Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாயத்தால் 100ற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு பதுளை, லுணுகல – சோலன்ஸ் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் 27 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். லுணுகல சோலன்ஸ் மேற்பிரிவை சேர்ந்த 117 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக லுணுகல பிரதேச செயலாளர் டீ.எம்.எல்.எச் திசாநாயக்க தெரிவித்தார். இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும் சோலன்ஸ் மேற்பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, நேற்று மாலை தொடக்கம் சோலன்ஸ் தோட்ட மக்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பி…

  2. வருகுது வருகுது வருகுது என்று கட்டியங் கூறப்பட்ட விடயம் கடைசியாக வந்து விட்டது. ஜனாதிபதித் தேர்தலைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். இத்தேர்தல் பிரகடனத்துடன் நாம் எதிர்பாராதவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சியும் சீட்டுக் கட்டு வீடு போல பொலபொலவெனச் சரிய ஆரம்பித்திருக்கின்றது. முன்பெல்லாம் இந்த அரசாங்கம் ஒவ்வொரு விடயத்தையும் கையாளும் விதத்தை விந்தையுடன் பார்த்திருக்கின்றோம். ஒரு பிரதேசசபைத் தேர்தலேனும் தோற்பதை அது ஏற்க மாட்டாது. எங்காவதொரு மூலையில் அதற்கெதிரான சிறிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் என்றாலும்கூட அதனை ஆயுதப்படைகள் கொண்டு மூர்க்கத்தனமாக அடக்கப் பார்க்கும். கையாளப்படும் பிரச்சினையைவிடவும் அதீதமான நடவடிக்கை எடுக்கும் அதன் நடத்தையின் உளவியலை இப்பொழுதுதான் …

  3. எதிர் கட்சிகளின் பொது கூட்டணிக்கு அபே ஜாதிக பெரமுண என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் பத்து பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட போதிலும் அபே ஜாதிக பெரமுண என்ற பெயர் பொருத்தமான இருப்பதாக பொதுக்கூட்டணிகள் முடிவெடுத்துள்ளன. பொது கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு சின்னம் தொடர்பாக கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=722973664022565017

  4. ஆட்சி மாற்றத்திற்காக எதிரணியில் இணைந்துள்ள அனைத்து சக்திகளும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் வழங்க தயார் நிலையில் இல்லை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிரணி கூட்டு தலைமையில், ரணில் விக்கிரமசிங்கவும், சந்திரிகா பண்டாரநாயக்கவும் இருப்பது நமக்குள்ள குறைந்தபட்ச நம்பிக்கை ஆகும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எதிரணியின் அதிரடி செயற்பாடுகள், நாடு முழுக்க வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் புதிய நம்பிக்கை துளிர்களை தோற்றுவிக்கவேண்டும். ஆட்சி மாற்றத்தினால் வரக்கூடிய ஜனநாயக இடைவெளியில் எமது அரசியல், கலாசார, வர்த்தக, சமூக நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியும். இன்றைய இன, மத நெருக்கடி நிலைமையில் இருந்து மீண்டு, எம்மை கொஞ…

  5. இது ஒருசிலரை நோக்கி முன் வைக்கப்பட்ட கருத்தாயினும் இதன் உள்ளடக்கம் கருதி இங்கு இணைக்கிறேன். ------------------------------------------------------------ நாம் தமிழர் இயக்க முதன்மையாளர் சீமான், தந்தி தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக ஆரோக்கியமான வாதபிரதிவாதங்களை நடத்திய நண்பர்கள் <Ramachandren Sanath; Shan Prabhakaran; Saravanaraj Nadaraja; Amirthanayagam Nixon; பழ. நாகேந்திரன்; Chinniah Ratnavadivel; Joseph George Stephan; Thiyagarajah Ravi; Sivalingam Sivakumaran> ஆகியோர் கவனத்துக்கு; நமது இந்த கருத்து பரிமாறல்களுக்கு வழியேற்படுத்திய நண்பர் சீமானுக்கு நன்றிதான் கூற வேண்டும். சீமான் என் தனிப்பட்ட நண்பர். நேரடி அரசியலுக்கு அவர் வருவதற்க…

  6. இலங்கையில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள நிலையிலேயே அவரது கட்சிப் பதவிக்கு அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுடன் விலகிச் சென்றுள்ள ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன ஆகியோரையும் கட்சி அங்கத்துவங்களிலிருந்தும் அமைச்சுப் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு நேற்றிரவு தீர்மானிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இதனிடையே, நீக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் சுகாதார அமைச்சுப் பதவிக்கு துணை ச…

  7. 21.11.2014 இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இன்றைய தினத்திலேயே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்திருக்கிறார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியிலிருந்து மூத்த அமைச்சர்கள் உட்பட பெருமளவான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியுள்ளமையை ஐ.தே.கவின் ஆதரவாளர்கள், பயாகல மக்கோனை பகுதியில் கொண்டாடிக்கொண்டிருந்தவேளை, அங்கு காரொன்றில் வந்த இனந்தெரியாதோர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியிருக்கிறார்கள். இதன்போது ஐ.தே.க வின் முன்னார் பேருவளை எதிர்க்கட்சித் தலைவர் சமில ரணச…

  8. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்திலிருந்து நேற்றைய தினம் நான்கு அமைச்சர்கள் பதவி விலகியமையைத் தொடர்ந்து. மேலும் சிலர் எதிர்க் கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்களுக்குள் இருக்கும் அதிருப்தியை சமாளிக்கும் வகையிலே நிமல் சிறிபால டி சில்வாவிற்கு தற்காலிகமாக பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது. அத்துடன் நாளைய தினம் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. திங்கட்கிழமைக்குள் புதிய பிரதமர், புதிய அமைச்சரவையுடன் தேர்தல் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=299…

  9. முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிர்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் நேற்று அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். http://onlineuthayan.com/News_More.php?id=824443663422292030

  10. பொது வேட்பாளர் தெரிவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டது 22 நவம்பர் 2014 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தெரிவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கத்தைய நாடு ஒன்றின் தூதரகத்தினால் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தேவையான செய்மதி தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் ஆளும் கட்சியிலிருந்து தாவக் கூடியவர்களை கண்காணித்து வந்த காரணத்தினால், பேச்சுவார்த்தைகள் மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு விசேட செய்மதி தொலைபேசிகளை முன்னாள் ஸ்ரீலங்கா சு…

  11. அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவும் எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளது. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=294673662722473408

  12. தம்மை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கான போசனம் வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி இந்தக்கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சி தெரிவு செய்துள்ளது. இது ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தின் பொது வேட்பாளராக போட்டியிடுவது போன்றதே, மைத்திரிபால சிறிசேன எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதும். இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேன, 2010ல் சரத் பொன்சேகா சென்ற நிலைமை…

  13. எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவை விரைவில் சந்தித்துப் பேசவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பொதுவேட்பாளருக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என்று சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இன்று அல்லது நாளை பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மைத்திரிபாலவை கூட்டமைப்பு சந்திக்கும். சந்திப்பின் பின்னர் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும். இதற்கு மேலதிகமாக எதிர்க்கட்சிகளின் ஏனைய கட்சிப் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தப்படும். இதுவரையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது அல்லது என்ன தீர்மானம் எடுப்பது என்பது குறித்த மு…

  14. இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். '100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்': மைத்திரிபால முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் சிறிசேன இந்த முடிவை அறிவித்தார். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, துமிந்த திசாநாயக்க, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜிவ விஜேசிங்க, வசந்த சேனாநாயக்க ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். 'குடும்ப ஆ…

    • 6 replies
    • 1k views
  15. புலனாய்வாளர்கள் சுற்றிவளைத்த பல்கலைக்கழக மாணவனைக் காணவில்லை! [saturday 2014-11-22 09:00] யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை பீடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை பீடத்தில் கல்விபயிலும் மூன்றாம் ஆண்டு மாணவனான அ.நிவாஸ் என்பவரே காணாமல் போயிருப்பதாக தெரியவருகிறது. நீர்வேலியில் உள்ள அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு 7 மணியளவில் புலனாய்வாளர்கள் சென்று சுற்றிவளைத்திருக்கின்றனர். நிலைமையை உணர்ந்த குறித்த மாணவன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை பீடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். யாழ்.பல்கலைக்கழக…

  16. அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்? 22 நவம்பர் 2014 அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்ட ஆளும் கட்சி அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை ரத்து செய்யக் கூடிய வகையிலான திருத்தமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரத்திற்குள் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளது. சில தேர்தல் தொகுதிகளுக்கு புதிய தொகுதி அமைப்பாளர்களையும் ஆளும் கட்சி நியமிக்கத் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில முக்கிய பதவிகளிலும் மாற்றங…

  17. மகிந்தவுக்கு பதற்றம் அதிகரிப்பு! மன அழுத்தமும் ஏற்ப்பட்டுள்ளதாம் நண்பர்களே உங்கள் கருத்து என்ன? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பதற்றமும் மன அழுத்தம் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவர் அஞ்சுவதாக தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவிப்பது தொடர்பான அறிவிப்பை ஒளிப்பதிவு செய்ய தேசிய ரூபாவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் ஊடகவியலாளர்கள் உட்பட தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் குழுவினர் நேற்று அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர். எனினும் அவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பட்டதாக அரச தொலைக்காட்சிகளின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் அறிவிப்பை ஒளிப்பதிவு செய்ய,மிக நீண்ட நேரம் இந்த இரு அரச தொலைக்காட்சிகளின…

  18. நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஒரு பொய்யர் என்றும், தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம் ஒரு பொய்யர். தீவிரவாதிகளின் ஆதரவாளர். பிரிவினைவாத தீவிரவாதிகள் விடயத்தில் மென்போக்கை கடைப்பிடித்த அவர் எப்போது சிறிலங்கா அரசாங்கத்துக்கும், ஆயுதப்படைகளுக்கும் எதிராகவே செயற்பட்டு வந்தவர். கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக, விடுதலைப் புலிகளுக்கு உயர்வலுத் தொடர்புசாதனங்களை கொண்டு செல்வதற்கும், விடுதலைப் புலிகள் குரும்பட்டி என்ற மேம…

  19. வவுனியா, தவசிக்குளம் பகுதியில் பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் சிக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- நேற்று வியாழக்கிழமை இரவு தனது மாட்டைத் தேடி வீட்டின் பின்புறமாகவுள்ள காட்டை நோக்கி சென்ற போது பன்றிக்கு வைத்த சட்டவிரோத மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.மோகன் (வயது 43) என்பவரே உயிரிழந்தவராவர். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://malarum.com/article/tam/2014/11/21/6978/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF…

  20. யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை பீடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருப்பதாக தெரியவருகிறது. யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பான சுவர் ஒட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒட்டப்பட்டிருந்த நிலையிலேயே இன்று மேற்படி சம்பவம் இடம்பெற்றள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை பீடத்தில் கல்விபயிலும் மூன்றாம் ஆண்டு மாணவனான அ.நிவாஸ் என்பவரே காணாமல் போயிருப்பதாக தெரியவருகிறது. நீர்வேலியில் உள்ள அவருடைய வீட்டிற்கு இன்று இரவு 7 மணியளவில் புலனாய்வாளர்கள் சென்று வீட்டைச் சுற்றிவளைத்திருக்கின்றனர். சம்பவத்தினை உணர்ந்த குறித்த மாணவன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடியிருக்கின்றார். …

  21. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவுடன் ஆளும் கட்சியில் இருந்து பல பாரளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறவுள்ளதாக தகதகவல்கள் வெளியாகி இருக்கிறது... எனினும் இவை இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. அதன்படி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜானக பண்டார தென்னகோன், சாலிந்த திசாநாயக, சிறிபால கம்லத், துமிந்த திசநாயக்க, எஸ். பி. நாவின்ன, நிலவலா விஜேசிங்க, நிரஞ்சன் விக்ரமசிங்க, சுமேதா ஜயசிங்க, ஜகத் ரோகன புஷ்பகுமார, நவீன் திசநாயக்க, டி. பி. ரத்னாயக்க, விதுர விக்ரமனாயக, முன்னால் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, டாக்டர் ரமேஷ் பத்திரன, குணரத்ன வீரகோன், சரத் குமார குணரத்ன, ராஜித சேனாரத்ன, ரெஜினோல்ட் குரே, சனீ ரோகன, பைசல் காசி…

  22. மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களுக்கான தண்டனையில் மாற்றம் இல்லை என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா - இலங்கை இடையிலான உடன்படிக்கையின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். எனினும் உள்ளுர் சட்டப்படி மூன்று இலங்கை மீனவர்களுக்கும் இன்னும் மரணதண்டனை தீர்ப்பு வழக்கிலேயே உள்ளதாக அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவருடன் இலங்கை மீனவர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் தமிழக மீனவர்கள் ஐவரும் விடுவிக்கப்பட்டனர். இதில் இலங்கையைச் சேர்ந்த முத்துராஜா கமல் கிறிஸ்ரியன்(வயது 38), ஞானப்பிரகாசம் துசாந்தன் ( வயது 28)…

  23. பனை மரத்தினை அனுமதியின்றி வெட்டுபவர்களுக்கு புதிய ஆண்டில் இருந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பனை மரங்கள் அனுமதியின்றி வெட்டுவது தொடர்பிலான பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றது. இதற்கு இறுக்கமான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் எமது பாரம்பரிய அடையாளமான பிரதேச வளம் பாதிக்கப்படுகின்றது. அனுமதியின்றி பனை வெட்டுவது தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கையிலும் தளர்வு காணப்படுகின்றது. பனை வெட்டுவது குறித்து பொலிஸாரிடம் கேட்டால் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினால் கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்கின்றனர். அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் பச்சி…

  24. 'போதைப் பொருள், எதனோல், சாரயக் கடத்தல்காரர்கள்; பாராளுமன்றில் அங்கம் வகிக்க ராஜபக்ஸ அரசாங்கமே காரணம்' ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பாராளுமன்றில் ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காணி அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டாரநாயக்க தென்னக்கோன் இவ்வாறு ஜனாதிபதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமைச்சர் ஒருவர் தமது பெயரைப் பொறித்து காணிகளை விநியோகம் செய்துள்ளதாகவும் இதனை தாம் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். குறித்த அமைச்சருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.