Jump to content

இந்தக் கடைக்கு எத்தின பேரப்பா வாறாங்கள்?: யாழ்ப்பாணத் தம்பி


Recommended Posts

China%20Sri_CI.jpg

கடையில நல்ல யாவாரம்... முதலாளியின்ட கல்லாப் பெட்டி நிறைஞ்சிட்டுது. இப்ப சீனப் பிரதமர் வந்திருக்கிறார். அதவிட மகிந்த போகாத இடமெல்லாம் போனேனடி எண்டு எல்லா நாடுகளுக்கும் ஓடுறார். ஆளே இல்லாத தீவுகளிலும் ஆதரவு தேடி மனுசன் ஓடுறார். இந்த மனுசன் ஏனப்பா இப்பிடி ஓடி ஓடி உழைக்குது எண்டு  நீங்கள் நினைப்பியள்...

 
அவரக் கேட்டால் என்ன சொல்லுவார்? 
 
இலங்கையை ஆசியாவின்ட ஆச்சரியம் ஆக்கத்தான் அப்பிடி ஓடுறார் எண்டு சொல்லுவார். ஆனால் சிலபேர் என்ன சொல்லுறினம் தெரியுமே? தான் செய்த போர்க்குற்றம் - இனப்படுகொலையில இருந்து தப்ப மனுசன் ஆதரவு தேடிப் போறாராம்... அய்யோ இத நாங்கள் சொன்னால் என்ன ஆரும் மின்சாரக் கதிரையில இருத்த முடியாது எண்டு மகிந்த மார் தட்டுவார்... 
 
அதுசரி... இவர் நெடுக என்ன மின்சாரக் கதிரையில இருத்த ஏலாது.. என்ன மின்சாரக் கதிரையில இருத்த சில பேர் முயற்சிக்கினம் எண்டெல்லாம் புலம்பினவர். மின்சாரக் கதிரையில இருத்திற தண்டனைய இவர் ஏன் செலக் பண்ணினவர். ஓ.. முழுப் பூசனிக்காய சோத்தில மறைக்க ஏலாது எண்டும் வினை விதைச்சவன் வினை அறுப்பான் எண்டும் விளங்கிற்றோ? 
 
இருந்தாலும் இந்த என்ன மாதிரி எல்லாம் கஷ்டப்படுறார்? கிட்டடியில யப்பான் பிரதமர் வந்தார்.. உடன அவருக்கு ஒரு வரவேற்பு பலகை போட்டார். இப்ப சீன ஜனாதிபதிக்கு அதே இடத்தில ஒரு போரட். எத்தின பேருக்கெட இந்த மாம்பழத்த விற்பாய் எண்டு தாத்தா கேக்கிறார்... ஆனால் மகிந்தர் யாவாரத்தில கடும் பிசியாய் இருக்கிறார் எண்டு தெரியுது... 
 
சிங்கள தேசமா? சீன தேசமா எண்டுற மாதிரி கொழும்பு இருக்குது. ஆனால் சிங்கள பேரினவாதியளுக்கு அது பிரச்சின இல்லை. ஈழத் தமிழர ஒடுக்கி அழிக்க ஆர் துணையிருந்தாலும் அதுததான் அவைக்கு முக்கியம். தங்கட தேசத்த துண்டு துண்டாக்கி வித்து மகிந்தவின்ட கல்லாப்பொட்டியில போட்டால் என்ன விட்டால் என்ன? ஹ்ம்.... 
 
இலங்கைய தார வாக்கிற ஒப்பந்த நிகழ்ச்சி எல்லாம் சீன மொழியில நடந்ததாம்... போற போக்கப் பாத்தால் மகிந்தர் சீன மொழியில பேச வேண்டி வருமோ எண்டு பயப்பிடுறாராம்.. கிட்டடியில ஒரு மீற்றிங்கில தமிழ்ழ பேசுறன் எண்டு தூசனம் கதைச்சவராம்... செய்தா வேலை (இனப்படுகொலை) எல்லாம் செய்து போட்டு பிழைப்ப நடத்த என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்குது? 
 
அது மட்டுமே சீன எழுத்துக்களிலதானாம் கல்வெட்டு பொறிச்சிருக்கினம்.. அதுவும் புத்தளத்தில... வடக்கில சில கட்டிடங்களப் பாத்தால் சிங்கள தேசம் மாதிரி கிடக்குது... ஓ.. கிளிநொச்சி கச்சேரி அப்பிடித்தானே கிடக்குது. சில கட்டிடங்களப் பாத்தால் சீன தேசம் மாதிரிக் கிடக்குது.. எங்களுக்கு எண்டு ஒரு கலாசாரம், பண்பாடு, வரலாறு இருக்குது. எங்களுக்கு எண்டு ஒரு கட்டிட கலை இருக்குது... அப்பிடியான கட்டிடங்கள அழிச்சுப் போட்டு சீனமொழியிலயும் சிங்கள மொழியிலயும் உதத்தான் உவைள் இப்ப கட்டினம்... 
 
ஒரு மனித உரிமை சார்ந்தவரோ? இலங்கைய கேள்விக்கு உள்ளாக்கிறவரோ வந்தால் குலைக்கிற மகிந்தவின்ட நாய்க்குட்டியள் எல்லாம் பேசாமல் இருக்குது... 
 
அதுகளுக் ஜீ ஜின்பிங் எதும் கொண்டுவந்து போட்டிருப்பார்... 
 
யாழ்ப்பாணத் தம்பி
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

China%20Sri_CI.jpg

 

நல்ல கற்பனையுடன், பொருத்தமாக வரையப் பட்ட.... கேலிச்சித்திரம். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.