ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
சட்டவிரோதமான முறையிலேயே ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா சர்ச்சையை கிளப்பியுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்னவும் அப்போதைய அமைச்சர்களும் மிகவும் நாகரீகமாக முறையில் அமைதியைப் பேணியுள்ளதாகவும், அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தால் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். பிரதமராக பதவி வகித்த டி.எம் ஜயரட்ன பதவி விலகவில்லை, பதவியிலிருந்து விலக்க…
-
- 7 replies
- 657 views
-
-
தமது பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள், அரசியல் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் மீளவும் நாட்டிற்கு வரவழைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். இது அரசின் பாரிய பொறுப்பாகும் என இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மிகவும் அராஜக போக்கின் காரணமாக தனது பாதுகாப்பை காரணம் காட்டி ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசியல் ஆர்வலர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் …
-
- 0 replies
- 477 views
-
-
புலிகளின் நிதிக்கு நடந்தது என்ன? – விசாரணை நடத்தப் போவதாக ரணில் அறிவிப்பு FEB 02, 2015 | 2:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்தும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாவனெல்லையில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், “கடந்த பல ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும். அவர்களின் நிதி மற்றும் முன்னைய அரசாங்கத்துடன் வைத்திருந்த தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்படும். விடுதலைப் புலிகளின் நிதிக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் அறிந்து கொள்ள விரும்புகிறது. ஊழல் வ…
-
- 2 replies
- 996 views
-
-
பிரித்தானிய தமிழர் பேரவையினால் தமிழ் மக்களுக்கான நீதி கேட்கும் பயணத்துக்கான சந்திப்பு ஒன்று ஜனவரி 29ம் திகதி இடம்பெற்றது. இச்சந்திப்பில் உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள், பிரித்தானிய அமைச்சர்கள், 40க்கும் அதிகமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த Bassetlaw Nottinghamshire பகுதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. John Mann Labour MP, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஐ.நாவின் உதவியுடன் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது இரண்டாம் உ…
-
- 0 replies
- 496 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினாலேயே பொது பல சேனா அமைப்பு உருவாக்கப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சொன்ன கருத்து முற்றிலும் பொய்யானது என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்தார். திஹாரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கழந்துகொண்டு உரையாற்றியிருந்த சந்திரிகா குமாரதுங்க, மேற்கண்ட கருத்தை வெளியிட்டிருந்தார். அவரது அந்த கருத்து கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த விதானகே, அழுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணையொன்றை முன்னிருந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று மைத்திரிபால அரசாங்கமும் கோரியுள்ளது என்றார். http://www.tamilmirror.lk/138941
-
- 0 replies
- 383 views
-
-
ஓமந்தை சோதனை சாவடியில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட சகல சோதனை நடவடிக்கைகளும் இன்று திங்கட்கிழமை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு பதிவுகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டுவந்தன. அந்த பதிவு நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/138978
-
- 0 replies
- 499 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நரேந்திர மோடி தீவிர அக்கறை – முரளிதர் ராவ் FEB 01, 2015 | 11:57by அ.எழிலரசன்in செய்திகள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை கொண்டுள்ளதாக, பாஜகவின் தேசிய செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை காண்பித்து வருகிறார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி அவர், முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம் அவர் வலியுறுத்தி வந்தார். அதுபோலவே, தற்போதைய மைத்திரி…
-
- 3 replies
- 758 views
-
-
அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம் – தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி புதுடெல்லியில் பேச்சு JAN 31, 2015 | 2:07 by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்நாடு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றுள்ளன. ஜவஹர்லால் நேரு பவனில் நேற்று நடந்த இந்தப் பேச்சுக்களுக்கு, இந்திய அரசாங்கத்தின் தரப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சில் சிறிலங்கா – மாலைதீவு விவகாரங்களுக்கான, மேலதிகச் செயலரான சுசித்ரா துரை தலைமையிலான அதிகாரிகளும், சிறிலங்கா தரப்பில், புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரக உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தப் பேச்சுக்களில் த…
-
- 8 replies
- 1.1k views
-
-
அரச பதவியிலிருப்பதால் கிடைக்கும் சலுகைகளானது பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் அவர்கள் பிரதிநிதிப்படுத்தும் சாதாரண குடிமக்களுக்கும் இடையில் ஒரு வசதியான பிரிவினை ஏற்படுத்துவதை அதிகம் காணலாம். இலங்கையிலோ குறிப்பாக தமிழரை பாராளுமன்றத்தில் பிரதிதிப்படுத்தும் கட்சிக்கு அது மக்களிடமிருந்து ஒரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக தோன்றுகிறது. அதுவும் புதியதொரு ஜனாதிபதி நாட்டினை ஆட்சி செய்யும் இவ்வேளையில் இந்த இடைவெளியை அதிகமாக்கும் வண்ணம் தமிழர் மீதான ஒடுக்குமுறையினை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய முதன்மையான கடமையை விட்டு விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஒரு கூட்டு வஞ்சனையளரினை போன்று செயற்படுகிறது. அதிகார துஸ்பிரயோகம், ஊழல், வஞ்சகத்தன்மை என்பன இலங்கை அரசியலில் நீண்ட காலமாக …
-
- 0 replies
- 600 views
-
-
இடம்பெயர்ந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாக வவுனியா சிதம்பரபுரம் முகாமில் உதவிகளின்றி வாழ்ந்துவருகின்ற குடும்பங்களை அதே இடத்தில் காணிகள் வழங்கி குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார். யுத்தங்காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழகம் சென்று, பின்னர் 1995 ஆம் ஆண்டு இலங்கையில் மீளக்குடியேற்றுவதற்காக அழைத்துவரப்பட்ட ஆயிரக்கணக்கான இடமபெயர்ந்த குடும்பங்கள் வவுனியா சிதம்பரபுரம் சிறப்பு அகதிமுகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இவர்களை தற்காலிகமாக இந்த முகாமில் தங்க வைத்திருந்தது. எனினும், திட்டமிட்டபடி 6 மாத காலத்துக்குள் அந்தக் குடும்பங்களை மீள்கு…
-
- 0 replies
- 459 views
-
-
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மா மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை வருகிறார். இதன்போது அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடனும் பொதுநலவாயத்தின் முன்னுரிமைகள் மற்றும் இலங்கையின் தேசிய முன்னுரிமைக்குரிய விடயங்களுக்கு பொதுநலவாயம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது தொடர்பாக ஆராய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுநலவாயத்தின் தலைவராகியிருந்தார். இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு மோல்ட்டாவில் நடைபெறவுள்ள நிலையில் அவ்வமைப்பின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவைச்…
-
- 6 replies
- 598 views
-
-
ஐதேக அரசுடன் மீண்டும் ஒட்டிக்கொள்ள முயன்ற ரம்புக்வெல – வெட்டிவிட்டார் ரணில் FEB 01, 2015 | 10:27by கார்வண்ணன்in செய்திகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல, மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ள முயன்ற போதிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார். மகிந்த அரசாங்கத்தில் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல, எந்த நேரமும் ஊடகங்களில் பரபரப்பான மனிதராகவே இருந்து வந்தார். ஆனால், மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சிக்குப் பின்னர், கெஹலிய ரம்புக்வெல தேடுவாரின்றி இருக்கிறார். இந்தநிலையில், கடந்தமாதம் 24ம் நாள், பிரதமர் செயலகத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தொலைபேசியில் பேசிய அவர், மீண்டும் தான் …
-
- 1 reply
- 537 views
-
-
பாராளுமன்றத் தேர்தலொன்றை இப்போது நடத்தினால் தேசிய அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தை செயற்படுத்த முடியாது போகலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, 100 நாட்கள் திட்டத்தை அமுல்படுத்த பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமானது. முன்னதாக இது புரியவில்லை. சில திட்டங்களை அமுல்படுத்த முயற்சித்த போதே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதற்தடைவையாக நேற்று சனிக்கிழமை தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாரா…
-
- 5 replies
- 571 views
-
-
டக்ளஸால் உருவாக்கப்பட்டு ஈபிடிபியின் சார்பினில் செயற்பட்ட வடமாகாண கல்வி அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகளை உடனடியாக இடைநிறுத்தி அதனை கலைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசேப் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்தலைவர் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கல்வி அபிவிருத்திச் சபை என்ற அமைப்பு வேறு எந்த மாகாணத்திலும் செயற்படவில்லை. வடமாகாணத்தில் மட்டும் அந்தச் சபை செயற்பட்டு வந்தது. இது கட்சி அரசியல் சார் நிலையில் ஜனநாயகத்துக்கு முரணாக செயற்பட்டது. இந்த அமைப்பின் மூலம் வடக்கு மாகாணத்தில் கல்விச் செயற்பாடுகளில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. குறுகிய அரசியல் கண்ணோட்டத்தில் வடமாக…
-
- 0 replies
- 693 views
-
-
இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இந்த யோசனையை சமர்பிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது. 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் தொடர்ச்சியாக இந்த புதிய யோசனை அமையும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் திங்களன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் உயர்மட்ட தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கொழும்பில் நடைபெறும் முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிஸ்வால்,…
-
- 33 replies
- 1.8k views
-
-
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நீச்சல் தடாகம் மற்றும் 'கிளப்' ஆகியன, இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவினால் கடந்த வியாழக் கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்துக்கு கடந்த வியாழக்கிழமை திடீரென வருகை தந்த இராணுவத் தளபதி தயாரத்னாயக்காவை, யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அல்விஸ் வரவேற்றார். இதன் பின்னர் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பாதுகாப்புத் தலைமையகத்துக்கு முன்பாக அமைக்கப் பட்ட பிரமாண்ட மேடையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வுகளில் வைத்து, ஒவ்வொரு பிரிவு இராணுவக் கொமாண்டர்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. அத்துடன் ஒரு தொகுதி நூல்களும் வழங்கப்பட்டன. இசை நிகழ்வும் இடம்பெற்றது. இதன் பின்னர் தல்செவன விடுதியில் புதிய நீச…
-
- 0 replies
- 444 views
-
-
சொர்ணகுமார் சொரூபன் ஐ.நா. சர்வதேச விசாரணை அறிக்கையை வெளியிடும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்புடன் செயற்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். சுமந்திரனின் பாராட்டுவிழா நாவலர் கலாச்சார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற போதே, அதில் கலந்துகொண்ட மாவை, நிகழ்வு முடிந்த பின்னர் சர்வதேச விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாங்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக சர்வதேச விசாரணை தற்போது நடக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வைக்கப்பட்ட பிரேரணை தொடர்ந்…
-
- 7 replies
- 514 views
-
-
மலையக வீட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட மோடிக்கு அழைப்பு February 1, 2015 11:31 am இந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் நிறைவேற்றப்படவுள்ள வீடமைப்பு திட்டத்தின் ஒரு தொகுதிக்கான அடிக்கல்லை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக மலையகத்துக்கு விஜயம் செய்து நாட்ட வேண்டும் என்ற அழைப்பை நாம் கூட்டாக விடுத்துள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று மாலை இந்திய தூதுவர் வை.கே. சின்ஹா உடன் இந்திய தூதகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக ஊடகங்களுக்கு மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் ஆகியோருடன் நான…
-
- 0 replies
- 386 views
-
-
சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்புவீர்கள்! நீங்கள் அனைவரும் சொந்த மண்ணில் பிறந்து வளரவில்லை. என்பதை உங்கள் முகங்களில் பார்கிறேன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் தெரிவித்தார். வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் வசிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொகுதி காலணிகளை பிரிட்டன் அமைச்சர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், என்னை வரவேற்றதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பிரதமர் டேவிற் கமரூன் வந்தமையினால் நானும் வர விரும்பினேன். இங்கிருக்கும் பிள்ளைகள் அனைவரும் தங்களுடைய சொந்த இடங்களில் பிறக்கவில்லை என்றும் இந்த முகாம்களில் பிறந்துள்ளனர் என்பதையும் நான் …
-
- 1 reply
- 770 views
-
-
சசீந்தர ராஜபக்ஸவும் குடும்பமும் நண்பர்களும்... ராஜபக்ஸக்களின் உல்லாச வாழ்வு குறித்த தகவல்கள் இலங்கை ஊடகங்களில் முதலிடத்தை பெறுகின்றன. அந்த வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அண்ணர் சமல் ராஜபக்ஸவின் மகன் சசீந்திர ராஜபக்ஸ தனது உறவினர்கள் நண்பர்களுடன் உல்லாசமாய் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன...சசீந்திர ராஜபக்ஸ ஊவாமாகாணத்தின் முன்னாள் முதல்வர் தற்போதைய மாகாண சபை உறுப்பினர்.... இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டின் பொழுது தனியார் நிறுவனம் ஒன்றில் குத்தைகைக்கு எடுக்க பட்டு இரண்டு பேரூந்துகள் வழங்க பட்டன இதன்வருட வாடகை 1.8 மில்லியன் ஆகும் .இந்த குத்தகை அடிப்படையில் பெற பட்ட சொகுசு வண்டிகளை ராஜபக்ஸ குடும…
-
- 1 reply
- 483 views
-
-
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை அனைத்துலக தரம் வாய்ந்தாக இருக்க வேண்டும் – பான் கீ மூன் FEB 01, 2015 | 11:34by கி.தவசீலன்in செய்திகள் போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா உருவாக்கும் உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை, அனைத்துலகத் தரம் வாய்ந்ததாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பணியகத்தைச் சேர்ந்த எரி கனேகோ இதுகுறித்து தகவல் வெளியிடுகையில், ”சிறிலங்காவில் போருக்குப் பின்னர் சமாதானம் மற்றும் நல்லிணக்க விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதேபோன்று நாட்டின் ஜனநாயகம், அபிவிருத்தியிலும் கணிசமான மாற்றங்களைக் காணமுடிகிறது. இந்த மாற்றங்களுக்கு ஐ.நா. ஆதரவு வழங்கியிருந்…
-
- 0 replies
- 387 views
-
-
குழப்பத்தை ஏற்படுத்த முனையும் இராணுவ அதிகாரிகள் – கருத்துக்கூற மறுக்கும் இராணுவப் பேச்சாளர் FEB 01, 2015 | 11:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு இரண்டு இராணுவ அதிகாரிகள் ஒரு குழுவினருக்குப் பயிற்சிகளை அளித்து வருவதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கருத்து வெளியிட மறுத்துள்ளார். வடக்கிலுள்ள இராணுவ முகாம்களின் மீது கற்களை வீசித் தாக்கி, மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்துவதன் மூலம், அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆட்சியைப் பிடிக்க கோத்தாபய ராஜபக்ச சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். இதன் ஒரு கட்டமாக கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான ஒ…
-
- 0 replies
- 555 views
-
-
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எவ்வித தடையும் வரையறைகளும் இன்றி கருத்தரங்குகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதியளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவான முறையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள இயங்குவதில் எவ்வித தடையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைகள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்தப்பட வேண்டுமென்றால் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்பட்டது. ஊடக சந்திப்புக்கள், கருத…
-
- 0 replies
- 405 views
-
-
புதிய அரசியல் கூட்டணி பற்றி மனோ கணேசன் விளக்கம் 31 ஜனவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:04 ஜிஎம்டி இலங்கையின் தென்பகுதி மற்றும் மலையகத்திலுள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்தில் புதிய தமிழ் அரசியல் கூட்டணி ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகி கட்சிகள் இணைந்து இந்த புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் நலன்களையும் அரசியல் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதைப் போல, வடக்கு- கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை முன்வைத்து தங்களின் கூட்டணி செயற்படும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழ…
-
- 1 reply
- 547 views
-
-
இலங்கையில் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் ஏற்படவுள்ள மாற்றத்தின் அடிப்படையில் அடுத்த ஓரிரு நாட்களில் புதிய முதலமைச்சரை தமது கட்சி அறிவிக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். புதிதாக அமையவுள்ள ஆட்சியில் பங்கெடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கு திறந்த மனதுடன் அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறுகின்றார். அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்க பெருன்பான்மை பலம் இல்லாதிருந்த நிலையில்,…
-
- 1 reply
- 680 views
-