Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்­கைக்கு வெளியில் விடு­தலைப் புலி­களின் பல­மா­ன­தொரு அர­சியல் களம் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. இது நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாகவுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் வடக்கில் இருந்து ஒரு­போதும் இரா­ணு­வத்தை வெளி­யேற்ற முடி­யாது என தெரி­விக்கும் அர­சாங்கம், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் கோரிக்கை எமது அர­சாங்­கத்­தினால் நிறை­வேற்­றப்­ப­டமாட்டாது எனவும் குறிப்­பிட்­டது.அர­சாங்­கத்­தினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின போதே அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், விடு­தலைப் புலி­க­ளு­ட­னான யுத்­தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து யுத்­தத்­திற்கு பின…

  2. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள், தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவரையும் சுட்டிக்காட்டக்கூடாது எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நாட்டின் 7ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான முடிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் அறிவிக்கவில்லை. மக்கள் தமது தீர்மானத்தின் பிரகாரம் தபால் மூலமான வாக்களிப்பில் வாக்களித்தனர். மக்கள் தீர்மானித்துவிட்டனர் தாம் என்ன செய்யவேண்டும் என்று. மீதமுள்ள மக்கள…

  3. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மூவர், ஐ.தேக. உறுப்பினர் ஒருவருமாக நால்வர் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என அறிவித்துள்ளனர். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இந்த முடிவை அறிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களான இராஜசேகரன், சுபாஸ்கரன், பார்த்தீபன் ஆகிய மூவரும் ஐ.தே.க.வைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் பிரசாத் ஆகியோரே இவ்வாறு கட்சி தாவியுள்ளனர். http://malarum.com/article/tam/2014/12/26/7690/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%A…

  4. அமைச்சுப்பதவி முக்கியம் அல்ல என்பதுடன், சமூகமே முக்கியம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். இதனாலேயே, அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு சமூகத்துக்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் கூறினார். காத்தான்குடியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த 2005ஆம் மற்றும் 2010ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதற்கு கடுமையாக உழைத்தோம். சமாதானத்தை கொண்டுவந்துவிட்டார். அவருக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை கொடுக்கவேண்டும் என்று நாடு ம…

  5. தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக வடமாகாணத்தில் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்கு வடக்கு விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறை உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இப்போது பெய்து வரும் மழைகாரணமாக குளங்கள் நிரம்பியுள்ளதோடு, தாழ்நிலங்களில் குடியிருந்தவர்களிற் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியுள்ளனர். இவர்களில் மிகப்பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்கள் என்பதோடு தொடர்மழைகாரணமாக வேலைவாய்ப்பின்றியும் உள்ளனர். இதைக்கருத்திற் கொண்டு வடக்கு விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறை அவசர நடவடிக்கையாக வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உலர் உணவுகள் அடங்கிய பொதிகள…

  6. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும், குஷ்டரோக நோயாளியைக் கண்டு ஒதுங்குவதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஒதுக்கி வைத்துள்ளனர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மன்னார் தாழ்வுப்பாடு வீதியில் அமைந்துள்ள ஆஷ் ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, 'நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தெரிவிக்குமாறு ஆளும் கட்சி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோ, தமிழ்த் தேசியக் கூ…

  7. கண்ணுக்குத் தெரியாத அழகியைவிட கண்ணுக்குத் தெரிந்த பேய் நல்லது நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக நானே வரவிருப்பதனால் நாட்டில் காணப்­படும் பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மையின் அடிப்­ப­டை­யி­லேயே எனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளியிட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். கொழும்பு வர்த்­தக சங்­கத்தின் வர்த்­த­கர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடை­யி­லான சந்­திப்பு ஒன்று நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை மாலை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இந் நிகழ்வில் கலந்து கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இதன் போது தொடர்ந்து உரை­யாற்­றிய ஜனா­…

  8. பதுளை மாவட்டத்துக்குட்பட்ட கல்கந்தை, ரில்பொல மற்றும் ஹேகொட ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளில் எழுவர் பலியாகியுள்ளதுடன் மேலும் சிலரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். கல்கந்தை மற்றும் ஹேகொடை பிரதேசங்களில் தலா இரண்டு பேரும் ரில்பொல பிரதேசத்தில் மூவருமாக மொத்தம் ஏழு பேர், மண்சரிவினால் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் மேலும் கூறினர். : http://www.tamilmirror.lk/136434#sthash.bPRKqZP6.dpuf

  9. 2004 ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நாட்டின் பலபாகங்களிலும் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பிரதேசத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு http://onlineuthayan.com/News_More.php?id=365143753526663185

  10. இலங்கையின் கடந்த கால வரலாறுகளின் படி ஜனாதிபதி தேர்தல்களில் அரசியல் தலைவர்களை மாற்றுவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமே தமிழ் மக்களிற்கு எஞ்சியிருந்ததேயன்றி வேறு எதுவுமே கிட்டியிருக்கவில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன். தமிழ் சிவில் சமூக அமையம் அமைப்பு வடிவம் பெற்றுள்ளமை தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்தது. அங்கு ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் ஆனால் அதற்காக அரசாங்க மாற்றத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் எதிரானதென்று அர்த்தப்படமுடியாதென மேலும்…

  11. முரண்பாடுகளின் கூடாராமாக எதிரணி – பீரிஸ் குற்றச்சாட்டு! முரண்­பா­டு­களின் கூடா­ர­மாக எதி­ரணி காணப்­ப­டு­கின்­றது. ஒவ்­வொரு கட்­சியும் வெவ்­வேறு கொள்­கை­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றது. ஐ.தே.க., ஜே.வி.பி. என்­பன பொரு­ளா­தாரக் கொள்­கையில் முரண்­ப­டு­கின்­றன. இதேபோல் மாகாண சபை முறைமை,வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஜாதிக ஹெல உறுமயவும் முரண்­ப­டு­கின்­றன. இவ்­வாறு குழம்­பிய குட்­டை­யா­கவே எதி­ரணி காணப்­ப­டு­கின்­றது என்று வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் குற்றம் சுமத்­தினார். ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் அர­சாங்கம் சிங்­கள அரசு என்றும் தமிழ் மக்களை மாற்­றான்தாய் மனப்­பான்­மை­யுடன் பார்ப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி…

  12. உடுத்துறையில் சுனாமி நினைவு நிகழ்வுகள்! [Friday 2014-12-26 18:00] சுனாமி பேரலை தாக்கிய 10வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று வடமராட்சி கிழக்கு, உடுத்துறை ஆழிப்பேரலை நினைவாலயத்தில் கிராம அலுவலர் தவராசா தலைமையில் இடம்பெற்றன. இதில் பொது நினைவுத்தூபிக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். அத்துடன் வடமராட்சி கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைப்பாளர் சூரியகாந் பொதுஅமைப்புக்களை சேர்ந்தவர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர். http://www.seithy.com/breifNews.php?newsID=123437 …

  13. மண்ணையும் மக்களையும் நேசித்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க நாள் தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது. பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலு…

  14. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வடக்கில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் முன்னெப்போதுமில்லாத வகையில் அவருக்கு தமிழ் மக்களின் வாக்குகளை ஈட்டித்தரும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பிலுள்ள தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் இன்னுமொரு தடவை அவரில் நம்பிக்கை கொள்வது என எழுப்பப்பட்ட வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர், வெறுமனே வெற்று வார்த்தை ஜாலங்களில் சொல்லிவிட்டு போவதை வைத்தன்றி உண்மையில் நிஜத்திலே என்னென்ன வி…

  15. முன்னாள் இராணுவ தளபதியும், ஜனநாயககட்சின் தலைவருமான சரத்பொன்சேகா அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இது குறித்து பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும், அரசாங்கம் பொன்சேகா கேட்பதை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரியவருகின்றது. அரசாங்கத்தில் அவர் இணையும்பட்சத்தில் பறிக்கப்பட்ட அவரது உரிமைகள், ஜெனரல்பதவி,ஓய்வூதியம்,உட்பட அணைத்தையும் வழங்க தயார் எனவும் அரசாங்கம் இந்த பேச்சுக்களின் போது உறுதியளித்துள்ளது. இதேவேளை அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சில் எந்த பதவியும் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாகவே பொன்சேகாவின் மருமகன் உறவினரான தனுன திலகரட்ணவிற்கு பினைவழங்கப்பட்டதாகவும்,அவரது மனைவியும், பிள்ளைகளும் அவரை அரசுடன் சேருமாறு அழுத்தம் கொடுப்…

  16. மகிந்தவின் தோல்வி நிச்சயம்! – சிறிதுங்க ஜெயசூரிய [Friday 2014-12-26 18:00] நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிச்சயமாக தோல்வி அடைவார் என ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜனசூரிய தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் ஐக்கிய சோசலிச கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மகிந்தவின் ஆட்சிக் காலம் முடிய இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில் தேர்தல் நடத்தப்படுகிறது. இவ்வாறு தேர்தல் நடத்துவதை எவரும் விரும்பவில்லை. ஆனால் சோதிடர்களின் கணிப்புக்களை நம்பி மகிந்த ராஜபக்ச தேர்தலை நடத்துகிறா…

    • 0 replies
    • 547 views
  17. அண்மையில் பொலிஸ் நிலையத்தில் புகுந்து கைதிகள் மூவரை சட்டவிரோதமாக மீட்டுச் சென்றமைக்காக நீதிமன்றினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம இன்றைய தினம் விசேட அதிதகள் பயணச் செய்யும் வாயிலினூடாகச் சென்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை இன்றைய பிரதான செய்தியாகியுள்ளது. நாட்டின் சட்டம் ஒழுங்கு எத்தகைய நிலையிலுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அவர் நாடு திரும்பும் போது கைது செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளார். (போகவிட்டது ஏன் எண்டும் சொல்லியிருக்கலாம்.....)

  18. மலையகப்பகுதியில் தொடர்ந்து பெய்யும் கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 4 திறக்கப்பட்டுள்ளது. இதனால் அதனை அண்மித்த பகுதியில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரிசிரி தெரிவித்துள்ளார். மலையகத்தில் ஏனைய நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை குறிப்பிடதக்கது. http://virakesari.lk/articles/2014/12/26/%E0%AE%AE%E0%AE%B2%E0%…

  19. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றியீட்டுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு காக்கைத்தீவு பகுதியில் நடைபெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2004 ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டன. இதேபோன்று, பல அரசியல் கட்சிகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்துள்ளதாகவும் இந்த ஒற்றுமை வெற்றியை உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆழிப் பேரலை அனர்த்தம் ஏற்பட்ட போது ஹெல்பிங் ஹம்ப…

  20. மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்க் (800 மில்லியன் ரூபா) சி.ஐ.டி.யினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த பணத்தை மைத்திரிபாலவிடம் கொண்டு சேர்ப்ப தற்காக எடுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். ஒரு நாட்டிலிருந்து ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்க் அடங்கிய பூட்டுடன் கூடிய பொதி இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த அத்துல ரோஹண வீரரட்ண என்பவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துல என்பவர் அந்த பொதியை பாதுகாப்பாக வைத்திருக்கும் படியும் அது மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட வேண்டியதென்றும் கூறி தனது மூத்த சகோதரனான சந்திரதாஸ என்பவரின் மகனி…

  21. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சமூக ஊடக பிரசார நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர் அர்விந் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அர்விந் குப்தா கடந்த நவம்பரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என தெரிவித்துள்ள புதுடில்லி வட்டாரங்கள், அவர் தனிப்பட்ட ரீதியில் இலங்கை ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்திற்கு உதவலாம் என குறிப்பிட்டுள்ளன. எனினும் அர்விந் குப்தா இந்தத் தகவலை நிராகரித்துள்ளார். தான் தேவையற்ற விதத்தில் சர்ச்சைக்குள் இழுக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ள குப்தா, இந்த தகவல்களால் தான் குழப்பமடைந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் இந்தத் தகவல்களை உ…

  22. ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு ஏற்பட்டு ஆறும் கடலும் ஒன்றாகச் சேர்ந்ததால் ஊரின் ஒரு பகுதி புதிய தீவாகியுள்ளதுடன் இப் பிரதேசத்திற்குள்ளே யாரும் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. ஒலுவில் துறைமுகத்தை அண்மித்திருந்த பிரதேசங்களில் அடிக்கடி கடலரிப்புகள் ஏற்பட்டு பல ஏக்கர் நிலங்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் மீனவர் தங்குமிடங்களும் கடைகளும் ஏற்கனவே அழிவடைந்துள்ளன. இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில் கடற் பிரதேசங்கள் பாரிய கடலரிப்புக்குள்ளாகி ஒலுவில் துறைமுக வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் கடல்நீர் உடைப்பெடுத்து ஆறும் கடலும் ஒன்றாகச் சேர்ந்து புதிய தீவை உருவாக்கியுள்ளது. இதனால் அங்கிருந்த மீனவர்கள் வெளியேறியுள்ளனர். ஒல…

  23. படையினருக்கும், ஜனாதிபதிக்கும் துரோகம் இழைக்க மைத்திரி முயற்சிக்கின்றார் – மஹிந்த சமரசிங்க:- படையினருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் துரோகம் இழைக்க எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். படையினரையும், ஜனாதிபதியும் சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு உட்படுத்துவதாக உறுதியளித்தே மைத்திரிபால சர்வதேச ஆதரவினைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அகலவத்த பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நூறு நாட்களில் படைவீரர்களுக்கு துரோகம் இழைப்பதே மைத்திரிபாலவின் திட்டமாக அமைந்துள்ளது என அவர…

  24. நாட்டின் அக்­கினி மூலை பிர­தே­சத்தில் நிலை கொண்­டுள்ள தாழ­முக்கம் கார­ண­மாக பெய்து வரும் அடை மழை­யினால் நாட­ளா­விய ரீதியில் பல ஆறுகள் பெருக்­கெ­டுக்க ஆரம்­பித்­துள்­ளன. மகா­வலி கங்கை, தெதுரு ஓயா, மல்­வத்து ஓயா, அம்பன் கங்கை ஆகி­ய­வற்றின் பெருக்­கெ­டுப்பு கார­ண­மாக 30 கிரா­மங்கள் வரையில் நீரில் முற்­றாக மூழ்­கி­யுள்­ளன. மகா­வலி கங்­கையின் பெருக்­கெ­டுப்பு கார­ண­மாக கிழக்கின் சில பிர­தே­சங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­துடன் மாத்­தளை, நாவுல பிர­தே­சத்தின் 10 கிரா­மங்கள் அம்பன் கங்­கையின் பெருக்­கெ­டுப்பு கார­ண­மாக நீரில் மூழ்­கி­யுள்­ளன. அத்­துடன் தெதுறு ஓயா பெருக்­கெ­டுத்­ததன் விளை­வாக குரு­ணாகல் மாவட்­டத்தின் கொபே­கனை, பிங்­கி­ரிய, ரஸ்நாயக்க புர, நிக­வ­ரட்­டிய ஆகிய…

  25. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கு யாழ்ப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்கும் வகையிலான ஆவணமொன்றில் கையொப்பமிடுமாறு பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழு பலவந்தப்படுத்தி வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஜனநாயக உரிமைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தேவையற்ற தலையீடுகளை செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியை உறுதி செய்வதற்கு ஆதவரளிக்கும் ஆவணமொன்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த ஆவணத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.