Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புகலிடக்கோரிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை என்கிறது ஆஸி! இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருந்து படகில் சென்ற நிலையில் நடுக்கடலில் வைத்து வழிமறிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர், நாரு தீவிலுள்ள தடுப்பு முகாம்களில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 157 பேரினதும் புகலிடக் கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்தியாவின் தென்பகுதி கரையோர பிரதேசமான பாண்டிச்சேரியில் இன்று நடைபெற்ற புகைப்பட கண்காட்சியொன்றில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய அரசின் தென் இந்தியாவிற்கான துணை தூதர் சீயான் கெலி இந்தத் தகவலை கூறியுள்ளார். அகதிகளை அவுஸ்திரேலியா ஒருபோதும் நிராகரிக்கவில்லை என்று …

  2. இந்திய மீனவர்களை விடுதலை செய்வது குறித்து உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படவில்லை – மொஹான் சமரநாயக்க: 13 நவம்பர் 2014 இந்திய மீனவர்களை விடுதலை செய்வது குறித்து உத்தியோகபூர்வமாக இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளதாக, பிரதி அமைச்சர் பிரபா கணேசன் அண்மையில் இந்திய ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருந்தார். இந்திய உயர்ஸ்தானிகராலயம் தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்யாமல் இருந்தால், மரண தண்டனை விதிக…

  3. பான் கீ மூனின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு! [Thursday 2014-11-13 07:00] ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு சாட்சியம் திரட்ட அனுமதிக்குமாறு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், விடுத்திருந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. விசாரணைக் குழுவினர் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு வருவதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக சாட்சியமளிக்கும் இலங்கையர்களுக்கு விசாரணைக்குழுவினர் சந்தர்ப்பம் வழங்கவில்லை. புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர் எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் ஐக்கிய நாடுகள் அமைப்பில் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது என அரசாங்கம் குற்றம் சு…

  4. இலங்கையின் இறுதிக்கட்ட போர் ஆதரங்களை ஐ.நா சபை திட்டமிட்டு மறைத்துள்ளது - இன்னர் சிற்றி பிரஸ் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட போரின்போது நிகழ்ந்த போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை ஐ.நா சபை திட்டமிட்டு மூடிமறைத்துள்ளதாக ஐ.நா சபையின் உள்ளகத் தகவல்களை வெளியிடும் ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியான 2009 ஜனவரி 20 ஆம் திகதி முதல் 2009 மார்ச் 7 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2683 பொது மக்கள் கொல்லப்பட்டும் 7241 பேர் காயமடைந்தும் உள்ளதாக ஐ.நா தலைமையகத்திற்கு கிடைத்திருந்த புள்ளிவிபர தரவுகள் குறித்த ரகசிய தரவுகள் அடங்கிய அறிக்கையொன்று தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தே இன்…

  5. 27 வயதில் 25 வருடங்களுக்கு முன் காணாமல் போன வைரவநாதன் 53 வயதில் ஹம்பாந் தோட்டை தடுப்பு முகாமில்! கடந்த 25 வருடங்களிற்கு முன்னர் காணாமற்போயிருந்த சுன்னாகம் பகுதியை சேர்ந்த நபர் ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் இருப்பதாகவும் அவரை அழைத்துச் செல்லுமாறும் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் அவரது உறவினர்களுக்கு கடிதம் மூலம் செவ்வாய்க்கிழமை (11.11.14) அறிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மத்தி, தேவாலய வீதியைச் சேர்;ந்த தற்போது 53 வயதாகும் கே.வைரவநாதன் என்ற நபரே, இவ்வாறு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு, ஆமர் வீதியிலுள்ள கடையொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, கடந்த 1990ஆம் ஆண்டு வைரவநாதனும் காணாமற்போயிருந்தார். இவர் காணாமல் போனதற…

    • 3 replies
    • 2.2k views
  6. அமைச்சர் பசில் ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவை கோரியுள்ளார். இது தொடர்பான செய்தி கொழும்பிலிருந்து வெளியாகும் தேசிய தமிழ் தினசரிகளில் கடந்தவாரம் முன்பக்க தலைப்பு செய்தியாக இருந்தது. இங்கே பேசிய கூட்டமைப்பு எம்பி சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஆளும் கட்சி மற்றும் எதிரணி பொது வேட்பாளர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தமது மக்கள் அன்றாடம் முகங்கொடுக்கும், மீனவர், அரசியல் கைதிகள் மற்றும் காணி , சிவில் வாழ்வில் இராணுவ தலையீடு ஆகிய பிரச்சினைகளை தீர்த்துவைக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தயாரா என அவர் கேட்கிறார். உண்மையில் எதிரணி பொது வேட்பாளர், வெற்றி பெற்று நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு கையளித்து வ…

  7. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐஸ்கிறீம் உற்பத்திகளுக்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் விதிக்கப்பட்டுள்ள தடையால், யாழ்ப்பாண மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் 2,500 பேர் நேரடியாகவும், 15,000 பேர் மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்கிறீம் உற்பத்தியை தமது ஜீவனோபாயத்தொழிலாக செய்து வந்தவர்களின் குடும்பங்களும், உற்பத்திகளின் விற்பனையில் தங்கி வாழ்ந்தவர்களின் குடும்பங்களும் இந்த தடையால் வாழ்வாதாரத்துக்கு வேறு வழியின்றி நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக ஐஸ்கிறீம் உற்பத்தி கடைகளின் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன. கடனடிப்படையிலும், பெறுமதியான ஆதனங்களை ஈடுவைத்தும் ஐஸ்கிறீம் உற்பத்தி சாதனங்களையும், விற்பனை வாகனங்…

  8. விரைவில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதன் பின்னரே இது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் கட்சி மற்றும் மக்களது கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படுமென அவர் இதன்போது தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/35297/57//d,article_full.aspx

  9. பெண்களுக்கு உள்நாட்டிலேயே வேலை வழங்க வேண்டும் : ஹர்ச டி சில்வா தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாட்டு செல்லும் பெண்களுக்கு உள்நாட்டுக்குள்ளேயே தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாத்தின் போது, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இந்த கோரிக்கை விடுத்தார். வெளிநாடுகளில் பணிபுரியும் மியன்மார் போன்ற நாடுகளின் பணிப்பெண்களுக்கு அதிக வேதனங்கள் வழங்கப்படுகின்றன. அனால் இலங்கை பணிப்பெண்களுக்கு வெளிநாடுகளில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபா வரையிலான வேதனமே வழங்கப்படுகிறது. எனவே இது தொடர்பில்…

  10. மௌனமாயிருக்கும் அரச அதிகாரிகள்! யாழ் மாவட்டத்தில் உடுவில், ஏழாலை மற்றும் மல்லாகம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீட்டுக் கிணறுகளில் எண்ணெய்த்தன்மையான பதார்த்தங்கள் பரவி வருவதாக அண்மைக் காலங்களில் செய்திகள் வெளிவருவது நாம் அறிந்ததே. இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கான சுத்தமான நீர் வசதிகள் அற்று அல்லற் படுவதாகவும் சில குடும்பங்கள் தமது உறவினர்களின் வீடுகளிற்கு இடம் பெயர்வதாகவும் அறிய முடிகின்றது. எண்ணெய்ப் படலமானது நிலத்தடி நீரில் மிக வேகமாகப் பரவி வருவதாகவும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் எண்ணெய் கலந்த நீரினை உட்கொண்டதனால் பல்வேறு நோய்களிற்கு ஆளாகி இருப்பதாகவும் அறிய முடிகின்றது. இவ் அனர்த்தத்தினால் நேரடியாக 600 குடும்பங்களைச் சார்ந்த 3000 பொதுமக்கள் வரை பாதிக்கப்பட…

  11. மீனவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு ராஜபக்சவின் அரசியல் சூழ்ச்சியே -வைகோ தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கி ரத்து செய்வார் என்று கூறியிருப்பது ராஜபக்சவின் அரசியல் சூழ்ச்சியே என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை ராஜபக்ச ரத்து செய்வார் என்று வெளியான செய்தி தொடர்பில் வினாவியபோதே வைகோ இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - சில காலங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து போதை பொருள் கடத்தி வந்தவர்களுக்கு கூட தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை ஆனால் அப்பாவியான 5 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசை ராஜபக்ச தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்கிற…

  12. தமிழீழ தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர் ஹரிணி உட்பட 7 பேர் துபாய் தடுப்பிலிருந்து பிரேசில் பயணம் ஈழத்து உறவுகளுடன் புகழிடக் கோரிக்கையுடன் ஒரு படகு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலிய நோக்கி சென்ற பொழுது படகில் ஏற்ப்பட்ட பாதிப்பால் மூழ்கும் நிலை ஏற்பட்டு தத்தளித்த வேளை அவுஸ்ரேலிய அரசு துரித கதியில் நடவடிக்கை எடுத்து ஒரு பிலிப் பெயின்ஸ் நாட்டு கப்பலில் அவர்களை ஏற்றி துபாய் அரசிடம் பாதுகாப்புடன் ஒப்படைக்க பட்டு ஐ.நா தொண்டு நிறுவனத்தால் இதுவரை அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி இன்று அந்த புகலிட கோரிக்கையளர்கள் முழுவதுமாக ஒவ்வொரு நாட்டில் புகழிடம் வழங்கப் பட்டு நிறைவை கண்டது. இன்று நிறைவாக இறுதியாக இருந்த ஏழு பேருக்கும் பிரேசில் நாடு புகழிடம் வழங்கி அவர்களை அரவணைத்து கொள்கின்றத…

  13. ஆட்சி மாற்றமானது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குக் கூட தீர்வைத் தராது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த ஜனாதிபதி வேட்பாளராவது தாம் ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என உறுதிமொழி வழங்க முன்வருவார்களா எனவும் கேள்வியெழுப்பியுள்ளது. அத்துடன் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்னும் எண்ணம் ஏற்படுமளவிற்கு யுத்தத்திற்குப் பின்னர் தமிழர்கள் வெகுவாக பாதிப்படைந்து விட்டார்கள். ஓநாய்களுக்கு மத்தியில் ஆடுகள் வாழமுடியாது. அதுதான் தமிழ் மக்களின் இன்றைய நிலைமை எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் இணை ஸ்தாபகருமான …

  14. இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று மாலை நாடு திரும்பியுள்ளார். இதனிடையே நாடு திரும்பிய முதலமைச்சர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் :- இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ளவர்கள், தாயகம் திரும்ப வேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுத்துள்ள போதிலும், தாம் பலவந்தமாக அவர்களை திருப்பி அழைக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். "போர்ச்சூழல் காரணமாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களின் மீள்குடியேற்றத்திற்காக இந்திய, இலங்கை அரசுகளுடன் வடக்கு மாகாணசபையும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, இந்தியாவுடன் வடக்கு மாகாணசபை ஆலோசனை நடத்தி வருகிறது என்றார். தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள மக்களின் நிலங…

  15. இலங்கை மற்றும் தென்கொரிய கடற்படை வீரர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, செவ்வாய்க்கிழமை(11) மாலை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.(படங்கள்: பிரதீப் பத்திரண) http://tamil.dailymirror.lk/--main/132922-2014-11-11-15-46-12.html

  16. 14 பொதுநலவாய நாடுகளில் சேவையாற்றுகின்ற சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர்களில், இரண்டு பேர் மாத்திரமே தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைதினம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு உயர்ஸ்தானிகர்களாக இருக்கின்ற இலங்கையர்களின் தகுதி குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் வழங்கிய பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா சமர்பித்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. உயர்ஸ்தானிகருக்கான சிறந்த தகுதிகளை கொண்ட கே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஐ.அன்சார் ஆகிய இரண்டு பேரும் கென்யா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்களாக இருக்கின்றனர். ஏனைய 12…

  17. ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு விடுக்கப்படாத நிலையில் இலங்கை அரசியலில் பல்வேறு மாற்றங்கள் அடுத்த இரண்டு வார காலப்பகுதியில் இடம்பெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி தாவல்கள், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர், ஜாதிக ஹெல உறுமயவின் அறிவிப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலான அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அக்கட்சியிலிருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன. சிங்கப்பூருக்கு சென்றிருக்கின்ற அவர் ஞாயிற்றுக…

    • 3 replies
    • 651 views
  18. -செல்வநாயகம் கபிலன் யாழ். கொடிகாமம் கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கு விசேட சிவில் பாதுகாப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஷிந்திக என்.பண்டார புதன்கிழமை (12) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதற்கு எதிராக பொலிஸாரும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். கடந்த வார இறுதி நாட்களில் இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் மணல் அகழும் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர். மேற்படி பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளால் அப்பகுதியில் கடல்நீர் உட்புகும் அபாயம் …

  19. சமாதானத்தை ஏற்படுத்தி வன்முறையற்ற விடயங்களை வலுப்படுத்தி, மனித உரிமைகளை மதித்தல் வேண்டும் மற்றவர்களின் சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற சமாதானமும் நல்லினக்கமும் எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தொடர்ந்துரையாற்றிய இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் கல்வியை மேம்படுத்துதல், சமூக நல்லினக்கத்தை உருவாக்குதல், சிவில் சமூக அமைப்ப…

  20. யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இயங்கும் சில வைத்திய சிகிச்சை நிலையங்கள் போலியானவை அங்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களும் போலியானவர்கள். குறிப்பாக பல் சிகிச்சை நிலையங்கள் மூன்று அவ்வாறு இயங்குகின்றன. அங்கு சிகிச்சை அளிக்கும் போலி வைத்தியர்களின் சிகிச்சையினால் பலர் பாதிக்கபப்ட்டுள்ளனர். குறித்த சிகிச்சை நிலையங்களில் போலி வைத்தியர்கள் போலி தாதியர்கள் போலி தொழிநுட்ப உத்தியோகஸ்தர்களே கடமையாற்றுகின்றனர். அந்த வைத்திய சிகிச்சை நிலையங்களோ அங்கு வைத்திய சிகிச்சைக்கு பயன்படுத…

    • 5 replies
    • 1.8k views
  21. மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புறக் கிராமங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்தக் கோரியும், மேய்ச்சல்தரை விவகாரத்துக்கு சுமுகத் தீர்வுகாண வலியுறுத்தியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- எமது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தினதும் கோறளைப்பற்று தெற்குப் பிரதேச செயலகத்தினதும் மேற்கு எல்லையாய் அமையும் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பிரதேசங்களான பெரியமாதவணை, மற்றும் மயிலத்தமடு உட்பட வேறு பல பிரதேசங்களில் கடந்த ஆண்டு தொடக்கம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிலரால் அத்துமீறிய பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படு…

  22. -யோ.வித்தியா மன்னார் மாவட்டத்தில் கடற்பாசி உற்பத்தி பெரியளவில் சாத்தியமளிக்கவில்லை என மன்னார் மாவட்ட நீர் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரி பா.நிருபராஜ் புதன்கிழமை (12) தெரிவித்தார். மன்னார் கடல், அதிக அலைகள் கொண்ட கடலாக காணப்படுகின்றது. அத்துடன், கடல் நீரின் உப்புத்தன்மையிலும் மாற்றம் ஏற்படுகின்றது. இதனால், இங்கு கடற்பாசி உற்பத்திக்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளது. ஆயினும் சவுத்பார், வங்காலை, மாந்தை கிழக்கு ஆகிய இடங்களில் பருவ காலத்திற்கு ஏற்ப இந்த கடற்பாசி உற்பத்தியை மேற்கொள்ள முடியும். நவம்பர், டிசெம்பர் (மழைக் காலங்கள்) மாதங்களில் கடல் நீரின் உவர்தன்மை குறைவடையும் என்பதால் அந்தக்காலங்களில் கடற்பாசி உற்பத்தியை மேற்கொள்ள முடியாது. மன்னார் கடல் நீரில் கடல் உயிரினங்க…

  23. 1200 மில்லியன் ரூபாவுக்கு மங்கள சமரவீரவை விலைக்கு வாங்குகிறது அரசாங்கம்! [Wednesday 2014-11-12 09:00] ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், இதுதொடர்பாக அரசாங்கத் தரப்பிற்கும் மங்கள சமரவீரவிற்கும் இடையில் சிங்கப்பூரில் இரகசிய பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும் கட்சியில் இணைத்து கொள்வதற்காக மங்கள சமரவீரவிற்கு அரசாங்கம் 1200 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியதாக சிங்கப்பூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தவொரு நிலைமையின் கீழும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயார் என மங்கள சமரவீர அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறியதொரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டாலும் இணைந்து கொள்ள முடியும் என குறிப்…

  24. சிங்கள அதிகாரிகளைக் கொண்டு வெற்றிலைக்கேணியில் கடற்படையினருக்காக காணிகள் அளவீடு! [Wednesday 2014-11-12 09:00] வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படைத் தளமொன்றை அமைப்பதற்கான, காணி அளவைப் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதி கிராம அலுவலரது எதிர்ப்பினையும் தாண்டி இன்று நில அளவீடு இடம்பெற்றுள்ளது. நேற்று அளவீடு செய்யப்பட்ட 700 ஏக்கர் நிலத்தை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்து வெளியிடப்படுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க ஏதுவாக நில அளவை மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்றிருந்தது. எனினும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளது கடுமையான எதிர்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.