Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைப்பெண் அகதி தீக்குளித்து மரணம்:- 09 செப்டம்பர் 2014 தமிழ்நாடு திருவண்ணாமலை ஓசூர் வந்தவாசி அகதி முகாமில் தங்கியிருந்த பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 30 வயதான பரமேஸ்வரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தப் பெண் திருமணம் முடித்து விவாகரத்தானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மண்ணெண்ணை ஊற்றி தமக்கு தாமே தீ மூட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவி;க்கப்படுகிறது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111392/language/ta-IN/article.aspx

  2. தமிழரசுக் கட்சியின் வவுனியா மாநாட்டிற்கு சென்றவர்களை இராணுவத்தினர் திருப்பியனுப்பியுள்ளனர் வவுனியாவில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு வன்னியிலிருந்து சென்றவர்களை இராணுவத்தினர் போலிக் காரணங்களைக் கூறி விசாரணை செய்து தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வன்னியின் புதுக்குடியிருப்பு, நெடுங்கேணி, கனகராயன்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து சென்ற கட்சி ஆதரவாளர்களை இராணுவத்தினர் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வழிமறித்து விசாரணை செய்துள்ள…

  3. சீனாவிற்கு எதிராக தீர்மானம் எடுக்கும் இலங்கை அரசாங்கம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 09 செப்டம்பர் 2014 சீனாவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பானுக்கு ஆதரவான தீர்மானம் சீனாவிற்கு விரோதமானதாக அமைந்துள்ளது. வடகொரியாவினால் ஜப்பானியர்கள் கடத்தப்பட்ட வருவதாகவும், இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாகவும் இலங்கை அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜப்பான் பிரதமர் ஸின்சோ அபேயிடம் இதனைத் தெரிவித்துள்ளது. இதனால், சீனாவுடனான உறவுகளில் முரண்பாட்டு நிலைமை ஏற்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு எதிரான வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு இலங்கையின் நேச நாடான சீனா பூரண ஆதரவளித்…

  4. எல்-4 நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு அகரம் எனும் கணனித்தமிழ் குறும்தகட்டினை வெளியிட்டு தமிழ் அறியும் முயற்சியை விளையாட்டின் மூலம் ஏற்படுத்தி இருந்தார்கள். புலம்யெர்ந்த மண்ணில் குழந்தைகள் விளையாட்டோடு தமிழ்மொழியை அறிந்து கொள்ள இலகுவாக அமைக்கப்பட்டிருந்தது.இந்த முயற்சிக்கு மக்களின் பாராட்டும் கிடைந்திருந்தது. மீண்டும் இவ்வாண்டு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப iOS (iPod , iPhone , iPad) , android high end devices (E.g: Samsung S4 or higher , tabs ) ஆகியவற்றில் விளையாடக்கூடிய Tamil game 3D ஜ கன்னி முயற்சியாக உருவாக்கி இலவசமாக முன்வைத்துள்ளார்கள் அதனை தரவிறக்கம் செய்து படைப்பாளிகளுக்கு உங்கள் ஆதரவினை தெரிவித்துக்கொள்வதோடு ஆரோக்கியமான கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளலாம்…

  5. மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து, தாமே வாதிடப் போவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்துள்ளார். நாட்டின் பொதுமகன் என்ற அடிப்படையில் இந்த மனுவை பொதுநலன் மனுவாக கருதி தாக்கல் செய்யவுள்ளதாக சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார். தமது கருத்துப்படி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராவார். 18வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதில் சில சிக்கல்கள் இருப்பதாக சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த விடயத்தில் உயர்நீதிமன்றத்தி…

  6. யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து புத்தூர் கொடிகாம வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து நேற்று இரவு தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுடை மேற்கு, மானிப்பாய்யை சேர்ந்த என்.சதீசன் (வயது 24) என்னும் இளைஞனே பஸ்சுக்குள் நசியுண்டு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புத்தூர் கொடிகாம வீதியால் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேரூந்து மட்டுவிலுக்கு அருகில் கப்பூது வெளியில் ஆபத்தான வளைவொன்றில் திருப்ப முற்பட்ட வே…

  7. சுழிபுரம் - சம்பில்துறை சம்புநாதஈஸ்வரத்தில் பௌர்ணமி தினமான நேற்று திங்கட்கிழமை முழுமதி யாகம் இடம்பெற்றது. சைவ மகா சபை மற்றும் சிவதொண்டர் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் மேற்படி ஆலய குரு முதல்வர் நரசிங்க சித்தர் தலைமையில் இந்த யாகம் இடம்பெற்றது. சிவத்தமிழ் அர்ச்சகர்கள் செந்தமிழ் திருமுறையில் இந்த யாகத்தை நடத்தினர். சுழிபுரம், பாண்டவெட்டை, பெரியபுலோ, கல்விளான், பொன்னாலை, பனிப்புலம் ஆகிய இடங்களில் இருந்து வருகை தந்த அறநெறி மாணவர்களும் மக்களும் இந்த யாகத்தில் கலந்துகொண்டனர். சைவ மகா சபை மற்றும் சிவதொண்டர் அமைப்பு ஆகிய மாதாந்தம் பௌர்ணமி தினத்தில் நடத்திவருகின்ற யாகத்தின் தொடர்ச்சியாகவே நேற்றைய தினமும் யாகம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/33723…

  8. நெடுந்தீவிலுள்ள குதிரைகளை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதை உடனடியாக தடை செய்யவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது, 'நெடுந்தீவிலுள்ள குதிரைகளில் நான்கு குதிரைகளை, கடற்படையினர் கடந்த வாரம் வெளியிடங்களுக்கு எடுத்து செல்வதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். இது தொடர்பாக விசாரித்தத்தில் மேற்படி குதிரைகள் இராணுவத்தினரால் நடத்தப்படும் சுற்றுலா விடுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக அறிந்தோம். இது சட்டத்தை மீறும் செயல். நெடுந்தீவிலிருந்து எந்த குதிரைகளையும் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது தொடர்பி…

  9. மஹேல ஜெயவர்த்தன மற்றும் குமார் சங்ககார ஆகிய இரண்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் இணைந்து கொழும்பில் நடாத்தி வரும் கடலுணவு உணவகமான நண்டுகளின் அமைச்சு(Ministry of crabs) சட்டவிரோதமானது என மேல் மாகாண சபை உறுப்பினரும் மந்திரியுமான நிரோஷன பாத்துக்க தெரிவித்துள்ளார். பழமைவாய்ந்த கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள இவ் உணவகத்திற்கு அமைச்சு (Ministry) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனை நீக்குவதற்காக 17 மாதங்களுக்கு முதலே மேல் மாகாண கம்பனி பதிவாளர் திணைக்களத்தினால் அறிவுறுத்தப் பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். http://thinakkural.lk/article.php?local/sswernvekn5809e68a83370f16641gyr2oaacfab07ae1f8aaf5352bbkotbt#sthash.Mid0uWPJ.dpuf

  10. சர்வதேச விசாரணைகளை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 27வது மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றியசிறிலங்காவின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு எதிராக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழு தங்களின் அதிகாரத்தை மீறி செயற்பட்டிருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் சிறிலங்காவின் கலை கலாசாரம் என்பவை இந்த விசாரணைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில், சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் இல்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். http://www.pathivu.com/news/33717/57//d,article_full.aspx

  11. சம்பந்தன் கருத்தை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி உணர்ச்சி பேச்சுக்களாலும் வெற்றுக் கோசங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது என்றும், நடைமுறை யதார்த்த வழியிலேயே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் 15 வது தேசிய மாநாட்டில் கூறியிருப்பதோடு கடந்த காலங்களில் அரசியல் உரிமைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கிடைத்திருந்த பல நல்ல வாய்ப்புக்களையும் இழந்திருக்கின்றோம் என்பதையும் எற்றுக் கொண்டிருக்கின்றார். இது ஈ.பி.டி.பியினராகிய எமது நீண்டகால அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடேயாகும். ஆகவே நாம் அதனை வரவேற்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

    • 10 replies
    • 775 views
  12. நிபந்தனைகளுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/33719/57//d,article_full.aspx

  13. வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணத்தை இணைப்பது குறித்து முதலில் கிழக்கிலுள்ள தமிழர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பொன்றை நடத்திய பின்னரே தீர்மானிக்க முடியும் என கருணா அம்மான் என்றழைக்கப்படும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மக்கள் வடக்கு மாகாணத்துடன் இணைய விருப்பம் தெரிவித்தால் அதற்கு தாம் எவ்விதத் தடையையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். இருந்தாலும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, தேசிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது தமிழர்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் இருந்த நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எமது செய்தியாளர் கேள்வியெழுப்பினார். …

    • 0 replies
    • 509 views
  14. பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களது மோட்டார் சைக்கிள்களை யாழ்ப்பாணப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அரியாலைப் பகுதியில் நேற்று மாலை மது அருந்திக் கொண்டிருந்த வேளை குறித்த பகுதிக்கு பொலிஸார் பிரசன்னமாகியதால் குடித்த போத்தல்களையும் மோட்டார் சைக்கிள்களையும் விட்டு ஓட்டமெடுத்தனர். இதனால் அவர்களுடைய 6மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையம் கொண்டு வந்து சேர்த்தனர். தற்போது பொலிஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் வைக்கப்பட்டுள்ளதுடன் உரிமையாளர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=208963408208209583#sthash.THkcv7nY.dpuf

  15. மன்னார் மாவட்ட மீனவர்கள் தமது வருவாயை பெற்றுக்கொள்ளுவதில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட மீனவர்கள் தமது நாளந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதை அவதானிக்கக்கூடியாதாக உள்ளது. தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவதன் காரணத்தினாலேயே மீனவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்திய மீனவர்களின் இழுவைப்படகு முறைமையிலான தொழில் முறைகள், நாட்டுப்படகுகளின் தொழில் நடவடிக்கைகள் காரணமாக மாவட்ட மீனவர்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர். நாட்டுப்படகுகளில் வருகை தரும் இந்திய…

  16. வலி.வடக்கு மக்கள் தங்களுடைய நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்ததால் நலன்புரி முகாம்களில் கடந்த 24 ஆண்டுகளாக 4000 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்களுடைய சொந்த நிலங்களை விட்டு ஒரு குழி நிலம் கூட இல்லாமல் அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய சோகங்களை சொல்லில் எம்மால் கூறிட முடியாது. இடம்பெயர்ந்த மக்கள் அனைவர் சார்பிலும் தாங்கள் படும் துன்பங்களை கூறுகிறார் ஒரு தந்தை. காணொளியை பாருங்கள்.... இம்மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுங்கள் ..

  17. Started by பிழம்பு,

    நவிபிள்ளைக்கு பாராட்டு இணைப்பு 2 - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தனது செயற்பாடுகளில் முன் உதாரணமாகப் பின்பற்றப் போவதாக புதிய மனித உரிமை ஆணையாளர் சையத் அல் ஹ{சைன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 27 வது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் சர்வதேச விசாரணைகளிற்க்கு ஒத்துழைப்பை வழங்க்குமாறு இலங்கையை கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கையில் மனித உரிமை பணியாளர்கள், சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் தற்போது அச்சுறுத்தப்படுவது குறித்து நான் கவலையடைந்துள்ளேன்’’ மேலும் முஸ்லீம், கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களையும் நான் கடுமையா…

  18. சிறிலங்காவுக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காசி, காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மற்றுமொரு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆணைக்குழுவின் நிபுணராக செயற்படுவதற்கான தமது விருப்பத்தை அக்கசி ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஜனாதிபதியும் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதன் நிமித்தமே அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்த போது காணாமல் போனோர் தொடர்பான விபரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அக்காசி சிறிலங்கா அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/33707/57//d,article_ful…

  19. வடக்கில் இராணுவம் புல்லுத்தின்று கொண்டிருக்கவில்லை என்பதை மக்கள் உணரவேண்டும்! - முதல்வர் விக்னேஸ்வரன் [Monday 2014-09-08 07:00] வடமாகாணத்தில் இராணுவம் புல்லுத்தின்று கொண்டிருக்கவில்லை என்பதை எம்மக்கள் உணர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது மாநாட்டின் இறுதி அமர்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது உரையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இந்தப் பதினைந்தாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். எமது உரிமைப் போராட்டம் தற்பொழுது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சிலர…

  20. இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் தோன்றியுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது பேராளர் மாநாட்டின் போது 15 தீர்மானங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் இன்று வாசிக்கப்பட்டன. இதன்போது, அம்மாநாட்டில் கூடியிருந்த சிலர், தமிழர்களின் அபிலாஷைகளை உள்ளடக்கியதாக தீர்மானங்கள் எழுதப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தீர்மானங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்தியகுழு உறு;பபினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டை முன்னிட்டு கடந்த வெள்ளிக்க…

  21. ஈழத்தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தி எதில் தங்கியுள்ளது? இது எதுவாக இருக்க வேண்டுமென்பதை எப்படியும் வளைத்து, நிமிர்த்திக்கூறிவிடலாம். ஆனால் இப்போது அது எதுவாக இருக்கிறது அல்லது எதில் தங்கியுள்ளது என்பது குறித்து பேசும்போதே, சமகாலக் காட்சிகள் பலவற்றை தவிர்க்கமுடியாமல் பார்க்கவேண்டியுள்ளது. ஜே.வி.பியின் உபயத்தில் வடக்கு கிழக்கின் நிர்வாகம் பிரிக்கப்பட்டு, இரண்டு மாகாணசபைகள் உருவாகி, பேரம்பேசும் சக்தியின் இரு களமுனைகள் திறக்கப்பட்டு விட்டன. வலுவினைக்குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. உள்ளூர் அதிகார மையங்களை உடைத்து, சேர்ந்தியங்கவிடாமல் தடுப்பதும் பேரினவாதச் சிந்தனையின் ஒரு செயல் வடிவமே. 83 இல் நிறைவேற்றப்பட்ட 6வது திருத்தச்சட்டமும், தேசிய இனங்களின் அரசியல் உரிமைக்கு …

  22. கடந்த காலங்களில் மழை, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தமிழீழ மக்கள் தற்போது கடுமையான வறட்சி காரணமாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால், நாளாந்த குடிநீர் தேவையை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாதவொரு துயர நிலையை தமிழீழ மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் வரட்சியால் பெரும்பாலான ஆறுகள், குளங்கள் மற்றும் கிணறுகள் வற்றிப்போயுள்ளன. இதனால் விவசாய நடவடிக்கைகள் மாத்திரம் அன்றி மக்களின் குடிநீர் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாதவொரு அவல நிலை தோன்றியுள்ளது. இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் குடிநீரின்றி கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்…

  23. சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணைகளின் இடைக்கால வாய்மூல அறிக்கை ஒன்று இன்று சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று ஆரம்பமாகின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 27வது அமர்வில்இ மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் ராட் சயீட்ல் அல் ஹசைன் இந்த அறிக்கையை முன்வைக்கவுள்ளார். கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 25வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணையின் இடைக்கால அறிக்கை தகவல்கள் இன்று தினம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/news/33699/…

  24. - 05 செப்டம்பர் 2014 மக்களின் விருப்பத்திற்கு இணங்க வடக்கு ஆளுநரை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். எனினும் மீண்டும் அவரையே ஆளுநராக நியமித்துள்ளதால் வடக்கு மாகாண சபை சீராக இயங்காமல் இருக்கிறது என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று காலை (05.09.14) 9.15 மணியளவில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைவர் அன்ரூ மானிடனம் வடக்கின் தற்போதைய ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதனை தெளிவாக யாழ் ஆயர் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கம் பலவித முட்டுக்கட்டைகளை விதித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தரப்பை சேர்…

  25. -யோ.வித்தியா யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் காலபோகத்தில் 11 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கிருஸ்ணன் ஸ்ரீபாலசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் 12 ஆயிரத்து 301 ஹெக்டேயர் நெற்செய்கை நிலம் இருக்கின்ற போதிலும் அவற்றில் 2,000 ஹெக்டேயர் வரையான நிலப்பரப்பு நெற்செய்கை மேற்கொள்ள முடியாமல் உவர்நிலமாக இருக்கின்றன. யாழ்;ப்பாணத்தில் மழை வீழ்ச்சியை நம்பியே நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இம்மாவட்டத்திலுள்ள விவசாயிகளில் 40 வீதமானவர்கள் உள்ளுர் நெல் இனங்களையே பயிரிட்டு வருகின்றனர். புதிய நெல் இனங்களை பயிரிடுவதன் மூலம் அதிக விளைச்சலை பெறமுடியும். இருந்தும், யாழ்ப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.