ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
ஐக்கிய அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட பீச் கிங் (360 ER) ரக கண்காணிப்பு விமானத்தை உத்தியோபூர்வமாக ஏற்கும் வைபவம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நேற்று (10) இடம்பெற்றது. இந்த வைபவத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் ( ஓய்வு பெற்ற ) சம்பத் துய்யகொந்தா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச மற்றும் அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவன் கொளர் ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை விமானப்படையின் விளக்கம் 3 கடல் சார்ந்த படைப்பிரிவில் இந்த பீச் கிங் ரக விமானம் இணைக்கப்பட உள்ளது. அந்த வகையில் சம்பிரதாய முறை நீர் வரவேற…
-
-
- 4 replies
- 589 views
- 1 follower
-
-
இலங்கை அரசாங்கம் கடந்த கால கொள்கைகளை தொடர்வதற்கும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை எதிர்ப்பதற்கும் தீர்மானித்தமை ஏமாற்றமளிக்கின்றது - சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த கால கொள்கைகளை தொடர்வதற்கும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை எதிர்ப்பதற்கும் தீர்மானித்தமை ஏமாற்றமளிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி பிராந்திய இயக்குநர் பாபு ராம் பண்ட் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளமை இலங்கையில் காணப்படும் மனித உரிமைகள் கரிசனை குறித்து சர்வதேச சமூகம் தொடர்ந்தும் கவனம் செலுத்தவேண்டிய…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சி - மட்டக்களப்பில் வேட்புமனு தாக்கல் செய்தனர் Vhg அக்டோபர் 10, 2024 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் - சாணக்கியன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10-10-2024) ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். கட்சியின் வேட்பாளர்கள்..... 1:-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்- சாணக்கியன் 2:-முன்னாள்.பா.உறுப்பினர் ஞானமுத்து - சிறினேசன் 3:- மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேஜர் தியாகராசா- சரவணபவன் 4:-ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர்…
-
- 0 replies
- 408 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய ஆசனங்களை பெறும் கட்சியாக எமது கட்சி காணப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது : சிவனேசதுரை சந்திரகாந்தன் ! By kugen எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய வாக்குகளை பெறும் எனும் நம்பிக்கை எமக்கு உள்ளது, இது வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக கூட இருக்கலாம், என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய ஆசனங்களை பெறும் கட்சியாக எ…
-
- 0 replies
- 167 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் போட்டி : எம். ஏ சுமந்திரன் ! By kugen திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என்றும் முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் வியாழக்கிழமை (10)மாலை இடம் பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் தெரிவிக்கையில். நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளோம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் நால்வரும் ஏனைய கட்சிகளுடன் மூவருமாக மொத…
-
- 0 replies
- 418 views
-
-
மாலதியின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் adminOctober 11, 2024 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (10) வியாழக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள்,உறவினர்கள்,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர். இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. https://globaltamilnews.net/2024/207359/
-
- 0 replies
- 599 views
-
-
யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக இப் புதிய கட்சி போட்டியிடவுள்ளது. இதில் தமிழரசுக் கட்சியில் அதிருப்பியடைந்துள்ளவர்கள் மற்றும் வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரையும் உள்ளடக்கி இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுவை நாளை காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். இக் கட்சியின் உருவாக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதன் தலைவரான ஐனாதிபதி சட்டத்தரணி தவராசா இன்றைய ஊடக சந்திப்பில் இதனை அறி…
-
-
- 33 replies
- 2.6k views
- 2 followers
-
-
பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் அவரது பெயர் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. எனினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத்திலும், நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களில் பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் கையொப்பமிடும்…
-
- 2 replies
- 613 views
- 1 follower
-
-
ஓமந்தை, கதிரவேலு பூவரசன் குளம் பகுதியில் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை (10.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, கதிரவேலு பூவரசன் குளம் பகுதியில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையில் காணி தொடர்பாகச் சிறிய பிணக்கு ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் குறித்த இருவர் மீதும் மிளகாய்த் தூளை அள்ளி வீசிவிட்டு அவர்களை விரட்டி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர்மக்கள் தெரிவிக்கின…
-
- 1 reply
- 115 views
- 1 follower
-
-
வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு! 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைகிறது. இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக மொத்தம் 349 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்றைய நிலவரப்படி 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர்களுக்கான செலவீன வரம்பு தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, வ…
-
- 0 replies
- 219 views
-
-
இலங்கையின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் 4.4 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய முன்னறிவிப்புகளை விஞ்சும் என்று உலக வங்கி (WB) வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது. உலக வங்கியின் 'எதிர்காலத்திற்கான திறப்பு' என்ற தலைப்பிலான இலங்கையின் இரு ஆண்டுகால மேம்படுத்தல், எவ்வாறாயினும், மீட்சி பலவீனமாக உள்ளது என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல், கடனை வெற்றிகரமாக மறுசீரமைத்தல் மற்றும் நடுத்தர கால வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் வறுமையைக் குறைப்பதற்கும் தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் சார்ந்துள்ளது என்றும் எச்சரித்துள்ளது. கொழும்பில், வியாழக்கிழமை (10) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கருத்துரைத்த போதே உலக வங்கியின்…
-
- 0 replies
- 225 views
-
-
இன்று (ஒக்டோபர் 10) முதல் ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் சேவையில் நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. R Tamilmirror Online || மீண்டும் பொலிஸ் சேவையில் ஷானி அபேசேகர
-
- 2 replies
- 374 views
- 1 follower
-
-
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். மருத்துவர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்ததுடன் இறுதி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! (newuthayan.com)
-
-
- 11 replies
- 1.3k views
-
-
10 Oct, 2024 | 03:04 PM ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் குறிப்பிடப்படுவதாவது, எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் கடந்த காலத்தில் எம்மால் இனங்கண்டு, சிபாரிசு செய்து, அனுமதி பெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய மற்றும் ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த …
-
-
- 23 replies
- 1.5k views
-
-
10 Oct, 2024 | 04:58 PM (எம்.நியூட்டன்) இனத்தின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை தீர்மானிக்கும் காலம் மக்கள் கைகளில் உள்ளது. அவர்களே முடிவெடுப்பார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தி மக்கள். அவர்கள் யார் வேண்டும், வேண்டாம் என்பதை முட…
-
-
- 3 replies
- 359 views
-
-
10 Oct, 2024 | 06:53 PM தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) கையளித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் க. இளங்குமரன், எம்.மோகன், பூ. சிறிதரன், கா. பிரகாஷ், இ. வெண்ணிலா, ஜெ.ரஜீவன், எஸ்.சிறிபவானந்தராசா, தே.தஜீவன், உ. கீர்த்தி ஆகியோர் போட்டியிடவுள்ளனர். யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல் | Virakesari.lk
-
- 0 replies
- 154 views
-
-
10 Oct, 2024 | 07:07 PM எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெறும் என கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனுவை இன்று (10) தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வன்னியில் எமது அணி சார்பில் போட்டியிடும் அத்தனை பேரும் விடுதலைக்காக போராடியவர்கள். அந்த விடுதலையை அகிம்சை வழியில் பெறுவதற்காக நாங்கள் இன்று தேர்தலில் போட்டியிடுகிறோம். அற்ப சலுகைகளைகளுக்காக நாங்கள் துணை போகமாட்ட…
-
- 0 replies
- 256 views
-
-
10 Oct, 2024 | 08:25 PM வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய தலைமன்னார் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். குறித்த யுவதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதி ,மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான சகல விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில் குறித்த யுவதி தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்,கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் தலைவரின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் தயாரிக்க…
-
- 1 reply
- 126 views
-
-
கலைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேடம் Vhg அக்டோபர் 10, 2024 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேடம் கலைந்து விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (09-10-2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இவ்வளவு காலமும் போலி வேடங்களை போட்டு தேசியம் தேசியம் என பேசி மறுபக்கம் அரசாங்கங்களிடம் இலஞ்சங்களை வாங்கி கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளனர். காத்திரமான தலைமைத்துவம் எனவே, மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்க வேண்ட…
-
- 4 replies
- 875 views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம் October 9, 2024 அம்பாறை மாவட்டத்தை ‘வே….வெத்திலை பெட்டியாக’ பாவிக்கும் கலாசாரம் இந்த தேர்தலோடு மாற்றமடைய வேண்டும் அல்லது மாறவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று தனது முகப்புத்தகம் வாயிலாக இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது அம்பாறை மாவட்டம் முழுதும் கடந்த சில தினங்களாக சில பயணங்களையும் பல நண்பர்களையும் பயணங்கள் வழியே சந்திக்க நேர்ந்தது. அதுனூடாக பெற்ற செய்திகளின் அடிப்படையில் சில தகவல்களை உ…
-
- 0 replies
- 354 views
-
-
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மீது குற்றப்பத்திரிகை-மேல் நீதிமன்றில் உத்தரவு! மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு, கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, இலங்கை அரசுக்கு சொந்தமான பணத்தை கிரீஸ் பத்திரங்களில் முதலீடு செய்து இலங்கை அரசுக்கு 1.8 பில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதிவாதிகளில் ஒருவரை தலா 10 மில்லியன் ரூபா பிணையில…
-
- 0 replies
- 278 views
-
-
யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழரசின் வேட்பாளர்கள் adminOctober 10, 2024 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் , யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிட தமிழரசு கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் கையெழுத்திட்டனர். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி . சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன் , கேசவன் சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ , ச. சுரேக்கா , சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர…
-
-
- 3 replies
- 382 views
- 2 followers
-
-
தமிழரசு கட்சியினா் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி adminOctober 10, 2024 இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை கையளித்துள்ளனர். வேட்புமனுவை கையளிப்பதற்கு முன்பதாக யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், தந்தை செல்வாக்கு அஞ்சலி செலுத்தினார்கள். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி . சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன் , கேசவன் சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ , ச. சுரேக்கா , சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . த…
-
-
- 8 replies
- 503 views
-
-
விமலின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை adminOctober 10, 2024 முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில், ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின், எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக நிற்பதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என வீரவன்ச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரக…
-
-
- 35 replies
- 2.5k views
-
-
10 OCT, 2024 | 11:17 AM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தமைக்காக சில பொலிஸ் அதிகாரிகள் தன்னை கைதுசெய்ய முயல்கின்றனர் என ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார் பதில் பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அந்த கடிதத்தில் தன்னை கைதுசெய்வதற்கு பொலிஸ் அதிகாரிகள் சிலர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக தான் தொடர்ச்சியாக வெளியிடும் செய்திகளுடன் தொடர்புபட்டதே இந்த விடயம் என அவர் தெரிவித்துள்ளார். நான் செய்திகளை வெளியிடுவது விசாரணைகளிற…
-
- 0 replies
- 77 views
- 1 follower
-