ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
ரணில் – மைத்திரி இரகசிய உடன்பாடு - விபரங்களை வெளிப்படுத்துகிறார் திஸ்ஸ அத்தநாயக்க! [Tuesday 2014-12-23 08:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும்,யுத்தத்தில் ஈடுபட்ட யினரையும் போர்க்குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் மைத்திரிபால செய்து கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தை சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டுள்ளார். சர்வதேச சக்திகளின் தேவையையும் புலி டயஸ்போராவின் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் இந்த இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 2014 நவம்பர் மாதம் 1ம் திகதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் செய்து கொண்ட உ…
-
- 0 replies
- 181 views
-
-
புதிய கட்சியைத் தொடங்கினார் உதய கம்மன்பில! [Tuesday 2014-12-23 08:00] ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளித்துள்ள மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில 'பிவிதுரு ஹெல உறுமய´ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இந்தக் கட்சியின் சின்னம் ´தாமரை´ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் பிரதி பொதுச் செயலாளராக இருந்த கம்மன்பில கடந்த 11ம் திகதி விலகி ஜனாதிபதிக்கு ஆதரவு அளித்திருந்தார். எனினும் ஜாதிக ஹெல உறுமய மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து நல்லாட்சியை ஏற்படுத்தி ஊழல் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவென தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனமை குறிப்பிடத்…
-
- 0 replies
- 410 views
-
-
நீண்டகாலத்துக்குப் பின்னர் நிரம்பியது இரணைமடுக்குளம்! – இன்று வான்கதவுகள் திறப்பு. [Monday 2014-12-22 09:00] தொடர்ந்து பெய்து வரும் மழையை அடுத்து கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர்மட்டம் நேற்று 31 அடிவரை உயர்ந்துள்ளது. இந்தநிலையில் இன்று காலை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படும் என கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரலாற்றில் இல்லாத அளவு கொடும் வரட்சியை மக்கள் சந்தித்து மழைக்காக ஏங்கியிருந்தபோது பருவமழை பெய்து இரணைமடுக்குளம் நீண்ட காலத்துக்குப் வான்கதவுகள் திறக்கும் நிலை இம்முறை ஏற்பட்டுள்ளது. இன்று வான்கதவுகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று அங்கு சென்று குளத்தின் நீர்பேணல் நிலை…
-
- 5 replies
- 2.2k views
-
-
உனது கணவர் காட்டில் இருக்கின்றார். இராணுவத்தினர் மீது தாக்குதல் நடந்தால் உன்னையும் உனது பிள்ளைகளையும் சுட்டுக்கொல்லுவோம் என அவுஸ்திரேலியாவில் அகதித்தஞ்சமடைந்துள்ள ஒருவரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தஏஜ் என்ற பத்திரிகை கூறுகின்றது. தனது இருபிள்ளைகளைகளையும் மனைவியையும் மட்டக்களப்பில் விட்டு 2006 ஆம் ஆண்டு அடைக்கலம் தேடி வெளிநாடு புறப்பட்ட இந்நபர் 2009 இல் அவுஸ்திரேலியா வந்தடைந்தார். விவசாயக்குடும்பத்தில் பிறந்த இவர் விடுதலைப்போராட்ட காலப்பகுதியில் மரணமடைந்த போராளிகளை தனது வாகனத்தில் ஏற்றி பின்தளத்திற்கு கொண்டுசெல்வதில் உதவி செய்ததாகவும் அந்த உதவியைக்கூட செய்யாமல் இருந்திந்தால் அதில் அர்த்தம் இல்லை எனவும் கூறுகின்றார். பாதுகாப்பு காரணங்களு…
-
- 4 replies
- 1.3k views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி டிப்போ சந்தியில் பசுமை நகரம் என்னும் பூங்கா 17 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வருவதாக மாவட்டச் செயலக திட்டமிடல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப்பூங்கா அமைக்கப்படுவதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் அரியவகை மரங்களை நாட்டி நகரத்தின் பசுமையை பேணுதல், பொதுமக்கள் பொழுதுபோக்கக்கூடிய வகையிலான வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படவுள்ளன. இந்த திட்டம் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, பூநகரி பொதுச்சந்தை வளாகத்தில் பசுமையை அதிகரித்தல் என்னும் தொனிப்பொருளில் இயற்கை வளங்களை உ…
-
- 0 replies
- 695 views
-
-
இரகசிய உடன்பாட்டு ஆவணம் போலியானது – மங்கள சமரவீர DEC 23, 2014 | 0:35by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதாக வெளியிடப்பட்ட இரகசிய உடன்பாட்டு ஆவணம், போலியானது என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரகசிய உடன்பாட்டின் பிரதி என்று கூறி, ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க ஆவணம் ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அந்த ஆவணம் பொய்யானது என்றும், அத்தநாயக்க காண்பித்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ள கையெழுத்துகள…
-
- 0 replies
- 320 views
-
-
ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எச்.எம்.ஹரீஸ் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னிலையில் பிரஜைகள் முன்னிணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீ ரங்கா மீது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம்; அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எச்.எம்.ஹரீஸ் மற்றும் ஜே. ஸ்ரீ ரங்கா ஆகியோரிற்கு ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவினால் விருந்துபாராசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத்தும் கலந்துகொண்டுள்ளார். இதன்போது அலரி மாளிக்கைக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கும் பாராளுமன்ற உறுப…
-
- 5 replies
- 2k views
-
-
வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை 50 வீதத்தினால் குறைக்கப்படும், உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும்" தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இரகசிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பொதுவாக சில ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ள மைத்திரிபால சில தரப்பினருடன் தனித் தனியாக இரகசிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் செய்து கொள்ளப்பட்ட ஆவணமொன்று தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 1ம் திகதி இவ்வாறான ஒப்பந்தமொன்று ரணில் விக்ர…
-
- 5 replies
- 2.6k views
-
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடாவிட்டாலும், சிறிலங்காவுக்கு ஆபத்து உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிரணியின் பொதுவேட்பாளர், மைத்திரிபால சிறிசேன, போர்க்குற்றச்சாட்டுகள் அவற்றுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு விளக்கம் கோரி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “ஆயுதப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்ற தனது நோக்கை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தூரநோக்குடனான பல விளைவுகளை உள்ளடக்கியதா…
-
- 0 replies
- 321 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் சிலர் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்க ளில் தங்கியுள்ளனர். குறிப்பாக வெருகல் பிரதேச செயலா ளர் பிரிவில் உள்ள மாவடிச்சேனை கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் மாவடிச்சேனை மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு வெரு கல் பிரதேச செயலகம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. வட்டவான், முட்டுச்சேனை, முகத்துவாரம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெருகல், ஈச்சிலம்பற்று வீதியை மேவி வெள்ளம் பாய்ந்து வருகின்றது. இத னால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கிவருகின்றனர் என மாவட்டத்தின் முன்னாள் நாடாள…
-
- 0 replies
- 307 views
-
-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எதிரணிக்குத் தாவியதன் மூலம் வடக்கு முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து விட்டார். ஆனால், வடக்கு முஸ்லிம்களை அரசு பாதுகாக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். ரிஷாத் குழுவினர் அரசிலிருந்து வெளியேறியமையினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசின் பிரசார செயற்பாடுகளில் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசின் பங்காளிக் கட்சியாக இருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நேற்று திங்கட்கிழமை எதிரணிப் பக்கம் தாவியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு க…
-
- 0 replies
- 461 views
-
-
மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு news ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுளது. ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது. இதன்படி பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் இன்று காலை குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது. குறித்த விஞ்ஞாபனம் எதிர்வரும் 26ம் திகதியே வெளியிடப்படும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 23 டிசெம்பர் 2014, செவ்வாய் 9:25 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=426813745023331099#sthash.JuaSGmu8.dpuf
-
- 0 replies
- 342 views
-
-
சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் தொலைக்காட்சி நாடகத்தை மனைவி பாா்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் தொலைக்காட்சி மற்றும் ஏனைய பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம் பண்ணியுள்ளாா். இதனால் கோபமுற்ற மனைவி சாவகச்சேரிப் பொலிசாருக்கு முறையிட்டதால் கணவனைக் கைது செய்துள்ளது பொலிஸ். கணவா் வேலையால் வந்தும் மனைவி அதனைக் கவனிக்காது தொலைக்காட்சித் தொடா் பாா்த்துக் கொண்டு தினமும் இருப்பதாலே தான் மனமுடைந்து இவ்வாறு செய்துள்ளதாக கணவா் தெரிவித்தாா். கணவரை சாவகச்சேரி நீதிமன்றில் ஆயா்படுத்தியபோது அவரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டாா். சாவகச்சேரி கெருடாவிலை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அருள்நந்தி சிவதாஸ் (வயது32) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார். http://www.jvpn…
-
- 5 replies
- 872 views
-
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணி மைத்திரிக்கு ஆதரவு! [Monday 2014-12-22 09:00] ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். மாவட்டக்கிளை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.. இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் மாறியபோதும் எந்த அரசும் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காத நிலையில் இன்று பல்வேறு கொள்கைகளோடு செயற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து எல்லோரையும் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகளின் தீர்விற்கு ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்துவரும் வேளையில் – 01.ஏமக்கு சாதகமான விடயங்கள் உள்ளட…
-
- 3 replies
- 671 views
-
-
28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி (இரண்டாம் இணைப்பு) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன் எச்.என்.டீ.ஏ (HNDA) மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிசார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைத் தாக்குதலில் காயமடைந்த 28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (முதலாம் இணைப்பு) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் செய்த குழுவினர் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஆர்ப்பாட்டத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=441003744322829836#sthash.QRI8lQjK.dpuf
-
- 2 replies
- 572 views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், வெற்றிபெற்ற தரப்பிடம் தனது அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். பிரிட்டனிலிருந்து வெளியாகும் ஃபைனான்ஸியல் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு அளித்த பதிலிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். எனினும், 'நான் தோல்வியடைப் போவதில்லை' என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ஷ, 'முதிர்ச்சியடைந்த, துடிப்புள்ள ஜனநாயகமான இலங்கையில் அமைதியான முறையிலேயே ஆட்சி கைமாற்றங்கள் நடந்துள்ளன' என்றும் கூறியுள்ளார். ஆனால், 'மீண்டும் நான் கூறுகின்றேன். நாங்கள் வெற்றியடைவோம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன்' என்றும் மகிந்த ராஜபக்ஷ த…
-
- 0 replies
- 394 views
-
-
Sendenகாலி, வதுரம்ப பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி(ஓ.ஐ.சி), பொலிஸ் அத்தியட்சகர் பி.எல். கீர்த்திசிங்க தனது பதிவியை இராஜினாமா செய்துள்ளார். அரசியல்வாதிகளினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர், அறிவித்துள்ளார். அரசியல்வாதிகளினால் தனக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பில் சில உயரதிகாரிகளுக்கு தெரியாது என்றும் சுயாதீன பொலிஸ் சேவையொன்று ஏற்படுத்தப்படுமாயின் பொலிஸ் சேவையில் மீண்டும் இணைந்துகொள்வதாகவும் அவர், தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் பிரசார மேடைக்கு தீ வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமவின் ஆதரவாளர் ம…
-
- 0 replies
- 406 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழருக்கு ஏமாற்றம் கிடையாது ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்துள்ள இவ்வேளையில் இருபெரும் முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் தடல்புடலாக அரங்கேறி வருகிறது. இதில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் நூறு நாளில் புதிய தேசம் என்ற தொனிப்பொருளினை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்கள் எதுவும் இடம்பெறாமை பலத்த ஏமாற் த்தைத் தருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழர்களின் விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கும் என்று நாங்கள் யாரேனும்…
-
- 0 replies
- 459 views
-
-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் சத்தியப்பிமான செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் கலந்துகொண்டுள்ளார். இதேவேளை, தற்போது அவர்கள் இருவரும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி கொண்டிருக்கின்றனர். அதில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/pirasitta-seithi/136385-2014-12-22-08-59-15.html
-
- 1 reply
- 298 views
-
-
ஆ ழிப்பேரலையின் பின்னான கடந்த பத்தாண்டில் சிறிலங்காவில் தனது அதிக நிதியை முதலீடு செய்து மேற்குலகின் இடத்தை சீனா தன்வசமாக்கியுள்ளது DEC 22, 2014 | 12:00by நித்தியபாரதிin கட்டுரைகள் மற்றையவர்களைப் பொறுத்தளவில் சீனாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவி என்பது எரிச்சலை உண்டுபண்ணுகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்திக்கு சீனா தனது நிதியுதவியை வழங்குவதன் மூலம் தனது போர்க் கப்பல்களை சிறிலங்கா தனது துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு சீனா அழுத்தம் கொடுக்கலாம் என சிலர் கவலை கொள்கின்றனர். இவ்வாறு அமெரிக்க ஊடகமான WALL STREET JOURNALல் PATRICK BARTATHE எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் வெய்தவர் நித்தியபாரதி. …
-
- 0 replies
- 442 views
-
-
ஹக்கீம் மைத்திரிக்கு ஆதரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரளிப்பது என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸில் இரு வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இரண்டு தரப்பினரின் பெரும்பான்மையானவர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை தெரிவு செய்ய ஹக்கீம் தீர்மானித்துள்ளார். இதன்படி தேர்தலில் மகிந்தவுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்கு அமைய, மைத்திரிபால சிற…
-
- 2 replies
- 784 views
-
-
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா போர் இடம்பெற்ற காலத்தில் செய்ததாக கூறப்படும் கொலைகள் தொடர்பில் ஆதாரத்துடன் முறைப்பாடு செய்தால் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பியசிறி விஜயநாயக்க நேற்று பத்தரமுல்லவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கருணாவிற்கு எதிராக எவரேனும் முறைப்பாடு செய்து விசாரணை நடத்துமாறு நியாயமாக கோரினால் அதற்காக குரல் கொடுக்கத் தயார். சாட்சியங்களுடன் கருணாவின் குற்றச் செயல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட கருணா போன்றவர்கள் சரியான பாதையில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். கருண…
-
- 0 replies
- 310 views
-
-
மத்தளை விமான நிலையத்திற்காக பெற்றக்கொள்ளப்பட்ட கடனை செலுத்த 140000 வருடங்கள் தேவைப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பிட்டகோட்டேவில் அமைந்துள்ள சொலிஸ் ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையத்தின் வருமானம் 16000 ரூபாவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்தள விமான நிலையத்தினை அமைப்பதற்காக 27000 மில்லியன் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மனித குலம் தோன்றி 143000 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும் அந்தளவு காலத்திற்கு இலங்கையர்களை கடன்காரர்களாக ராஜபக்ஸ அரசாங்கம் மாற்றியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்ப நலனை கருத்திற் கொண்டே மத்தள விமான நிலையம் அமைக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 363 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை. 8.30 மணிவரையான கடந்த 24 மணிநேரத்துக்குள், வாகனேரியில் அதிகளவு மழை வீழ்ச்சியாக 145.2 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார். இதன்படி தும்பங்கேணி -104.7 மி.மீ, மட்டக்களப்பு -65.4 மி.மீ, நவகிரி -19.0 மி.மீ, வாகரை -72.2 மி.மீ, உன்னிச்சை -51.0 மி.மீ, றூகம் -64.4 மி.மீ, மயிலம்பாவெளி -59.8 மி.மீ, பாசிக்குடா - 107.3 மி.மீ என மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு நகரம், தாழங்குடா மற்றும் புதுக்குடியிருப்பு மற்றும் கிரான்குளம் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 225 கிராம சேவையாளர் பிரிவுகளில்…
-
- 1 reply
- 305 views
-