Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் தக்கவைத்துவந்த 2/3 எனும் பெரும்பான்மை பலத்தை தற்போது இழந்துள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் வரை 160 எனும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி புரிந்த ஜனாதிபது மகிந்த ராஜபக்ச அரசு தற்போது எதிரணியில் இருந்து அரச பக்கம் சென்ற திஸ்ஸ அதநாயக்க மற்றும் ஜெயந்த கோட்டகொட உள்ளடங்கலாக 150 ஆசனங்களை மட்டுமே கொண்டுள்ளது. இதன் மூலம் 2/3 பெரும்பான்மை என்ற இலக்கை அடைவதற்கு ஆகக்குறைந்தளவில் இருக்க வேண்டிய 151 எனும் எண்ணிக்கையை அடைவதற்கு இன்று முதல் அரசு தள்ளப்பட்டுள்ளது. பிரதியமைச்சர்களாக இருந்த திகாம்பரம் மற்றும் இராதகிருஷ்னன் ஆகியோர் இன்று அரசைவிட்டு வெளியேறியுள்ளதை அடுத்தே 150 என்ற பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு அரசு …

  2. லலித் மற்றும் குகன் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் மன்றில் ஆஜராகுமாறு ஊடகத்துறை அமைச்சரும் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெலவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. லலித் மற்றும் குகன் யாழ்ப்பாணத்தில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். இவர்கள் தொடர்பிலான வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ். சிவகுமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கினை விசாரணை செய்த நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துநெத்தியையும் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் எதிர்மனுதாரராக சட்டமா அதிபர் திணைக்களமும் உள்ளது. எனினும் கடந்த 3 வழக்கு தவணைகளுக்கு அ…

  3. தேசிய மொழிகள் பிரதி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைப் பொறுப்பாளரும் பிரதி அமைச்சருமான வீ.ராதகிருஸ்ணன் ஆகியோர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரபாலவிற்கு ஆதவரளிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் மலை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பிர்களுக்கும் அண்மையிலேயே பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பழனி திகாம் இன்றைய தினம் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்…

  4. கிராம அலுவலகர் உள்ளிட்ட 07 பேரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார்:- தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலகர் உள்ளிட்ட 07 பேரை தொடர்ந்தும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி. மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிறுப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை தொடர்பான வழக்கு விசாரனை இன்று புதன் கிழமை (10.12.14) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது. இதன் போது கைது செய்யப்பட்ட வெள்ளாங்குளம் கிராம…

  5. அம்பாறையில் கண்திறந்த பிள்ளையார் சிலை! - காணக்குவியும் மக்கள். [Wednesday 2014-12-10 07:00] அம்பாறை மாவட்டத்தின் பழந்தமிழ் கிராமமான மல்வத்தையில் அமைந்துள்ள பண்டைய ஆலயம் ஒன்றிலுள்ள பிள்ளையார் சிலையின் கண்கள் திறந்துள்ளதாக, பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மல்வத்தை முதலாம் வட்டாரத்தில் உள்ள குளத்தடி பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பழம்பெரும் பிள்ளையார் சிலையின் இரு கண்களே இவ்வாறு திறந்துள்ளன. இந்த ஆலயம் வேடர்களால் வழிபாடு செய்யப்பட்ட தொன்மையானது என ஆலய வரலாறு கூறுகிறது. அம்பாறை மாவட்டத்தின் பழந்தமிழ் கிராமமான மல்வத்தையில் அமைந்துள்ள பண்டைய ஆலயம் ஒன்றிலுள்ள பிள்ளையார் சிலையின் கண்கள் திறந்துள்ளதாக, பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மல்வத்தை முதலாம் வட்டாரத்தில் உள்ள குளத்தடி பிள்ளை…

  6. DECEMBER 9, 2014 COMMENTS OFF ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை போன்று பிரபாகரனின் முப்பது வருட காலத்தில் இடம்பெறவில்லையென நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று சிங்கள தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். ராஜபக்ஷ நிர்வாகம் என்பது ஊழல்வாதிகளினதும் ஒந்தகாரர்களினதும் (டீல்) கூட்டாகும். இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாது. அவர்களுக்கு மக்கள் தண்டனை வழங்க வேண்டும். பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை ஆகியன நேரடியாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழே உள்ளன. அங்கு இடம்பெறும் கொள்ளை, ஊழல்களுக்கு அவரே பொறுப்ப…

  7. எமக்கு எதி­ராக அடக்கு முறையை பிர­யோ­கிக்­க­வேண்டாம் என்று ஜனா­தி­ப­திக்கு கூறுகின்றோம். நீதிஇ நியா­ய­மான தேர்­த­லுக்கு தடைபோடா­தீர்கள். அவ்­வாறு தடை போட்டால் தேர்­தலை ஒரு பக்கம் வைத்­து­விட்டு மக்­களை அணி­தி­ரட்டி வீதியில் இறங்­கி­வி­டுவோம் என்­ப­தனை கூறு­கின்றோம். எனவே, எமது போராட்­டத்தை வேறு திசைக்கு மாற்ற முயற்­சிக்­க­வேண்டாம். உலகத்தில் இவ்­வா­றான உதா­ர­ணங்கள் இடம்­பெற்­றுள்­ளன என்று எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். நான் பத­விக்கு வந்து 100 நாட்­களில் முக்­கிய ஆணைக்­குழு ஒன்றை நிய­மித்து அரச வளங்­களை கொள்­ளை­ய­டித்­த­வர்­களை பிடிப்பேன். அவர்­களை சிக்­க­வைப்பேன் என்­ப­தனை உறு­தி­ய­ளிக்­கின்றேன். திரு­டர்­களை பிடிப்­போம என்ற…

  8. யுத்த காலத்தில் அண்டை நாடுகள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து கரிசனை காட்டவில்லை – ஐ.நா 10 டிசம்பர் 2014 யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அண்டை நாடுகள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குpறத்து உரிய கரிசனை காட்டவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இனச்சுத்திகரிப்பு எதிர்ப்பு தொடர்பான விசேட பிரதிநிதி அடமா டெயிங் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் குறிப்பாக அண்டை நாடுகள் உரிய கவனம் செலுத்தாமையே ஆயிரக் கணக்கான அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டமைக்கான பிரதான ஏதுவெனக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையை அனுபவமாகக் கொண்டே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதனை தடுக்க ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ச…

  9. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுடன் சேர்ந்த உள்ளூர் ஆட்சியே நிலவுகிறது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்றற வடக்கு மாகாண இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு போரின் பின்விளைவுகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு நிற்கும் பரிதாபத்திற்குரியவர்களே நாம் என்பதை மறக்கக் கூடாது. ஏன் என்றால் உத்தியோக பூர்வமாகப் போர் முடிந்த உடன் அப்போரின் பாதிப்புக்களும் முடிந்து விட்டதாக எண்ணுவது மடமை. ஒரு போரின் தாக்கங்கள் பல வருடங்களுக்கு மட்டுமல்ல பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவன என்பதே உண்மை. உடல் ரீதியாக, மனித ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, குடும்ப ரீதி…

  10. யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள ஐந்து புகையிரத நிலையங்கள் இன்று தொடக்கம் இயங்க ஆரம்பித்துள்ளன. அதன்படி உப புகையிரத நிலைய அதிபர்களாக நியமிக்கப்பட்ட ஐவரிடமும் நேற்று பதில் புகையிரத நிலைய அதிபர் மொகமட் இஸ்மாயில் ஹாரூம் பொறுப்புக்களைக் கையளித்தார். கடந்த எட்டாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் உபநிலைய அதிபர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் தச்சன்தோப்பு உப புகையிரத நிலையம், சங்கத்தானை உப புகையிரத நிலையம்,மீசாலை உப புகையிரத நிலையம் ,மிருசுவில் உப புகையிரத நிலையம், எழுதுமட்டுவாழ் உப புகையிரத நிலையம் ஆகிய நிலையங்களுக்கே உப நிலைய அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். http://onlineuthayan.com/News_More.php?id=691393717010776352

  11. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள சமரவீரவும், ராஜித சேனாரட்னவும் நியமிக்கப்படவுள்ளனர். எதிர்வரும் காலங்களில் மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக மங்கள சமரவீர மற்றும் மற்றும் ராஜித சேனாட்ரன ஆகியோர் செயற்படுவர். எதிர்க்கட்சிகளின் கூட்டணியினால் இந்த நியமனம் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் குறித்த மைத்திரிபாலவின் உத்தியோகபூர்வ கருத்துக்களை வெளியிடுதல், பிரச்சாரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இருவரும் மேற்கொள்ள உள்ளனர். இதேவேளை, ராஜித சேனாரட்ன மற்றும் மங்கள சமரவீர ஆகிய இருவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடக் கூடியவர்கள் எனவும், …

  12. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக மாவை சேனாதிராசா, தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. இந்த மாத இறுதியில் நாம் எமது முடிவை அறிவிப்போம். தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின்னர் அது குறித்து நாம் தீர்மானிப்போம். கிராமம் கிராமமாக சென்று மக்களின் கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். எவ்வாறெனினும், இன்று வரை யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து எந்தவித தீர்மானமும் எடுக்கவில்ல…

  13. இலங்கையில் இருந்து கோடியக்கரை வழியாக கேரளாவுக்கு நவீன ஆயுதங்களை, சீன கடத்தல் கும்பலொன்று விற்பனை செய்வதாக இந்திய ஊடகம் ஒன்றில் வெளிவந்த செய்தி பொய்யானது என இராணுவம் மறுத்தது. இலங்கையில் இருந்து நவீன ஆயுதங்களை தமிழகத்தின் கோடியக்கரை வழியாக கேரளாவுக்கு கடத்தும் நடவடிக்கையொன்றில் சீனாவைச் சேர்ந்த குழுவொன்று ஈடுபட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக கியூ பிரிவு பொலிஸாரின் அறிக்கையின்படி, கோடியக்கரை துறைமுகம் தான் இந்த ஆயுதக் கடத்தலின் மையமாக இருக்கிறது எனவும் அங்கிருந்தே கேரளாவின் வனப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கும் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகின்றன எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.…

  14. -செல்வநாயகம் கபிலன் யாழ். மல்லாகம் காட்டுத்தரை (ஜே - 213) கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் புதன்கிழமை (10) தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் எஸ்.நந்தகுமார் மேலும் தெரிவிக்கையில், இதுபற்றி பாதிக்கப்பட்ட மக்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருடன் சென்று கிணறுகளை பார்வையிட்டு நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதி மக்கள் தங்கள் குடிநீருக்கான நீரை, எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதி தவிர்ந்த பழம்பிள்ளையார் ஆலயம், காட்டுத்தரை முருகன் ஆலயம் ஆகியவற்றின் கிணறுகளில் பெற்று வருகின்றனர். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கி…

  15. மகிந்த மக்கள் செல்வாக்கு இல்லாத ஆக்கள நம்ப வேண்டிய நிலைக்கு வந்ததே கிட்டத்தட்ட அவர் தோல்வி நிலைய அடைஞ்சத உணருறாராம் எண்டு தாத்தா சொல்லுறார்.. மக்கள் செல்வாக்கு இல்லாத சிலபேர் மகிந்தவுக்காக வாங்குகிற வக்காளத்த பாத்தால்தான் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வருது.... மைத்திரிபால எண்டுற வாக்கு வங்கி உள்ள ஆள வெளியில விட்டிட்டு தேசியப் பட்டியலில வந்த வாக்கு வங்கி இல்லாத திஸ்ஸ அத்தநாயக்கவ உள்ள எடுத்துப்போட்டு எங்கட செயலாளர எடுத்தால் உங்கட செயலாளர நாங்கள் எடுப்பம் எண்டு வீராப்பு பேசுறார்... அதுபோகட்டும்... இப்ப உந்தக் கருணா அம்மன் இண்டைக்கு நடந்த ஒரு மீட்டிங்கில என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமே? அதான் கட்சி தாவிற பற்றி கதைச்சிருக்கிறார். அது ஒரு கேவலாமான செயல் எண்டும் அவர் சொ…

  16. தெற்கு அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மீது புலி முத்திரை குத்துவதனை நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கோருவதற்கு முன்னதாக, தமிழ் மக்கள் மீது புலி முத்திரை குத்துவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென தெற்கு அரசியல்வாதிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான தீர்மானம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மற்றும் ஆளும் கட்சி வேட்பாளரின் தேர்தல் கொள்கைப் பிரகடனத்தினை உன்னிப்பாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித…

  17. புதன், டிசம்பர் 10, 2014 - 10:30 மணி தமிழீழம் | சயந்தன் மஹிந்த தேர்தலில் தோற்றால் ஆட்சியைத் தக்கவைக்க இராணுவ வழிகளை நாடலாம்: சர்வதேச நெருக்கடிகள் குழு எச்சரிக்கை இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைய நேர்ந்தால் தனது ஆட்சியைத் தக்கவைப்பதற்கான இறுதிமுயற்சியாக அவர் தனது சகோதரர்களுடன் இணைந்து இராணுவ வழிகளை நாடலாம் என சர்வதேச உரிமை அமைப்பொன்று இன்று கடுமையான தொனியில் எச்சரித்திருக்கிறது. இலங்கையில் ஜனவரி எட்டாம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் குறித்து பிரசல்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நெருக்கடிகள் குழு (ஐ.சி.ஜி) இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னராக காலப்பகுதியிலும் தேர்தலை மையப்படுத்திய மி…

    • 2 replies
    • 1.2k views
  18. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தற்போது பண்டாரநாயக்க அச்சம் (பண்டாரநாயக்க போபியா) என்ற நோய் பீடித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் ஏற்பாடு செய்த செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,. ஜனாதிபதியின் இந்த அச்சத்திற்கு என்னிடம் மருந்து எதுவுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தன்னுடைய உண்மையான போட்டியாளர் முன்னாள் ஜனாதிபதியே. மைத்திரிபால அவரது பகடைக்காயே எனத் தெரிவித்திருந்தமைக்கே சந்திரிகா இவ்வாறு பதிலளித்துள்ளார். மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகாவிற்கு அருகில் அமர்ந்திருந்த சந்திரிகா, ஹிருணிகாவிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தமை குறிப…

  19. இலங்கை தொடர்பில் அமெரிக்கா பயண எச்சரிக்கை 10 டிசம்பர் 2014 இலங்கை தொடர்பில் அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்கப் பிரஜைகள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசியல் கூட்டங்கள் பேரணிகள் சில வேளைகளில் வன்முறைச் சம்பவங்களாக மாற்றமடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. பாரியளவிலான பொதுக் கூட்டங்கள், பேரணிகள், பிரச்சாரக் கூட்டங்களில் அமெரிக்கப் பிரஜைகள் பங்கேற்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வோர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் அண்மைய பாதுகாப்பு நிலைமைகளை அறிந்து கொள்…

  20. சீன நீர்மூழ்கி ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் ஒருவாரகாலம் தங்கிச் சென்ற பின்னர், முதல்முறையாக இந்தியப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல், நான்கு நாள் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்தனர். ‘ஐஎன்எஸ் சுகன்யா’ என்ற இந்தப் போர்க்கப்பலுக்கு கொழும்புத் துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படையினர் பெரியளவிலான வரவேற்பு அளித்துள்ளனர். விநியோகத் தேவைகளுக்காகவே இந்தப் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்துள்ளதாக சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது. இந்தியக் கடற்படையின் ஆழ்ந்கடல் ரோந்துக் கப்பலான ‘சுகன்யா’, 101 மீற்றர் நீளத்தைக் கொண்டது. இதில் 165 கடற்படை மாலுமிகள் பணியாற்றுகின்ற…

  21. தென்னாபிரிக்காவில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போதிலும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரிய கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி, கொழும்பு திரும்பியுள்ளார். தென்னாபிரிக்காவில் உள்ள சைமன்ரவுன் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற, கிறிஸ்தவ இராணுவ உதவி அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜெனரல் வீரசூரிய தனது மனைவி, தில்ஹானியுடன் அங்கு சென்றிருந்தார். தென்னாபிரிக்க தமிழ் கூட்டமைப்பினால், அங்கு அவருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சிறிலங்கா இராணுவத் தளபதியாக ஜெனரல் வீரசூரிய பதவி வகித்த போது, தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளுக்காக, அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த…

  22. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது. குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குறிப்பாக போரின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனோர் பற்றி விவரம் புள்ளிவிபரவியல் ரீதியாக இல்லை என்று தெரிவித்த சிறிதரன் அவற்றை முழுமைப்படுத்திப் பெற்றுக் கொள்ள ஏன் முடியாது என அரச அதிபரிடம் கேள்வி எழுப்பினார். இதன்போது அரச அதிபரும் அமைச்சரும் அவ்வாறான விவரங்களைப் பெற்றுப் பூரணப்பட…

    • 7 replies
    • 625 views
  23. சிறீPலங்கா சுகந்திரக் கட்சியின் வடபகுதி அமைப்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்கென தலர் 50 இலட்சம் முற்பணம் கையளிக்கப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் வடபகுதி அமைப்;பாளர்கள் யாழ்.பழைய பூங்காவிலுள்ள ஆளுநர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு வடக்கு மாகாண ஆளுநரால் ஒவ்வொருவருக்கும் தலா 50 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே குறித்த நிதி சுதந்திரக்கட்சியின் கட்சி நிதி அல்ல எனவும் வட மாகாணசபையிற்கென ஒதுக்கப்பட்ட நிதியே எனவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே நடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தல் மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல்களின் போதும் இவ்வாறே மாகாணசபை நிதி ஆளுநரால் அள்ளி செலவு செய்யப்பட்டிருக்கின்றது. தற்போது மீண்டும் வடமாகாணசபைக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஆளு…

  24. பாதுகாப்பும் வாகனமும் பறிக்கப்பட்டு விட்டதாக ஹிருனிகா அறிவிப்பு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பும் வாகனமும் பறிக்கப்பட்டு விட்டதாக மேல் மாகாணசபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தி திரும்பிய போது இவ்வாறு பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வீட்டில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும் அவர்கள் இருவரும் மீள அழைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டிருந்த வ…

    • 7 replies
    • 1.1k views
  25. முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெறுவதற்காக கோத்தபாய அதிரடி உத்தரவுகள்! - நேற்றைய சந்திப்பையடுத்து பறந்தன. [Tuesday 2014-12-09 07:00] கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் குழுவினருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய அரசாங்க குழுவினருக்கும் இடையில் நேற்று பிற்பகல் பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச்சந்திப்பின் போது காணி, மீன்பிடி மற்றும் வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் சம்பந்தமான இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் போது அவற்றிற்கான தீர்வுகளை பெற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.