ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
தமிழ் மக்கள் 80 வீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் - இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சண்முகம் குகதாசன் இம் முறை நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 சதவீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுன்ற முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலையில் (22) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 1985ம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட…
-
- 3 replies
- 342 views
- 1 follower
-
-
செப்பு குாழாய் பொருத்திகளை கப்பலில் ஹொங்கொங்கிற்கு அனுப்புவதாகக் கூறி சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 23,000 தொன் செப்பு உலோகத்தை அனுப்பத் தயாராகிக்கொண்டிருந்த போது சுங்க அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (23) கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்றுமதி முனையத்தில் வைத்து செப்பு உலோகம் அடங்கிய கொள்கலன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளனர். பேலியகொட பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து செப்பு உலோகங்களை உருக்கி, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை சுங்க அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட செப்பு கையிருப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/196968
-
- 0 replies
- 518 views
- 1 follower
-
-
இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச ஊடக கண்காணிப்பாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் நீதித்துறை அதிகாரம் பெற்ற விசாரணைக்கு முல்லைத்தீவு பத்திரிகையாளர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டதன் 24 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது . குறிப்பாக, தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகளை அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2004 முதல் 2009 வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 48க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
23 Oct, 2024 | 11:10 AM யாழ்ப்பாணத்தில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர். சந்தேகநபரிடம் இருந்து 1400 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில் 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது! | Virakesari.lk
-
- 1 reply
- 714 views
- 1 follower
-
-
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை நேற்று செவ்வாய்க்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இச்சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய…
-
-
- 2 replies
- 383 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருணாகல் பகுதியைச் சேர்ந்த இருவரை இன்று புதன்கிழமை (23) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, குருணாகலைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள வெண்படல நோயை குணப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மென்றசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தில் போதகருடன் தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து நோய் ஏற்பட்டவரும் அவருக்கு உதவியாக இருவருமாக குருணாகலில் இருந்து பிரயாணித்து சம்பவதினமான இன்றையதினம் காலை மட்டக்களப்பை வந்தடைந்து குறித்த சீயோன் தேவாலயத்துக்கு செல்வதற்காக இடம் தெரியாது அந்தபகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில்…
-
- 2 replies
- 376 views
-
-
லலித்குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ரொமேஸ் சில்வா ஊடாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்முன்னைய தீர்ப்பினை சவாலுக்குஉட்படுத்தும் விதத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளையே கோட்டாபயவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் பாதுகாப்பு கரிசனை குறித்து தெரிவித்துள்ளார். லலித்குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் -யாழ்ப்பாண நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் – கோட்டாபய | Virakesari.lk
-
- 1 reply
- 453 views
-
-
காணாமல்போன அரச வாகனங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே இந்த வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரச வாகனங்கள் காணாமல்போனமை தொடர்பில் ஜனாதிபதி செயலாளரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 அரச வாகனங்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அ…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
கடந்த சில நாட்களாக இராணுவத்தினருக்கு அவதூறு ஏற்படும் வகையிலும் பொதுமக்களுக்கு இராணுவத்தின் மீது உள்ள நம்பிக்கையை இல்லாமல் செய்து வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும், சமூக வலைதளங்களில் இராணுவம் தொடர்பான பொய்யான தகவல் அடங்கிய வீடியோக்களை சிலர் வெளியிட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இராணுவத்தினர் வெளியிட்டுள்ள அறிவித்தலில், “இராணுவத்தில் சிறப்பான எதிர்காலம் இல்லாத உறுப்பினர்கள் சிலரினால் வழங்கப்பட்ட பொய்யான தகவல்களை, முறையாக உறுதிப்படுத்திக்கொள்ளாமல் சிலர் தங்களது தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோக்களில் தெரிவிக்கப்பட்டவாறு, இராணுவ முகாம்களின் படையினரை புதிய இடங்…
-
- 0 replies
- 391 views
-
-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அங்கஜன் தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டியைச் சேர்ந்தவருமான செந்திவேல் தமிழினியன் என்ற வேட்பாளரே உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ் . போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச) நாடாளுமன்ற இளம் வேட்பாளர் திடீர் இறப்பு!
-
- 0 replies
- 351 views
-
-
23 Oct, 2024 | 04:55 PM இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டு 24 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரியுள்ள வன்னி மண்ணின் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்று, அவருக்கு நீதி வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என வலியுறுத்தியுள்ளது. அச்சமற்ற, எளிமையான ஊடகவியலாளராக அறியப்பட்ட, துப்பாக்கிச்சூடு நடத்தி மௌனிக்கப்பட்ட நிமலராஜன் மயில்வாகனத்தின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் கையொப்பமிட்ட ஊடக அறிக்கையில் சர்வதேச நீதித்துறை அதிகாரம் கொண்ட விசாரணையின் ஊடாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுக்கப…
-
- 0 replies
- 119 views
-
-
23 Oct, 2024 | 05:37 PM மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி இன்று புதன்கிழமை (23) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபவணி ஆனது நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நானாட்டான் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று காலை 9.30 மணியளவில் முருங்கன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டு நானாட்டான் சுற்று வட்டத்தின் வழியாக நானாட்டான் பிரதேச செயலகத்தை சென்றடைந்தது. இந்த நிகழ்வில் மன்னார் பிரதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஒஸ்மான் டெனி , நானாட்டான் மடு சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ,நானாட்டான் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், நானாட்…
-
- 0 replies
- 114 views
-
-
வன்னியில் வேட்புமனு நிராகரிப்பு; தீர்ப்பினை அறிவித்த உயர் நீதிமன்றம்! 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இருவரினால் கடந்த வாரம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை நிராகரித்ததாக ம…
-
- 1 reply
- 135 views
-
-
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு! 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபரின் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது . இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செ…
-
- 0 replies
- 113 views
-
-
இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் நலன்களை அடிப்படையாக வைத்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. அவர்கள் தங்கள் நலன்களிற்காக அனுகூலங்களை எதிர்பார்த்தார்கள் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளிப்படையான எதிர்கூறத்தக்க வர்த்தக சூழல் இல்லை என தெரிவித்துள்ள அவர் ஜப்பானிய நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை இலஞ்ச ஊழல் அற்றவை என குறிப்பிட்டுள்ளார். அவை இலஞ்சம் பெறுவதில்லை என குறிப்பிட்டுள்ள தூதுவர் இலஞ்சம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஜப்பான் நிறுவனங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி விடுவது வழமை எனவும் தெரிவித்துள்ளார். கேள்வி - நாங…
-
- 2 replies
- 194 views
- 1 follower
-
-
10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை-நீர்கொழும்பு மேல் நீதிமன்றம்! 10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியதற்காக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது அதன்படி 9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2024/1405370
-
- 0 replies
- 176 views
-
-
பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. அவர் பயன்படுத்திய வாகனம், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் பதிவு செய்யப்படாத இலக்கத்தில் பயணித்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்த உண்மைகளை சுட்டிக்காட்டி கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த காரை யார் இலங்கைக்கு கொண்டு வந்தனர், எப்போது, யார் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறி…
-
-
- 15 replies
- 15.8k views
- 1 follower
-
-
கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் நேற்று (21) வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளில் இருந்து எக்காரணம் கொண்டும் நீக்க அரசாங்கம் தயாராக இல்லை என்று…
-
- 3 replies
- 467 views
-
-
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நேற்று செவ்வாய்க்கிழமை (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். சீனா - இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/196895
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ ரங்கா தலைமறைவு! Vhg அக்டோபர் 22, 2024 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா வீட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலை அவதூறு செய்யும் வகையில் கொழும்பில் சுரொட்டிகளை ஒட்டிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகவும், திட்டமிட்ட நபராகவும் ஶ்ரீரங்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதான சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று, குற்ற விசாரணைப் பிரிவிடம் வினவியிருந்தார். இதன்போது, ஶ்ரீரங்கா வீட்டில் இல்லை எனவும் தலைமறைவாகியுள்…
-
- 2 replies
- 446 views
-
-
சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்ய புதிய நிறுவனம்- அரசாங்கத்தின் அடுத்த நகர்வு அரசியல்வாதிகள், அதிகாரிகள் அல்லது பிற தனிநபர்கள் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்வதற்கு புதிய அரச நிறுவனமொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நிறுவத்தை சொத்து மீட்பு நிறுவனம் அரசாங்கம் அடையாளப்படுத்த உள்ளது. உலகின் பல வளர்ந்த நாடுகளில் இவ்வாறான நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதனை ஒத்ததாகவே இந்த நிறுவனமும் இருக்கும். வெளிநாட்டில் அல்லது நாட்டிற்குள் உள்ள பணமோசடி மற்றும் பிற வழிகளில் பெறப்பட்ட முறைகேடான ஆதாயங்கள் அல்லது பணத்தைக் கண்டறிந்து அவற்றை மீட்பதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது இந்த நிறுவனத்தி…
-
- 0 replies
- 200 views
-
-
மாற்றம் : தென்னிலங்கையிலிருந்து வருவதில்லை; தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும் அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம். என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ…
-
-
- 77 replies
- 3.6k views
- 2 followers
-
-
வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது குறித்து பிரதமருடன் பேச்சு "வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கடந்த வாரம் கலந்துரையாடியிருக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இது சம்பந்தமாக முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பாக சில இணக்கப்பாடுகளும் எட்டுப்பட்டுள்ளன." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். வடமராட்சியில் நடைபெற்ற இளைஞர்களுடனான கேள்வி - பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில…
-
-
- 2 replies
- 310 views
-
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல் adminOctober 21, 2024 யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செ…
-
-
- 39 replies
- 2.5k views
- 2 followers
-
-
‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு October 21, 2024 சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட நன்மைகள் கிடைக்க கூடாது என்பதற்காக அதனை எதிர்ந்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் அனுர. குமார திசநாயக்க ஜனாதிபதியாக தெருவு செய்யப்பட்டிருக் கின்றார். இந்த பின்னணியில் ஏதோ மாற்றம்வரும் என நம்பியவர்களுக்கு அந்த ஜே.பி.வி கட்சியினுடைய பொது செயலாளர் ரில்வின் சில்வா தமிழர்களுக்கு…
-
-
- 9 replies
- 981 views
-