Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தரம் 6 இற்கு விண்ணப்பங்களை இன்று முதல் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம் Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 02:36 PM 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை 13 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் இணையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அணுகுவதன் மூலம் மூன்று பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். http://g6application.moe.gov.lk/#/ என்ற பிரத்யேக இணையத்தளம் மூலமா…

  2. 13 Jan, 2026 | 05:43 PM இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தமிழக அரசினால் திங்கட்கிழமை (12) சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அயலகத்தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்கொண்ட…

  3. இந்தியவுக்கான தரைவழிப் பாதை - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? 09 January 2026 இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான தரைவழி பாதைத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி போக்குவரத்து தொடர்பிலான யோசனையை, இலங்கை அரசாங்கமே முன்வைத்தது. அதனை முன்னெடுத்துச் செல்ல, இந்தியா தயாராக இருக்கிறது. எனினும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான எட்கா தொடர்பிலும் இலங்கையின் ப…

  4. அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 02 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மத்திய நிலையங்களில் இந்த வேலைநிறுத்தம் …

  5. யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள். யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு 500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு , நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம பிரதீபன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் நடைபெறாது. குறித்த கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 500 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளது என்றார். வீட்டுத்திட்ட ப…

  6. சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல எனும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்கள் - நோர்வே உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் தரப்பு வலியுறுத்தல் 13 Jan, 2026 | 08:58 AM (நா.தனுஜா) தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அழுத்தங்களை நோர்வே பிரயோகிக்கவேண்டும் எனவும், குறைந்தபட்சம் சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல என்ற நிலைப்பாட்டையேனும் நோர்வே வெளிப்படுத்தவேண்டும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் வலியுறுத்தியுள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இம்மாதத் தொடக்கம் முத…

  7. திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது 2026 ஜனவரி 09 , பி.ப. 09:00 பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், பெயரிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. R https://www.tamilmirror.lk/செய்திகள்/திருத்தப்பட்ட-பயங்கரவாத-பெயர்-பட்டியல்-வெளியானது/175-370814

  8. சீன ஆய்வுக் கப்பல்களுக்கான தடை நீங்குமா? - முக்கிய இராஜதந்திர நகர்வுடன் கொழும்பு வருகிறார் வோங் யீ 11 Jan, 2026 | 12:30 PM (லியோ நிரோஷ தர்ஷன்) சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ தனது ஆப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளியுறவு அமைச்சர்கள் தங்களது ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கே மேற்கொண்டு வரும் மரபைத் தொடர்ந்து, எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கொழும்பு வரவுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு வோங் யீ இலங்கைக்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான…

  9. 'டித்வா' புயலின் தாக்கத்தால் 4,800 மண்சரிவுகள்! Jan 12, 2026 - 11:05 PM 'டித்வா' புயலுக்குப் பின்னர் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுமார் 4,800 மண்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆத்தர் சி. கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ தெரிவித்துள்ளார். இன்று (12) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். 'டித்வா புயல் ஏற்பட்டதன் பின்னர் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி மண்சரிவு வரைபடமாக்கல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அந்த வரைபடங்களை பகுப்பாய்வு செய்தபோது, ஊடகங்கள் வாயிலாக இதுவரை அறிவிக்கப்பட்டதை விடவும் மிக அதிக எண்ணிக்கையிலா…

  10. அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… பகிரங்கமாக சவால் அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு …

  11. 12 Jan, 2026 | 05:19 PM தைப்பொங்கல் மதங்களைக் கடந்து இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழா. இத்திருநாளில் தொன்றுதொட்டு இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கி வந்துள்ளோம். ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து விட்டன. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பெருவிழாவில் அலுமினியப் பானைகள் பொருத்தம் இல்லாதவை. உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. எனவே இயற்கையைப் போற்றுகின்ற இத்தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். பசுமை இயக்கத்தின் மண்பானைப் பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உரை…

  12. 12 Jan, 2026 | 10:55 AM வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் சொகுசு வீட்டினை கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு பெற்றுள்ளார். அந்நிலையில் குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார் சைக்கிள்கள் கார்களில் வந்து செல்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை தமது கண…

  13. 12 Jan, 2026 | 05:58 PM வட மாகாண முதலீட்டு மாநாடு (NIS) 2026 யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாசார மையத்தில் ஜனவரி 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இலங்கையின் போர் பிந்தைய பொருளாதார மாற்றப் பயணத்தில் இந்த மாநாடு ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், கொள்கை வடிவமைப்பாளர்கள், அபிவிருத்தி கூட்டாளிகள் மற்றும் தமிழ் புலம்பெயர் சமூகத்தை ஒன்றிணைத்து, வட மாகாணத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு மூலோபாய திருப்புமுனையாக NIS 2026 அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக வட மாகாணம் பயன்படுத்தப்படாத பெரும் திறன்களைக் கொண்டிருந்தாலும், சிதறிய நிர்வாக அமைப்புகள், முடிவெடுப்பாளர்களை அணுக முடியாத நிலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முதலீட்டு வசதி இல்லாமை போன்ற காரணங்களா…

  14. சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி புதிய இணைப்பு விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அதேநேரம், காரில் இருந்த ஏனைய மூவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். செய்தி - தேவந்தன் முதலாம் இணைப்பு சற்று முன்னர், கிளிநொச்சி - ஏ35 வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர்…

  15. சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு Jan 12, 2026 - 06:34 PM ஹம்பாந்தோட்டை சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்துடன் தொடர்புடைய ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இறுதி செய்யப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு குறுகிய கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் இன்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2027 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70 வது ஆண்டு நிறைவை கூட்டாகக் கொண்டாடுவதற்கு இ…

  16. 11 Jan, 2026 | 05:27 PM (இராஜதுரை ஹஷான்) அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பில் போலியான மற்றும் திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கலாம், பலவீனப்படுத்தலாம் என்று விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நினைக்கிறார்கள். நாட்டுக்கு பொருந்தும் வகையிலான கல்வி கொள்கையை அமுல்படுத்துவோம். விமர்சனங்களை முன்வைப்பவர்களின் அரசியல் நோக்கம் ஒருபோதும் வெற்றிப் பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். குருநாகல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (10) மாலை நடைப்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முறைமை மாற்றத்தை நோக்கிச் செல்வ…

  17. Published By: Digital Desk 3 12 Jan, 2026 | 11:19 AM பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என “நாட்டை பாதுகாப்போம்” தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட மனு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அந்த மனுவில், பிரதமரின் தலைமையில் செயல்படுத்தப்பட உள்ள தன்னிச்சையான கல்வி சீர்திருத்தங்கள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு, அதன் மக்கள் மற்றும் புத்த சாசனம் கடும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அமைந்துள்ளது. மக்கள் மற்றும் நாட்டின் மீது அக்கறை இல்லாத ஒரு அறியாமை அரசாங்கத்தின் நேரடி விளைவுகள் இறுதியில் தேசத்திற்கும் பொதுமக்களுக்கும் கடும் …

  18. 12 Jan, 2026 | 06:15 PM மன்னார் தபாலகத்தில் இருந்து செத்பார் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில், அவ்வீதியை புனரமைப்பு செய்ய பல தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (15) மன்னாருக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் குறித்த வீதியை செப்பனிடும் பணியில் உரிய திணைக்களத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் பிரதான தபாலகத்தில் இருந்து சௌத்பார் புகையிரத பகுதிக்குச் செல்லும் குறித்த வீதி நீண்ட காலமாக சீரின்றி காணப்பட்டது. எனினும் அவ்வீதியில் முழுமையாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க…

  19. யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதிக்கு சுங்கத் திணைக்கள ஆதரவு! 12 Jan, 2026 | 04:21 PM யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உறுதியளித்தார். வடக்கிலிருந்து நேரடியாக ஏற்றுமதிச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குக் கடிதம் மூலம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அக்கோரிக்கைக்கு அமைவான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்றது. இச்சந்திப்பின்போது வடக்கின் ஏற்றுமதிச் சவால்கள…

  20. இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான் இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன், முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர். குறித்த நிகழ்வானது தமிழ் நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய செந்தில் தொண்டமான், இலங்கையில் ஏற்பட்ட கொவிட் பெருந் தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் டித்வா புயலின் போது இந்திய அரசு இலங்கைக்கு பெரும் உதவிகளை வழங்கியுள்ளமையை சுட்டிக்காட்டினார். அதற்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் செந்தில் தொண்டமான் குறிப்…

  21. இந்திய உதவியின் கீழ் வடக்கு ரயில் பாதைகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பம் Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 05:26 PM 'தித்வா' (Ditwah) சூறாவளியினால் பாரியளவில் சேதமடைந்த வடக்கு மற்றும் தலைமன்னார் ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகள் இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (11) ஆரம்பிக்கப்பட்டதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹோ ரயில் நிலையத்தில் இன்றைய தினம் காலை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. https://www.virakesari.lk/article/235774

  22. அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்கத்துறைக்கு உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கல் 12 Jan, 2026 | 01:19 PM அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் திங்கட்கிழமை (12) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகோடவிடம் ஸ்கேனர்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். நிகழ்வில், சுங்க இயக்குநர் ஜெனரல் பால் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் பயன்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய எல்லைப் படைய…

  23. பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவில்லை கல்வி அமைச்சரும் நாட்டின் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவர் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, பிரதமர் பதவியில் இருந்தும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்தும் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதுடன் அதற்கான கையெழுத்தையும் சேகரித்து வருகின்றனர். எனினும் அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் இலங்கை தமிழரசுக் கட்சி கையெழுத்திட…

  24. கச்சத்தீவு திருவிழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த மீனவர்கள்.! கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் பெரும் திருவிழாவிற்கான ஏற்பாட்டு கூட்டத்தை பாரம்பரிய விசை படகு மீனவர்கள் இன்று புறக்கணித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 1974 ஆண்டின் கச்சத்திவு ஒப்பந்த அடிப்படையில் பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகுகளில் கச்சத்திவு திருவிழாவிற்கு சென்று தமது நேர்த்திக்கடன் செய்வதற்கான உடன்பாடு இருந்து வந்த நிலையில் சில வருடங்களாக கச்சத்தீவு திருவிழா வணிக ரீதியாக விசைப்படகுகளில் கட்டணம் அறவீடு செய்து சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று ஒரு வணிக சுற்றுலா பயணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் தாம் பாரம்பரிய நாட்டு படகில் கச்சதீவு திருவிழாவிற்கு செல்வதற்கு அரசாங்க…

  25. நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு Jan 12, 2026 - 07:55 AM பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இதுவரையில் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவில்லை என்பதுடன், எதிர்வரும் சில தினங்களுக்குள் அதனை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 3 மின் பிறப்பாக்கிகள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு 900 மெகாவோட் மின்சாரம் விநியோகிக்கப்படும் நிலையில், தற்போது ஒரு மின் பிறப்பாக்கியின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.