிஸ் மாஅதிபருக்கும் எழுதியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் அந்தக் கிணறுகளை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும், …

  5. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மண்குதிரை. ஒரு மாவீரர் வழிநடத்திய விடுதலைப் போராட்டத்தை இப்போது நடத்திக்கொண்டிருப்பவர்கள் மண் குதிரைகள். இவர்கள் கரைய வேண்டும். இது அரசியலில் வரலாற்றில் ஒரு கட்டாயம். இந்த மண் குதிரைகள் கரைந்தால் தான் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க முடியும் என சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கத்தில் ''மாற்று அரசியல்'' என்ற தலைப்பில் அவர் உரையாற்றியிருந்தார். அதனை முழுமையாக இங்கே பார்க்கலாம். http://www.pathivu.com/news/37709/57//d,article_full.aspx

  6. இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட விருக்கின்ற சர்வதேச விசாரணை அறிக்கைக்கு ஆதரவு வழங்காது என்று இந்தியா அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்ற பேரவையிலேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருகின்றது. இலங்கையில் புதிய அரசாங்கம் பதிவியேற்று குறுகிய காலமே சென்றுள்ளது. இந் நிலையில், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கம் எண்ணுவதாக 'த ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தக் காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் 2014ஆம் ஆண்டு முன்வைத்த யோசனைக்…

  7. கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு பிரதமர் ரணில் முயற்சிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார். தொலைகாட்சி ஒன்றிக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:பதிவு இணைய செய்தி கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக சிறிலங்க அரசாங்கத்தினுடைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய பங்களிப்பு கூடுதலாக இருப்பதாக நங்கள் அவதானிக்கின்றோம். அவருடைய அந்த அறிவுறுத்தலின் பிரகாரம் ஆளுநர் ஊடக இந்த முதலமைச்சு பதவி வாழங்கப்பட்டதாக அறிகின்றோம். ஏற்கனவே நங்கள் கூறினோம் முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்று பட முடியாத ஒரு மனக்கசப்பு இருந்த நேரத்தில் ஒன்று படுவார்கள் என்ற…

  8. இனப்படுகொலைத் தீர்மானம் – மைத்திரிக்கு ஏமாற்றமாம் FEB 12, 2015 | 1:40by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏமாற்றம் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை, ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய போதே அவர், இதுகுறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்புக் குறித்து தகவல் வெளியிட்டுள்ள, வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, “வடக்கு மாகாணசபையினால், இனப்படுகொலை குறித்து தீர்மானம், நிறைவேற்…

  9. பீல்ட் மார்சல் பதவியைக் கோரவில்லை, தந்தால் ஏற்பேன்- என்கிறார் ஜெனரல் பொன்சேகா FEB 12, 2015 | 1:21by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தன்னை பீல்ட் மார்சல் தரத்துக்கு பதவி உயர்த்துமாறு தாம் கோரவில்லை என்றும், அரசாங்கம் அந்தப் பட்டத்தை அளிக்க முன்வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா. ‘நான் எந்த பதவி உயர்வையும் கோரவில்லை. ஆனால், நான்கு நட்சத்திர ஜெனரல் ஒருவரை ஐந்து நட்சத்திர பீல்ட் மார்சலாக தரமுயர்த்துவது இலகுவான காரியமல்ல. அதனை ஒரே இரவில் செய்து விட முடியாது. உலகில் சுமார் 25 பீல்ட் மார்சல்கள் மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன். பீல்ட் மார்சலாகத் தரமுயர்த்துவதற்கு சட்ட நடைமுறைகள் பல உள்ளன. ச…

  10. ஐ.நா அறிக்கை வெளியிடுவதைப் பிற்போடுமாறு சிறிலங்கா கோரிக்கை – வொசிங்டனில் மங்கள தகவல் FEB 12, 2015 | 0:50by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. இந்த தகவலை வொசிங்டனில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. இன்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்திப்பதற்காக, நேற்று வொசிங்டன் வந்து சேர்ந்த அவர், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். இதன் போது அவர், உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதை சில மாதங்களுக்குப் பிற…

  11. February 11, 2015 தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே : வட மாகாணசபை தீர்மானத்தினை வரவேற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் ! 0by tmdas5@hotmail.com • TGTE வட மாகாணசபையின் மதிப்புக்குரிய முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் முன்மொழிவில், 10-02-2014 அன்று தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே என்பதை வலியுறுத்தி, உரிய நேரத்தில் தீர்மானமொன்றை வட மாகாணசபை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறது. இத்தகையதொரு உறுதியான தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தீர்மானத்தினை சபையில் முன்மொழிந்த மதிப்புக்குரிய முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும், சபை பிரதிநிதிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பெருமகிழ்வையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது. முன்மொழிவி…

  12. தமிழர் தாயகத்தினில் நடந்தது இனஅழிப்பே! சர்வதேச நீதி விசாரணை எக்காரணம் கொண்டும் தடைப்பட்டு போக அனுமதிக்க முடியாது! தமிழ் மக்களினை ஏமாற்ற ரணிலும் முற்படுகின்றார்.அதற்கான பதில் விரைவினில் அவருக்கு கிடைக்கும்! முன்னதாக உறுதியளிக்கப்பட்டவாறாக படை குறைப்போ காணிகள் விடுவிப்போ மீள்குடியேற்றமோ நடந்திருக்கவில்லையென அம்பலப்படுத்தியிருக்கின்றது வடமாகாணசபை. தமிழ் மக்களது மிகப்பெரும் வாக்கை பெற்று வெற்றி பெற்றிருந்த வடமாகாணசபை தனது 16 மாத கால பயணத்தினில் முதலாவது சாதனையாக இன அழிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கி தீர்மானத்தை இன்று நிறைவேற்றியுள்ளது. ஆளும் தரப்பின் ஓரிரு உறுப்பினர்களினை தவிர்த்து ஈபிடிபி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவற்றின் பெரும்பான்மை ஆதரவுடன் இத்தீர்ம…

  13. மகிந்த ராஜபக்ஷவின் குடும்பம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான மிருகபலி பூஜை ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ஊடகம்ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இரகசிய இடம் ஒன்றில் வைத்து இந்த பூஜையை நடத்த மகிந்தவின் குடும்பம் ஒழுங்கு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 9 வருடங்கள் சிறிலங்காவில் கடுமையான ஆட்சியை செய்து மேற்கொண்ட கொள்ளைகள் போதாது என்று, மீண்டும் ஆட்சி பலத்தை பெற்றுக் கொள்வதற்காக இந்த பூஜை நடத்தப்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.pathivu.com/news/37692/57//d,article_full.aspx

  14. :- 11 பெப்ரவரி 2015 வடமாகாணசபை கடுமையான ஒரு தீர்மானத்தை நேற்று நிறைவேற்றியுள்ளது. பிரேரணையை சமர்பித்து வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சபையில் ஆற்றிய உரையில் புதிய அரசாங்கத்தையும், குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவையும் கடுமையாக விமர்சித்துள்ளார். நிலைமை இந்த அளவுக்கு பாரதூரமானதையிட்டு நான் கவலையடைகிறேன். இதையிட்டு இன்று காலை நான் பிரதமரிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளேன். வடக்கு மாகாண தமிழ் மக்களின் ஆணையை பெற்றுள்ள வடமாகாணசபை உறுப்பினர்களினதும், அதன் முதல்வரினதும் மன உணர்வுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் ஆணையையும், ஆதரவை…

  15. நேற்றைய தினம் வடமாகாண சபையில் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை தேவை எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழின விடுதலைப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைகின்றது . இத் தீர்மானத்தை நிறைவேற்றுவதுக்கு கடினமாக உழைத்தவர்களுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் தலைவணங்குகின்றோம் . இதே போன்ற கோரிக்கையினை தமிழக சட்டசபை நிறைவேற்றியிருந்ததுடன், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஆகிய நாம் அனைவரும் இத்தகைய கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தை நோக்கி தெளிவாக முன்வைத்து நிற்கின்றோம் . இந் நிலையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதி கோரும் தீர்மானம் என்பது அனைத்துலக சமூகத்துக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்தி…

  16. கிழக்கில் தேசிய அரசு குறித்த கூட்டமைப்பின் முடிவை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப் போகிறாராம் சம்பந்தன்! [Wednesday 2015-02-11 07:00] கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்புத் தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும்,இது தொடர்பில் கூட்டமைப்பின் இறுதி முடிவை திருகோணமலையில் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி அறிவிப்போம்." என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சிமைக…

    • 3 replies
    • 493 views
  17. வடமாகாணசபையில் முல்லைதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் உறுப்பினரான மேரிகமலாவின் ராஜினாமா கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.வெற்றிடமாகும் அவரது இடத்திற்கு வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையினில் நடராசா என்பவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது. மாகாணசபை தேர்தலில் பெறப்பட்ட போனஸ் ஆசனத்தினை சுழற்சி முறையினில் மாவட்டத்திற்கொருமுறையென பகிர்ந்து கொள்வதென்ற தீர்மானத்தின் அடிப்படையினில் முதலில் முல்லைதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேரிகமலா நியமிக்கப்பட்டிருந்தார்.இவரது நியமனக்காலமான ஒருவருடம் முடிவடைந்ததையடுத்தே தற்போது அடுத்து வவுனியாவிலிருந்து நடராசா நியமிக்கப்படவுள்ளார். அதற்கேதுவாகவே மேரிகமலாவின் ர…

  18. கோத்தா கறைபடுத்திய பாதுகாப்புச் செயலர் பதவி வேண்டாம் – சரத் பொன்சேகா FEB 11, 2015 | 6:45by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவின் கறைப்படுத்தப்பட்ட பாதுகாப்புச் செயலர் பதவியைத் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, பாதுகாப்புச் செயலராகப் பதவியேற்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கு இடமளிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜெயந்த கோத்தாகொட விலகிக்கொள்ளாது போனால், உயர்நீதிமன்றத்துக்குச் செல்வேன். பகிரங்கம…

  19. இனஅழிப்பு தொடர்பாக வடமாகாணசபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முழு அளவில் வரவேற்றுள்ளது. அத்துடன் இதே நிலைப்பாட்டுடன் முதலமைச்சர் தலைமையில் கூட்டமைப்பு செயற்படுமாயின் தமது கட்சி கூட்டமைப்பிற்கு முழுமையான ஆதரவினை வழங்க தயாராக இருப்பதாகவும் முன்னணி அறிவித்துள்ளது.கூட்டமைப்பிற்கு முழு ஆதரவில் ஆதரவளிக்க தயார்! தமிழ் தேசிய யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் 2009 மேயின் பின்னராக ஜெனீவாவிலும் சர்வதேச சமூகத்தின் முன்னதாகவும் நாம் எதனை வலியறுத்தி போராடியிருந்தோமோ அதனையே இப்போது வடமாகாணசபை தீர்மானமாக ந…

  20. 5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம் செய்ய முயன்ற 56 வயதுடைய சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவரை செவ்வாய்க்கிழமை (10) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறியதாவது, '56 வயதுடைய நபர் ஒருவர் 20 வயதுடைய யுவதியொருவரை திடீரென திருமணம் செய்யவுள்ளதாக அந்தப் பிரதேச சிவில் குழுவினர் எமக்குத் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, குறித்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினோம். தான் சுவிட்ஸர்லாந்திலிருந்து வருகை தந்ததாக அந்த நபர் கூறிய போதிலும் அவரிடம் கடவுச் சீட்டோ அல்லது அவரை அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணமோ இருக்கவில்லை. இந்நிலையில், அவர் மீ…

  21. ஊடக அறிக்கை புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை அவசியம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். கடந்த அரசிடமும் இதனை நாம் வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த அரசு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பான நடைமுறைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், மேலும் இலகுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இரட்டைக்குடியுரிமைப் பெற்றவர்களுக்கும் இந்நாட்டு வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளர். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்…

  22. வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை 10.02.2015 வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளைப் பகுதிகளில் உள்ள கிணறுகள் பலவற்றில் குடிதண்ணீருடன் எண்ணெய் மாசாகக் கலந்திருப்பது அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கூடவே, எண்ணெய் மாசு வடமாகாண சபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் விடயமாகவும் ஆகியிருக்கிறது. அந்தவகையில் கௌரவம் மிக்க இந்தச் சபையி;ல் இதுபற்றிச் சில விடயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். சுன்னாகம் அனல் மின்நிலையத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணறுகளில், இலங்கை தரநிர்ணய நிறுவகத்தால் (Srilanka Stand…

  23. தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும்! - சம்பந்தன் வேண்டுகோள் [Wednesday 2015-02-11 07:00] பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும் என்று இலங்கை வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலையடுத்து இலங்கையின் அரசியல் களநிலைவரத்தில் ஏற்பட்டுவரும் பெரும் மாற்றங்கள் தொடர்பாக நேரில் கண்டறிவதற்காக இலங்கைக்கு ஒருவார கால பயணத்தை மேற்கொண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தைச் சேர்ந்த மூவரடங்கிய …

  24. இலங்கையின் வடக்கு மாகாணசபையில் 10-02-2015 அன்று நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை அனைத்துலக விசாரணை வேண்டும் என்றும் தீர்மானத்தை இந்திய - ஈழத்தமிழர் நட்புறவு மையம் வரவேற்கிறது. இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- http://www.pathivu.com/news/37699/57//d,article_full.aspx

  25. இனப்படுகொலைத் தீர்மானம்: இந்தியா அதிருப்தி – சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் உறுதி FEB 11, 2015 | 1:50by கார்வண்ணன்in செய்திகள் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை இந்திய அதிகாரிகள் விரும்பவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால், மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்க முயற்சிகளின் முக்கியத்துவத்தை அளவிடுவதற்கு முன்னரே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த இனப்படுகொலைத் தீர்மானம் ஜெனிவா கூட்டத்தொடரில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று அதிகாரிகள் கவனமாக ஆராய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.