Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊவா மாகாணசபைத் தேர்தலில் 50 ஆயிரம் தமிழர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஊவா மாகாணசபைத் தேர்தலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.எஸ். என்ற மனித உரிமைகள் அமைப்பு எச்சரித்துள்ளது. ஊவா மாகாண சபைத் தேர்தல் வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஊவா மாகாணத்தை சொந்த இடமாகக் கொண்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு, நுவரேலியாவில் வர்த்தக நிலையங்களிலும் ஹோட்டல்களிலும் பணியாற்றுகின்றனர். சட்ட விதிகளின்படி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அரை நாள் லீவு வழங்கப்பட வேண்டும். ஆனால் கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் இருந்து பதுளை மொனறாகல மாவட்டங்களுக்குப் பயணிக்கவே …

  2. கடையில நல்ல யாவாரம்... முதலாளியின்ட கல்லாப் பெட்டி நிறைஞ்சிட்டுது. இப்ப சீனப் பிரதமர் வந்திருக்கிறார். அதவிட மகிந்த போகாத இடமெல்லாம் போனேனடி எண்டு எல்லா நாடுகளுக்கும் ஓடுறார். ஆளே இல்லாத தீவுகளிலும் ஆதரவு தேடி மனுசன் ஓடுறார். இந்த மனுசன் ஏனப்பா இப்பிடி ஓடி ஓடி உழைக்குது எண்டு நீங்கள் நினைப்பியள்... அவரக் கேட்டால் என்ன சொல்லுவார்? இலங்கையை ஆசியாவின்ட ஆச்சரியம் ஆக்கத்தான் அப்பிடி ஓடுறார் எண்டு சொல்லுவார். ஆனால் சிலபேர் என்ன சொல்லுறினம் தெரியுமே? தான் செய்த போர்க்குற்றம் - இனப்படுகொலையில இருந்து தப்ப மனுசன் ஆதரவு தேடிப் போறாராம்... அய்யோ இத நாங்கள் சொன்னால் என்ன ஆரும் மின்சாரக் கதிரையில இருத்த முடியாது எண்டு மகிந்த மார் தட்டுவார்... அதுசரி... இவர் நெடுக என்ன மின்சா…

  3. பிரித்தானியாவில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள ஜனநாயகத்தை, சிறிலங்கா கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து பிரிந்து தனித்து செல்வதற்கான பொதுசனவாக்கெடுப்பை ஸ்கொட்லாந்து நாளை நடத்துகிறது. ஆனால் இவ்வாறு வாக்கெடுப்பை நடத்த வேண்டாம் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அரசாங்கம் ஸ்கொட்லாந்தின் மீது அழுத்தம் கொடுக்கவில்லை. அது உயரிய ஜனநாயக பண்பாக கருதப்படுகிறது. இதனை சிறிலங்கா அரசாங்கம் கற்றுக் கொள்வதோடு, தமிழ் மக்கள் தங்களின் நிலத்தை தீர்மானித்துக் கொள்வதற்காக பொதுசனவாக்கெடுப்பை நடத்த சிறிலங்கா முன்வர வேண்டும் என்று அ…

  4. எமது உரிமைப் போராட்டத்தைத் தடுக்கும் உரிமை தயான் ஜெயதிலகவுக்கு இல்லை! – மாவை சேனாதிராஜா சூடான பதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எப்பொழுது தேர்தலை நடத்துவார் என பேசி வருகின்ற கலாநிதி தயான் ஜெயதிலகவுக்கு எம்மை உரிமைப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று சொல்லும் உரிமை கிடையாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனதிராசா தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் அறவழிப் போராட்ட அறிவிப்பு அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதாக அமையும் என ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கைய…

  5. ஐ.நா மனித உரிமைகள் சபையின் 27வது கூட்டத் தொடரின் 7வது நாளான நேற்று இலங்கையில் நடை பெற்ற மனித உரிமை சம்மந்தமான சந்திப்புகள் கேட்போர் கூடங்களில் மேற்கொள்ளப்பட்டது. "இலங்கையிலும் வெளியிலும் நடை பெறும் மனித உரிமை மீறல் சம்மந்தமான ஒன்று கூடல்" எனும் தலைப்பில் சந்திப்புகள் இடம்பெற்றது. சந்திப்பில் வட மாகான உறுப்பினரும் , தமிழரசுக் கட்சியின் மகளீர் அணித் தலைவியுமான அனந்தி சசிதரன் மற்றும் வடமாகாணசபையின் முல்லை மாவட்ட மாகான சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரனும் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர். தமிழர் தாயகத்தில் சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குறிப்பாக, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் போனோர் தொடர்பிலும், நில ஆக்கிரம…

  6. சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கு மறுத்து வருகிறது. இந்த நிலையில் பான் கீ மூன் இவ்வாறு உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் வெளிவிவகார திணைக்களத்தின் குழுவினை அனுப்பவுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இ…

  7. கத்தி திரைப்பட பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி மாணவர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் இன்று 12 மணியளவில் மனு கொடுக்கப்பட்டது. ஆணையாளரிடம் கொடுக்கப்பட்ட மனு: கத்தி திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்வையும் திரைப்பட வெளியீட்டையும் தடுத்து நிறுத்த வேண்டும். கத்தி இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணியளவில் லீலா பேலஸ் விடுதியில் நாளை நடை பெற உள்ளது. அதனை தடுத்து நிறுத்த மாணவர் அமைப்புகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தயாராகி உள்ளது. தி.வேல்முருகன் …

  8. தமிழ்மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே! - அமைச்சர் பஷீர் சேகுதாவூத் புகழாரம் இறந்த பின்னர் இன்னமும் தமிழர்களுக்குள் அதிகூடிய செல்வாக்குச் செலுத்தும் தலைவர் பிரபாகரனே என்பதை சிங்கள மக்கள் உணரவேண்டும் என உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 14ஆவது வருட சிரார்த்ததின நிகழ்வு ஏறாவூர் அல் அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு 'அஷ்ரப் விரும்பிய தேசிய ஐக்கியம்' என்ற நினைவுப் பேருரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும்…

  9. ஊரிக்கிராம பாலியல் துஷ்பிரயோகக் குற்றவாளிகளை நீதிமன்றில் முன்னிவைப்படுத்த கடற்படை அதிகாரி மறுப்பு - நீதவான் கொதிப்பு:- காரைநகர் ஊரிக் கிராமத்தில் இரு சிறுமிகள் கடற்படையினரால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்த கோரிய ஏனைய இரு கடற்படை சிப்பாய்கள் இன்றும் ஆஜர்படுத்தப்படவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி காவல்துறையை திட்டிதீர்த்த சம்பவம் இன்று நடந்துள்ளது. குறித்த கடற்படையினரை ஒப்படைக்க கடற்படை கட்டளை தளபதி மறுதலித்து வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. இதனிடையே கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட கடற்படை சிப்பாய்களுக்கு எதிரான பூர்வாங்க சாட்சிகள், சத்தியக்கடதாசி மூலமாக வழங்கிய சாட்சியங்களைக் …

  10. இலங்கை தன்னுடைய தேசத்தின் பிடியிலுள்ள நாடு –இந்துசமுத்திர ஆதிக்கம் சீனாவின் கையில் நிரூபித்தது சீனா: 17 செப்டம்பர் 2014 சீனா ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்க்கு சற்று முன்னதாக அந்த நாட்டின் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பலொன்று இலங்கை துiமுகத்தின் சீனாவிற்க்கு சொந்தமான சிஐசிடி இறங்குதுறைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜான்ங்ஜென்ங் 2 என்ற நீர்மூழ்கிக் கப்பலே இவ்வாறு துறைமுகத்திற்க்குள் நுழைந்துள்ளது. குறிப்பிட்ட நீர்மூழ்கி துறை முகத்திற்க்குள் நுழைந்த வேளை வெளியே இரு யுத்த கடற்படை கப்பல்கள் நங்கூரமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நீர்மூழ்கியின் பிரசன்னம் குறித்து இலங்கை கடற்படையினர் அறிந்திருக்கவில்லை என்றும் யுத்த கப்பல்கள் குறித்து இறுதிநே…

  11. பாதுகாப்பு உறவைப் பலப்படுத்த சீனா- இலங்கை இணக்கம்! - கூட்டறிக்கையில் தகவல் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு உறவைப் பலப்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சீனாவும் இலங்கையும் ஒரு நாட்டின் இறைமையில் மற்றும் ஒரு நாடு அல்லது அமைப்பு தலையிடுவதை எதிர்ப்பது என்ற கொள்கையில் இணக்கம்கண்டுள்ளன.அத்துடன் இரண்டு நாடுகளிலும் அரசியல், சமூக கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு சமாதானமான தீர்வுகள் விடயத்திலும் ஏனைய நாடுகளின் அமைப்புக்களின் தலையீடுகளை எதிர்ப்பதில் இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் கலாச்சார ரீதியான இணக்கங்கள் எட்டப்பட்டன. அத்துடன் சீன…

  12. சீனாவுடன் 19 ஒப்பந்தங்கள் கைச்சாத்து! - இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் 19 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இன்று முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 21ம் நூற்றாண்டில் பட்டுப்பாதைத் திட்டத்தை உருவாக்கும் சீனாவின் திட்டத்துக்கு இந்த உடன்படிக்கை உதவும் என்றும் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த சீன ஜன…

  13. தொடரும் தேடல்கள் இலங்கையின் இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை அரசோ, இது குறித்த விசாரணைகளை உள்நாட்டிலிலேயே நடைபெறுகின்றன என்றும், நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறுகிறது. அரச விசாரணைக் குழுவினர் இறுதிகட்டப் போர் குறித்து பன்னாட்டளவில் ஒரு அறிக்கையும், உள்நாட்டில் ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ள நிலையில், இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு, அதிலுள்ள அம்சங்களை உள்ளடக்கி மூன்றாவது விரிவுரை எனும் தலைப்பில் ஒரு அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. கொழும்பிலுள்ள மார்கா ஆய்வு மையமும…

  14. ஜெனீவாவில் நடைபெற்ற இன அழிப்புக்கான நீதி கேட்கும் பேரணியில் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச மற்றும் சும்பிரமணியம் சுவாமி ஆகியோரது கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. http://www.pathivu.com/news/33886/57//d,article_full.aspx

  15. தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் மண்டை சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் பார் அவர்தாம் பெரியார். - புரட்சி கவிஞர் பாரதிதாசன் இன்று பெரியாரின் 135ஆவது பிறந்த நாள். இன்றைய தினத்தில் தமிழ் சமூகத்திற்கு இக்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கும் பெரியாரின் கொள்கைகளை சிந்திப்போம் அவருடைய சில கருத்துக்கள் சில பேச்சுக்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக விமர்சனத்துக்கு உற்பட்டத்தாக இருக்கலாம் ஆனால் ஜாதியின் பிடியாலும் ஆணாதிக்க வெறியாலும் கட்டுண்டு இருந்தவர்களுக்கு பெரியாரின் வரவு ஒரு புது ஷக்திய கொடுத்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.....

  16. விஜயின் ‘கத்தி’ திரைப்படத்தைத் தயாரித்துள்ள லைகா மொபைல் நிறுவனத்துக்கும், இனப்படுகொலை செய்த ராஜபக்சே குடும்பத்துக்கும் இடையிலான உறவும் தொடர்பும், அளவுக்கதிகமாக அம்பலமாகி விட்டது. இப்படியெல்லாம் அம்பலமாவோம் என்பதை அறியாமல் – ‘தமிழரின் ரத்தத்தில் நனைந்த பணத்தில் படமெடுக்கிற இழிபிறவிகளா நாங்கள்’ என்றெல்லாம் சவுண்ட் கொடுத்தவர்கள், இப்போது சைலண்ட் மோடுக்குப் போயிருக்கிறார்கள். கத்தி தயாரிப்புப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன. “படமே முடிந்துவிட்ட நிலையில் அதை எப்படித் தடுக்க முடியும்” என்பது நண்பர்கள் சிலரது கருத்து. இனப்படுகொலையே முடிந்துவிட்ட பிறகு விசாரணை எப்படி நடத்த முடியும் – என்கிற மேலான கருத்துக்கும் இந்த மேதாவிகளின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ‘படத…

  17. வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளினால் வடக்கு மக்களே பாதிக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பதில்லை. இதனால் மக்களே பாதிக்கப்படுவர். நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் வடக்கு மாகாணசபை வித்தியாசமான நிலையில் காணப்படுகின்றது. நாட்டில் துரித கதியில் நகர அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2020ம் ஆண்டளவில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 50 வீதமான மக்கள் நகரங்களில் வாழ்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/33914/57//d,arti…

  18. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் யுத்தக் குற்றங்களை புரிந்த சிறிலங்காவின் இராணுவத்தினர், மத்திய ஆபிரிக்க ராஜ்சியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். தற்போது சிறிலங்காவின் படைத்தரப்புக்கு எதிராகவும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராகவும் யுத்தக் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறிலங்காவின் படையினரை அமைதிகாக்கும் படையில் இணைக்கக்கூடாது என்று சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இது தொடர்பில் இன்னர்சிட்டிபிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த போதும், அந்த கேள்விகள் தணிக்கை செய்யப்பட்டதுடன், பதில்கள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்றையதினம் முதல் அமைதி காக்கும் படையினர் தங்களின் பணிகளை மத்த…

  19. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் படுஅகாலையினில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், இன்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளார். 2 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில், கமலேந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரது உறவினர்களில் ஒருவரே அவரை பிணையில் பொறுப்பேற்றுள்ளார். கமலேந்திரனை பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தார். அத்துடன், வழக்கு முடிவடையும் வரையில் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும், வாரத்தில் ஒர…

  20. சீன அதிபர் ஷி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக போயிங் 747 என்ற விசேட விமானத்தில் 170 பேர் கொண்ட குழுவுடன் இன்று சிறீலங்காவை வந்தடைந்தார். சிறீலங்காவில் தங்கியிருக்கும் அவர் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார். மூன்று பில்லியன் ரூபா முதலீடுகளுடன் இன்று இலங்கை வரும் சீனா ஜனாதிபதிக்கு இன்று கொழும்பில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு கோலாகல வரவேற்பளிக்கப்பட்டன. இதனையொட்டி கொழும்பு மா நகர் சீன, இலங்கை கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் இரு நாட்டு …

  21. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் தமது இரண்டு அம்சக் கோரிக்கையை முன்வைத்து காலவரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதென முடிவெடுத்துள்ளார்கள். இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடிய கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக வந்து பல்கலைக்கழகத்தின் பிரதான அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் முன்னர் ஒன்று கூடியதுடன் கலந்துரையாடலையும் நடத்தினார்கள். இதன்போது தமது கோரிக்கைகளான சிறப்பு பிரிவில் கற்பதற்க்கு எற்கனவே அறிவித்ததைப் போன்று குறிப்பிட்ட பாடத்தில் மூன்று புள்ளிகளைப் பெற்றவர்களை சிறப்புப் பட்டம் பெற அனுமதிக்க வேண்டும். குறிப்பாக அரசியல் விஞ்ஞானம…

  22. வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த SELVANANTHAN HEMONISHA (17) என்னும் இம்மாணவி கடந்த ஒரு மாதமாக ஈரல் பிரச்சனையால் அவதியுறுகிரார். இவருக்கு Lanka Hospital இல் மருத்துவம் செய்த போதும் குணமடையவில்லை. இவரை இந்தியா கொண்டு சொல்லும்படி Lanka Hospital மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இதனல் இவர்கள் இந்தியாவுக்கு கொண்டு செல்ல உள்ளனர் அங்கே அவருக்கு ஈரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது. இதற்கு 6000000( 60 லட்சம் ) செலவாகும் என கோரப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தையும் திரட்ட இவர்களால் முடியவில்லை அவர்கள் உங்கள் உதவியை நாடுகின்ரனர் இம் மாணவி வவுனியா விபுலனத்தாக்கல்லூரியில் சாதாரன தரம் (G.C.E(O/L)2013) வரை கல்வி கற்று வந்துள்ளார் என்பதுடன் மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொன்டு…

  23. புதுக்குடியிருப்பு நகர மத்தியில் அமைந்துள்ள தனியார் காணிகளை இராணுவத்துக்காக சுவீகரிக்க நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அப்பகுதியிலுள்ள காணிகளை அளவிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திரண்ட மக்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. புதுக்குடியிருப்பு நகர மத்தியில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளும், புதுப்பிலவு சங்கத்துக்கு சொந்தமான காணிகளையும் சுவீகரிக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த காணிகளை இன்று நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அளப்பதற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அந்தக் காணிகளுக்கு சொந்தக்காரர்களும், பொதுமக்களும் திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் அங்குவந்த பொலிஸார் விரட்டியடித்தனர் என்று …

  24. -யோ.வித்தியா யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, முட்டை பொரியலுக்குள் கஞ்சாவை மறைத்து கொடுத்த மனைவியை, திங்கட்கிழமை (15) கைது செய்ததாக, யாழ்ப்பாண பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர். சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, திங்கட்கிழமை (15) மாலை உணவு கொடுப்பதற்காக அவரது மனைவி வந்திருந்தார். குறித்த பெண் கொண்டு வந்த உணவை சோதித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர், முட்டைப் பொரியலுக்குள் கஞ்சா இருப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து, அப் பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மேற்படி பெண்ணை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-1…

  25. தமிழரசுக் கட்சியின் அறவழிப் போராட்டம் அரசின் வாக்குபலத்தையே பலப்படுத்தும்! - என்கிறார் தயான் ஜயதிலக [Monday 2014-09-15 18:00] விரைவில் தேசிய அளவிலான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், தமிழரசுக்கட்சியின் அறவழிப் போராட்ட அறிவிப்பு அரசாங்கத்தின் வாக்குபலத்தை மேலும் பலப்படுத்தி இலகுவான வெற்றியை உறுதி செய்வதாய் அமைந்து விடும் என்று தெரிவித்துள்ளார், கலாநிதி தயான் ஜயதிலக. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இந்து பத்திரிகைக்கு ஜனாதிபதி அளித்த செவ்வி, அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கலாநிதி தயான் ஜயதிலக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.