Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச இலங்கையை விட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. யோசித்த ராஜபக்ச நேற்று இரவு டுபாய் நோக்கி சென்ற விமானத்தில் இலங்கையை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் யோசித்த விசேட போக்குவரத்து சேவைகள் இன்றி சதாரண போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhqz.html

  2. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சிமைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்த வேளையில் மு.காவின் தலைமை மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கைகோர்த்து ஆட்சியமைத்தது. அந்தவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மு.காவின் இந்தச் தன்னிச்சையான முடிவை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வன்மையாகக் கண்டித்திருந்தனர். "தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிக்காமல் - அவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிறிதளவும் ச…

  3. இலங்கைக்கு எதிராக ஆவணப்படமொன்றை தயாரிக்க சனல்4 இயக்குனர் கலம் மக்ரே நிதி திரட்டி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கலம் மக்ரே இலங்கைக்கு எதிராக மற்றமொரு புதிய ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க ஆயத்தமாகி வருகின்றார். இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு 10,000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் நிதி திரட்டப்பட்டு வருகின்றது. விசேட நிதியமொன்றை ஆரம்பித்து அதன் ஊடாக இவ்வாறு பணம் திரட்டப்பட உள்ளது. கிங்ஸ்வாடர் என்னும் பெயரில் இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சனல்4 நிறுவனத்திற்காக ஏற்கனவே இவ்வாறான நிதியங்களின் ஊடாக மக்ரே பணம் திரட்டியுள்ளதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=126346&category=TamilNews&language=tamil

  4. தமக்கு எதிரான சர்வதேச விசாரணையை இடைநிறுத்த கோரி, ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரவுள்ளது. இதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பான் கீ மூனை நியுயோர்க்கில் வைத்து சந்திக்கிறார். தற்போது பிரித்தானியாவில் இருக்கும் அவர், பெரும்பாலும் இன்றையதினம் அமெரிக்கா செல்வார் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அங்கு எதிவரும் 12ம் திகதி அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். யுத்தக்குற்ற விசாரணை அறிக்கையை செப்டம்பர் மாதம் வரையில் தாமதிக்க அமெரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/…

  5. வடமாகாண சபை தீர்மானம்! இலங்கை அரசு அதிருப்தி! முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு!! Feb 11, 20150 இலங்கை தொடர்பான போர்க் குற்ற அறிக்கை மார்ச் மாத கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படுவதை ஒத்திவைக்கும் முயற்சியில் இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவரும் இலங்கை அரசாங்கத்துக்கு வடமாகாண சபை நேற்று நிறைவேற்றியிருக்கும் இனப்படுகொலை குறித்த தீர்மானம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது. இதனையடுத்து கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட அவலசர உத்தரவையடுத்து வடமாகாண ஆளுநர் பாளிகார வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்திருப்பதாகத் தெரிகின்றது. நேற்றிரவே விக்கினேஸ்வரனை ஆளுநர் அழைத்திருந்தபோதிலும், இன்று காலையில் முதலமைச்சர் ஆளுனரைச் சந்திப்பார் எனத் தெரியவருகின்றது…

  6. 2009ல் ஈழத்தமிழர்களை இலங்கையோடு சேர்ந்து இனப்படுகொலை செய்த இந்தியா மற்றும் அமெரிக்கா.2009க்கு பிறகான தமிழீழக்கோரிக்கையை 2012 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐநாவில் தீர்மானங்கள் மூலம் நீர்த்துப்போகச் செய்தது. குறிப்பாக இலங்கையின் மீது சர்வதேச விசாரணை வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஒரு வேளை வந்துவிட்டால் அது 60 ஆண்டுகளுக்கான போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது (60அண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் அது இனபப்டுகொலை என எளிமையாக நிருபிக்கமுடியும் மேலும் தமிழீழம் அமைத்து தரவேண்டிய அவசியமும் ஏற்படும்) என்பதற்காகவும் முதலில் உள்நாட்டு விசாரணை என்றது .பின் 2002 முதல் 2009வரை மட்டுமே விசாரணையென்று சுருக்கியது அமெரிக்கா.இதன் பிண்ணணியில் இருந்தது இந்தியாதான். …

  7. 90களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் (இந்திரன் சண்முகலிங்கன்) நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார். இவர் யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக இருந்த சமயத்தில்தான் பிரேமதாஸா அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமரசப் பேச்சு முயற்சிகள் தோல்வியைடைந்து, 1990 ஜூனில் இரண்டாம் ஈழயுத்தம் வெடித்தது. யுத்தம் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சியாக புலிகளுடன் சமரசம் பேச வந்த பிரேமதாஸா அரசின் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸி.எஸ்.ஹமீத் யாழ்ப்பாணம், நல்லூரில் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் பலாலி திரும்பினார். அவரை வழியனுப்பிவைக்க, புலிகளின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் என்ற முறையில் டொமினிக்கும் அவருடன்…

  8. “சமாதான பிரகடனம்” இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உத்வேகம் அளிக்கும் சுதந்திர தினத்தன்று கோட்டை ஜெயவர்த்தனபுரவில் மேற்கொள்ளப்பட்ட “சமாதான பிரகடனம்” இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உத்வேகம் அளித்துள்ளதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் முன்னர் ஏற்பட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை இலங்கை அரசு உறுதிசெய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் சமதான பிரகனடத்தை புலம்பெயர்ந்தோர் உரிய வகையில் ஏற்றுஇ இலங்கையின் நல்லிணக்கத்துக்காக பணியாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=272623866611823546#sthash.Iu1Y8Kv2.dpuf

    • 0 replies
    • 403 views
  9. வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு மத்திய அரசாங்கத்தால் 8 வாகனங்கள் கையளிக்கப்பட்டன. நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கையளிக்கப்பட்ட ஒவ்வொரு வாகனமும் 35 லட்சம் ரூபா பெறுமதியானவை ஆகும். இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், மு.பரஞ்சோதி, வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சி.வசீகரன் விவசாய அமைச்சின் செயலாளர் ஆ.வரதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். http://www.malarum.com/article/tam/2015/02/11/8546/%E0%AE%…

  10. அர­சியல் பழி­வாங்­கல்கள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும். எதிர்க்­கட்­சி­யினர் மீதான தாக்­கு­தல்கள் நிறுத்­தப்­பட வேண்டும். அத்­துடன் இத்­த­கைய அர­சியல் பழி­வாங்­கல்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக கட்சி பேத­மற்ற வகையில் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­லடி சில்வா நேற்று பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்­தினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை எதிர்க்­கட்­சித்­த­லைவர் நிமல் சிறி­பால டி சில்வா தலை­மையில் கொண்டு வரப்­பட்ட தேர்­தலின் பின்­ன­ரான வன்­மு­றைகள் தொடர்­பி­லான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தலை விடுத்தார். எதிர்க்­கட்சித் த…

  11. மூன்று தமிழ்க் கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. ஈ.பி.டி.பி., ஜனநாயக மக்கள் காங்கிரஸ், சிறிரெலோ ஆகிய கட்சிகளே இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளதுடன் ஏனைய கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கும் முடிவு செய்துள்ளன. ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேற்று கொழும்பில் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இச்சந்திப்பில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் உதயராசா ஆகியோரும் பங்கேற்றனர். தற்போதைய நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதன் மூலமே தமிழ் மக்களின்…

  12. ஈழத்தமிழர்களின் கரி நாளான 4.02.2015 அன்று மொரிசியஸ் நாட்டு பிரதமருடனும் மற்றும் வெளிவிவகார அமைச்சருடனும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் செயலாளர் திரு . திருச்சோதி அவர்கள் சந்திப்பை மேற்கொண்டிருந்தார் . இச் சந்திப்பின் ஊடாக சிறிலாங்காவில் ஆட்சி மாற்றம் நடந்திருந்தாலும் தமிழ் மக்கள் நலன் கருதி எவ்வகையிலும் எவ் நகர்வுகளும் இடம்பெறவில்லை எனவும் , தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கட்டமைப்புசார் இனவழிப்பு தொடர்வதுக்கு சர்வதேசம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசரத்தையும் , அதற்கு மொரிசியஸ் ஆதரவான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேச்சுகள் நடாத்தப்பட்டது. மொரிசியஸ் பிரதமர் தனது கடந்தகால பணியில் 1985 ஆண்டே ஐநா மனிதவுரிமை பொதுச்சபையில் தனது உரையில் ஈழத்தம…

  13. சென்னையில் நடை பெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கத்தில் மே 17 அமைப்பின் நிறுவனர் திருமுருகன் அவர்கள் தமிழினப் படுகொலையில் இராஜபக் ஷவும் மைத்திரிபால சிறிசேனாவும் என்ற தலைப்பில் உரையாற்றினார். http://www.pathivu.com/news/37669/57//d,article_full.aspx

  14. சென்னையில் நடை பெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கத்தில் இயக்குநர் வ.கௌதமன் அவர்கள் தமிழீழத்தில் தொடரும் சிங்களக் குடியேற்றம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார். http://www.pathivu.com/news/37668/57//d,article_full.aspx

  15. வடமாகாணசபை 24வது அமர்வு கைதடி பேரவைச் செயலகத்தில் 10.02.2015 அன்று காலை 9.30 மணிக்கு இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை முன்வைத்து முதலமைச்சர் ஆற்றிய உரை குருர் ப்ரம்மா…………… கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்த்தரப்புத் தலைவர் அவர்களே, கௌரவ மாகாணசபைப் பிரதிநிதிகளே, கௌரவ சிவாஜிலிங்கத்திற்குச் சென்ற வருட கடைசி மாதக் கூட்டத்தில் ஒரு உறுதிமொழி அளித்திருந்தேன். அதாவது போதிய தரவுகள் தரப்பட்டால் நானே குறித்த இனப்படுகொலை பற்றியதான பிரேரணையைத் தயாரித்து இச்சபையில் முன்மொழிவேன் என்று. பலத்த சிரமங்களுக்கிடையே அந்த உறுதிமொழியை நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்வடைகின்றேன். பல சட்டத்தரணிகளினதும், பேராசிரியர்களினதும், நண்பர்களினதும் உதவியின் பேரில் உரு…

  16. யாழின் அதிசயம்!! தாயின் பூதவுடலை சுமந்து, சுடலை சென்ற பெண் பிள்ளைகள்! February 09, 2015, 8:51 pm யாழ்.கோப்பாயில் தாயின் இறுதிச் சடங்கில் பூதவுடலை அவரது பெண் பிள்ளைகள் நால்வரும் முன்வந்து கண்ணீர் சிந்தியவாறு காவிய சம்பவம் அங்கு நின்ற அனைவரதும் நெஞ்சங்களை உருக்கியதுடன் வியப்பிலும் ஆழ்த்தியது.திருநெல்வேலி சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது இராமநாதன் கலட்டி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டவர் திருமதி அருள்பிரகாசம் தையல்நாயகி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இந்த நிலையில் நான்கு பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இவருக்கு உள்ளனர். இவரது மூத்த பெண் பிள்ளை தனது தாயார் நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த சில வருடங்களாக பராமரித்து வந்துள்…

  17. இந்த நாட்டின் ஜனாதிபதியாவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவை றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கல்லூரியின் 50வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த தொழில்நுட்ப விஞ்ஞாபன கூடக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, எனது வாழ்வில் நான் எதிர்கொண்ட பல்வேறு சவால்களை வெல்வதற்கு எனது ஆத்ம நம்பிக்கை உறுதுணையாக இருந்துள்ளது. நாம் சில வேளை இலகுவானது பற்றியே சிந்திக்கின்றோம். கஷ்டம் என்றால் அதனை கைவிட்டு விடுகின்றோம். மாணவர்கள் தமது இலக்கு அல்லது சாதகமான வெற்றியை அடைய இத்தகைய எதிர்ப்புகள் அச்சுறு…

  18. சிறிலங்கா அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும் – நியுயோர்க் ரைம்ஸ் FEB 11, 2015 | 0:30by நித்தியபாரதிin செய்திகள் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக சிறிலங்காவில் நடத்தும் விசாரணை அறிக்கையை கால தாமதமின்றி வெளியிட வேண்டும் என்று நியுயோர்க் ரைம்ஸ் ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது. “தனது நாட்டில் நிலவிய மகிந்த ராஜபக்சவின் எதேச்சாதிகார ஆட்சி, ஊழல், குடும்ப ஆட்சி போன்றவற்றை நிராகரித்து எதிர்க்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை நாட்டின் அதிபராக தேர்ந்தெடுத்ததன் மூலம் ஒரு மாதத்திற்கு முன்னர் சிறிலங்காவானது முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிறிலங்காவில் புதியதொரு அத்தியாயத்தை அதிபர் சிறிசேன திறந்து நாட்டில் நம்பிக்கையை ஏற்படுத்து…

  19. வடக்கு மாகாணசபையின் இனப்படுகொலைத் தீர்மானத்தை சிறிலங்கா அரசு நிராகரிப்பு FEB 11, 2015 | 1:07by புதினப்பணிமனைin செய்திகள் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்றும் இதுகுறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாணசபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம், நிராகரித்துள்ளது. ஒரு அரசு என்ற வகையில் இனப்படுகொலை ஒன்று சிறிலங்காவில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “இறுதிகட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள். அந்தச் சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும…

  20. புதிய அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரிஷாத் பதியுதீனை வரவேற்கும் நிகழ்வுகள் வன்னியில் இடம்பெற்று வருகின்றன. நேற்று முல்லைத்தீவுக்கு வருகை தந்த அமைச்சரை 'எமது தேசியத் தலைவரே வருக' என்று எழுதிய பதாதைகளுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வரவேற்பில் ஈடுபட்டிருந்தனர். தேசிய அரசின் கொள்கைகளில் ஒன்றான அரச ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவுத்தலையும் மீறி சில அரசியல்வாதிகள் அரச உத்தியோகத்தர்களை தமக்கு சார்பாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். http://seithy.com/breifNews.php?newsID=126277&category=TamilNews&language=tamil

  21. இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன பிபிசிக்கு தெரிவித்துள்ளார். இறுதிகட்டப் போரின்போது ஏராளமானத் தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே என அவர் கூறுகிறார். அச்சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது என அவர் கூறுகிறார். இனப்படுகொலை என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது வடமாகாண முதல்வரும், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான விக்னேஸ்வரன் அவர்களுக்கு நன்றாகவே தெரியு…

  22. சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 112வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகள் பேணப்பட்டு வருவதாகவும், அதிகபட்சமாக இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரால், 10.7 மில்லியன் டொலர் வைப்பில் இடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=224073865110698931

  23. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - பாராளுமன்றத்தில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

  24. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் முகாங்களுக்குள் முடங்கியிருந்த இராணுவத்தினர் மெல்ல மெல்ல தமது முன்னைய காலத்தில் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையை மீள ஆரம்பித்துள்ளனர். வீதி ரோந்துகள் மற்றும் கிராமங்களை கண்காணிக்கும் ரோந்துகள் என்பன மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையை அச்சுறுத்தும் பாணியிலான இந்த ரோந்து நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக குறைந்திருந்தது. இதேவேளை பொது இடங்களிலும் இராணுவத்தினர் திடீர் பிரசன்னம் கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். புகையிரத நிலையங்கள், பேருந்து தரிப்பிடங்கள், ஆலயங்கள், மற்றும் மக்கள் குளிக்கும் குளங்கள் முதலியவற்றிலும் இராணுவத்தினர் மேற்கொள்ளும் காண்காணிப்பு நடவடிக்கைகள் ம…

  25. இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டேவிஸ் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பா.உறுப்பினர் சி.சிறீதரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச்சந்திப்பின்போது கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின் வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள நிலைமைகள் தொடர்பாக பிரித்தானிய உயஸ்தானிகர் பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் வினாவினார். இதற்கு பதிலளித்த பா.உறுப்பினர், ஜனாதிபதி தேர்தலின் பின்னாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. மெல்ல மெல்ல மக்கள் இந்த அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையை இழந்தே வருகின்றனர். இன்னும் இராணுவ பிரசன்னங்கள், இராணு முகாம்கள், ரோந்துகள் என்பவற்றில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.