Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போட்யிடுகின்றார். கட்சியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த் இன்றைய தினம் ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் ஜனாதிபதியின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தி உள்ளார். இதன் பின் கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெரும்பான்மை வாக்குகளுடன் அமோக வெற்றியீட்டுவார் என தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள…

  2. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்படுவதில் எவ்வித எதிர்ப்பும் கிடையாது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகிப்பதிலோ அல்லது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி வகிப்பதிலோ எதிர்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தெரிவு செய்யப்படுவோர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதில் எவ்வித முரண்பாடும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். யார் பிரதமராக பதவி வகிக்கின்றார் என்பது பற்றிய பிரச்சினை பெரிதல்ல எனவும் நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்தே கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றின் ப…

  3. ஜனாதிபதி தேர்தல் நீதீயானதாக , சுதந்திரமானதாக அமையாது:- ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நீதீயானதாக , சுதந்திரமானதாக அமையாது என முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச சஞ்சிகையொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர், தேர்தலை கண்காணிக்கும் வெளிநாட்டு அமைப்புகள் வாக்குகள் நேர்மையான முறையில் எண்ணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும், வாக்குபெட்டிகளுக்கான அச்சுறுத்தலை முடிவிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு> கடந்த சிலவருடங்களில் கண்டுள்ள வீழ்ச்சி குறித்து விரக்தி வெளியிட்டுள்ள அவர் வேறு வழியில்லை, இந்த நிலைதொடர அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப…

  4. அரசாங்க செய்தியை பல தமிழ் ஊடகங்களும் அச்சடித்தன:- குளோபல் தமிழ்ச் செய்திகள்:- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை, ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தெற்கின் ஊடகங்கள அரசாங்கத்தின் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதனை தமிழ் ஊடகங்களும் அப்படியே பிரதி பண்ணி வெளியிட்டன. வெள்ளவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடமொன்று, ஆடைத் தொழிற்சாலையொன்று, கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள பாரிய காணியொன்று, ட்ரோலர் ரக படகுகள் உட்பட சில படகுகள், என அடையாளப்படுத்தப்பட்டவை புலிகள் அமைப்பிற்கு சொந்தமானவை. இவை புலிகளின் ஆதரவாளர்களது பெயரில் வாங்கப்பட்டவை. ஆவற்றில் எந்த பதிவிலும் வேலுப…

  5. வெலிசரையில் உள்ள கடற்படை முகாம் ஒன்றில் போலி வாக்குச்சீட்டுகளை அச்சடிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட முகாமிற்கு வெளிநாடொன்றிலிருந்து அச்சடிக்கும் இயந்திரமொன்று கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த முகாமிற்கு பொறுப்பாக ஜனாதிபதியின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ச நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், கடற்படை அதிகாரிகளுக்கு கூட அங்குசெல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலிவாக்கு சீட்டுகளை அச்சடிப்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் என சுட்டிக்காட்டப்படுகின்றது. இதேவேளை கொழும்பு நாராஹன்பிட்டியில் உள்ள கட்டிமொன்று,ஜனாதிபதி செயலகத்தினால் மேற்பார்வை செய்யப்படும் விசேட பிரிவொன்றிடம…

  6. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐரோப்பிய மனித உரிமை நிலையம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ஐரோப்பிய மனித உரிமை மற்றும் அரசியல் சாசன நிலையத்தினால் இந்த முழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய படையினர் ஈராக்கில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பிலும் ஐரோப்பிய மனித உரிமைமற்றும் அரசியல் சாசன நிலையத்தினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான சாட்சியங்களின் சாட்சிப் பதிவுகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பெண்களுக்கு எத…

  7. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு ஆதவளிப்பது தொடர்பில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவற்றை நிறைவேற்ற 7 நாள்கள் அவகாசம் வழங்கியிருக்கிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஆளும் கட்சியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிடுகிறார். இந்நிலையில் முக்கிய அமைச்சர்களும், எம்.பிக்களும் பொது வேட்பாளரான மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அக்கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசனலி ஆகியோர்…

  8. சுதந்திரக் கட்சி போதைப் பொருள் கடத்தல் காரரிடம் சிக்கிவிட்டது: கண்ணீருடன் ஜனக்க பண்டார தென்னகோன்:- சிறீ லங்கா சுதந்திரக்கட்சி எத்தனோல் மற்றும் போதைப்பொருள் காரர்களில் கைகளுக்குள் சிக்கி சின்னாப்பின்னமாக்கி அடிபணிந்துவிட்டது என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார். கலேவெலயில் டி.பி தென்னகோன், மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நான், சுத்தமான சிறீ லங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவன், எனக்கு நேர்ந்த சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்து கூறினேன், அவரது மகன் நாமல் ராஜபக்ஷவிடமும் எடுத்துரைத்தேன். என்னுடைய கதையையே யாரும்…

  9. கதிர்காம பூமி தற்பொழுது பெளத்த மயமாகி வருகிறது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நாவலர் விழா மற்றும் ”கதிர்காமத்தை தரிசித்த சித்தர்களும் முனிவர்களும்” எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வடக்கு முதலமைச்சர், கதிர்காமத்திற்கு நான் ஒவ்வொரு வருடமும் தரிசிப்பது உண்டு. கடந்த சில வருடங்களாக செல்லவில்லை. கதிர்காமத்தில் அகஸ்த்தியர் முதல் யோகர் சுவாமி வரை தரிசித்தார்கள். ஆனால் அந்த பூமி தற்பொழுது பௌத்த மயமாகி வருகின்றது. எமது அந்த கதிர்காமம் எங்களை விட்டு ஒழிக்கப்படுமோ என்ற அச்சம் எம்முள் நிகழ்கின்றது. அப்ப…

  10. போர்க்குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் பேரில், தென்னாபிரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரிய, அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில், 1990ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், இடம்பெற்ற நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக இவர் மீது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. Association of Military Christian Fellowships என்ற அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜெனரல் சிறிலால் வீரசூரிய நேற்று தென்னாபிரிக்கா வருவார் என்று நம்பப்படுகிறது. இந்த அமைப்பில் ஜெனரல் வீரசூரிய முக்கிய பங்கு வகித்து வருகிறார். தமிழர்கள் பெருமளவில் நீதிக்…

  11. -றொஷான் துஷார பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் இன்று(30) நடைபெறவுள்ளது. பொலன்னறுவை 28ஆவது மைல்கல் பிரதேசத்தில் பிற்பகல் 2மணிக்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/135070-2014-11-29-08-53-04.html

  12. Pirapaharan at Sixty The Meaning of the Man by Karthik RM, November 21, 2014 Is Pirapaharan dead? Ten years back, TamilNet senior editor and military analyst Taraki Sivaram wrote a brilliant piece on the political legacy of Pirapaharan at fifty. Come 26 November this year, the founder-leader of the LTTE and one of the most brilliant military minds of South Asia will turn sixty. Quite a lot has been said, by both admirers and adversaries, about the life of the man. But what is his meaning? It is impossible to understand Pirapaharan unless one understands the interrelated essences of Sangam poetry – love and war – and its influence on the Tamil military t…

  13. முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திடீரென தாம் எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்ததோடு, அதுவரை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்த ஜாதிக ஹெல உறுமய கட்சித்தலைவர்களும் எதிர்க்கட்சிகளுக்காக பொது வேட்பாளர் ஒருவரை தேடி அலைந்த மாதுளுவாவே சோபித தேரரும் ஊடகங்களினால் மறக்கப்பட்டுவிட்டதைப் போலாகிவிட்டார்கள். அதுவரை ஜனாதிபதித் தேர்தலின் போது என்ன செய்வோமோ என்று நாளுக்கொரு கதையைக் கூறிக் கொண்டிருந்த எதிர்க் கட்சிகள், இப்போது வெற்றி மனப்பாங்கோடு காணப்படுகிறார்கள். அதுவரை தனிக் குதிரையின் போட்டியைப் பற்றி கனவு கண்டுகொண்டிருந்த ஆளும் கட்சியினர் இப்போது திகைதத்துப் போய் இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்…

  14. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் என்னை ஆஜர் படுத்த முயற்சிக்கின்றனர் – ஜனாதிபதி:- ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தம்மை ஆஜர் செய்ய சிலர் முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தனவின் அரசியல் வாழ்க்கைக்கு 25 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஆவிகளுக்கு அஞ்சியவர்கள் மயானத்தில் வீடு அமைத்து வாழ மாட்டார்கள் என்பதனை எதிர்த்தரப்பினருக்கு நினைவுபடுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். முதுகெலும்பு இல்லாதவர்களை எப்படியாவது ஆட்சி பீடத்தில் ஏற்றி விட வேண்டுமென்ற எண்ணத்தில் சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். …

  15. விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 200 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளவத்தையில் உள்ள தொடர்மாடி வீட்டுத்தொகுதி, ஆடை உற்பத்தி தொழிற்சாலை, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எதிரில் இருக்கும் காணி, ட்ரோலர் மற்றும் படகுகள், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு அச்சகங்கள் என்பனவே புலிகளின் சொத்துகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதனை தவிர கொழும்பில் உள்ள பிரதான வெளிநாட்டு வங்கியில் இருந்த 50 கோடியே 50 லட்சம் ரூபா பணத்துடன் வெளிநாட்டு வங்கி கணக்கு, உள்நாட்டு வங்கியில் இருந்து மூன்று கோடியே 50 லட்சம் ரூபாவுடனான வங்கி கணக்கு என்பன தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த ப…

  16. சிறிலங்கா அரசாங்கத்துக்கும், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிந்த ஐந்து தமிழக மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இதற்கான உடன்படிக்கை இந்திய பிரதமருக்கும், சிறிலங்காவின் ஜனாதிபதிக்கும் இடையில் நேரடியாக இடம்பெற்றுள்ளது. அத்துடன் மகிந்தராஜபக்ஷவே நரேந்திரமோடியை தொடர்பு கொண்டு குறித்த மீனவர்களை விடுவிப்பதாக கூறி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டரீதியாக குறித்த மீனவர்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகரகம் இறுதியில் அவமானப்படும் வகையில், அதன் மேன்முறையீட்டு மனுவை மீளப்பெற வேண்…

  17. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்ற பின்பு பழிவாங்கும் நடவடிக்கைகளில் தான் ஈடுபட போவதில்லை என்று எதிர் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மைத்திரிபால சிறிசேன பொலநறுவைப் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிரச்சராக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல எதிர் கட்சிகளின் தலைவர்களும் கலந்துக் கொண்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் முன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் இருந்த போதிலும் அவர் அதனை மக்களின் நலனுக்காக பயன்படுத்தவில்லை என்று மைத்திரிபால சிறிசேன கு…

  18. பவுண்களாலோ அல்லது டொலர்களாலோ விலைகொடுத்து வாங்கக்கூடியவர்கள் இனியும் என்னுடைய அமைச்சரவையில் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அரசியலுக்கு பிரவேசித்து 25 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று மாத்தறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'முதுகெலும்பு அற்ற சிலரை தலைவர்களாக்கும் தேவை, சில வெளிநாட்டுச் சக்திகளுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அடிக்கும் தாளத்துக்கேற்ப ஆடுபவர்களை நியமிக்க வேண்டும் என்பதே அந்த சக்திகளின் நோக்கமாகும். இருப்பினும், எமது மக்கள் அவ்வாறானவர்களுக்கு இடமளிப்பதில்லை. ய…

  19. சிறிலங்கா அரசாங்கத்துக்கும், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிந்த ஐந்து தமிழக மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இதற்கான உடன்படிக்கை இந்திய பிரதமருக்கும், சிறிலங்காவின் ஜனாதிபதிக்கும் இடையில் நேரடியாக இடம்பெற்றுள்ளது. அத்துடன் மகிந்தராஜபக்ஷவே நரேந்திரமோடியை தொடர்பு கொண்டு குறித்த மீனவர்களை விடுவிப்பதாக கூறி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டரீதியாக குறித்த மீனவர்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகரகம் இறுதியில் அவமானப்படும் வகையில், அதன் மேன்முறையீட்டு மனுவை மீளப்பெற வேண்டிய நிலை …

  20. புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி தண்டுவான் வாழ்மக்கள், ரவிகரனின் மக்கள் குறைகேள் சந்திப்பில்கலந்துகொண்டு பிரதேசத்தின் குறைகளை எடுத்துரைத்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை பத்து மணியளவில் ஆரம்பமான இச்சந்திப்பில் அடைமழையையும் பொருட்படுத்தாது புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி, மக்கள் கலந்து கொண்டு குறைகளை எடுத்துக்கூறியிருந்தனர். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட தண்டுவான், பழம்பாசி, பெரிய இத்திமடு பகுதிமக்கள் தமது குறைகள் கோரிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடலுக்கு மக்கள் சந்திப்பொன்றை ஏற்படுத்துமாறு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் கடந்த வாரம் கேட்டிருந்தினர். அந்தவகையில், இன்றையதினம் காலை பத்துமண…

  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மிகவும் நிதானமான அரசியல்வாதி. அவருடைய ஆற்றல் தீர்க்கமான பேச்சு ஆகியவை எமக்கும் மகிழ்ச்சி தருகிறது. அந்தரப்பட்டு அவசரப்பட்டு கிடங்கில் விழமாட்டார் என் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் மன்னார் ஆயர் ராஜப்பு ஜோசப். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் நாம் மௌனமாக இருந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும். சகல தரப்பினருடனும் கலந்து ஆலோசித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மிகவும் நிதானமான அரசியல்வாதி. அவருடைய ஆற்றல் தீர்க்கமான பேச்சு ஆகியவை எமக்கும் மகிழ்ச்சி தருகிறது. அந்தரப்பட்டு அவசரப்பட்டு கிடங்கில் வ…

  22. மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது அவரது தனிப்பட்ட குடும்பத்துக்கோ நான் ஒருபோதும் எதிரியல்ல. ஊழல், மோசடி, அநியாயம் மற்றும் குடும்ப ஆட்சி ஆகியவற்றுக்கு எதிராகவே எதிரணியின் பொது வேட்பாளராகத் தீர்மானித்தேன் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதி, மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவானால், நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் இல்லாதொழிக்க தீர்மானம் செய்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார். தனது முதலாவது பிரசார கூட்டத்தை பொலன்னறுவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) ஆரம்பித்த மைத்திரிபால சிறிசேன அங்கு தொடர்ந்தும் கூறியதாவது, 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நான் உங்களை தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கவில்லை. உங்களது குடும்பத்துக்கு எதிராகவும் தனிப்பட்ட ரீதியில் கோபம்…

  23. யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்திற்கு புதிய துணைத்தூதுவராக நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் துணைத்தூதராக பதவி வகித்த மகாலிங்கம் இவ்வருட ஆரம்பத்தில் கஜனாவுக்கு தூதுவராக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளார். இதனையடுத்து கண்டியில் இந்திய துணைத்தூதராக கடமையாற்றி வந்த நடராஜ் யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத்தூதராக கடமையாற்றவுள்ளார். எதிர்வரும் மாதம் தனது பதவிளை ஏற்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கண்டியில் உள்ள துணைத்தூதருக்கு நேபாளத்தில் இருந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=544513687330731291

  24. கொழும்பில் நாளை நடைபெறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்றில் பங்கேற்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள அழைப்புக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அப்பாவி மக்களை இலகுவாக ஏமாற்றுவது போல எம்மையும் ஏமாற்றப்பாக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பல்கலைக்கழக ஆசிரியர்களைச் சிந்தித்துச் செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார். வரலாற்றுத் தவறுகளை இழைக்காதிருப்போம் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=396003686530641613

  25. எமக்காக உயிர்கொடுத்தவர்களை நினைத்து கண்ணீர் சிந்த முடியாதவர்களாக அடக்குமுறை அரசால் நாம் நசுக்கப்பட்டிருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார். கரைச்சி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அவர், கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச சபை இந்த மாவட்டத்திற்கு ஒரு சிறப்பான பொதுநூலகம் ஒன்றை அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நான் அறிவேன். ஆனால் அதற்குரிய காணியை வழங்குவதற்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மறுத்து பின்னடித்து வருவதையிட்டும் அறிந்துள்ளேன். இந்த மாவட்டத்தின் முன்னேற்றம் கருதிய ஒரு நல்ல காரியத்திற்கு அவர் நூலகத்திற்கான காணியை வழங்க முன்வருவதான் பண்புமிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.