ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143541 topics in this forum
-
மாவை ஏசியதால் மயங்கி விழுந்தார் அனந்தி 02-01-2015 05:27 AM வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் வெள்ளிக்கிழமை (02) காலையில் திடீரென மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, அனந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏசியதாலேயே அவர் மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது. அனந்தியை தொடர்புகொண்ட போது, அவர் மயக்கமடைந்து உடல் நலம் குன்றியிருப்பதாக அவரது வீட்டிலுள்ளவர்கள் தெரிவித்தனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதை அனந்தி சசிதரன் பகிரங்கமாக எதிர்த்து வந்தார். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையை சேர்ந்தவர்கள…
-
- 24 replies
- 2.2k views
-
-
பொது வேட்பாளரை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்குடா தொகுதியினர் இன்று வீதி விதியாக சென்று பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நடராசா, கருணாகரம், கிருஸ்ணபிள்ளை, துரைராஜசிங்கம், துரைரெட்ணம், பிரசன்னா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை, மற்றும் கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள் தொண்டர்கள் இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான துரைராஜசிங்கம் தலைமையில் வாழைச்சேனை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை தீர்ம…
-
- 0 replies
- 1.4k views
-
-
எனது அன்பான தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! குழப்பமான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம். தமிழ்ப் பேசும் மக்கள் என்பதால் நாம் அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளோம், அச்சுறுத்தப்பட்டுள்ளோம், பாகுபாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ளோம். எமது பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படக் கூடும் என்ற எண்ணத்தை நாம் எட்ட முடியாதுள்ளது. இந்த நேரத்தில்த் தான் ஜனாதிபதித் தேர்தல் எம்மிடையே முகம் காட்டியுள்ளது. எவ்வழியில் நாம் செல்ல வேண்டும்? உங்களைப் போல் என் மனதிலும் ஆசுரா, ஆளுசா, வேறு ஒரு போட்டியாளரா அல்லது தேர்தலைப் பகிஷ்கரிப்பதா என்பது போன்ற பல எண்ணங்கள் எழுந்து குழப்பத்தை ஊட்டி வந்துள்ளன. ஆனால் ஆர அமர இருந்து விசாரித்த பின்னர் தமிழ்ப் பேசும் மக்களாகிய எங்களுக்கு, அதாவது வடகிழக்குத் தமிழர், முஸ…
-
- 19 replies
- 1.1k views
-
-
மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்ளார். தனி ஈழம் வழங்குவது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக பொது வேட்பாளர் மைத்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து அரசாங்கத்துக்கு தாவி, அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்க இது தொடர்பில் ஆவணம் ஒன்றையும் முன்வைத்திருந்தார். எனினும் மைத்திரி தரப்பினர் இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டதன் படி குறித்த ஆவணம் இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது திஸ்ஸ முன…
-
- 0 replies
- 350 views
-
-
உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – மைத்திரிபால சிறிசேன - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- 04 ஜனவரி 2015 கடுமையான உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பக்கமுன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கும் பாரியளவில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எமது பிணங்களின் மீதேறி வன்முறைகள் மூலம் தேர்தலை வெற்றிகொள்ள மஹிந்த ராஜபக்ஸ முயற்சிக்கின்றார் என்றால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கள…
-
- 4 replies
- 364 views
-
-
மகிந்தவின் திட்டத்துக்கு இராணுவம் ஒத்துழைக்காது – அனுரகுமார திசநாயக்க JAN 05, 2015 | 5:36by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றால், பொதுமக்களுடன் இணைந்து ஜேவிபி அதற்கெதிராக போராடும் என்று ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். “தோல்வியுற்றாலும் ஆட்சியை ஒப்படைக்கமாட்டோம் என்று அரசாங்கம் கூறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின், தோல்வியுற்றவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் நாட்டை ஆள, வெற்றி பெற்றவர் பொலன்னறுவவில், வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்படும். உலகில் இதுபோன்று வேறேங்கும் நடந்துள்ளதா? மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப்…
-
- 1 reply
- 681 views
-
-
எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வேறு, ஆர். ஏ. சிறிசேன என்ற வேட்பாளர் வேறு:- 05 ஜனவரி 2015 மோசடிகாரர்களின் திட்டமிட்ட சதிக்கு பலியாக வேண்டாம் என்கிறார் மனோ கணேசன்:- எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி, மூக்கு கண்ணாடி அணிவித்து, பவுடர் பூசி, அலங்கரித்து, படம் பிடித்து, அந்த படத்தை தமிழ் ஊடகங்களில் விளம்பரமாக போட்டு, அப்பாவி தமிழ் மக்களை குறி வைத்து ஏமாற்றும் ஒரு த…
-
- 1 reply
- 1.1k views
-
-
மைத்திரிபாலவுக்கு ஆதரவாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரசாரங்களை மேற்கொள்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை கடத்தும் முயற்சியில் சிறிலங்காவின் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதேச வாசிகள் இதனைத் தெரிவிக்கின்றன. வெள்ளை நிற வேனில் வருகின்ற இராணுவத்தினர் இந்த கடத்தல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து பேர் கொண்ட கூட்டமைப்பின் குழு ஒன்றை இராணுவத்தினர் கடத்த முயற்சித்துள்ளனர். எனினும் அவர்கள் கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மைத்திரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றவர்களை அச்சுறுத்தும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. http://ww…
-
- 1 reply
- 405 views
-
-
மஹிந்த பக்கம் பாய்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அலரிமாளிகையினில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.குறிப்பாக கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள் இருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கட்சி தாவியுள்ளதுடன் அவர்கள் உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகியோரேயென அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதே வேளை கூட்டமைப்பு சார்பு வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான மேலும் சிலர் இவ்வாறு பக்கம் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே வடமாகாணசபை உறுப்பினர் குணசீலன் உள்ளிட்ட சிலரை கவர மேற்கொண்ட அரச முய்றசி படுதோல்வியினில் முடிவுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. h…
-
- 1 reply
- 630 views
-
-
நாட்டை விட்டுத் தப்பியோடமாட்டேன் – மகிந்த வாக்குறுதி JAN 05, 2015 | 0:12by கார்வண்ணன்in செய்திகள் வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னர் தான் சிறிலங்காவை விட்டுத் தப்பி ஓடமாட்டேன் என்றும், தொடர்ந்து நாட்டிலேயே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. பொலன்னறுவவில் நேற்று தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் அவர், தேர்தலில் தோல்வியுற்றால், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல விடமாட்டோம் என்றும், அனைத்துலக விமான நிலையத்தை மூடுவோம் என்றும் எதிரணியினர் கூறிவருவதற்கு பதிலளித்து உரையாற்றினார். “விடுதலைப் புலிகளிடம் இருந்து ஓடாத ஒருவரான நான், சிறிலங்காவை விட்டு ஓடமாட்டேன். தேர்தலில் தமக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கனவு கா…
-
- 2 replies
- 538 views
-
-
நாம் வரலாற்றில் யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால் ஊடகங்களே தவறாக பிரசுரித்துள்ளன என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் பொருட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று ஞாயிற்றக்கிழமை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன்பின்னர் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொது எதிரணி வேட்பாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் அத…
-
- 1 reply
- 324 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்துவதற்காகவே, கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை பாதுகாப்பாக வைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த இதுகுறித்து தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கும், ஜெனிவாவிலும், ஏனைய இடங்களிலும் சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக பரப்புரைகளுக்கு எதிராக போராடவும், சரியான நேரத்தில சரியான இடத்தில் கொண்டு போய் நிறுத்துவதற்காகவே கே.பியை அரசாங்கம் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி மக்களைக் குழப்ப மு…
-
- 9 replies
- 1.1k views
-
-
"எமது தேசத்தைச் சுடுகாடாக்கியவர்களுக்கு பதிலடி கொடுப்போம்", "அன்னப் பறவைக்கு வாக்களிப்போம்" என்று குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் இன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோன்று மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டாம் என குறிப்பிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, போன்ற இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. - http://www.malarum.com/article/tam/2015/01/05/7888/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E…
-
- 0 replies
- 205 views
-
-
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வரை தேசிய அரசாங்கத்தில் இணையமுடியாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், விடுதலைப் புலிகள் இயக்கம் ஈவிரக்கமற்ற இயக்கமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2005 ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக இன்றுள்ள பிரதான இரண்டு கட்சிகளாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா ச…
-
- 8 replies
- 890 views
-
-
அமெரிக்க வீசாவை புதுப்பிக்கும் அரசதரப்பினர்! [Monday 2015-01-05 07:00] ஜனாதிபதிக்கு உதவுவதற்காக வந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் காலத்துக்கு காலம் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதிக்கு உதவுவதற்காக வந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் காலத்துக்கு காலம் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இலங்கையின் ஒருமைப்பாடு பற்றி பேசும் அரசாங்கத்தின…
-
- 0 replies
- 483 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றால், பொதுமக்களுடன் இணைந்து ஜேவிபி அதற்கெதிராக போராடும் என்று ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். “தோல்வியுற்றாலும் ஆட்சியை ஒப்படைக்கமாட்டோம் என்று அரசாங்கம் கூறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின், தோல்வியுற்றவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் நாட்டை ஆள, வெற்றி பெற்றவர் பொலன்னறுவவில், வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்படும். உலகில் இதுபோன்று வேறேங்கும் நடந்துள்ளதா? மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார். பெரும்பாலான இராணுவத்தினர் அவருக்கு எதிராகவே உள்ளனர். இந்…
-
- 0 replies
- 289 views
-
-
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பகிரங்கமாக கருத்து வெளியிடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாம் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவுக்கு, மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அதேவேளை, மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும், தாமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அதேவேளை, மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தாம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யப் போவதில்லை என்று அறிவித்திரு…
-
- 74 replies
- 3.3k views
-
-
9 ஆம் திகதி மாலையே தேர்தல் முடிவுகள் news ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவு ஒன்தாம் திகதி மாலையே அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி தேர்தல் நடைபெறுகின்றது.இதில்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 17 வேட்பாளர்களும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.8 ஆம் திகதி இரவே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடும். தபால் மூல வாக்குகளின் முடிவுகள் முதலில் வெளியிடப்படும்.இரவு 10 மணியளவில் அந்த முடிவுகள் வெளிவர ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும்,இறுதி முடிவு மறுநாள் மாலையே உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சட்டவிரோத தேர்தல் பரப்புரைகள் மற்றும் தேர்தல்…
-
- 0 replies
- 610 views
-
-
மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு news மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதத்தில் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான குறித்த நபரே இன்று காலை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இவர் எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 05 ஜனவரி 2015, திங்கள் 10:55 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=302903778305804742#sthash.97GiunDF.dpuf
-
- 0 replies
- 327 views
-
-
ராஜபக்ஷ தோல்வியை சந்தித்து வருகிறாரா? ஆக்கம்- பி.பி.சி செய்திகளிற்காக சாள்ஸ் கவிலாண்ட் 04 ஜனவரி 2015 ராஜபக்சஆதரவாளர்கள்அவரை "ராஜா" என குறிப்பிடுவது வழமை. மஹிந்த ராஜபக்சதான் வியாழக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் மூன்றாவது தடவையாக மீண்டும் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டியவர் என நம்புகிறார். ஆனால் ராஜபக்சமற்றும் அவரது சகோதரர்களின்கீழ் இலங்கை எப்படியானதொரு ஒரு நாடாகமாறி இருக்கிறது? சென்ற மாதம் ஒரு நாள், ஆறு சோதிடர்கள்சனாதிபதி தேர்தலில் ஏற்படப்போகும் வெற்றிவாய்ப்புக்கள் பற்றி எதிர்வுகூறும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்றை அரச தொலைக் காட்சியில் நிகழ்ச்சியாக செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். அந்த ஆறு சோதிடர்களும் உறுதியாக கூறினார்கள் , சனாதிபதி ராஜபக்ச வருகின்ற தேர்தலி…
-
- 1 reply
- 540 views
-
-
மைத்திரியின் பரப்புரை மேடை மீது துப்பாக்கிச் சூடு – 3 பேர் காயம் JAN 05, 2015 | 5:13by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இரத்தினபுரியில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை பரப்புரை மேற்கொள்ளவிருந்து மேடை மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேடை அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள நிவித்திகலவில் இன்று காலை 11 மணியளவில் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெறவிருந்தது. இதற்காக மேடை அமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமுற்ற 3…
-
- 0 replies
- 419 views
-
-
பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்தும், சம உரிமையும் நிச்சயமாகக் கிடைக்கும் என்று நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்துக்காக பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டும் இவர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதை வழங்க தற்போதைய அரசும் முன்வரவில்லை. மறுபுறத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டு வரும் முஸ்…
-
- 7 replies
- 593 views
-
-
யாழ்ப்பாணத்தில் நாட்டாமை வேலை செய்து வரும் அமைச்சா் டக்கிளஸ்தேவானந்தா பொதுக்கட்சியுடன் சேருவதற்குத் தீா்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தோ்தல் முடிவடைந்தவுடன் மகிந்த தோற்றால் உடனடியாகக் கட்சி மாறவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடா்பாக அமைச்சர் சந்திரிக்காவுடன் இரகசியமாகத் தொடா்பு கொண்டுள்ளாராம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடங்கி எல்லாக் கட்சிகளும் பொதுக்கூட்டணியுடன் சோ்ந்துள்ள நிலையில் அமைச்சரும் சோ்ந்தால் நிலை என்னவாகும் என அரசியல் அவதானிகள் சிந்தனைவசப்பட்டுள்ளனா். அமைச்சா் பொதுக்கூட்டமைப்பில் இணைந்தால் தான் கொலைகாரியாக மாறவேண்டிவரும் என விஜயகலா மகேஸ்வரன் ரணிலுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளாராம். தனது கணவனைக் கொன்றவ…
-
- 6 replies
- 1.1k views
-
-
வணக்கம் கள உறவுகளே! நிறைவேற்று அதிகார சனாதிபதி ஆட்சி முறை ஏற்பட்டது முதல் இன்றுவரை ஆணைப் பெண்ணாக்குவதையோ பெண்ணை ஆணாக்குவதையோ(ஜே.ஆரால் கூறப்பட்டது) தவிர அனைத்தையும் செய்யமுடிந்த இந்த சனாதிபதிகளின் காலத்தில் நடந்த இனஅழிப்பு சொத்தழிப்பு எனப் பல்வேறு அழிப்பு நடவடிக்கைகளுள் எமக்குத் தெரிந்தவற்றை இணைப்போம். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் பலவற்றை மறந்து போகின்றோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் ரீதியான பார்வைகள் தேவைகள் இருந்தாலும் அழிவென்று வரும்போது அனைவருமே எதிர்கொள்ள நேர்ந்தது. இனியும் அதுவே. புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளைக் கடந்தவர் முதல் அண்மைக்காலம் வந்தவர்கள்வரை உள்ளோம். எனவே காட்சிகளை நேரில் கண்டது முதல் தாமே அனுபவித்தவர்களும் இருக்கின்றோம். எனவே பகிர்ந்து கொள்வோ…
-
- 6 replies
- 664 views
-
-
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதமான நிபந்தனைகளுமின்றி, பகிரங்க ஆதரவு தெரிவித்தமை தியாக வேள்வித் தீ அணைந்துவிட்டதாவென்ற கேள்வியெழுப்பியுள்ளது கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவு. யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடந்த அவசர பத்திரிகையாளர் சந்திப்பினில் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் இளைஞரணி செயலாளர் வி.எஸ.சிவகரன் ஆகியோருடன் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். அதே வேளை தமிழரசுக்கட்சியின் பிரதி தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் உட்பட வடக்கு-கிழக்கிலுள்ள பல கூட்டமைப்பு பிரமுகர்களும் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். அங்கு உரையாற்றிய இளைஞரணி செயலாளர் வி.எஸ.சிவ…
-
- 37 replies
- 2.1k views
-