Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சென்னை: கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. 1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை தொடர்பாக, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பின்னர் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் டக்ளசுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும், தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை…

  2. நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி மக்கள் மனதை அரசு வென்றிருந்தால் ஊவா மாகாணத்தில் காடையர்களைக் களமிறக்கி வன்முறைகள் மூலம் வாக்குகளைக் கொள்ளையிட ஏன் முயற்சிக்க வேண்டும்." - இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். மேலும் இதன்போது ஜனாதிபதி ராஜபக்‌ஷ குடும்பமும் அதன் கீழுள்ளவர்களும் இந்த நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து விட்டனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றில் தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது:- எதிர்காலத்தில் இந்த நாட்டில் தேர்தல்கள் இடம்பெறாது. ராஜபக்‌ஷ அரசு தலைமையிலான அடாவடிகளே இடம்பெறும். அதற்கான ஏதுநிலைகளைத்…

  3. வடமாகாண முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டத்திற்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஒப்புதல் வழங்க மறுப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், அரசியலமைப்பிற்கு உட்படும் வகையில் முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்தை ம õற்றியமைப்பது தொடர்பில் ஆளுநருடன் நேரில் கலந்து பேசுமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மாகாண பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஆட்சியமைக்கப்பட்டதன் பின்னர் நிதி, நியதிச்சட்டம், முத்திரை வரி கைமாற்றுச் சட்டம், முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டம் ஆகிய 3 நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆளுநரின் சிபார்சுக்காக அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற நியதிச் சட்டங்கள் தொடர்பிலான விச…

  4. -யோ.வித்தியா யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர், கழிவகற்றல் தொடர்பிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் யாழ்.பொது நூலகத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக சிவில் பொறியியல்துறை தலைவர் எஸ்.சிவகுமார் மற்றும் சமூக மருத்துவத்துறை தலைவர் ஆர்.சுந்தரகுமரன் ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கருத்தரங்கில், நீரின் முக்கியத்துவம், சுகாதாரமற்ற நீரால் பரவும் நோய்கள், நிலத்தடி நீரின் பயன்பாடு, நீரை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. மேலும் 'நீரால் ஏற்படும் நோய்கள், அதிகமாக விவசாயிகளையே பாதிக்கின்றன. அதற்கு காரணம் விவசாயிக…

  5. கியூபாவின் ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கியூபா இலங்கைக்கு வழங்கிவருகின்ற ஆதரவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கியுபாவின் வெளிவிவகார அமைச்சர் புருனோ எடுவர்டோ ரொட்ரிகஸ் பரிய்யா நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்துகையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மன்றங்களிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலும் ஆதரவு வழங்குவதற்காக நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பில் குறிப்பிட்டார். இதேவேளை முடியுமான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவுவதற்கு கியுபா எப்போதும் தயாராக இருப்பதாக சந்திப்பில் கரு…

  6. வன்னியில் தமிழ் கிராமங்களை கிராமங்களை சிங்கள கிராமங்களாக மாற்றும் நடவடிக்கைகளை சிறிலங்கவின் இராணுவத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் இதற்கான வேலைத்திட்டங்கள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை அண்மையில் இராணுவ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த காணிகள் பல தற்போது சிங்களவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ் கிராமங்களின் பெயர்கள் சிங்கள மொழியில் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி வவுனியா வடக்கில் இருந்த இருந்த கொக்கச்சான்குளம் நந்தமித்திரகம என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லாள மன்னருக்கு எதிராக போரில் வெற்றி பெறுவதற்கு சிங்கள…

  7. சர்வதேசத்தின் காதில் பூ குறைப்பிரசவமாக சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு சாட்சிகளை பாதுகாக்க 10பேர் கொண்ட அதிகாரசபை - தலைவரை ஜனாதிபதி நியமிப்பார்- சட்டமூலத்தில் பரிந்துரை- அமைச்சர் ஹக்கீம் சமர்ப்பித்தார் - குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- உலகை ஏமாற்றும் முக்கிய விடயங்கள்- 1) பாராளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளுக்கு ஏற்ப எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை: 2) சட்டமூலத்தை சமர்பித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் விவாதம் நடத்தப்பட்டு சட்டமூலம் எப்போது நிறைவேற்றப்படும் என எதுவும் கூறவில்லை: 3) சட்டமூலத்தின் பிரகாரம் அமைக்கப்படவுள்ள அதிகார சப…

  8. இராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு விக்னேஸ்வரன் தமிழ் இளைஞர்களிடம் கோரினார்? தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர்களிடம் கோரியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாகாணத்தில் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து தகவல்களை திரட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் வவுனியாவில் ஆற்றிய உரையொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு வாழ் மக்களின் அன்றாட நடவடிக்கைகள், ஏனைய செயற்பாடுகளை இராணுவத்தினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் பிராந…

  9. -பொ.சோபிகா வடமாகாணத்திலுள்ள மீன்பிடி தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட மீன்பிடி ஆலோசனை குழுவின் முதலாவது அமர்வு வடமாகாண மீன்பிடி வர்த்தக வாணிப அமைச்சின் அலுவலகத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்றது. இந்த அமர்வில் வடமாகாண மீன்பிடி வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் கருத்துரை வழங்குகையில் கூறியதாவது, 'மீனவ சமூகத்தினரின் பல பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சரிடம் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அந்த பிரச்சினைகள் தொடர்பாக உடனடியான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற, முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொடர்பான அபிவிருத்திகளை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும், பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும…

  10. தமிழகத்தின் ஈழத் தமிழ் அரசியலை விளங்கிக் கொள்ளல் மற்றும் பிற Posted on September 10, 2014by rkguruparan 14 ஜூன் 2014 அன்று சர்வதேசத் தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தால் ஒழுங்கு செயப்பட்ட ஒரு கூட்டத்தில் நான் ஆற்றிய உரை. இந்தியா, தமிழகம், ஈழத் தமிழர் மூன்றுக்கும் இடையேயான உறவு நிலை பற்றியும் ஈழத் தமிழர் சர்வதேச முன்னெடுப்புகளுக்கு அப்பால் செய்ய வேண்டிய தேசக் கட்டுமான – உட் தகமை விருத்தி தொடர்பிலான வேலைத்திட்டம் தொடர்பாகவும் எனது பார்வைகளை இந்த உரையில் பதிவு செய்ய முயற்சித்துள்ளேன். http://rkguruparan.wordpress.com/2014/09/10/iatjspeech/

  11. கொழும்பு மாநகர அபிவிருத்தி திட்டத்திற்கு ரூ.29,000 மில்லியன் கடனுதவி புதன்கிழமை, 10 செப்டெம்பர் 2014 19:13 -ஜோசப் அன்டன் ஜோர்ஜ் கொழும்பு மாநகர அபிவிருத்தி திட்டமானது திட்டமானது உலக வங்கியின் சலுகை கடன் உதவியுடன் (ரூ.29,000 மில்லியன்) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு நகர பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, 450 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கொழும்பு மாநகரசபையிடம் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கையளித்தார். இந்நிகழ்வு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் இன்று புதன்கிழமை (10) மாலை இடம்பெற்றது. கொழும்பு மாநகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த உபகரணங்கள் வழங்கப்…

  12. சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நாட்டில் சட்டத்தரணியாக இருப்பது மிகவும் அவமானத்துக்கு உரிய விடயம். வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் உள்ளோம். சட்டமில்லாத நாட்டில் சட்டத்தரணி இவர் என்று கூறக்கூடிய நிலையில் நான் உங்கள் முன் நிற்கின்றேன். காணாமல் போனவர்கள் என்ற பிரச்சினை கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் இருக்கவில்லை. ஆனால் இன்று நவீனகாலத்தில் தான் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆட்சியாளர்களே அவர்களைப் பிடித்து தடுத்து வைத்து அல்ல…

  13. எங்களைக் காப்பாற்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று ஏற்படுத்துங்கள் என்றே தமது பிரேரணையில் கோருவதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுள்ளார். சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றைக் கோரும் பிரேரணையொன்றை வட மாகாண சபையில் சமர்ப்பிக்க முன்வந்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். எனினும், சர்வதேச விசாரணையைக் கோரும் சிவாஜிலிங்கத்தின் பிரேரணையில் இனப்படுகொலை என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும், அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டால் மாத்திரமே அது ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். http://www.intertam.net/2014/09/blog-post_10.html

    • 0 replies
    • 304 views
  14. யாழ் மாவட்டத்தில் விவசாயத்தையும், மனித உடல் நலத்தையும், சுற்றுச்சூழலையும் மிக மோசமாகப் பாதித்து வரும் பாதீனியத்தை ஒழிக்கும் பணியில் களைநாசினி விசிறும் பிரிவு ஒன்றையும் உருவாக்கியுள்ளது வடக்கு மாகாண விவசாய அமைச்சு. இந்தப் பிரிவின் நடவடிக்கைகளை அமைச்சர் ஐங்கரநேசன் இன்று புதன்கிழமை ஊரெழுவில் ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:- செயற்கை உரங்கள், பீடைகொல்லிகள், களைகொல்லி இரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு விவசாயத்தில் இவற்றின் பயன்பாட்டை இயன்றளவு குறைக்குமாறே நாம் வலியுறுத்தி வருகிறோம். இதன் அடிப்படையிலேயே பாதீனியம் ஒழிப்பிலும் முதற்கட்ட நடவடிக்கையாக களைகொல்லி இரசாயனங்களை விசிறுவதைத் தவிர்த்துக் கைகளினால் பிட…

  15. ஐ.நாவின் புதிய மனித உரிமை ஆணையாளர் செய்யித் அல் - ஹுசைன் தமிழ் பயங்கரவாதத்திற்கு அப்பால் முஸ்லிம் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளையும் நியாயப்படுத்தவே முயற்சிக்கின்றார் என பொதுபலசேனா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவதீம்பிள்ளை தமிழ் பயங்கரவாத செயற்பாடுகளை ஆதரித்து தனது கடமையினை செய்து முடித்தார். இப்போது புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள செய்யத் அல் - ஹுசைன் தமிழ் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் தனது பணியினை ஆரம்பித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதமொன்றினை அழித்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பேசிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இன்று சிரியாவிலும…

  16. வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் இணைப்பு அலுவலகம் மாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாங்குளம் கண்டி வீதியில் முல்லை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் இயங்கிவரும் கட்டடத் தொகுதியில் இந்த இணைப்பு அலுவலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். வடக்கு மாகாண சபையின் அமைச்சுகளின் தலைமை அலுவலகங்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கி வருவதால் வன்னிப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த மக்கள் தமது தேவைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பொதுமக்கள் இதனைச் சுட்டிக்காட்டியதையடுத்தே விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம்…

  17. படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தற்கொலை விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வில் மக்கள் பலவந்தமாக அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10மணியளவில் படையினரால் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் உதயன் இணையத்துக்கு கருத்து தெரிவிக்கையில், எங்களை பலவந்தமாக தற்கொலை விழிப்புணர்வுக்கு படையினர் அழைத்து வந்துள்ளனர் .இது தற்கொலை விழிப்புணர்வு என்று தமக்கு தெரியாது.மண்டை விறைக்கிறது நாம் எதையும் சிந்திக்காமல் இங்கு வந்து விட்டோம்.நாம் உழைத்து சாப்பிடுகின்றோம் தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் நமக்கில்லை. அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவன் தன்னிடம் பணம் இல்லை என்று அவன் தற்கொலை செய்வதில்நியாயம் இ…

  18. சஜித் பிரேமதாசவுடன் எவ்வித முரண்பாடும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சிலர் கட்சியை சீர்குலைக்க முயற்சித்து வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதற்கு அமைய தாம் வெளிநாட்டுக்கு விஜயம் செய்திருந்ததாகவும், சஜித் பிரேமதாச கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்…

  19. சீனாவுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்:- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- சீனாவின் கிழக்கு கடற்பகுதி விவாரத்தில் ஜப்பானிற்க்கு ஆதரவான நிலைப்பாட்டை இலங்கை எடுத்துள்ளதால் சீனாவுடனான அந்த நாட்டின் உறவுகள் பாதிக்கப்படலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் சமீபத்திய விஜயத்தின் போது கிழக்கு சீனா கடலில் ஏனைய நாடுகள் மீதான சீனாவின் வான்வெளி மற்றும் கடல்ப்பகுதி தடைவிவகாரத்தில் ஜப்பானின் நிலைப்பாட்டை இலங்கை ஆதரித்திருந்தது. சீனாவுடன் நெருக்கமான உறவுகள் உள்ள நிலையிலும் கொழும்பு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு நாட்டு தலைவர்கள் மத்தியிலான சந்திப்பி;ற்க்கு…

  20. "வடக்கு, கிழக்கு இணைந்த தமிழீழ தாயகக் கனவினை இந்தியாவின் தலையீட்டுடன் பெற்றுக்கொள்ள முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சியினைக் கைவிடவேண்டும்." இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- வடக்கு, கிழக்கை இணைத்து தமிழீழத் தாயகத்தை உருவாக்கும் ஒரே நோக்கத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டு வருகின்றது. தமது கனவை நிறைவேற்றும் நோக்கில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்க் கூட்டமைப்பு கூட்டுச் சேர்க்கின்றது. இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தலாம் என தமிழ்த் தே…

  21. தமிழின அழிப்புக்கு நீதி கோரி , தமிழ் மக்களின் அவலக் குரலை எண்திசைக்கும் பரப்பும் பொருட்டு ஐநா வை நோக்கிய ஈருருளிப்பயணம் ஏழாவது நாளாக இன்று பிரான்ஸ் நாட்டின் ஊடாக நாளை மாலை சுவிஸ் நாட்டுக்குள் செல்ல இருக்கின்றது . ஈருருளிப்பயணம் செல்லும் வழிகளில் நகரங்களின் நகரபிதாவுடனும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டது . சந்திப்பில் ஈருருளிப்பயணத்தின் கோரிக்கைகளை முன்வைத்து ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை அனைத்துலக குமூகம் உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஐந்து அம்ச கோரிக்கைகளும் பின்வருமாறு அமைகின்றது : 1.பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல…

  22. -எஸ்.எல்.அப்துல் அஸீஸ் கல்முனை, சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் சிறுபோக நெல் அறுவடை முடிவடைந்த நிலையில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட காணிகளில் காணி உரிமையாளர்கள் வைக்கோல் இட்டு எரிக்கும் நிகழ்வை பரவலாக காணக்கூடியதாக உள்ளது. இவ் விடயம் தொடர்பாக கல்முனை பிராந்திய விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எ.எம்.ஹனீபாவிடம் கேட்டபோது, அறுவடை முடிவடைந்த நிலையில் நெற் காணிகளில் வைக்கோல் இட்டு எரிக்கும் நிகழ்வானது சட்டதுக்கு புறம்பானது. இவ் விடயம் தொடர்பாக நெற் காணி உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவூட்டியுள்ளோம். அதையும்மீறி அவ்வாறு மேற்கொள்வார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-…

  23. இராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர்களிடம் கோரியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாகாணத்தில் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து தகவல்களை திரட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் வவுனியாவில் ஆற்றிய உரையொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு வாழ் மக்களின் அன்றாட நடவடிக்கைகள், ஏனைய செயற்பாடுகளை இராணுவத்தினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் பிராந்திய வலயத்தின் இராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இரா…

  24. - எம்.றொசாந்த், யோ.வித்தியா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, தன்னுடைய நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தன்னை அழைக்கவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டட தொகுதியில் புதன்கிழமை (10) இடம்பெற்றது. அமர்வு முடிவடைந்து வெளியில் வந்த முதலமைச்சரிடம், 'கோட்டபய ராஜபக்ஷ, உங்களை சந்திப்பதற்கு மேல் மாகாண சபை உறுப்பினரான மனோகணேசன் ஊடாக தூது விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்ததே, அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?' என ஊடகவியலாளர்கள் வினவினர். அதற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனோகணேசனின் தாயாருடை மரண வீட்…

  25. "வன்னிப்போரின் இறுதிதருணங்களில் நிகழ்ந்தவை குறித்த புதியகதைகள்" - குளோபல் தமிழ்ச செய்தியாளர் - கொழும்பு:- சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இலங்கையின் சில அரசசார்பற்ற அமைப்புகள் ஒன்றுசேர்ந்து வன்னிப்போரின் இறுதிதருணங்களில் நிகழ்ந்தவை குறித்த புதியகதைகளை முன்வைப்பதாக மனிதஉரிமை பணியாளர் நிமல்கா பெர்ணாண்டோ குற்றம்சாட்டியுள்ளார். இந்த அமைப்புகள் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மனிதஉரிமை பாதுகாவலர் சுனிலா அபயசேகர நினைவுப்பேரூரையை நேற்று கொழும்பில் ஆற்றிய வேளையே அவர் இதனை தெரிவித்தார். அண்மையில் மார்கா அமைப்பும், இலங்கையின் மனித நேயஅமைப்புகளின் கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவே அவர் இந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.