ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
அச்சுறுத்தல் ஆட்சியை ஒழிப்பேன் என்கிறார் மைத்திரிபால! அமைச்சரவையையும் பங்காளிக் கட்சித் தலைவர்களையும் அச்சுறுத்தியே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி நடத்துகிறார். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். – இவ்வாறு சூளுரைத்திருக்கிறார் எதிரணியின் பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. அத்துடன், தான் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் 6 வருடங்களாக இருக்கும் ஜனாதிபதிக்குரிய பதவிக் காலத்தை 4 வருடங்களாகக் குறைப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய ஐக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் எஸ்.எல்.ஈ.சீ.சீ மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபைத் தலைவர் கரு …
-
- 0 replies
- 375 views
-
-
அடுத்து வருடம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நொவம்பர் மாதம் 23ம் திகதி இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தும் என்று, ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்லில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் உறுதிய…
-
- 14 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி தேர்தல்; டில்ஷான் பெட்டிங்: சங்கா அவுட் 25-12-2014 12:57 PM இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் திலகரத்ன டில்ஷான், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக நுகேகொடை, தெல்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது கூறினார். இவ்வாறானதொரு நிலையில், அணியின் மூத்த வீரர்களாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜனவர்தன ஆகியோருக்கும் ஜனாதிபதி தரப்பிலிருந்து அழைப்பு வந்துள்ள போதிலும் அவ்விருவரும் அதனை மறுத்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என குமார் சங்கக்கார தனது முகப்புத்தகக் கணக்கில் தகவலொன்றை பதிவு செய்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கிரிக்கெட் வீரர் திலகரத்ன தில்ஷானினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்ட…
-
- 0 replies
- 819 views
-
-
&hl=ta&fs=true" type="application/x-shockwave-flash"> இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இன்று ஒரு பெரும் மோதல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய எதிர்கட்சிகளின் கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக வெளிநாட்டினருடன் ஒரு ரகசிய ஒப்பந்தத்தை செய்ததாகக் கூற்றஞ்சாட்டி அங்கு வந்த ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தக் குழுவினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையே இந்த மோதல் சம்பவம் நடந்ததாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். அமைச்சர் விமல் வீரவன்ஸவின் ஆதரவாளர்களே அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, தமது அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஐ.தே.கவினர் கூறியுள்ளனர். இத…
-
- 0 replies
- 388 views
-
-
சிறுபான்மை இனங்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய ஜனாதிபதியே நாட்டுக்குத் தேவை என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை நத்தார் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் நடைபெற்ற நத்தார் தின நள்ளிரவு திருப்பலியைத் தொடர்ந்து கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அன்பும், அமைதியும் இலங்கைக்கு மட்டுமல்ல உலகுக்கும் தேவைப்படுகின்றது என்பதை இன்றைய கிறிஸ்து பிறப்பு எமக்கு தெரிவிக்கின்றது. இலங்கையில் போர் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் நாட்டுக்கும் எமது மக்களுக்கும் இன்னும் சுதந்திரம், சமாதானம் கிடைத்ததாக இல்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே இன்று ஜனாதிபதிக்கான தேர்தலை நாம் சந்தித்திருக்கின்ற…
-
- 0 replies
- 204 views
-
-
வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டின் வரவு – செலவு திட்டத்திற்கான அங்கீகாரம் ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு அனைத்து துறைகளுக்கும் தேவையாக பாதீடுகள் செய்யப்பட்டு 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. கடந்த 17, 18, 19 ஆம் திகதிகளில் கைதடியில் உள்ள வடமாகாண சபையின் பேரவையில் நடைபெற்ற வரவு – செலவு திட்டம் மீதாக விவாதங்களை அடுத்து நிறைவேற்றப்பட்டிருந்தது. இவ்வாறு நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் ஆளுநருக்காக நிதி மற்றும் வெலிஓயா பகுதிகளுக்கான நிதி பரிசீலணைக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 221 views
-
-
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்குமாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் விரிவுரையாளர்களை கட்டாயப் படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களுக்கும் குறித்த வாழ்த்துக் கடிதத்தில் கையொப்பம் இடுமாறு துணைவேந்தரால் வலியுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரச உத்தியோகத்தர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவது தொடர்பில் யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது உடனடியாக தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் கவனத்திற்கு அதிகாரிகளால் கொண்டு…
-
- 0 replies
- 289 views
-
-
December 25, 2014 11:01 am பேராதனை - முருதலாவ - தெஹிகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர் ஒருவரே பலியானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த நபரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் மண்ணுக்குள் அகப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் http://tamil.adaderana.lk/news.php?nid=64769
-
- 1 reply
- 425 views
-
-
ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் சிறிகொத்தவிற்கு வெளியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு சிறிகொத்த கட்சி தலைமையகத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட கலகம் அடக்கும் பொலிசார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். (முதலாம் இணைப்பு) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள சிறிகொத்தவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொதுவேட்பாளர் மைத்திரியின் ஆதவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரண…
-
- 4 replies
- 575 views
-
-
வரும் ஜனவரி 8ம் நாள் சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வடக்கிலும், கிழக்கிலும் உள்ள களநிலவரங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரி சந்தீப் குரொஸ் முல்லைத்தீவிலும், திருகோணமலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். கடந்த 22ம் நாள் கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணியை, அமெரிக்க தூதரக அரசியல் விவகார அதிகாரி சந்தீப் குரொஸ் சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலையில், மேலும் பல அரசியல்வாதிகளையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார். மோசமான காலநிலைக்கும் மத்தியில், அமெர…
-
- 1 reply
- 423 views
-
-
சந்திவெளியிலுள்ள மைத்திரியின் அலுவலகம் மீது தாக்குதல் 25-12-2014 05:07 AM -கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் அமைக்கப்பட்டிருந்த எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகம் எரியூட்டப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 20 இற்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் இந்த அலுவலகத்துக்கு வியாழக்கிழமை (25) அதிகாலை வந்ததாகவும் அவர்கள் அலுவலகத்துக்கு பெற்றோல் குண்டு வீசியதுடன் அங்கிருந்தவற்றை அடித்து உடைத்ததாகவும் அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் கூறினர். இந்தச் சம்பவத்தின்போது, அலுவலகத்தில் இருந்த 11 பேரும் தப்பியோடியதாகவும் அலுவலகத்தில…
-
- 0 replies
- 335 views
-
-
டி.எம்.ஜயரத்னவின் இணைப்புச் செயலாளர் மைத்திரிக்கு ஆதரவு பிரதமர் டி.எம்.ஜயரத்ன அவர்களது இணைப்புச் செயலாளர் பி.டி.நுகலியத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். இன்று கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல இல்லத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் இருந்து பிரதமர் இணைப்புச் செயலாளராக கடமையாற்றியதாகவும் 2013 மாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்கு பெறுபவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்த நிலையில் அதிக விருப்…
-
- 0 replies
- 360 views
-
-
வடக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை ஒருபோதும் வாபஸ் பெற்றுக்கொள்ளோம், என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ருவான்வெல்லவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய தரப்பினர் கோரிவருவதைப் போன்று வடக்கிலுள்ள இராணுவம் மீள அழைக்கப்பட மாட்டாது. மேலும் படையினரின் எண்ணிக்கை 50 வீதத்தினால் குறைக்குமாறும் சில தரப்பினர் கோரி வருகின்றனர். எனவே அவ்வாறான செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். - See more a…
-
- 5 replies
- 590 views
-
-
மைத்திரியின் பாதுகாப்புக்கு 45 அதிரடிப்படையினர் – தேர்தல் ஆணையாளர் உத்தரவு DEC 25, 2014 | 0:21by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறும், அவருக்கு 45 சிறப்பு அதிரடிப்படையினரைப் பாதுகாப்புக்கு நியமிக்குமாறும், சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார். எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரை மேடை எரிக்கப்பட்டமை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை, காரணமாக, அவரது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தநிலையில், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தேர்தல் ஆணையாளரிடம் கோரியிருந்தார். இ…
-
- 0 replies
- 453 views
-
-
இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் தமது வாக்குகளை எதிர்வரும் 8 ஆம் திகதி மிக நிதானமாகப் பயன்படுத்த வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொள்கை அடிப்படையில் தமிழ் மக்கள் வாக்களிக்கும் நீண்டவரலாறு உள்ளது. எனவே நாம் தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது என்று கோரியுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=123290&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 316 views
-
-
மகிந்த சிந்தனைவயப்பட்ட காடைத்தனம் வன்னியில் கோலோச்சுகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - வன்னி:- இலங்கை இராணுவப் பிரிவில் வலுகட்டாயமாக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் மஹிந்தவிற்கு வாக்களிக்க நிர்ப்பந்திக்கபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் வாக்களிப்பதற்காக வள்ளிபுனம் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தபால் மூல வாக்குச்சாவடியிலேயே இன்று காலை முதல் மோசடிகள் நடந்தவருவதாக கூறப்படுகின்றது. தமிழ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களித்தே தீர வேண்டுமென படை அதிகாரிகள் நிர்ப்பந்தித்து வருவதாகவும் இல்லையேல் அவர்கள் மீண்டும் பயங்கரவாத சந்தேக நபர்களாக கைது செய்யப்படுவரென மிரட்…
-
- 0 replies
- 397 views
-
-
"பொதுபல சேனா ஜனாதிபதிக்கு ஆதரவளித்தால் அரசாங்கத்தை விட்டு விலகுவேன்" டிசம்பர் 12ல் பைசர் முஸ்தபா விடுத்த சவால் இணைப்பு:- எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்யவென எந்தவொரு நிபந்தனையும் இன்றி பூரண ஆதரவு அளிக்கப்படும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 27,000 இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து மீட்ட நாட்டை சீர்குலையச் செய்ய நூல்பாவை தலைவர் ஒருவருக்கு இடமளிக்கப்பட மாட்டாதென கொழும்பில் இன்று (24.12.14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். பொது வேட்பாளரின் கொள்கை ´கூட்டாக்கம்´ என்றும் அதில் உள்ள சூழ்ச்சியை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்…
-
- 0 replies
- 350 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமுள்ள சீத்தாவாக்க பிரதேச சபையின் உப தலைவர் உள்ளிட்ட ஐவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளனர். எதிர்கட்சித் தலைவர் அலுலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இவர்கள் தங்களது ஆதரவு செய்தியை அறிவித்துள்ளனர். சீத்தாவாக்க பிரதேச சபை உப தலைவர் ஆனந்த ரூபசிங்க, உறுப்பினர்களான தும்கொலஹேன ரத்தனரங்சி தேரர், சந்தன பாலசூரிய, யசிரி ராஜபக்ஷ, கயான் துமிந்த ஆகியோர் இவ்வாறு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114772/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 459 views
-
-
நேற்று நடைபெற்ற தபால் மூல வாக்கெடுப்பின் போது கடுமையான தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்றதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் குற்றஞ்சாட்டியுள்ளார். தபால் மூல வாக்கெடுப்பு நடைபெற்ற நேற்று, அரச தனியார் ஊடகங்களில் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இவ்வாறு ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டமை கடுமையான தேர்தல் விதி மீறலாகும். இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடி ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் அல்லது வேறும் ஓர் நாளில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளரிடம் கோரப்பட்…
-
- 0 replies
- 642 views
-
-
எதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம் - யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை கடந்த வாரங்களாக எமது தாயகத்தில் சீரற்ற காலநிலையால் தொடரும் அடைமழை காரணமாக எமது தேசத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.ஆயிரக்கணக்கான எம் உறவுகள் எவ்வித உதவிகளும் இன்றி தவிக்கின்றார்கள். எத்தனையோ மக்கள் ஈர உடுப்புகளால் குளிர்ந்து விறைப்படைந்த நிலையில் உள்ளார்கள். குறிப்பாக தென் தமிழீழ மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இப்படியாக தவித்துக்கொண்டு இருக்கும் எம் மக்களுக்கு காலத்தின் தேவை…
-
- 0 replies
- 313 views
-
-
தமிழ் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ள நான்கு காரணங்கள்! தமிழ் மக்கள் கட்சிமாறிச் சென்றவர்களுக்கு ஒருபோதும் வாக்களித்தது கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அரசுக்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். ஆகவே, வடக்கு – கிழக்கு தமிழ் மக்களை பொறுத்தவரை சுதந்திரத்திற்கான போராட்டம் என்ற மன வேட்கையுடன் வாழ்கின்றனர் என்ற முடிவுக்கு வரலாம். கூட்டமைப்பின் பொறுப்பு ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அந்த மாறாத மன உறுதியை பலவீனமாக பயன்படுத்தி அரசியல் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மீதுதான் …
-
- 0 replies
- 576 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச விசாரணைகளுக்கு ஒருபோதும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு ரீதியான பொறிமுறைமை ஒன்றின் மூலமாகவே விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னரான பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பான் கீ…
-
- 0 replies
- 847 views
-
-
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஈ.பி.டி.பியினர் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய வழக்கு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈ.பி.டி.பியினரின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர். இது தொடர்பான விசாரணை இன்றைய தினம் இடம்பெற்றது. இதில், பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வே.ஆனைமுகன் ஆகியோர் இன்று தமது வாக்குமூலங்களைப் பதிவுசெய்தனர். எனினும் தாம் 8 பேருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர் என்றும், ஏனைய 5 பேரும் வாக்குமூலத்தை பதிவு செ…
-
- 0 replies
- 352 views
-
-
சிங்கள தேசம் வேறு தமிழ்த தேசம் வேறு என்பதனை வெளிப்படுத்த வேண்டும் - செல்வராஜா கஜேந்திரன் https://www.facebook.com/video/video.php?v=757670397636872
-
- 0 replies
- 489 views
-
-
மஹிந்தவின் பிரச்சாரத்திற்கென ஆலய மண்டபத்தை அடாவடியாக பயன்படுத்திய சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர் சர்வாவின் முகத்தில் அறைந்துள்ளனர் அப்பகுதி இளைஞர்கள். தென்மராட்சியின் சாவகச்சேரி, கச்சாய் அம்மன் கோயில் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகமே அப்பகுதி இளைஞர்களினால் நேற்று திங்கட்கிழமை இரவோடிரவாக அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மஹிந்தவின் பிறந்த தினத்தின்போது சுதந்திரக்கட்சியினர் ஆலயத்தில் பொங்கல் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர் என்றும், இதனைத் தொடர்ந்து ஆலய மண்டபம் ஒன்றில் பொருட்களை வைத்த அவர்கள் சில தினங்களில் அதை கட்சி அலுவலகமாகவும் மாற்றிக்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 3 replies
- 920 views
-