Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தவேளை பாதுகாப்புதுறை அமைச்சு அவர் கைகளில் தான் இருந்தது. அதன் கீழ் நேரடியாக இயங்கிவந்த கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் நடப்பது அவதானிக்கப் படுகிறது சோதனை நடக்கும் வேளையில் சப்பாத்திற்குள் காசை வைத்து கொடுக்கிறார்கள். பாஸ்போட்டுக்கு கீழ் காசை வைத்து கொடுக்கிறார்கள். பின்னர் சில பாதுகாப்பு அதிகாரிகள் எந்த ஒரு பயமும் இல்லாமல் நேரடியாகவே காசைப் பெறுகிறார்கள். தமிழ் பெண்களை மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை குறிவைத்தே நடக்கிறது. வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு(மத்திய கிழக்கு நாடுகளில்) வேலைசெய்துவிட்டு நாடு திரும்பும் பெண்களிடம் இந்த அதிகாரிகள் பெரும் பணத்தை பிடங்கும் அவலம். மகிந்தரின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு மட்…

  2. மன்னாரில் மௌனப் போராட்டம் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்தில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பில் விசாரணை, காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்குமாறு வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்தில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்த மௌனப் பேரணி மன்னார் பிரதான பேரூந்து நிலையத்தை வந்தடைந்தது. "வடக்கில் அதிகளவான இராணுவ குவிப்பு எதற்கு" , "சர்வதேசமே போர்க்குற்றத்தை விசாரணை செய்", "நீண்டகால கைதிகளை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி வி…

  3. சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா விசாரணை அறிக்கை தயார் JAN 26, 2015 | 7:40by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தி வந்த விசாரணை தொடர்பான அறிக்கை தயாரிப்புப் பணி முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்ட நிபுணர்களை ஆதாரம் காட்டி, இந்த தகவலை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த விசாரணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குகுவதற்காக மார்டி அதிசாரி தலைமையிலான மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழ…

  4. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்ச மீது கையூட்டல் மற்றும் ஊழல்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் உதவி காவல்துறை அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் மனைவியே இன்றைய தினம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். திறைசேரியினால் 500 லட்சம் ரூபா பெறுமதியான 100 கிலோ தங்கம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமது கணவரான வாஸ் குணவர்த்தன விசாரணைகளை மேற்கொண்டார் இதன்போது இந்த விற்பனையில் சிராந்தி ராஜபக்ச தொடர்புப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன்போது உதவி காவல்துறை அதிபர் அனுர சேனாநாயக்க, விசாரiணையை நிறுத்துமாறு உத்தரவிட்டார் அத்துடன் இந்த விடயம் பொய்யானது என்று கூறி ஊடகங்களுக்கு கருத்துரைக்குமாறும் தமது க…

  5. மகிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டும் முடக்கப்பட்டது JAN 26, 2015 | 12:58by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னான் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் முடக்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அயடுத்து, அவர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மகிந்தானந்த அளுத்கமகேக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடைபெறுவதால், மூன்று மாதங்களுக்கு அவரது கடவுச்சீட்டை முடக்கி வைக்குமாறு, சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்…

  6. தேர்தலில் தோல்வியுற்றிருந்தால் என்னைக் கொன்றிருப்பார்கள் – மைத்திரிபால JAN 26, 2015 | 7:58by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் சித்திரவதைக்குட்படுத்திக் கொலை செய்யும் விரிவான திட்டத்தை முன்னைய ஆட்சியாளர்கள் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. பொலன்னறுவவில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், வாழ்வதற்குத் தனக்கு ஒரு வீடும் இல்லை என்று மகிந்த ராஜபக்ச கூறுகிறார். நான் தோற்கடிக்கப்பட்டிருந்தால், எனக்கு ஒரு வீட்டைக் கொடுத்திருந்திருப்பீர்களா என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்த போதே, எ…

  7. சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் அமெரிக்க பதில் தூதுவர் சந்திப்பு JAN 26, 2015 | 12:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவுடன் கொழும்பிலுள்ள பதில் அமெரிக்கத் தூதுவர் அன்ட்ரூ மான் பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரொபேர்ட் நொக்ஸ் ரொஸ்சும் கலந்து கொண்டார் http://www.puthinappalakai.net/2015/01/26/news/3176

  8. கடற்படையில் யோஷிதவின் பிரவேசம்: விசாரணைக்கு கோரிக்கை - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ தொடர்பில் விசாரணை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க, கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். யோசித கடற்படையில் இணைந்து கொண்ட விதம், பிரித்தானிய பாதுகாப்பு கல்லூரியில் புலமைப் பரிசில் கிடைத்த விதம் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். கடற்படைத் தளபதிக்கு, பாதுகாப்புச் செயலாளர் உடனடியாக இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். ஜே.வி.பி கட்சி செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யோசித ராஜபக்ஸவிற்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு முன்னாள் ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸவிற்கு எதிராக ஜ…

  9. மணல் அகழ்வைத் தடுக்க முற்பட்டவரை மகேஸ்வரி நிதியத்தினர் தாக்கியதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண் அகழ்வதற்கு பருத்தித்துறை பொலிஸார் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் மகேஸ்வரி நிதியத்தினர் இன்று காலை நாகர்கோயில் பகுதிக்கு மணல் அகழ்விற்கு சென்றிருந்தனர். அவர்களை ஊர்மக்கள் தடுத்துள்ளனர். அதன்போது மகேஸ்வரி நிதியத்தின் தலைவர் ரஜீவ் தலைமையிலான குழுவினர் தடுத்தவர்களைத் தாக்கியுள்ளனர். நாகர் கோயில் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் பரஞ்சோதி ஜீவராசா ( வயது 43) என்பவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இதனையடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்தவ…

  10. ஜெனிவாவை எதிர்கொள்ளும் திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கிறார் ரணில் JAN 26, 2015 | 2:43by கார்வண்ணன்in செய்திகள் ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார். சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடத்திய விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் மாதம் நடக்கவள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை எதிர்கொள்வது குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதா…

  11. சுன்னாகத்தில் இயங்கி வந்த நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடுமாறு சம்பிக்க ரணவக்க உத்தரவு சுன்னாகம் பகுதியில் இயங்கி வரும் நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடிவிடுமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்துள்ளார். அமைச்சருடன் இன்று (22.01.14) இடம் பெற்ற சந்திப்பின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். நொதேர்ன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்கள் நிலத்தில் பரவி சுன்னாகம், தெல்லிப்பழை பிரதேசங்கள் எண்ணூறுக்கு மேற்பட்ட கிணறுகளி…

  12. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்வதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. கடற்படை அதிகாரியாகவிருந்த யோசித்த ராஜபக்ஷவுக்கு எவ்வாறு பிரித்தானியாவின் டார்ட்மவுத் கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் கிடைத்தது, அங்கு கல்வியை முடிப்பதற்கு முன்னர் எவ்வாறு அவருக்கு இலங்கை கடற்படையின் அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டது, அரசாங்க அதிகாரியாக இருக்கும்போது அவர் எவ்வாறு தனியார் நிறுவனமொன்றின் உரிமையைப் பெற்றிருக்க முடியும் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய முறைப்பாடொன்று கையளிக்கப்படவுள்ளது. இந்த முறைப்பாடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்படவிருப்பதாக ஜே.வி.பியின் மத்திய குழு உற…

  13. இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு நெருக்கமானவர்களால் நடத்தப்படும் எவண்ட் காட் பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச கடலில் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. சர்வதேச கடலில் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தின் மூலம் இந்த ஆயுத விற்பனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக என சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. முப்படையினரின் ஆயுதங்கள், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் என்பன கடற்கொள்ளையர்கள் மற்றும் சர்வதேச வன்முறை குழுக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இராணுவம் மற்றும் கடற்படையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள், அவர்களின் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் துப்பாக்கிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு சொந்தமான தன…

  14. பொதுமக்களைச் சுட உத்தரவிட்ட பிரிகேடியர் திருப்பி அழைக்கப்படுவார்- அமைச்சர் ஜோன் அமரதுங்க JAN 26, 2015 | 3:13by கார்வண்ணன்in செய்திகள் வெலிவேரிய, ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட- தற்போது வெளிநாட்டில் இராஜதந்திரப் பதவி வகித்து வரும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை, திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் நாள் ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டியல் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் 26 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு நீதி வேண்டியும், து…

    • 1 reply
    • 580 views
  15. மாத்தறையில் அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்தி 'மாத்தறைக்கு மங்கள யுகமொன்றை'' ஏற்படுத்தி, மாத்தறையை தெற்கின் தலைநகராக்குவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறை வல்பல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மிகவும் சாவல்மிக்க தேர்தல் ஒன்றை எதிர்கொண்டு, இந்நாட்டில் ஏற்பட்டிருந்த குடும்ப ஆட்சியை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்களுக்கு, விசேடமாக மாத்தறை மக்களுக்கு தூர பார்வை, பலம், தேவை இருந்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார். http://www.tamilwin.com/show-RUmtyBRaKchrz.html

  16. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ ஆட்சிக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இரண்டு வருடங்களுக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும். இதற்கு முந்தைய அரசினால் செயலிழக்கச் செய்யப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவை மீண்டும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் 100 நாள் வேலைத் திட்டத்தில் எஞ்சியுள்ள 84 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=125…

  17. இலங்கையில் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் போர்க் குற்ற விசாரணை குறித்த விசேட அறிக்கையொன்று எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எனினும், இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு அதனை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு கோருவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகதியில் இடம்பெற்ற விசாரணைகளின் தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்த் அல் உசெய்ன் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamil.srilankamirror.com/news/item/1357-2015-01-26-05-30-26

    • 0 replies
    • 595 views
  18. கடந்த 60 ஆண்டு அரசியலின் வேதாளங்களும் முருக்க மரங்களும்சாந்தி சச்சிதானந்தம்:- 26 ஜனவரி 2015 “விக்கிரமனின் பதிலைக் கேட்டு சற்றும் எதிர்பாராத வகையில் வேதாளம் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு திரும்பப் போய் முருக்க மரத்தில் ஏறியது..” காலங்காலமாக ஒற்றையாட்சி என்கின்ற முருக்க மரத்தில் ஏறும் சிங்கள அரசியல் தலைவர்களான வேதாளங்கள் வரிசையில் திரு ரணில் விக்கிரமசிங்கவும் இப்பொழுது சேர்ந்து விட்டார். சென்ற வாரம் நாடாளுமன்றில் பிரதம மந்திரியாகத் தனது கன்னி உரையை நிகழ்த்தும்போதே இதனைத் தெரிவித்திருந்தார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பினைக் குழப்பா வண்ணம் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்படும் எனக் கூறினார். அதாவது, 13ந் திருத்தச்…

  19. இரண்டு நாள் பயணமாக மார்ச் 14இல் கொழும்பு வருகிறார் மோடி JAN 26, 2015 | 1:49by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 14ம் நாள் இரண்டு நாள் அதிகாரபூர்வ அரசுமுறைப் பயணமாக சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வரும் மார்ச் 14 மற்றும் 15ம் நாள்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , சிறிலங்காவில் உயர்மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என்று தெரியவந்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தியாவுக்கான முதலாவது அரசுமுறைப் பயணம் இடம்பெற்று சரியாக ஒரு மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு வரவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரும் பெப்ரவரி 16ம் நாள் தொடக்கம், 19ம் நாள் வரை…

  20. மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்துப் பேச பிரசெல்ஸ் செல்கிறார் மங்கள சமரவீர JAN 25, 2015 | 3:18by கார்வண்ணன்in செய்திகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதிக்கு சிறிலங்கா மீது விதிக்கப்பட்டுள்ள தடையை பிற்போடக் கோரும் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை பிரசெல்ஸ் செல்லவுள்ளார். சிறிலங்கா மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடைமயை குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பிற்போடுமாறு தாம் பிரசெல்சில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில், சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை வரும் செவ்வாய்க்கிழமை புதிய …

  21. மகிந்தராஜபக்ஷவின் தலைமையில் மூன்றாம் அணி ஒன்று சிறிலங்காவில் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.சிறிலங்கா சுதந்திர கட்சியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் மகிந்தவுக்கு ஆதரவான தரப்பினர் ஒன்றிணைந்து இந்த குழுவை உருவாக்கவிருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.இந்த அணியின் ஊடாக மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் பதவிகளில் இருந்து துமிந்தசில்வா, சஜின்வாஸ் குணவர்தன போன்றோர் விலக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் மற்றம் நிதி மோசடிகள் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எத…

  22. இராணுவ தலையீடுகளில் மாற்றம் இல்லை! மக்களை பின் தொடரும் நிலை தொடர்கிறது... சர்வாதிகார அரசாங்கத்தை அகற்றி மக்களுக்கு நல்லாட்சியையும் மாற்றத்தையும் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி கூறிவருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் இன்னமும் மகிந்தராஜபக்ஷவால் தமிழரை நசுக்க பழக்கப்படுத்தப்பட்ட இராணுவத்தினரின் தலையீடுகளும் நெருக்குவாரங்களும் இம்மியளவும் குறைந்ததாக தெரியவில்லை. ரோந்துகளும் புலனாய்வு துறையினரின் மோப்பங்களும் தொடர்கின்றது.இதன் மூலம் இந்த நாட்டிலும் தமிழ் மக்கள்வாழ்விலும் நம்பிக்கை வருமென நம்பி வாக்களித்த மக்களின் மனதில் அச்சமும் நம்பிக்கையின்மையிலும் ஏற்பட்டுவருகின்றது. நான் கலந்துகொள்ளச்சென்றபொழுது அங்கு இராணுவப் பிரசன்னமே நிறைந்திருந்தது.முன்பள்ளியில் …

  23. மைத்திரி மீது முட்டை வீச முயன்றாரா சீனர்? JAN 25, 2015 | 12:25by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடந்த சட்டமா அதிபர்கள் மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கச் சென்ற போது, அங்கு பணியாற்றிய சீனர் ஒருவரிடம் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், நடந்த மாநாட்டுக்கு மைத்திரிபால சிறிசேன சென்ற போது, கடுமையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள பிரதான நுழைவாயிலில் சீனர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைச் சோதனையிட்ட போது, பாதுகாப்புச் சோதனைக் கருவி அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பியது. அதையடுத…

  24. புதிய அரசுக்கு இப்போது காலஅவகாசத்தை வழங்கியுள்ளோம். அவர்களும் எமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாதுவிடின் தமிழரசுக் கட்சி மாநாட்டில் கூறியபடி ஜனநாயகப் போராட்டம் வெடிக்கும். அதற்கு நாம் எல்லோரும் தயாராகவே இருக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற 'தாயகம்' அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த தேசத்தில் குறிப்பாக தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் வாழுகின்ற இடங்களில் ஒரு புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ராஜபக்‌ஷவின் சர்வாதிகாரம் தலைதூக்கிய…

  25. கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – இரண்டு வாரங்களில் முடிவு JAN 25, 2015 | 12:01by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்று இரண்டு வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சீன அதிபர் கடந்த செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா வந்த போது, ஆரம்பித்து வைக்கப்பட்ட, கொழும்பு நகரத் திட்டத்தை தமது அரசாங்கம் மீளாய்வு செய்யப் போவதாக, ரணில் விக்கிரமசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார். இந்தநிலையில், சாத்திய ஆய்வு அறிக்கை மற்றும் சுற்றாடல் தாக்கங்கள் குறித்த அறிக்கை, அரசாங்கத்துக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்றும் ரணில் விக்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.