ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
சிறீதரன் வெற்றி பெற்றால் ”ஒழுக்காற்று விசாரணை” வெற்றிக்கு வேட்டு வைக்கும் - ப.கஜதீபன் இலங்கை தமிழரசுக்கட்சியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் சிறீதரன் வெற்றி பெற்றால் பதவி பறிக்கப்படலாம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தமிழரசுக் கட்சியில் சிறீதரன், மாவை சேனாதிராஜா, ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளுக்காக கட்சியால் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அதை எங்களால் உறுதி செய்ய முடியும். நீங்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கை முடிவுகளை மீறி இருக்கின்றீர்கள். அப்படி செய்ய முடியாது என்பது தொடர்பாக …
-
- 0 replies
- 245 views
-
-
நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை குறைக்க உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான (AirlineRatings.com) நடவடிக்கை எடுத்துள்ளது. செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து கொழும்புக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 607 இன் விமான கேப்டன் ஒருவர் தனது துணை விமானியை விமானி அறைக்கு வர அனுமதிக்காத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானம் பறந்து கொண்டிருந்த போது துணை விமானி கழிப்பறைக்குச் சென்றுள் திரும்பிய பிறகு கேப்டன் கதவைத் திறக்கவில்லை என கூறப்படுபடுகிறது. இதன் காரணமாக இதுவரை ஏழு நட்சத்திரங்களாக இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பாத…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
வவுனியா ஓமந்தையில் சர்வதேச தரத்திலான விளையாட்டுக் கட்டட தொகுதி இன்று வெள்ளிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு சுமார் 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு கட்டிட தொகுதியானது நீண்ட காலமாக அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த அரசாங்க காலத்தில் மீளவும் நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன. இதன் பிரகாரம் குறித்த கட்டிடத் தொகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பன மேலும் சுமார் 14 கோடி ரூபா ஒதுக்கப்பட்டு முழுமையாக சுமார் 30 கோடி ரூபா செலவில் புனரவைக்கப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக திறந்த…
-
- 1 reply
- 576 views
- 1 follower
-
-
ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து! ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று காட்டு யானைகள் மீது மோதுண்டு தடம் புரண்டுள்ளது. இதனால், மொத்தம் நான்கு பெட்ரோல் டேங்கர்கள் தடம் புரண்டதாகவும், அவற்றில் இரண்டு கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல யானைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ரயில் தடம் புரண்டதன் காரணமாக குறித்த மார்க்க மூடான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பாதையும் பாரியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரி…
-
-
- 12 replies
- 854 views
-
-
வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும், அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என்பதுடன், பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. மொழி ரீதியான பிரச்சினை அங்கு உள்ளது. அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தாம் விரும்பும் மொழியில் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது. கொழும்பை மையப்படுத்தியுள்ள சில வசதி, வாய்ப்புகள் வடக்கிற்கு செல்வதில்லை. யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதி…
-
-
- 37 replies
- 2.5k views
- 2 followers
-
-
18 Oct, 2024 | 01:00 PM கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (18) நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் வாகனப் பயணத்தில் ஈடுபட்டு, குறிப்பிட்ட சில இடங்களில் இறங்கி, நடந்து செல்ல முடியும். மேலும், அப்பாலத்தினூடாக வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் …
-
- 1 reply
- 499 views
-
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த வியாழேந்திரன், கிழக்கு மாகாணத்தில் வலிமையான ஒரு அரசியல் கட்டமைப்பினால்தான் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கமுடியும் என்ற அடிப்படை தத்துவத்துடனேயே 2018ஆம் ஆண்டு முற்போக்கு தமிழர் கழகம் ஆரம்பிக்கப்பட்ட…
-
- 5 replies
- 446 views
-
-
18 Oct, 2024 | 03:51 PM யாரும் எங்களுக்கு ஆதரவு தரமுடியும்.எந்த ஆதரவினையும் நாங்கள் மறுக்கமாட்டோம்.வியாழேந்திரன் ஆதரவு தருவதாக கூறியுள்ளார்.அவருக்கும் எங்களுக்கும் இடையில் எந்த உடன்படிக்கையும் இல்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தனது பிரசாரப்பணிகளை ஆரம்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டதுடன் ஆதரவாளர்களுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டதுடன் இன்று வெள்ளிக்கிழமை (18) பி…
-
- 0 replies
- 388 views
-
-
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவிற்கிடையிலான சந்திப்பு இன்று (18.10.2024) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது , நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் நாளை சனிக்கிழமை (19) யாழ்ப்பாணத்திற்கு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூர்ய விஜயம் மேற்கொண்டு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இச் சந்திப்பில் உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. அமல்ராஜ், யாழ்ப்பாண பொலிஸ் தலைமைப்பீட பொறுப்பதிகாரி சம்லி பலுசேன கலந்துக்கொண்டனர். …
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
எங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல் வாதிகளின் நோக்கமாக இருப்பதாக முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சுயேட்சை குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட சுயேட்சைக்குழுவானது அரிக்கன் இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகசந்திப்பு வவுனியாவில் வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்; வன்னியில் அவையவங்களை இழந்த பலபோராளிகள் உள்ளனர். அன்றாட உணவுக்கே அவர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அநாதைகளாக உள்ள அவர்களை இந்…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
Published By: Vishnu 17 Oct, 2024 | 11:23 PM வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் வியாழக்கிழமை (17) பொது அமைப்புக்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. அக்கூட்டத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடி யேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதன் போது, காணி தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் பல கோரிக்கைகளை முன் வைத்து பலர் தமது மன ஆதங்கங்களையும் வேதனைகளையும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங…
-
- 4 replies
- 562 views
-
-
ஊடகவியலாளர் தராகி சிவராமின் (Taraki Sivaram) கொலைக்கும் புளொட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என புளொட்டின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Sitharthan) தெரிவித்துள்ளார். சிவராமின் கொலை வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிவராமினுடைய கொலையானது 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. அது சம்பந்தமாக சிலர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அந்த வழக்கிலிருந்து அவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனுடைய அர்த்தம் இனிமேல் அந்த வழக்கை…
-
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
ரணில் விசேட உரை! முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக உரையாற்றுவது இதுவே முதல் தடவையாகும். இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை குறித்து ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதில்லை எனவும் தீர்மானித்துள்ள நிலையில், பொதுத் தேர்தலில் எரிவாயு சில…
-
-
- 7 replies
- 439 views
- 2 followers
-
-
எனது அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த பெண் ஒருவரின் கணவர் எனக்கு பல மில்லியன் டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வர்த்தகர் ஒருவர் கேள்விப்பத்திரத்தை பெற விரும்பினால் அவர் ஒரு மில்லியன் டொலருடன் எங்களிடம் வருவார். இந்த கேள்விப்பத்திரத்தை எனக்கு தாருங்கள் என வேண்டுகோள் விடுப்பார். இது எனக்கு நடந்துள்ளது. நான் பிரதமராகயிருந்தவேளை எனது அலுவலகத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களுடன் வந்தார்கள். அதனை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியே செல்லுங்கள் என்றேன். எனது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான பெண்ணொருவரின் கணவரே அவ்வாறு பெருந்தொகை பணத்துட…
-
-
- 6 replies
- 434 views
- 1 follower
-
-
கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை உடனடியாக மாற்றுமாறு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்ப பாடசாலை என மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழு சமர்ப்பித்த யோசனைக்கு ஆளுநர் அனுமதியளித்துள்ளார். கடந்த காலங்களில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இப்பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயரை மாற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 2012 ஆம் ஆண்டு …
-
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் மானிப்பாய் பகுதியில் உள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு தனது அற்றோனித் தத்துவத்தை வழங்கி இருந்தார். குறித்த நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பில் கனடாவை சேர்ந்த நபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர்…
-
-
- 10 replies
- 625 views
- 1 follower
-
-
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று வியாழக்கிழமை (17) நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னெடுக்கப்படவேண்டிய பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க உட்பட வன்னி மாவட்ட வேட்பாளர்கள், அங்கத்தவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/196512
-
- 3 replies
- 231 views
- 1 follower
-
-
17 Oct, 2024 | 05:59 PM கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டதாக பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகிற ஆதாரபூர்வமற்ற தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு அதன் அடுத்தபடியாக பாராளுமன்ற தேர்தலை நோக்கி நாடு நகர்ந்து செல்கிறது. இந்நிலையில் என் மீதும் எனது தந்தையார் மீதும் பழி சுமத்தும் நோக்கில் சிலர் எந்த விதமான ஆதாரம…
-
- 4 replies
- 284 views
-
-
தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் திறந்து வைப்பு! தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் இன்று மாலை ஏ9 வீதி ,சாவகச்சேரி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமாகிய இராமலிங்கம் சந்திரசேகரம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதோடு யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர்களும் மேள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு அலுவலகத்தின் நாடாவை வெட்டி திறந்து வைத்தார் முதன்மை வேட்பாளர் கருணாநாதன் இளங்குமரன்,மற்றும் முன்னாள் மருத்துவ நிர்வாக அதிகாரி எஸ்.சிறீ.பவனந்தராஜா,அதிபர் ஜெயச்சந்திர மூர்த்தி ரஜீவன்,தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி மகளீர் அணி அமைப்பாளர் வெண்ணிலா இராச…
-
- 0 replies
- 325 views
-
-
Published By: Digital Desk 7 17 Oct, 2024 | 05:16 PM ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகம் இன்று வியாழக்கிழமை (17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் திறந்துவைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் இந்த கட்சி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகம் கிளிநொச்சியில் திறப்பு! | Virakesari.lk
-
- 0 replies
- 657 views
-
-
அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் … https://thinakkural.lk/article/310756
-
-
- 6 replies
- 488 views
- 1 follower
-
-
(ஸ்டெப்னி கொட்பிறி) “பசியற்ற கல்வி” என்ற திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள பத்தாயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக செரண்டிப் பி தி சேஞ்ச் (Serendip Be The Change) அறக்கட்டளையின் தலைவரும் அமைப்பாளருமான பூங்கோதை சந்திரஹாசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மானியும்பதி ஹோட்டலில் நேற்று புதன்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், செரண்டிப் பி தி சேஞ்ச் அறக்கட்டளையின் இணை அமைப்பாளரும் பணிப்பாளருமான தருன இந்துஜா, தலைமை நிறைவேற்று அதிகாரி அநுஜன் நவரத்னராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செரண்டிப் பி தி…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் இடது கரை நீர் விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணைமடு குளத்தின் முரசுமோட்டை ஊரியான் உருத்திரபுரம் பெரிய பரந்தன் ஆகிய பிரதேசங்களுக்கான இடது கரை நீர் விநியோக வாய்க்காலின் நீர் திறந்து விடப்படும் துலுசுப் பகுதியல் ஏற்பட்டிருந்த நீர்க்கசிவினைத் தடுக்கும் வகையிலான சீரமைப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் 35 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர் பாசன பொறியியலாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கடந்த சிறுபோக செய்கை அறுவடையின் பி…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
மூன்றாம் காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் புதன்கிழமை (16) பி. ப 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், இக் கூட்டத்தின் நோக்கமானது நிதி முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடுகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆராய்வதும், நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதாகவும் தெரிவித்ததுடன், இவ் மீளாய்வுக் கூட்டத்தில் நிதி முன்னேற்றங்களைஆராய்ந்தவகையில் திருப்திகரமாகவிருப்பதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், கண…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
மதுபானசாலை விவகாரம் - யாழ் வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி.க்களுக்கு கீதநாத் காசிலிங்கம் சவால் 11 Oct, 2024 | 02:06 PM யாருக்கும் மதுபானசாலைஅனுமதி பெற்றுக்கொடுக்கவில்லை என வெளிப்படையாக வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் சவால் விடுத்துள்ளார். இன்று அவர் பதிவிட்டுள்ள சமூக வலைத்தள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் என்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டேன். உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. அத்துடன் நான்; எனக்கோ என்னுடைய குடும்…
-
- 4 replies
- 366 views
- 1 follower
-