ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
இராணுவ சூழ்ச்சித் திட்டம் குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். இன்றைய தினம் பிற்பகலில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்கச் செய்ய இராணுவ சதித் திட்டமொன்றை முன்னெடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் பீரிஸிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற்ற தினமன்றும் மறுநாள் அதிகாலை வேளையிலும் அலரி மாளிகையில் ஜனாதிபதியுடன் இருந்ததன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது என பீரிஸ் தெரிவித்துள்ளார். குற்ற புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியிருப்பதாகத் த…
-
- 2 replies
- 598 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். நேற்று அதிகாலை 3.35 அளவில் கட்டார் எயார்வேய்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி நாட்டை விட்டு தப்பிச் செல்ல முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக வழி ஏற்படுத்தி கொடுத்ததாக பிரசன்ன விக்ரமசூரிய மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. குற்றச்சாட்டு குறித்து உரிய முறைப்பாடு செய்யாத காரணத்தினால் இவ்வாற…
-
- 0 replies
- 617 views
-
-
பாதுகாப்பு செயலாளர் பஸ்நாயக்காவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விளக்கம் கோரியுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வங்கிக் கணக்கு ஒன்று தொடர்பில் கருத்து வெளியிட்டமை தொடர்பிலேயே புதிய பாதுகாப்பு செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இந்தக்கணக்குகள் தொடர்பில் இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு செயலாளரும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இந்தநிலையில் நாட்டின் நிதிக்கொள்கைகள் தொடர்பில் இராணுவப் பேச்சாளருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை போர் ஒன்று இடம்பெறாமை காரணமாக முப்படைக்களிலும் உள்ள பேச்சாளர்களை பதவி விலக்குவது தொடர்பில் அமைச்சரவை ஆராய்வதாக ராஜித குறிப்பிட்டார். http:/…
-
- 0 replies
- 615 views
-
-
தலைமன்னார் - இராமேஸ்வரம் மற்றும் கொழும்பு - தூத்துக்குடி இடையில் நேரடி கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நேரடி விமான சேவைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்திய விஜயத்தின்போது இது குறித்து ஆராயப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பு- கண்டிக்கிடையில் இரட்டை ரயில் பாதை அமைத்தல், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 4 ஆயிரம் தோட்ட வீடுகளை நிர்மாணித்தல் என்பன குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்துவருதல், வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேம்படுத்தல், மீனவர் பிரச்…
-
- 0 replies
- 376 views
-
-
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் குறைப்பு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 1991ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை 9ஆக இருந்தது. எனினும் இம்முறை நடபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் எண்ணிக்கையின் பிரகாரமே உறுப்பினர்களில் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு உறுப்பினரால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=311193823221795115#sthash.TA6Nxjf5.dpuf
-
- 14 replies
- 1.3k views
-
-
கிழக்கு முதல்வர் பதவி குறித்து மைத்திரி, ரணிலுடன் கூட்டமைப்பு பேச்சு JAN 23, 2015 | 2:09by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு சரியானதே என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சிறிலங்கா அதிபரை மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சந்திப்புகளின் போது, கிழக்கு மாகாணசபையில் இழுபறிக்குள்ளாகியிருக்கும் ஆட்சிமாற்றம், மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக…
-
- 4 replies
- 569 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மன்னாரில் உள்ள முள்ளிக்குளம் கிராமத்தை இலங்கைக் கடற்படை முழுமையாக சுவீகரித்து ஏழு வருடங்களாகின்றன. இப்போது அந்த மண்ணில் மக்களுக்காக தொண்டு நிறுவனங்கள் கட்டிக் கொடுத்த வீடுகளில் கடற்படை தமது குடும்பத்தினரோடு குடியேறி விட்டார்கள் என சென்ற வாரம் அக்கிராமத்துக்கு விஜயம் செய்த மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முள்ளிக் குளத்துக்கு அருகாமையில் புது வீடுகள் அமைக்கபட்டு உள்ளமையையும் ருக்கி அவதானித்திருக்கிறார். பெரும்பாலான இந்த வீடுகள் குடியிருப்பில்லாமல் இருப்பதையும் அவதானித்துள்ளார். இவ் வீட்டுத் திட்டத்துக்கு பக்கத்தில் உள்ள பெயர்ப் பலகை 279 வீடுகளும் இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களும் கட்டப்படும் 'துயளளiஅ' என்ற நிற…
-
- 3 replies
- 583 views
-
-
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இந்திய வர்த்தகர் ஒருவரின் ஆதரவுடன் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கணனி தொழில்நுட்ப நிபுணர்கள் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் தேடி வருவதாக 'ஶ்ரீலங்கா மிரர்' இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் சிறிது காலம் கொழும்பு ஜய்க் ஹில்டன் விடுதியில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் குறித்த தகவல்களைக் கண்டறிவதற்கு இந்திய பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு பாதுகாப்புத் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவரும் இவர்களுக்கு உதவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இவர்கள் எவ்வாறான பணிகளை முன்னெடுத்தார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்…
-
- 0 replies
- 535 views
-
-
ஆறாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணத்தில் கோலகலமாக ஆரம்பமாகியுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வுகள் காலை 10 மணியளவில் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று பின்னர் அங்கிருந்து விருந்தினர்கள் மேள,தாள வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டு 10.30 மணியளவில் கண்காட்சியை யாழ்.இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் நடராஜ் நாடா வெட்டி திறந்து வைத்தார். தென்னிலங்கை வர்த்தகர்கள் -யாழ்ப்பாண வர்த்தகர்களிடையே வர்த்தக ரீதியாக தொடர்பை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கண்காட்சி நடைபெறுகின்றது. மேலும் இந்த நிகழ்வுக்கு வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம்,வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதேவேளை கல்வி,அழக…
-
- 0 replies
- 394 views
-
-
ஆட்சி மாற்றத்தின் எதிரொலி ஒரேயொரு தனியான தமிழ் பல்கலைக் கழகமான யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தினுள் சிங்களமொழியை புகுத்துத்தும் நடவடிக்கை ஆரம்பம்.இதனைக் கண்டிக்குமா தமிழர் தரப்பு அரசியல்! http://www.pathivu.com/news/37205/57//d,article_full.aspx
-
- 0 replies
- 356 views
-
-
இலங்கை தலைமை நீதிபதி பதவி விலகவில்லை: பேச்சாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தலைமை நீதிபதியின் பேச்சாளர் விஜயரட்ண கொடிப்பிலிஇலங்கையின் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் பொய்யென்று தலைமை நீதிபதியின் ஊடக பேச்சாளர் வழக்கறிஞர் விஜயரத்ன கொடிப்பிலி தெரவித்திருக்கிறார். இன்று வியாழக்கிழமை உச்சநீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் இதைத் தெரிவித்த அவர், தலைமை நீதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் கூறினார். தலைமை நீதிபதி தமது பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார் என்றும் கொடிப்பிலி தெரிவித்தார். எனவே சம்பந்தப்பட்ட …
-
- 0 replies
- 553 views
-
-
லசந்த, ஜெயராஜ், ரவிராஜ், ஜோசப் கொலைகள் குறித்து மீள் விசாரணை JAN 22, 2015 | 0:19 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்து புதிய விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும், சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்பு இருந்தது. இதுதொடர்பாக கோத்தாபய ராஜபக்ச மீது மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாடு உண்மையானத…
-
- 19 replies
- 1.2k views
-
-
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கொன்றில் சுமார் 8 பில்லியன் ரூபா பணம் இருந்த விவகாரம் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய பிரச்சனையாக உருவெடுத்துவருகின்றது. இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் இருந்த குறித்த பணம், நாட்டின் திறைசேரி அல்லது கருவூலம் என்று அழைக்கப்படும் அரச பொது நிதிக்குச் சேரவேண்டியது என்று புதிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தப் பணத்தை உடனடியாக திறைசேரிக்கு மாற்றுவதற்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நடவடிக்கை எடுத்திருந்தார். இராணுவத் தலைமையகத்தின் காணியை விற்ற பணமே அப்போதைய பாதுகாப்புச் …
-
- 2 replies
- 726 views
-
-
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பாவிக்கப்பட்டவையா? காணொளி இணைப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- கொழும்பில் இன்று திறந்து விடப்பட்ட உயர்பாதுகாப்பு வலையப் பகுதியில் கோடிக்கணக்கான இலங்கை ரூபாய்கள் பெறுமதியான பல்வித வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வீதிகளில் நிரையாக அடுக்கி விடப்பட்டு இருந்த வாகனங்கள், தூசி படிந்தனவாக காணப்பட்டதாகவும், வெள்ளை வான்கள், வெள்ளை டிறக்குகள், கறுப்பு மற்றும் வேறு நிறங்களிலான வாகனங்கள், இலக்கத் தகடு உள்ளவை, இலக்கத் தகடுகள் அற்றவை, புதியவை, பழையவை என பலவித வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்ததால் பாவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கு…
-
- 0 replies
- 462 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைகக்களம் தெரிவித்துள்ளது. சஜின்வாஸ் குணவர்த்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ----- முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை அடுத்து அவருடைய கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைகக்களம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/01/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%…
-
- 3 replies
- 474 views
-
-
கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தை சூழல் ஆய்வுகளுக்கு உட்படுத்திய பின்னர் தொடரப்போவதாக இலங்கை உறுதியளித்துள்ளது. பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் வெளிவிவகார செயலாளர் சி.மகேந்திரன், சின்குவா செய்திச்சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார். யதார்த்தபூர்வமான மற்றும் பரஸ்பர ஓத்துழைப்பை தொடர்வதற்காக சீனாவுடன் எமது அரசாங்கம் சிறந்த உறவுகளை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக சீனா எப்போதும் இலங்கைக்கு உதவிவந்துள்ளது. தேசிய கட்டுமானம், தேசிய ஐக்கியம் ஆகியவற்றிற்கு சீனா பங்களிப்பு செய்துள்ளது, இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் அதற்காக நன்றியுடையவர்களாக உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். போர்சிட்டி திட்டத்தினால் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் முடிவடைந்த பின்னர…
-
- 3 replies
- 405 views
-
-
எரிபொருட்களின் விலை அரசாங்கத்தி னால் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று நள் ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரின் பங்கேற்புடன் நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விலைக்குறைப்புக்கான அங்கீகாரம் கிடைத்ததாகவும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 33 ரூபாவாலும், 95 ஒக்டெய்ன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 30 ரூபாவாலும், ஒரு லீற்றர் சாதாரண டீசலின் விலை 16 ரூபாவாலும், விஷேட டீசல் ஒரு லீற்றர் 23 ரூபாவா…
-
- 5 replies
- 594 views
-
-
கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கை [ வியாழக்கிழமை, 22 சனவரி 2015, 01:03.53 AM GMT ] தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கையை விடுத்து விட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது. அதாவது முதலில் இனஅழிப்பு வதை முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியலை கோர வேண்டும். அதை இனஅழிப்பு அரசு தருமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் கூட்டமைப்பு வைக்க வேண்டிய முதல் கோரிக்கை அதுதான். ஏனென்றால் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கணவன்மார் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் மறுமணமும் செய்யாமல் பெரும் அவலத்திற்குள் சிக்கி தவிக்கிறார்கள். இனஅழிப்பு அரசு அவர்களது இருப்பு குறித்து எந்த பதிலும் தர மறுக்கிறது. ஒரு இனத்தின் அடிப்படையும் ஆதாரம…
-
- 1 reply
- 582 views
-
-
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப்பயிற்சி நிறுத்தப்படும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரமொன்றை முன் வைக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/articles/2015/01/21/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%…
-
- 0 replies
- 606 views
-
-
மாற்றுக்கருத்துகளுக்கும் மதிப்பளிக்கக் கோருகிறார் முன்னாள் அமைச்சர் மக்களின் கருத்தறியும் உரிமையை பாதுகாக்க தமிழ் ஊடகங்கள் எதிர்காலத்தில் மாற்றுக்கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நேற்று இடம்பெற்றது. அமர்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் , வாக்களித்துள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நாம் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். எமது மக்களின் முன்னுரிமைக்குரிய கோரிக்கை…
-
- 15 replies
- 786 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர். சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் படுகொலைகள் கோதபாயவின் வழிநடத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேர்வின் சில்வா வாக்கு மூலமொன்றை அளித்ததுடன், ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார். இந்த முறைப்பாட்டுக்கு அமைய கோதபாயவிடம் விரைவில் விசாரணை நடாத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லசந்த படுகொலை செய்யப்பட்ட 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம்…
-
- 0 replies
- 355 views
-
-
"மைத்திரி அரசாங்கம் தடைகளை நீக்கும் என நம்புகிறோம்" தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- மகிந்தராஜபக்ச அரசாங்கம் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு வேண்டுமென்றே முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ள புதுடில்லி வட்டாரங்கள் புதிய அரசாங்கம் அந்த தடைகளை நீக்குவதையே சிறந்த நட்பிற்கான அறிகுறியாக கருதப்போவதாக தெரிவித்துள்ளன. இந்திய செய்தித்தாளொன்று இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது இலங்கையின் புதியவெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர தனது முதலாவது விஜயத்தை மேற்கொள்வதற்கு இந்தியாவை தேர்ந்தெடுத்ததை வரவேற்றுள்ள புதுடில்லி வட்டாரங்கள் எனினும் இந்தியாவின் திட்டங்களுக்கு மகிந்தராஜபக்ச அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடைகளை சிறிசேன அரசாங்கம் நீக்குவதையே ந…
-
- 0 replies
- 214 views
-
-
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளை நீக்கும் பணிகள் இன்று (22) கொழும்பில் இருந்து ஆரம்பமாகிகப்படுவதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய அனர்த்த முகாமைத்துவ, பொதுசனத் தொடர்பு மற்றும் கிறிஸ்தவ விகார அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முசாமில் ஆகியோரின் தலைமையில் இந்த செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. http://tamil.srilankamirror.com/news/item/1310-2015-01-22-02-25-21
-
- 2 replies
- 813 views
-
-
காணாமற்போன 2000 பேர் குறித்து அனைத்துலக சட்டங்களுக்கு அமைய விசாரணை JAN 22, 2015 | 1:44by கார்வண்ணன்in செய்திகள் காணாமற்போன 2000 பேர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், இவை தனியாக கோவைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கையில், “அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களுக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டிய தனியானதொரு கோப்பு விசாரணைக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க நிபுணர் குழுவொன்று தேவைப்படும். சில விடயங்கள் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களுடன் தொடர்புடையவை. அந்த முறைப்பாடுகளைத் தனியாக விச…
-
- 2 replies
- 579 views
-
-
நாட்டில் கடந்த காலங்களில் நடந்த பாரிய ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர் அங்கம் வகிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார். குழுவில் ரணில் விக்ரமசிங்க (தலைவர்), மங்கள சமரவீர, பாட்டளி சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம், அநுரகுமார திஸாநாயக்க, ஆர்.சம்பந்தன், சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி வெலியமுன, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர். இந்த குழுவில் ஜே.வி.பியின் தவைவர் அனுரகுமார திஸாநாயக்க இணைப்பாளராக செயற்படுவ…
-
- 0 replies
- 373 views
-